வியாழன், மார்ச் 31, 2011

பெண்களின் வெள்ளை படுதல் ,மேகப் போக்கை குணப்படுத்தும் - புஷ்யானுக சூர்ணம்-Pushyanaka choornam


பெண்களின் வெள்ளை படுதல் ,மேகப்   போக்கை  குணப்படுத்தும் -
புஷ்யானுக சூர்ணம்-Pushyanaga choornam
 (ref-பைஷஜ்யரத்னாவளி - ஸ்திரீரோகாதிகார)

தேவையான மருந்துகள்:

1.            பாடக்கிழங்கு பாதா                        - 10 கிராம்
2.            நாவல் கொட்டை ஜம்புபீஜ                 - 10       “
3.            மாம்பருப்பு ஆம்ராபீஜமஜ்ஜா                - 10       “
4.            சிறுபீளை (உலர்ந்த்து) பாஷாணபேத         - 10       “
5.            அஞ்சனக்கல் அஞ்ஜன                     - 10       “
              (ரஸாஞ்சனம் மரமஞ்சள்ரஸக்கிரியை)
6.            மாசிக்காய் மாசிபல                        - 10       “
7.            இலவம்பிசின் சால்மலீநிர்யாஸ             - 10       “
8.            மஞ்சட்டி மஞ்ஜிஷ்டா                - 10       “
9.            தாமரைக் கேஸரம் பத்மகேஸர             - 10       “
10.          பெருங்காயம் ஹிங்கு                - 10       “
11.          அதிவிடயம் அதிவிஷா                    - 10       “
12.          கோரைக்கிழங்கு முஸ்தா                  - 10       “
13.          வில்வப்பழக்கதுப்பு (உலர்ந்தது) பில்வபல மஜ்ஜா  - 10       “
14.          பாச்சோத்திப்பட்டை லோத்ராத்வக்                - 10       “
15.          காவிக்கல் கைரிக                         - 10       “
16.          குமிழ்வேர் காஷ்மரீ                       - 10       “
17.          மிளகு மரீச்ச                             - 10       “
18.          சுக்கு சுந்தீ                                - 10       “
19.          திராக்ஷை திராக்ஷா                        - 10       “
20.          செஞ்சந்தனம் ரக்தசந்தன                   - 10       “
21.          பெருவாகை ஸ்யோனாக                   - 10       “
22.          வெட்பாலை அரிசி இந்த்ரயவ               - 10       “
23.          நன்னாரி ஸாரிவா                         - 10       “
24.          காட்டாத்திப்பூ தாதகீ புஷ்ப                 - 10       “
25.          அதிமதுரம் யஷ்டீமது                      - 10       “
26.          மருதம்பட்டை அர்ஜூனத்வக்               - 10       “


செய்முறை:     

 காவிக்கல், திராக்ஷை, பெருங்காயம், இவைகள் நீங்கலாக மற்ற சரக்குகளை நன்கு பொடித்துச் சலிக்கவும். திராக்ஷையுடன் சலித்த சூர்ணம் சிறிது சேர்த்து இடித்துச் சலிக்கவும். பெருங்காயத்தைப் பொரித்துப் பொடித்துச் சலிக்கவும். பின்னர் காவிக்கல்லையும் தனியே இடித்துச் சலித்துச் சேர்த்து எல்லாச் சூர்ணங்களையும் ஒன்றுபடக் கலந்து பத்திரப்படுத்தவும்.

அளவு:          

 1 முதல் 3 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகளுக்கு கொடுக்கவும்.


அனுபானம்:      

தேன், நெய், அரிசி கழுவிய நீர் (கழுநீர்)


தீரும் நோய்கள்:  


இரத்த மூலம் (ரக்தார்ஷ), சீதரத்தபேதி (இரத்தாதிஸாரம்), பெரும்பாடு (ஆர்த்தவசூல (அ) அஸ்ரிக்தர), வெள்ளை படுதல் (ஸ்வேதப்ரதர) மற்றும் மாதவிடாய்க் கோளாறுகள் (ஆர்த்தவ ரோக - ரஜோதோஷ).


குறிப்பு:     

1. ரஸாஞ்சனத்திற்குப் பொருள் மரமஞ்சள் சத்து என்பதாகப் பொருள் கொண்டு அஞ்சனக் கல்லுக்குப் பதிலாக ரஸௌத்தும் (மரமஞ்சள் சத்து), பெருங்காயத்திற்கு பதிலாக குங்குமப்பூவும் சேர்த்துத் தயாரிப்பது உண்டு.


 2. அசோகாரிஷ்டம், லோத்ராஸவ அல்லது சர்க்கரையுடனும் இதனைக் கொடுப்பதுண்டு.

Post Comment

புதன், மார்ச் 30, 2011

தோல் நோய்களை குணப்படுத்தும் -மதுஸ்னுஹீ சூர்ணம்-Madusnuhi choornam


தோல் நோய்களை குணப்படுத்தும் -மதுஸ்னுஹீ சூர்ணம்-Madusnuhi choornam
 (ref-பாவப்ரகாச நிகண்டு)

தேவையான மருந்துகள்:

பரங்கிச் சக்கை மதுஸ்னுஹீ (போதிய அளவு)


செய்முறை:     

நன்கு முதிர்ந்து தேறிய பரங்கிச் சக்கையைப் பொடித்துச் சலித்து பத்திரப்படுத்தவும்.


அளவு:    

1முதல் 3 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள் கொடுக்கவும்.


அனுமானம்:     தேன், நெய், பால்

சித்த மருத்துவத்தில் -இதனை பரங்கிபட்டைசூர்ணம் என்று சொல்வார்கள்
 


தீரும் நோய்கள்:  தோல் நோய்கள் (சர்ம ரோக), பரங்கிப்புண் (பீரங்கரோக), கீல்வாயு (வாதரக்த). ரத்தத்தை சுத்தம்செய்ய வல்லது. 
மூட்டுகளில் வலியும் வீக்கமும் கூடிய நிலையில் ஏற்படும் காய்ச்சலில் (ஆமவாத ஜ்வர) ( சீந்தில் கொடி குடூசீ- 12 கிராம்மிளகு மரீச்ச - 12    கிராம், கோரைக்கிழங்கு முஸ்தா - 12     கிராம்,ஓமம் அஜோவான் - 12     கிராம், பரங்கிச்சக்கை மதுஸ்னுஹி  - 12      கிராம்-
ஆகியவைகளை நன்கு பொடி செய்து 16 அவுன்ஸ் நீரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து 4 அவுன்ஸாக குறுக்கி வடிகட்டக் கிடைக்கும் கஷாயத்தை மேற் கூறியபடி உபயோகிக்கவும்)  கொடுக்கலாம் 

Post Comment

செவ்வாய், மார்ச் 29, 2011

நாளை முதல் தினமும் அப்டேட்

கிளினிக்கில் - மருத்துவமனையில் -அதிகமான வேலை பளு காரணமாக எழுத முடியவில்லை ..
நாளை முதல் தினமும் அப்டேட் செய்யப்படும் என்று உறுதி தருகிறேன்

Post Comment

வெள்ளி, மார்ச் 25, 2011

எலும்பை வலுப்படுத்தும் ,இரத்தம் சார்ந்த நோய்களை குணமாக்கும் -லாக்ஷா சூர்ணம்-Laksha choornam


எலும்பை வலுப்படுத்தும் ,இரத்தம் சார்ந்த நோய்களை குணமாக்கும் -லாக்ஷா சூர்ணம்-Laksha choornam
 (ref-பாவப்ரகாச நிகண்டு)


தேவையான மருந்துகள்:

கொம்பரக்கு லாக்ஷா (போதுமான அளவு)

செய்முறை:     

கொம்பரக்கைக் குச்சி முதலியவைகளை நீக்கிச் சுத்தம் செய்து பொடித்துச் சலித்து பத்திரப்படுத்தவும்.


அளவு:          

 1 முதல் 3 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள் கொடுக்கவும்.


அனுபானம்:    

தேன், வெண்ணெய், நெய், சர்க்கரை, தண்ணீர், பால்


தீரும் நோய்கள்:  

மூச்சு மண்டலம், உணவுப் பாதை போன்ற உள்ளுறுப்புகளில் ஏற்படும் ரத்தப்போக்கு (ரக்தபித்த), சீத ரத்தபேதி, (ரக்தாதிஸார), இரத்த இருமல் (ரக்தகாஸ), இரத்த வாந்தி (உரக்ஷத), பெரும்பாடு (அஸ்ரிக்தர), மூக்கில் ரத்தம் வடிதல் (நாஸரக்த) போன்ற பலவிதமான ரத்தம் பீறிடும் நிலைகள் (ரக்தஸ்ராவம்)


குறிப்பு:    

 1.            இது ரத்தப்போக்கைத் தடுப்பதில் மிகவும் சிறந்ததொரு மருந்து. மூக்கிலிருந்து ரத்தம் வடியும் சமயங்களில் பாலுடன் கலந்து சில துளிகளை நாசியில் செலுத்தலாம்.

 2.            சால்மலீ சூர்ணம், சீந்தில் சர்க்கரை (குடூசி சத்வ) போன்றவற்றுடன் நோய்களுக்கு ஏற்ப சமயோசிதமாக உபயோகிப்பதுண்டு.


   3.            கொம்பரக்கைத் (Stick lac ) தவிர்த்து முத்திரை இடப் பயன்படுத்தும் அரக்கு (Sealing lac) போன்றவற்றை மருந்து செய்யப் பயன்படுத்தக்கூடாது.

Post Comment

வியாழன், மார்ச் 24, 2011

நூறு காப்F(இருமல்) சிரப்பை விட சிறந்த -இருமல் நிவாரணி -கற்பூராதி சூர்ணம்-Karpooradhi choornam


நூறு காப் (இருமல்) சிரப்பை விட சிறந்த -இருமல் நிவாரணி -கற்பூராதி சூர்ணம்-Karpooradhi choornam
(ref-ஸஹஸ்ரயோகம் - சூர்ணப்ரகரணம்)


தேவையான மருந்துகள்:1.            கற்பூரம் கற்பூர                    - 10 கிராம்
2.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்       - 10       “             
3.            தக்கோலம் தக்கோல               - 10       “             
4.            ஜாதிக்காய் ஜாதீபல               - 10       “             
5.            ஜாதிபத்திரி ஜாதீபத்ரீ              - 10       “             
6.            இலவங்கம் லவங்க                - 10       “             
7.            சிறுநாகப்பூ நாககேஸர             - 10       “             
8.            மிளகு மரீச்ச                   - 10       “             
9.            திப்பிலி பிப்பலீ                 - 10       “             
10.          சுக்கு சுந்தீ                     - 10       “             
11.          சர்க்கரை ஸர்க்கர               - 10       “              செய்முறை:    

கற்பூரம், சர்க்கரை நீங்கலாக மற்ற சரக்குகளைப் பொடித்துச் சலித்துப் பின்னர் அவைகளையும் தனியே பொடித்துச்ச் சலித்து எல்லாவற்றையும் ஒன்று கலந்து வைக்கவும்.


அளவு:      

1முதல் 3 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள் கொடுக்கவும்.


அனுபானம்:     

 தேன்


தீரும் நோய்கள்: 

 இருமல் (காஸ), இழைப்பு (அ) இரைப்பு (ஸ்வாஸ), இரைப்பிருமல் (ஸ்வாஸகாஸ), விக்கல் (ஹிக்க), உணவில் விருப்பமின்மை (அரோசக).

தெரிந்து கொள்ள வேண்டியவை –

அண்ணாச்சி பூ –இந்த மூலிகையில் இருந்தே பன்றி காய்ச்சல் மற்றும் ஃப்ளு நோய்க்கு தடுப்பு மருந்தாக உதவுகிற ஆங்கில மருந்தான டேமிஃப்ளு மாத்திரை தயாரிக்கபடுகிறது ..இந்த அண்ணாச்சிபூ சேர்ந்த இந்த மருந்து ஃப்ளு போன்ற வைரஸ் காய்ச்சலை தடுக்கவும் ..குணமாக்கவும் இந்த மருந்து உதவும் 

Post Comment

செவ்வாய், மார்ச் 22, 2011

நரம்புக்கு உரமூட்டும் -விந்து முந்துதலில் -பயன்படும் -ஜாதீபலாதி சூர்ணம்-Jathiphaladhi choornam


நரம்புக்கு உரமூட்டும் -விந்து முந்துதலில் -பயன்படும் -ஜாதீபலாதி சூர்ணம்-Jathiphaladhi choornam
(சாரங்கதர ஸம்ஹிதா - மத்யமகண்டம்)


தேவையான மருந்துகள்:

1.            ஜாதிக்காய் ஜாதீபல                       - 10 கிராம்
2.            இலவங்கம் லவங்க                       - 10       “
3.            ஏலக்காய் ஏலா                             - 10       “
4.            இலவங்கப்பத்திரி லவங்கபத்ரி                - 10       “
5.            இலவங்கப்பட்டை லவங்கப்பட்டை            - 10       “
6.            சிறுநாகப்பூ நாககேஸர                        - 10       “
7.            கற்பூரம் கற்பூர                               - 10       “
8.            சந்தனம் சந்தன                             - 10       “
9.            எள்ளு தில                                  - 10       “
10.          மூங்கிலுப்பு வம்ஸலோசன                   - 10       “
11.          கிரந்தி தகரம் தகர                             - 10       “
12.          நெல்லிமுள்ளி ஆமலகீ                       - 10       “
13.          தாளீசபத்திரி தாளீசபத்ரி                        - 10       “
14.          திப்பிலி பிப்பலீ                                 - 10       “
15.          கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீபலத்வக்   - 10       “
16.          சோம்பு ஸ்தூல ஜீரக                             - 10       “
17.          கொடிவேலிவேர் சித்ரக                           - 10       “
18.          சுக்கு சுந்தீ                                       - 10       “
19.          வாயுவிடங்கம் விடங்க                           - 10       “
20.          மிளகு மரீச்ச                                   - 10       “
21.          சர்க்கரை ஸர்க்கர                               - 200    “


செய்முறை:      

சரக்குகளை முறைப்படி பொடித்துச் சலிக்கவும்.  சர்க்கரையையும் கற்பூரத்தையும் தனித்தனியே பொடித்துச் சலித்து எல்லாவற்றையும் ஒன்று கலந்து பத்திரப்படுத்தவும்.


அளவு:     

 1முதல் 3 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள் உணவுக்கு ஒரு மணி நேரம் முன்போ அல்லது பின்போ.


அனுபானம்:      

தேன், மோர், தண்ணீர்.


தீரும் நோய்கள்:  

வயிற்றுப்போக்கு (அதிஸார), பெருங்கழிச்சல் (க்ரஹணீ), சீதபேதி (பிரவாஹிக), ருசியின்மை மற்றும் பசியின்மை (அருசி, அக்னிமாந்த்ய), இருமல் (காஸ), இரைப்பு(ஸ்வாஸ), ஜலதோஷம் (பிரதிஸ்யாய).


                ஜலதோஷத்தில் மூக்குப் பொடி போன்று, உபயோகிக்கப்படுகிறது. இரைப்பு, இருமல், ஜலதோஷத்திற்கு தேனுடன் தரப்படுகிறது.


                இதில் கஞ்சா சேர்க்கப்பட்டிருப்பின் நரம்புகளுக்கு அமைதியைக் கொடுப்பதுடன், மூச்சுமண்டல நோய்களுக்கு நல்ல நிவாரணமுமளிக்கிறது.


 குறிப்பு:    சரக்குகளின் மொத்த அளவுக்கு சமமாக கஞ்சா இலையைச் சேர்த்துப் பொடித்து எல்லாச் சூர்ணத்திற்கும் சமமாக சர்க்கரையைச் சேர்க்க வேண்டுமென நூல் கூறுகிறது. ஆனால் அரசின் கட்டுப்பாடு காரணமாக கஞ்சாவை எந்த மருந்து கம்பெனியாலும் சேர்க்க முடிவதில்லை .(இது ஒரு தகவலுக்காக மட்டுமே ..யாரிடமும் கஞ்சா சேர்ந்து மருந்து கிடைக்கும் என்று ஏமாந்து விடாதீர்கள் )

ஜாதிக்காயை சுத்தம் செய்த பின்னே சேர்க்க வேண்டும் (ஆயுர்வேதத்தில் ஜாதிக்காயை சுத்தம் செய்யும் முறைகள் எனக்கு தெரிந்து நான்கு வகைகள் உள்ளது -அதை பற்றி பின்னர் எழுதுகிறேன் )


மேலே சொன்ன பார்முலாவில் -ஜாதிக்காய் சூர்ணம் -கழிச்சலை போக்கவும் ,கிராணி கழிச்சல் குணமாகவும் தான் பயன்படுத்த முடியும் ..

விந்து முந்துதலில் பலர் என்னிடம் கேள்விகளை கேட்கின்றனர் -எனது பழைய இடுகை விந்து முந்துதலில் உள்ள கட்டுரைக்கு விளக்கம் இன்னமும் சொல்ல வேண்டியுள்ளது .. 

இந்த ஜாதிபலாதி சூரணத்தில் கடுக்காய் தோல் தவிர ..ஓரிதழ் தாமரை சூர்ணம் ,நிலப்பனங் கிழங்கு  சூர்ணம் மற்றும் நெருஞ்சில் முள் சூரணம் கலந்து -விந்து முந்துதலுக்கு -மற்ற ஆயுர்வேத யுனானி நான் மருந்துகளோடு தருவதுண்டு..

விரைவில் விந்து முந்துதல் குணப்படுத்தக்கூடிய வழி முறைகள் ,மருந்துகள் ,மூலிகைகள் பற்றி எழுதுகிறேன் ..
 

Post Comment

ஞாயிறு, மார்ச் 20, 2011

ஞாபக மறதிக்கு -ஆயுர்வேதத்தில் அற்புத சரியான தீர்வு


 குழந்தைகளின்/மாணவர்களின்  ஞாபக சக்தி -வளர்க்க -ஞாபக மறதி போக்கிட -முத்தான யோசனைகளை ....


இன்று நமது ஆயுஷ் மற்றும் பாரம்பரிய ஆய்வு நிறுவனத்தின் மூலமாக -நூற்று எண்பது மாணவர்களுக்கு இலவச ஞாபக சக்தி வளர்த்திட ஆலோசனை மற்றும் ,இலவச ஆயுர்வேத மருந்துகளான -பிரம்மி கேப்ஸ்யூல் மற்றும் மாத்திரைகள் ,அறிவை வளர்க்க கூடிய மூலிகைகள் அடங்கிய டானிக்குகள் ,சாரஸ்வதாரிஷ்டம் ,ஹோமியோ மருந்துகள் அனகார்டியம் போன்றவையும் வழங்கப்பட்டன -அத்துடன் -கீழே உள்ள கட்டுரை பிரிண்ட் எடுத்து இலவசமாக  வழங்கப்பட்டது
 குழந்தைகளின்/மாணவர்களின்  ஞாபக சக்தி -வளர்க்க -ஞாபக மறதி போக்கிட -முத்தான யோசனைகளை ....

 1. திட்டமிட்டு படித்தல் தீர்க்கமான வெற்றியை தரும்
 2. ஆர்வத்துடன் படித்தல் அகலாத அறிவை தரும் -கவன குறைவை விடுங்கள் -அலட்சியம் வேண்டாம் -பதறவும் வேண்டாம்
 3. நிதானத்துடன் அணுகுங்கள் -சாந்தமுள்ள மனதின் சக்தியே தனி
 4. படித்ததை எழுதிபார்த்தல் ,இரவில் படித்ததை நினைத்து பார்த்தல் (ரீ கால் )-பசு மரத்தாணி போல மனதில் பதியும் ,எதை மறக்கிறீர்களோ அதை எழுதி வைத்து கொள்ளுங்கள்
 5. ஒப்பிட்டு மனப்பாடம் செய்தல் -கற்பனை வளத்துடன் -தாய் மொழியில் யோசித்து -அனுபவித்து உணர்ந்து -சந்தோஷமாய் படித்தால் -ஜென்மத்திற்கும் மறக்காது-சிந்தித்து படியுங்கள் ..
 6. படங்களுடன் கூடிய மனதில் அதிகம் பதியும் ,பட விளக்கங்களை திரும்ப திரும்ப -பார்த்தல் எளிதில் மறக்காது
 7. இரவில் அதிக நேரம் கண் விழித்தல் -இடரை உருவாக்கும்---தூக்கமின்மை உங்கள் மூளையை துருபிடிக்க செய்திடும் .. தூங்க போகும்  முன்  அன்று  படித்த  அனைத்தையும்  ஒரு முறை மேலோட்டமாக  நினைவு படுத்தி பார்க்க வேண்டும் . அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும்   நம் மூளையின்  சில மூலைகள் விழிப்புடன் இருந்து  தகவல் களை ஷர்ட் டெர்ம் மெமரியில் இருந்து  லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான  பயிற்சி ஆகும்
 8. mnemonics  வைத்து  படிப்பது ஒரு கலை . அதை   கற்று கொள்ளுங்கள்          உதாரணம் -  news - north ,east,west,south ..இது போன்று ஷார்ட்  கீ என்னும் -ஞாபக ஒப்பீட்டை கடைபிடியுங்கள்
 9. அதிகாலை படிப்பு அற்புத பலனைத்தரும்
 10. ஞாபகம் வளர உடலும் ,உள்ளமும் நலமாய் இருத்தல் வேண்டும்
 11. தண்ணீர் அதிகம் குடித்தல் ,தரமான உணவை அளவாய் உண்ணுதல் ,காய் கறி தினமும் சேர்த்தல் -கனிவான பலனை கட்டாயம் தரும் -சரியான சக்தியுள்ள சரிவிகித உணவே உங்களை தட்டி எழுப்பும்
 12. குர் குரே ,லேஸ்,அதிகமான சாக்லேட் ,பெப்சி ,கோகோ கோலா போன்ற சாப்ட் ட்ரிங்க்ஸ் ,சைனீஸ் பாஸ்ட் புட் ,அதிகமான புளிப்பு ,அதிகமான காரம் ,அதிகமான எண்ணையில் பொறித்த உணவுகள் -உங்கள் அறிவை மழுங்கடிக்கும் ..உங்களை மறதி நோய்க்கு தள்ளிவிடும் அரக்கர்கள் ..
 13. தேவை இல்லாமல் சத்து மாத்திரை -என்று ஆங்கில மருந்தை உபயோகிக்காதீர்கள் -உணவில் கிடைக்கும் சக்தி வீணாய் போய் விடலாம் ..
 14. தொலை காட்சி ,வீடியோ கேம் -மோகம் தவிர்த்து ,கோபமான வேகம் தவிர்த்து -நிதானத்துடன் பிராதனமாய் நித்தியமும் செயல் பட -ஞாபகம் வருமே ..
 15. பாராட்டுங்கள் ,சந்தோஷமாய் இருங்கள் ,தியானம் செய்யுங்கள் ,இலக்கை வகுத்து -வெற்றியை நோக்கி வெறியோடு -விடா முயற்சியோடு உழையுங்கள் ..வாழ்கை ஒரு முறை தான் -சாதிப்பவன் மாணவன் -  சாதனை புரிந்து -வரலாற்றில் இடம் பிடிக்கலாம் ..

மூளையை தீட்டும் ஆயுர்வேத மருத்துகள் 
சாரஸ்வதாரிஷ்ட்டம்- காலை மாலை -இருபத்தைந்து மிலி தண்ணீருடன் ஆகாரதிக்கு பின்  சாப்பிடலாம் அல்லது ப்ரஹ்மி கிருதம் -காலை 10 மிலி வெறும் வயிற்றில் சாப்பிடலாம் .பிரம்ம ரசாயனம் லேகியம் - இரவு ஒரு டீஸ்பூன் சாப்பிடலாம் .  மஹா கல்யாணக கிருதம் 10 மிலி வெறும் வயிற்றில் சாப்பிடலாம் ,பிரம்மி வடி -பிரம்மி & மண்டூக பரணி கேப்சுல்ஸ் . சாபிடலாம் ,சாரஸ்வத கிருதம்,சாரஸ்வத சூரணம் -சாப்பிடலாம் ,மேத்ய ரசாயன சூரணம்( சங்க புஷ்பீ மிக சிறந்த மூளையின் அறிவை வளர்க்கும் ,அதிமதுர பொடி பாலில் ,சீந்திலின் சாறு ,வல்லாரையின் சாறு .. அறிவை வளர்க்கிறது ) சாப்பிடலாம்

சித்தா மருந்துகளில் -
வல்லாரை லேஹியம்,வல்லாரை மாத்திரை,நீர் ப்ரஹ்மி நெய் ,வல்லாரை நெய்,கோரை கிழங்கு சூர்ணம்,நெல்லிக்காய் லேஹியம்,தாது கல்ப லேஹியம்  தரலாம் ,மேலும் பல அறிவை வளர்க்கும் மூலிகைகள் சாப்பிடலாம் ..

ஹோமியோ பதி மருந்துகளில் .

.
சின்கம்
,அனகார்டியம் ,லேசெசிஸ் ,நேட்ட்ரம் மூர் ,
மலர் மருந்துகளில் பல மருந்துகள் -ஞாபக மறதியை போக்கும்


ஞாபக சக்தி வளர்க்க எனது மற்ற கட்டுரைகள் படிக்க கீழே உள்ள தளத்தி பயன்படுத்தவும்
 

 .Post Comment

வியாழன், மார்ச் 17, 2011

தைராய்ட் நோய்க்கு நிரந்தர தீர்வு


தைராய்ட் நோய்க்கு நிரந்தர தீர்வு --


தைராய்டு நோய்கள்

                வாழ்க்கை முறை மாறியதால் தைராய்டு சார்ந்த நோய்கள் இப்போது பரவலாக காணப்படுகிறது. கழுத்தில் உள்ள் இந்த நாளமில்லா சுரப்பி நம் உடல் இயக்கத்திற்கான பல முக்கியமான  பணிகளை செய்கிறது, கட்டுப்படுத்துகிறது. பொதுவாக அயோடின் குறைவால் ஏற்படும் இந்த தைராய்டு நோய் ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது. தைராய்டில் பலவிதமான நோய்கள் ஏற்பட்டாலும் கீழ்க்கண்ட இரு விதமான நோய்களின் குறிகுணங்களை அறிந்து வைத்துக் கொள்வது மிக அவசியமாகிறது.

தைராய்டு குறைவாக சுரப்பதால் ஏற்படும் ஹைபோதைராய்டிசம் என்ற நோயின் குறிகுணங்கள் பிரச்சனைகள்
தைராய்டு அதிகமாக சுரப்பதால் ஏற்படும் ஹைபா; தைராய்டிசம் என்ற நோயின் குறிகுணங்கள் பிரச்சனைகள்
உடல் எடை கூடுதல் /குண்டாகுதல்
உடல் எடை குறைதல் (திடீரென காரணமில்லாமல்)
உடல் எடை குறையாதிருத்தல் (பட்டினி கிடந்தாலோ, உடல் பயிற்சி நடைபயிற்சி கடுமையாக கடைபித்தாலும் கூட)
     அதிகமான, சத்தான உணவை உண்டாலும் கூட உடல் மெலிவாகவே இருத்தல்    

குறைவான நாடித்துடிப்பு (ஒரு நிமிடத்திற்கு 72 துடிப்பிற்கும் குறைவு)
அதிகமான, வேகமான நாடித்துடிப்பு, இதயத்துடிப்பு நெஞ்சு படப்படப்பு
அதிகமான உடல் சோர்வு, களைப்பு
கை, கால், நடுக்கம், பதட்டம் 

முறையற்ற மாதவிலக்கு
மாதவிலக்கு இல்லாதிருத்தல் மிக குறைவான மாதவிலக்கு   

குறைவான வியர்வை 
மிக அதிகமான வியர்வை 
அதிமான தூக்கம், சோர்வு
தூக்கமின்மை


மலச்சிக்கல்    
அடிக்கடி மலம் கழித்தல், அதிகமான குடலின் அசைவுத்தன்மை  
மன அழுத்தம்
பய உணர்வு, கோப உணர்ச்சி

அதிகமாக முடி கொட்டுதல், முடி வறண்டு போதல், சரும வறட்சி  
அதிகமாக முடி கொட்டுதல்

அதிகமான குளிர் உணர்தல்
அதிகமான உஷ்ணம் உணர்தல்
அதிகமான உடல் சதை வலி, சதை பிடிப்பு, சதை இறுக்கம், வலிகள் அதிகமாக இருத்தல்
உடல் சதை பலஹீனம்    

நினைவாற்றல் குறைதல், பாலுணர்ச்சி குறைதல்

இரத்தத்தில் TSH அளவு அதிகமாயிருத்தல்
இரத்தத்தில் T3 அளவு அதிகமாயிருத்தல்                                   

                மேலும் தைராய்டு நோயினால் இரத்தத்தில் கொழுப்பு சத்து கூடுதல், ஹீமோகுளோபின் குறைந்து இரத்த சோகை ஏற்படுதல், சிறுநீரகக் கற்கள், பித்தப்பைக் கற்கள் உண்டாக தைராய்டில் ஏற்படும் நோய்கள் காரணமாக அமையும். குழந்தையின்மைக்கு தைராய்டு நோய் முக்கியமான காரணமாக அமைகிறது.
               
                தைராய்டு நோய் உள்ளவர்கள் 6 மாதத்திற்கு ஒரு முறையாவது தைராய்டு இரத்த பரிசோதனை செய்ய வேண்டும். முறையாக, தொடர்ச்சியாக ஆங்கில மருந்தோ, சித்த ஆயுர்வேதா, ஹோமியோபதி மருந்தோ முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

                ஆயுர்வேத மருந்துகளில் வாரணாதி கசாயம், ஹம்ஸபாதி கசாயம், பிருஹத் கட்பாலதி கசாயம், குக்குலுதிக்க கசாயம், காஞ்சனார குக்குலு மாத்திரை, ஷட்தர்ணம் மாத்திரை, சித்த மருந்துகளில் அன்ன பவள செந்தூரம், முட்சங்கன், தேள் கொடுக்கு இலை போன்றவைகளும்

                ஹோமியோபதி மருந்துகளில் தைராய்டினம், நேட்ரம் மூர், ஸ்பான்ஜியா, அயோடம், பிட்யூட்டரினம் , லெசித்தின், அகோனைட். பல்சேட்டிலா, சைலீசியா போன்ற மருந்துகள் நல்ல பலனை தரும். ஆங்கில மருந்துகள் சாப்பிடும் போது ஆயுர்வேத ஹோமியோபதி மருந்துகள் சாப்பிடுவதில் தவறில்லை டென்சனை குறைப்பதும், தியான மன அமைதிக்கான பயிற்சிகளை மேற்கொள்வதும், ர்ம சிகிச்சைகளை மேற்கொள்வதும் தைராய்டு நோய் குணப்படுத்தலாம்.

                தைராய்டு நோய்க்கு ஆயுர்வேத ஹோமியோபதி மருந்துகளை சாப்பிடுவதன் மூலம் மிக விரைவாக தைராய்டு நோயை குணப்படுத்திவிட முடியும். ஆயுள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

தைராய்டை பற்றிய எனது மற்ற கட்டுரைகள் படிக்க -கீழே இணைப்பை பயன்படுத்தவும்Post Comment