வியாழன், மே 26, 2011

மூன்று நாட்கள் பதிவுகள் இல்லை

ஞாயிறு வரை பதிவிட இயலாது என்பதை நண்பர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் ..

வர்மம் மற்றும் தொக்கண மருத்துவத்தில் முதுகலை பட்டய படிப்பிற்கான தேர்வுகளுக்காக -மூன்று நாட்கள் வெளியூர் செல்ல இருப்பதால் இன்று முதல் ஞாயிறு வரை புதிய பதிவுகள் எழுத இயலாது ...Post Comment

செவ்வாய், மே 24, 2011

மசக்கைக்கு மருந்தாகும் -மாதுலுங்க ரசாயனம்


மசக்கைக்கு மருந்தாகும் -மாதுலுங்க ரசாயனம்

(மாதீபல ரஸாயனம்)
                                                                                                    
தேவையான மருந்துகள்:

1.            துருஞ்சிப்பழச் சாறு மாதுலங்க ரஸ   - 500 கிராம்
2.            எலுமிச்சம் பழச்சாறு ஜம்பீர ரஸ - 500    “
3.            இஞ்சிச் சாறு ஆர்த்ரக ரஸ      - 125    “
4.            இந்துப்பு ஸைந்தவலவண       - 50       “
5.            சர்க்கரை ஸர்க்கர               - 1250  “

செய்முறை:      

சாறு வகைகளை தனித்தனியே வடிகட்டிக் கலந்து சர்க்கரை சேர்த்துச்சிறிது சூடாக்கி வடிகட்டிக் கொதிக்க வைத்துப் பானகபாகத்தில் இறக்கி ஆறிய பின்னர் பொடித்து சலித்த இந்துப்பு சேர்த்து வைத்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.


அளவும் அனுபானமும்:    

5 முதல் 10 கிராம் வரை தண்ணீருடன் இரு வேளைகள் உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்னர்.


தீரும் நோய்கள்:  

செரியாமை (அஜீர்ண), பசியின்மை (அக்னிமாந்த்ய), ருசியின்மை (அரோசக), வாந்தி (சர்தி), குமட்டலும், மயக்கம் (அ) தலைசுற்றலும் (ப்ரம), பித்தம் அதிகரித்தல், அதிக உமிழ்நீர் ஊறுதல் (ப்ரஸேக).

தெரிந்து கொள்ள வேண்டியது ..
 1. தயாரிப்பது மிக எளிது
 2. கர்ப்பிணிகளின் முதல் நான்கு மாத காலத்தில் வரக்கொடிய குமட்டல் ,வாந்தி ,பசியின்மை போன்ற உபாதைகளை முற்றிலும் சரி செய்யும் -பக்க விளைவுகள் இல்லாத மருந்து
 3. கர்ப்பிணிகள் எந்த விதமான ஆங்கில மருந்தை -போலிக் ஆசிட் மாத்திரைகள் ,கால்சியம் மாத்திரைகள் சாப்பிடும் போதும் இதை பயம் இல்லாமல் சாப்பிடலாம்
 4. எனக்கு தெரிந்த பல ஆங்கில மகப்பேறு மருத்துவர்கள் -தனக்காகவும் ,தன்னுடைய மகள் ,பேத்திகளுக்காகவும் -எங்களிடம் வாங்கி உபயோகித்ததுண்டு ..(ஆனால் அவர்கள் அவர்களுடைய நோயாளிகளுக்கு ஆங்கில மருந்தை தான் வாந்தி நிற்க பயன் படுத்துகிறார்கள் )

Post Comment

ஞாயிறு, மே 22, 2011

தேன் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாதா ?

வலை தல குழந்தை நல மருத்துவர் -டாக்டர் -ஜெய மோகன் அவர்கள் -பச்சிளம் குழந்தைகளுக்கு தேன் தர கூடாது என்று தனது கட்டுரை ஒன்றினை http://doctorrajmohan.blogspot.com/2011/05/blog-post.html-
அந்த கட்டுரைக்கு எழுதிய பின்னூட்டத்தை இன்று நண்பர்களுக்கு பகிர்கிறேன்

உங்கள் வலை தளத்தை நான் படித்த வாசகன் என்ற முறையில் பாராட்டுக்கள் கோடி ..
உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் ..

இன்றைய கட்டுரையை நான் வன்மையாக மறுக்கிறேன் ..
 • தேனில் -மகரந்த தூள்கள் இருப்பதில்லை (உங்களது தகவலுக்காக இந்த தளத்தை பாருங்கள் http://www.benefits-of-honey.com )
 • தேன் எளிதில் செரிக்ககூடியது -ஆயுர்வேதம் சொல்கிறது -தேனின் குணம் யோகவாகி -அதாவது அது எதனுடன் சேர்கிறதோ அதுவாகி -சேர்ந்த பொருளின் வீர்யத்தை கூடும் குணம் ..பல்வேறு ஆயுர்வேத குழந்தை வைத்திய முறைகளில் மருந்துகளை தேனில் /தாய்பாலில் கொடுக்க சொல்கிறது ..
 • நல்ல தேன் அலர்ஜியை உண்டாக்குவதே இல்லை -அலர்ஜியை சரிசெய்யும் -அலர்ஜி உண்டு பண்ணும் காரணிகளை சரி செய்யும் (தங்களது மேலான தகவலுக்காக http://bio.waikato.ac.nz/honey/honey_intro.shtml-என்ற தளத்தில் பாருங்கள் தேன் கிருமி நாசினியாகதான் வேலை செய்கிறது என்பதற்கான அடுக்கடுக்கான தகவல்கள்
 • உங்களால் நிரூபிக்க முடியுமா ? தேன் கொடுத்ததால் தான் பொட்டுளிசம் வந்தது என்று -பால் ,பால் பௌடர்களிலும் வரும் என்று பி பி சி சொல்கிறதே -அதற்கான தகவலுக்காக http://news.bbc.co.uk/2/hi/health/1491033.stm-மட்டுபாலிலும் இந்த பாக்டீயர்யா இருக்கத்தானே செய்கிறது
உங்கள் தகவல்கள் -மேலை நாட்டு காரர்களுக்கு பொருந்தும் -தேனை குழப்பி -பிசாவை முக்கி ,பெப்சியை ஒருவயதுக்கு குழந்தைக்கு கொடுக்கும் பழக்கம் எல்லாம் .எங்கள் தாயமார்களுக்கு தெரியும் எந்த அளவில் ,எதனுடன் தேனை தரவேண்டும் என்று ..பாட்டிமார்கள் இல்லாத /குழந்தை வளர்ப்பே தெரியாதர்களிட.ம் வேண்டுமானால் சொல்லலாம் .நீங்கள் சொன்ன விஷயத்தை .

அளவறிந்து தேவை கருதி மருந்துடன் ஆறுமாததிற்குள் உள்ள குழந்தைகளுக்கும் ,ஆறு மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உணவுடன் தேவை கருதி தரலாம் ..

தேனில் பல கலப்படங்கள் உள்ளது -அது வேண்டுமானால் உண்மை ..

நண்பரே ..உங்கள் கட்டுரையை விமர்சிக்க நான் எத்தனிக்கவில்லை -தேன் நமது பாரம்பரிய உணவு,பெரியவர்களை விட சிறியவர்கள் தான் நிறைய உபயோகிக்கிறார்கள் ..பயம் ஏற்படுத்தும் வகையில் உங்கள் கட்டுரை அமைந்தமையால் இந்த பின்னூட்டம் ..தவறு இருந்தால் சுட்டிகாட்டவும் ,மன்னிக்கவும் .

நண்பரே உங்களது கட்டுரைகள் அனைத்துமே சிறந்தது ,எந்த குறையும் இல்லை ,மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த நெருடலான கட்டுரையை மட்டுமே எதிர்த்தவனாக ..மென் மேலும் சேவை புரிய பாராட்டுக்களுடன் ..சின்ன குழந்தைகள் லெஸ் ,குர் குரே போன்ற உணவுகளால் ஆபத்தை பற்றி எழுத விண்ணப்பித்தவனாக ..ஆயுர்வேத மருத்துவன் ..எனது தளம் www.ayurvedamaruthuvam.blogspot.com


Post Comment

சனி, மே 21, 2011

நாளை சந்திப்போம் ..

வேலை பளு காராணமாக என்னால் இன்றும் எழுத முடியவில்லை ..

நிச்சயம் நாளை நிறைய பதிவுகளுடன் ..

Post Comment

செவ்வாய், மே 17, 2011

ச்யவன ப்ராஷ லேஹ்யம் செய்வது எப்படி ?


ச்யவனப்ராச லேஹ்யம்
 (ref-சரகஸம்ஹிதா சிகித்ஸா ஸ்தானம்)

தேவையான மருந்துகள்:

1.            வில்வவேர் பில்வமூல               50 கிராம்
2.            முன்னைவேர் அக்னிமாந்த மூல      50           “
3.            பெருவாகைவேர் ஸ்யோனாக மூல   50           “
4.            குமிழ்வேர் காஷ்மரீ மூல            50           “
5.            பாதிரிவேர் பாட்டாலமூல             50           “
6.            ஓரிலை ப்ரிஸ்னி பார்னீ              50           “
7.            மூவிலை சாலீ பர்ணீ மூல           50           “
8.            கண்டங்கத்திரி கண்டகாரீ             50           “
9.            முள்ளுக்கத்திரிவேர் ப்ருஹத்தீ        50           “
10.          நெருஞ்சில் கோக்ஷூர                50           “
11.          சித்தாமுட்டிவேர் பலா மூல          50           “
12.          திப்பிலி பிப்பலீ                        50           “
13.          கர்க்கடசிருங்கி கற்கடசிருங்கி         50           “
14.          கீழாநெல்லி பூ ஆமலகீ               50           “
15.          திராக்ஷை த்ராக்ஷா                   50           “
16.          கீரைப்பாலை ஜீவந்தி                  50           “
17.          கோட்டம் (அ) கோஷ்டம் புஷ்கர மூலம் 50           “
18.          அகில்கட்டை அகரு                    50           “
19.          சீந்தில் கொடி குடூசி                  50           “
20.          கடுக்காய் (கொட்டை நீக்கியது)
                                                ஹரீதகீ பலத்வக்       50           “
21.          ருத்தி ருத்தி                         50           “
22.          ஜீவகம் ஜீவக                      50           “
23.          ரிஷபகம் ரிஷபக                     50           “
24.          கிச்சிலிக் கிழங்கு ஸட்டீ              50           “
25.          கோரைக்கிழங்கு முஸ்தா             50           “
26.          மூக்கரட்டைவேர் புனர்னவா           50           “
27.          மேதா மேதா                         50           “
28.          ஏலக்காய் ஏலா                     50           “
29.          சந்தனம் சந்தன                     50           “
30.          ஆம்பல் கிழங்கு உத்பல கந்த         50           “
31.          பால்முதுக்கன் கிழங்கு விடாரீ        50           “
32.          ஆடாதோடை வேர் வாஸாமூல       50           “
33.          காகோலீ காகோலீ                   50           “
34.          காக்கைக் கொல்லி விதை காக நாஸிகா50           “
35.          காட்டுளுந்துவேர் மாஷபர்ணீமூல      50           “
36.          காட்டுப்பயறு வேர் முட்கபர்ணீமூல    50           “
37.          துணியில் முடிந்துக் கட்டிய நெல்லிக்காய்
-              ஆமலகீ    500 எண்ணிக்கைகள்
38.          தண்ணீர் ஜல                   12.800 லிட்டர்

செய்முறை:     

 இவைகளை நன்கு கொதிக்க வைத்துச் சரக்குகளின் சுவை கஷாயத்தில் இறங்கி அவைகள் தத்தம் சுவையை இழந்தபின்னர் எடுத்து வடிகட்டவும்.

                வெந்த நெல்லிக்காய்களை மூட்டையில் இருந்து எடுத்துக் கொட்டைகளை நீக்கி ஆட்டுக்கல்லில் அறைத்து வஸ்திரகாளனம் செய்வது போல் அகலமான ஒரு பாத்திரத்தின் உட்புறத்தை மூடிக் கட்டிய துணியில் தேய்த்து நரம்பு, நார் முதலியவைகளை நீக்கவும். பின்னர் தேய்த்து தெடுத்த நெல்லிக்க்காய் விழுதை அகலமான பாத்திரத்திலிட்டு வறுத்துப் பெருமளவு தண்ணீர் வற்றியபின் நெய், நல்லெண்ணெய் (திலதைல) வகைக்கு 300 கிராம் எடுத்துப் போதுமான அளவு சேர்த்து வறுக்கவும். அவ்விதம் வறுத்த விழுதானது கட்டி, காந்தல் முதலியவைகள் இல்லாமலும், விரல்களின் இடையே எடுத்து அழுத்த விரல் ரேகைகள் பதிவதாயும் இருக்க வேண்டும்.

                பின்னர் முன்பு கூறிய கஷாயத்தில் சர்க்கரை (ஸர்க்கர) 2.500 கிலோ கிராம் சேர்த்துச் சிறிது சூடாக்கி வடிகட்டி அதில் முன்பு பக்குவபடுத்திய நெல்லிக்க்காய் விழுதை நன்கு கரைத்துக் கொதிக்க வைக்கவும். திரவாம்சம் வற்றிய கலவை நன்கு தடித்துப் பாகம் வருமுன் கொதிக்கும். அப்பொழுது கலவைத் துளிகள் மேலே தெறித்துக் கொப்பளங்களை உண்டாக்குமாதலால் தகுந்த ஏற்பாட்டுடன் சரீரம், கை, கால்களை, மறைத்துக் கொண்டு கூர்மையான முனையுள்ள துடுப்பால் இடைவிடாது கிளறி வரவும். இல்லாவிட்டால் லேஹ்யம் பாத்திரத்தின் அடியில் பிடித்துக் கொண்டு கருகிவிடும்.

                பாகம் வந்தவுடன் நெல்லிக்காய் விழுதினை வறுத்து மீதியான நெய், நல்லெண்ணெய் இவைகளைச் சேர்த்து அவற்றுடன்,

1.            மூங்கிலுப்பு வம்ஸலோசன      200 கிராம்
2.            திப்பிலி பிப்பலீ                 100         “
3.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்  12.500   “
4.            ஏலக்காய் ஏலா                 12.500   “
5.            இலவங்கப்பத்திரி லவங்க பத்ரி  12.500   “
6.            சிறுநாகப்பூ நாககேஸர               12.500   “

இவைகளைப் பொடித்து வஸ்திரகாளனம் செய்த சூரணத்தைக் கலந்து ஆறிய பின்னர் தேன் (மது) 300 சேர்த்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.

அளவும் அனுபானமும்:     

2 முதல் 10 கிராம் வரை இரு வேளைகள் பாலுடன்.

தீரும் நோய்கள்:  
இருமல் (காஸ), இரைப்பு (அ) இழைப்பு (ஸ்வாஸ), உடல் தேய்வு (க்ஷயம்), குரல் கம்முதல் (ஸ்வர பேத), இதய நோய்கள் (ஹ்ருத்ரோக), காயம் பட்டதன் காரணமாக தசைகள் சூம்பிப்போதல் (க்ஷதக்ஷீண) அல்லது தசைகளின் தேய்மானம், இளைப்பு (கார்ஸ்ய), பலவீனம் (பலக்ஷய (அ) அசக்த), விந்து நாசம் அல்லது விந்துக் குறைவு (அல்பசுக்ர (அ) நஷ்டசுக்ர).

                                ஸ்வாஸனாந்த குடிகாவுடன் இதனைக் கலந்து கொடுக்க இரைப்பிருமலில் (ஸ்வாஸ காஸ) நல்ல நிவாரணமளிக்கிறது. ரக்த பித்த மற்றும் ராஜ யஷ்மா (T.B.) போன்றவற்றில் இஃது ஆட்டுப்பாலுடன் தரப்படுகிறது. இதுவும் ஒரு ரஸாயனமே.

 குறிப்பு:    

 சம்பிரதாயத்தில் சர்க்கரை இரண்டு மடங்காக உபயோகிக்கப்படுகிறது. எல்லாக் காலங்களிலும் பச்சை நெல்லிக்காய் கிடைப்பதில்லை என்ற காரணத்தினால் காய்ந்த நெல்லி முள்ளியைக் கொண்டே முறைப்படி லேஹ்யம் தயார் செய்வது உண்டு.

                                பெருமளவில் லேஹ்யம் தயாரிப்பவர்கள், மறுகாய்க் காலம் (Season) வரை தேவையுள்ள லேஹ்யத்தைக் காய்க்காலத்தில் (Fruiting Season) ஒரே சமயத்தில் பெருமளவில் செய்து கொள்ளுகிறார்கள்.

                                லேஹ்யமாகச் செய்து வைத்துக் கொள்வதைவிட காய்க்காலத்தில் (Season) வேண்டிய அளவு நெல்லிக் காய்களை எடுத்துப் பதம் செய்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு அவ்வப்பொழுது தேவையான அளவில் அவைகளைக் கொண்டு லேஹ்யம் தயாரிப்பது தான் பெருமளவில் தயாரிப்போருக்குக்கூட பொருளாதாரம், இடவசதி, மருந்தின் தரம் முதலிய கோணங்களிலிருந்து நோக்குங்கால் மிகவும் சௌகரியமாக இருக்கிறது.

காய்களைப் பதம் செய்யும் முறை:

                                பச்சைநெல்லிக் காய்களைச் சுத்தம் செய்த சிறிது நீர் விட்டு வேகவைத்துக் கொட்டை நீக்கி அரைத்து விழுதாக்கித் துணியில் தேய்த்துநார், நரம்பு போன்றவைகளைத் தளைந்த பின்னர் விழுதை அகலமான பாத்திரத்திலிட்டு வதக்கிப் போதுமான அளவு நெய், நல்லெண்ணெய் விட்டு வருத்துக் கட்டி, காந்தல் இல்லாது விரல்களின் ரேகை பதியுமளவில் இறுகிய விழுதை பீங்கான் ஜாடிகளில் பத்திரப்படுத்தவும். அவ்விதம் பதம் செய்யப்பட்ட அந்த விழுது 1.600 கிலோ கிராம், 500 நெல்லிக்கனிகளுக்குச் சமமாகிறது. லேஹ்யமும் ஒரே விதமாக அமைகிறது.

தெரிந்து கொள்ளவேண்டியவை
 1. தரமான -சாஸ்திரம் சொன்ன ச்யவன ப்ராஷ லேஹ்யம் -சற்றே துவர்ப்பு + கசப்பு சேர்ந்த குறைவான இனிப்பு சுவையுடன் இருக்கும்
 2. கடைகளில் கிடைக்கிற பல கம்பெனிகள் தயாரிக்கிற ச்யவன ப்ராஷ லேஹ்யம் உள்ளே உள்ள பார்முலாவே வேறு
 3. நெல்லெண்ணெய் சேர்த்து தான் உண்மையான ச்யவன ப்ராஷ லேஹ்யம் தயாரிக்கப்பட்ட வேண்டும் -ஆனால் பல ஆயுர்வேத மருந்து கம்பெனிகள் நல்லெண்ணய் சேர்த்தால் சுவை மாறி விடும் என்று சேர்ப்பதே இல்லை ..
 4. வியாபாரமாகி விட்ட உலகிலே - ச்யவன ப்ராஷ லேஹ்யம் என்றால் ஆயுர்வேத மருந்து என்பதே அதை சாப்பிட்டாலும் உணர முடிவதில்லை -அந்த அளவுக்கு கலப்படம் ,கிடைக்காத மூல பொருளை எப்படியாவது சேர்க்கவேண்டும் என்று இல்லாமல் மாற்று விலை குறைந்த கடை சரக்கை சேர்த்துவிடுவது நினைத்தால் ஆற்ற முடியாத வருத்தம் உண்டாகிறது
 5. வயதை குறைக்க ஆயுர்வேதத்தில் ராசாயனம் என்னும் அற்புத சிகிச்சைக்கு இந்த மருந்து ச்யவன என்ற முனி -சித்தர் செய்த மருந்து -உண்மையிலே அதியமான் நெல்லிக்கனி போல -ஆயுளை கூட்டும் ,வயதை குறைக்கும் .
 6. தினமும் சாப்பிட்டால் உடல் நோயில்லாமல் வாழலாம்

Post Comment

ஞாயிறு, மே 15, 2011

லேஹ்யம் செய்வது எப்படி ? -How to prepare Lehaym


லேஹியம் செய்வது பற்றி மட்டும் அல்லாது அதை போன்ற தயாரிக்கப்படும் மருந்துகளான -ரஸக்கிரியை, பானகம், லேஹ்யம், குடிகைகள், வடகங்களின் செய்முறை விதி குறித்த சில குறிப்புகள்:


                கஷாயம் போன்ற திரவ பதார்த்தங்களைக் கொதிக்க வைத்து அவற்றிலுள்ள தண்ணீரின் பகுதியை ஓரளவு வற்ற வைத்தால் அக்கலவை தடித்துப் பிசுபிசுப்புள்ளதாக ஆகிறது. பூரணமாகத் தண்ணீர் வற்றிவிடும்போது அது முற்றிலும் கெட்டியான பொருளாகவே மாறிவிடுகின்றது. இவைகளை ரஸக்ரியை என்று கூறுவது வழக்கம்.

                பெரும்பாலும் முறைப்படி சரக்குகளை நன்கு வேக விட்டுப் பிழிந்தெடுத்துத் தயாரித்த கஷாயத்தை வடிகட்டிய பின்னர் அவைகளை மேலும் சூடாக்கி வற்ற வைத்துத் தடித்துக் கறுத்த சாந்து போல் செய்து பிசுபிசுப்புத் தட்டியவுடன் எடுத்தோ அல்லது அச்சமயம் செய்முறையில் குறிப்பிட்டுள்ள சரக்குகளைப் பொடித்துச் சலித்துச் சேர்த்துக் கிளறியோ இவைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த முறையில் விசேஷமான சிக்கல்கள் ஏதும் கிடையாது.

                “கலவையின் தண்ணீர் பகுதியை குறுக்கி அதைத் தடிக்கச் செய்து தயாரிப்பதுஎன்னும் ஒரே செய்முறை ஒற்றுமையைக் கொண்டு பானகம், லேஹ்யம், வடகங்கள் முதலியவைகளின் பொதுவான செய்முறையை இங்கேயே குறிப்பிட வேண்டியிருக்கிறது.

                கற்கண்டு, சர்க்கரை, வெல்லம், நாட்டுச் சர்க்கரை, பனைவெல்லம் முதலிய இனிப்புச் சரக்குகளைக் கஷாயம், சாறு வகைகள் அல்லது தண்ணீர் இவற்றுடன் கலந்து நன்கு கரைத்து வடிக்கட்டிக் கொதிக்க வைத்துக் குறிப்பிட்ட அளவு வரை அக்கலவைகளைத் தடிக்கச் செய்து பானகங்களும், அவ்விதமே மேலும் சிறிது தடிக்கச் செய்த பின்னர் அதில் நெய், பொடித்துச் சலித்த மேம்பொடிகள் முதலியவற்றையும் சேர்த்து ஒன்றுபட நன்கு கலந்து ஆறிய பின்னர் தேனையும் சேர்த்து லேஹ்யங்களும் தயாரிக்கப்படுகின்றன.

                யுனானி முறைகளில் தேன் பாகும் உபயோகிக்கப்படுகிறது. 

                லேஹ்யங்களில் சேர்க்கப்படும் மேம்பொடிகளின் அளவிற்கேற்ப சில வகைகள் கெட்டியாகவும், சில வகைகள் நெகிழ்தலாகவும் அமைகின்றன. நெகிழ்தலானவைகளை அவலேஹம் என்று குறிப்பிடுவதும் உண்டு. லேஹ்யங்களில் சேர்க்கப்படும் சூர்ணம் நன்கு வஸ்திர காளனம் செய்யப்பட்டோ அல்லது 80 ஆம் நெம். சல்லடை வலைகொண்டு சலிக்கப்பட்டோ இருத்தல் வேண்டும்.

                சர்க்கரை முதலியவைகளை திரவ பதார்த்தங்களில் நன்கு கரைத்து வடிகட்டிய பின்னரே அத்துடன் நெல்லிக்காய் விழுது, கடுக்காய் விழுது, சுக்கு முதலியவைகளை குறிப்பிட்டுள்ளபடி கலக்க வேண்டும். கட்டி முதலியவைகள் நன்கு கரைந்து சீரான திரவமாக ஆன பின்னர் கலவைகளை கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும் பொழுது ஓரங்களில் பிடித்தல், கட்டி தட்டுதல் முதலியவைகளை அவ்வப்போதே கிளறுவதன் மூலம் தவிர்க்க வேண்டும்.

                கலவைகள் கொதித்து அவற்றிலுள்ள தண்ணீர்ப்பகுதி ஆவியாக மாறிக் குறையும் போது கலவையின் தடிப்பும் அதிகரிக்கிறது. தண்ணீரின் பகுதி முற்றிலும் வற்றிவிடும் பொழுது சர்க்கரை முதலியன கெட்டியாகவோ, கருகவோ ஏதுவாகிறது. அவ்விதம் ஆகவிடாமல் குறிப்பிட்ட அளவிலேயே அக்கலவைகளின் தடிப்பை நிலை நிறுத்தி நெய் முதலியவற்றைச் சேர்க்க வேண்டும்.

                இது அனுபவத்தைப் பொறுத்து. எனினும் கீழே கொடுக்கப்படும் குறிப்புகள் ஓரளவுக்கு வழிகாட்டியாகும்.

பானக பாகம்:

                சர்க்கரை முதலியவற்றின் நீர் போன்ற கலவையைக் கொதிக்க வைத்துக் குறுக்கி சற்று இறுகியபின் அதைச் சிறிதளவு ஒரு கரண்டியில் எடுத்துச் சுழற்றி சுழற்றி ஆற வைத்தால் து பின்னும் சிறிதளவு இறுகிக் தடித்துத்  தேன் போன்ற தோற்றமளிக்கும். இதுதான் பானகங்களுக் கேற்ற பானக பாகம்எனப்படும்.

லேஹ்ய பாகம்:

                பானக பாகத்தையும் கடக்கப் பாகைக் கொதிக்க வைத்தோமானால் மேலும் ஓரளவுக்குக் குறுகிய பாகு துடுப்பு முதலியவைகளால் தூக்கி ஊற்றப்படும் பொழுது கடைசித் துளிகூட மெல்லிய நூலால் இணைக்கப் பெற்றது போல் ஒரே தொடர்ச்சியுள்ளதாகவே துடுப்பிலிருந்து கீழே விழும். அப்பொழுது விரலினால் அக்கலவையைச் சிறிது எடுத்து சுடாத வண்ணம் தொட்டு இரு விரல்களால் அமிழ்த்திப் பிரிக்க அக்கலவை நூல் போன்று இரு விரல்களையும் பிணைத்து நிற்கும். இவ்விதம் இணைத்து நிற்கும் நூல்களின் எண்ணிக்கைக்கேற்ப ஒரு நூல் பாகு முதல் ஏழு நூல் பாகு வரை ஏழுவிதமான பாகு வகைகளை யுனானி மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

                மேலும் கலவைகளின் பிசுபிசுப்பிற்கும், தடிப்பின் தரத்திற்கும் ஏற்ப விரல்கள் விரைவிலோ, தாமதித்தோ பிரியும். அவ்விதம் பிரிவது அதிகமாகத் தாமதித்தோ, வெகு விரைவிலோ ஏற்படாதவாறு பாகு அமைய வேண்டும். தண்ணீரை ஒரு தட்டில் நிரப்பி அதன் மத்தியில் அந்நிலையில் தடித்த பாகைச் சிறிது கரண்டியால் எடுத்துவிட அது தண்ணீரில் அமிழ்வதுடன் கரையாமலும், சிதறாமலும் விழுந்த நிலையிலேயே சிறிது நேரம் நிற்கும். இவைகள்தான் சரியான லேஹ்ய பாகத்தின் அறிகுறிகள்.

                இவ்விதமான அடையாளங்களைக் கொண்டு பதத்தைத் தீர்மானம் செய்து கொண்டு கலவையை உடனே தீயிலிருந்து கீழே இறக்கி நெய், எண்ணெய், சூர்ணம் போன்றவைகளைச் சேர்த்து நன்கு கலந்து ஆறிய பின்னர் பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, கஸ்தூரி போன்ற வாசனை சரக்குகள், தேன் இவைகளையும் சேர்த்து ஒன்றுப் படக் கலந்து பத்திரப்படுத்தவும்.

வடக பாகம்:
                மேலே குறிப்பிட்ட லேஹ்ய பாகத்தையும் கடக்கும்படி பாகைக் கொதிக்க வைத்தால் அது மேலும் இறுகுவதுடன் விரல்களால் தொட்டுப் பிரிக்க மிகுந்த எதிர் விசையால் சிறிது தடுக்கப்பட்டுத் தாமதித்தே விரல்கள் பிரியும். பாகு பிசுபிசுப்புத் தன்மையுடனும், தடித்தும், மிகவும் இறுகியதாகவும் இருக்கும். இந்நிலையில் சூர்ணம் கலந்து சிறிது ஆறிய பின்னர் அதை உருண்டையாகவோ, நீளமாகவோ நிலைநிறுத்தலாம். மேலும் விரல்களின் ரேகைகளும் அவற்றில் பதிந்து காணப்படும்.

                இதை வடக பாகம், குடிகா பாகம், மோதகபாகம், பிண்டீ பாகம், குட பாகம், வர்த்தி பாகம் என்ற பெயர்களால் குறிப்பிடலாம். வாயில் அடக்கிக் கொள்ளத் தக்க வடகங்கள், மலத்துவாரம், யோனி மார்க்கம் இவைகளில் செலுத்தத்தக்க பலவர்த்திகள் ஆகியன இந்தப் பாகத்தில் தான் தயாரிக்கப்படுகின்றன.

                வெல்லம், சர்க்கரை போன்றவற்றைப் போல் சுத்தி செய்த குக்குலுவையும் முன் கூறிய திரவ பதார்த்தங்களில் கொதிக்க வைத்து நன்கு கரைத்துக் கலந்து லேஹ்யம் செய்யும் முறைப்படியே வடகங்கள், குடிகைகள் முதலியன செய்யப்படுகின்றன.

                வெல்லப்பாகைக் காட்டிலும் சர்க்கரைப் பாகு சீக்கிரமாகக் கெட்டியாகும் குணமுள்ளதாகையால் அதைச் சற்று விசேஷமாகக் கவனிக்க வேண்டும். குறிப்பிட்ட சில வடகங்களும், குடிகைகளும் முன் கூறியபடி நெருப்பின் சம்பந்தமின்றியும் தயாரிக்கப்படுகின்றன. பொடித்துச் சலித்த சூரணம், பஸ்மங்கள் இவைகளைக் கல்வத்திலிட்டுக் கஷாயம், சாறு வகைகள், பன்னீர், தீனீர் முதலிய திரவ பதார்த்தங்களைக் கொண்டு விரல்களில் ஒட்டாதவரை நன்கு அரைத்து உருட்டியும் தயாரிக்கப்படுகின்றன.

                பச்சைக் கற்பூரம், புனுகு, கஸ்தூரி, சந்தனத் தைலம் முதலிய வாசனைத் திரவியங்களை மாத்திரைகளாக உருட்டும் போது மட்டுமே சேர்க்க வேண்டும். பொடிக்க வேண்டியவைகளை நன்கு பொடித்துச் சலித்து அரைத்துச் சேர்க்கவும்.

Post Comment

சனி, மே 14, 2011

குதி வலிக்கும் மற்ற வாத வலிக்கும் சிறந்த மருந்து -ராஸ்னாதிக்வாத சூர்ணம்- Rasnadhi Kashayam


குதி வலிக்கும் மற்ற வாத வலிக்கும் சிறந்த மருந்து -ராஸ்னாதிக்வாத சூர்ணம்-Rasnadhi Kashayam
(ref-ஸஹஸ்ரயோகம் - கஷாயப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.            சித்தரத்தை ராஸ்னா                 - 10 கிராம்
2.            ஆமணக்குவேர் எரண்டமூல           - 10       “
3.            சித்தாமுட்டிவேர் பலாமூல           - 10       “
4.            கருங்குறிஞ்சிவேர் ஸஹச்சார         - 10       “
5.            தண்ணீர்விட்டான் கிழங்கு ஸதாவரீ   - 10       “
6.            சிறுகாஞ்சூரி துராலபா                - 10       “
7.            ஆடாதோடைவேர் வாஸாமூல        - 10       “
8.            சீந்தில்கொடி குடூசீ                   - 10       “
9.            தேவதாரு தேவதாரு                 - 10       “
10.          அதிவிடயம் அதிவிஷா               - 10       “
11.          கோரைக்கிழங்கு முஸ்தா             - 10       “
12.          நீர்முள்ளி கோகிலாக்ஷா              - 10       “
13.          கிச்சிலிக்கிழங்கு ஸடீ                - 10       “
14.          சுக்கு சுந்தீ                           - 10       “


மேற்கூறிய சரக்குகளை நன்கு சுத்தம் செய்து ஒன்றிரண்டாகப் பொடித்து காற்றுப் புகாத கொள் கலன்களில் பத்திரப்படுத்தவும்.

கஷாயம் தயாரிக்கும் விதம்:
                கஷாயப் பொடி – 60 கிராம்
                தண்ணீர்      - 960 மில்லி லிட்டர்
                இவற்றை நன்கு கொதிக்க வைத்து 120 மில்லி லிட்டராகக் குறுக்கி ஆறியபின்வடிக்கட்டவேண்டியது.

அளவு:     

 30 முதல் 60 மில்லி லிட்டர் வரை  நெய், நல்லெண்ணெய் சேர்த்து இரு வேளைகள் கொடுக்கவும்.


தீரும் நோய்கள்:  

கீல்வாயு (சந்திவாத), குதிகால் வாதம் (வாத ரக்த), பலவித வாத நோய்களிலுண்டாகும் வலி (வாதசூல), ரக்தவாதஜ சோப மற்றும் பலவிதமான வாதரோகங்கள் போன்ற நிலைகளில் வாதக ஜாங்குஸ (அ) யோகராஜ க்குலுவுடன் தரப்படுகிறது. மற்ற மருந்துகளுக்கு அனுபானமாகப் பயன்படுகிறது.

தெரிந்து கொள்ளவேண்டியவை ..
 1. இந்த கஷாயத்தை செரிய ராஸ்னாதி கஷாயம் என்று கேரளாவில் சொல்வார்கள் ..மஹா ராஸ்னாதி கஷாயத்தை போன்று உள்ளே உள்ள மூலிகைகள் அடங்கிய கஷாயத்தில்-அமுக்கராக்கிழங்கு,வசம்பு,மூக்கிரட்டை ,கடுக்காய்,,சதகுப்பை,நெருஞ்சில்,கொத்தமல்லிவிதை,கண்டங்கத்திரி, முள்ளுக்கத்திரி போன்ற மூலிகைகள் சேர்கின்றன ,இந்த செரிய ராஸ்னாதி கஷாயத்தில் இந்த மூலிகைகள் சேர்வதில்லை 
 2. வலிகளை போக்க எளிமையான கஷாயம் இது
 3. எல்லோருக்கும் எளிதாக வரக்கூடிய குதிகால் வலியில் இந்த மருந்தோடு சித்த மருந்தில் அதிஷ்ட ரசாயனம் என்ற லேஹியத்தோடு சிங்கி சுண்ணம் சேர்த்தது கொடுக்க எளிதாக மாறும்
 4. வாத நீரில் இருந்து எலும்பு பசியின்மை வரை இந்த மருந்தை சந்தேகம் எதுவும் இன்றி நம்பி சாப்பிட பலன் தெரியும்

என்னை வாழ்த்திய அன்பு உள்ளங்கள் வானுவன் யோகி ,கோவை சக்திக்கும் ,மற்றும் நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
 

Post Comment

புதன், மே 11, 2011

இன்று ....

கவை  முப்பத்தைந்து ஆனது இன்றோடு
யினும் செய்ய வேண்டிய கடமைகள் -கடல் அளவு
ன்றே இயன்றதை செய்ய பிணி நீக்கும் பணிகளும் -மகிழ்ச்சியும் நேரமின்மையுடனும்
ந்து விட நான் கற்ற (கற்றுகொண்டிருக்கும் ) மருத்துவம் -எல்லோருக்கும் சேர்ந்திட
ள்ளம் ,உயிர் சேர்ந்து பிசைந்த கல்வியறிவை ஏற்றிவைக்க நண்பர்களுடன் ,இயற்கையுடன் எல்லோருடைய
ணுயிர் வளர மண்ணுயிர் பயனுற வெறி கொண்டு
ல்லாம் வல்ல இறைவனிடம் "என்னை நாடி வரும் நோயாளிகளின் பிணி நீக்கி  தருவாய் எந்த மருந்துக்கோ மருத்துவனுக்கோ ஆற்றல் இல்லை -உனதருள் இன்றி " என்று
க்கத்துடன் கேட்டவனாய் ..வட்டி இல்லாமல் ,பிறர் கை எதிர் பாராமல் எனது கனவு மருத்துவமனையையும் கட்டிட வேண்டி
வேளை தொழுகையுடன் -அழுகையுடன் கேட்கிற பிரார்த்தனையில் இந்திய மருத்துவத்தை என்னால் இயன்ற அளவுக்கும்
ருமித்த கருத்துடன் எல்லாருக்கும் சேர்த்திட  இந்த தளத்தின் மூலமாகவும் சேவை செய்திட
ர் வாய்ப்பை அளித்த ஏக இறைவனுக்கும் நன்றி கூறியவனாக
ஷதங்களை ஆராய்ந்து உலகுக்கு சொல்வேன் என்ற உறுதியுடன் "என் பணி ,பிணி நீக்குவதே எல்லோருக்கும் இந்த தளத்தின் அறிவு கொடுப்பது மூலமாக ..


Post Comment

செவ்வாய், மே 10, 2011

வெள்ளை அணுக்களை குறைக்கும் காய்ச்சலையும் சரி செய்யும் -காய்ச்சலை சரி செய்யும் பீரங்கி -பார்ங்யாதி க்வாத சூர்ணம்டெங்கு காய்ச்சல் –பன்றி காய்ச்சல் இரண்டையும் குணப்படுத்தும் –வராமல் தடுக்கும் மருந்து –பாரங்யாதி கஷாயம் 


வெள்ளை அணுக்களை குறைக்கும் காய்ச்சலையும் சரி செய்யும் -காய்ச்சலை சரி செய்யும் பீரங்கி -பார்ங்யாதி க்வாத சூர்ணம்
 (ref-ஸஹஸ்ரயோகம் - கஷாயப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:1.            கண்டுபாரங்கி பார்ங்கீ      - 10 கிராம்
2.            கோரைக்கிழங்கு முஸ்தா        - 10       “
3.            பர்பாடகம் பர்பாடக             - 10       “
4.            கொத்தமல்லிவிதை தான்யக    - 10       “
5.            சிறுகாஞ்சூரி துராலபா           - 10       “
6.            சுக்கு சுந்தீ                     - 10       “
7.            நிலவேம்பு பூநிம்ப              - 10       “
8.            கோஷ்டம் கோஷ்ட             - 10       “
9.            திப்பலி பிப்பலீ            - 10       “
10.          முள்ளுக்கத்திரி ப்ருஹத்தீ       - 10       “
11.          சீந்தில்கொடி குடூசீ              - 10       “

மேற்கூறிய சரக்குகளை நன்கு சுத்தம் செய்து ஒன்றிரண்டாக இடித்து காற்றுப்புகாத கொள்கலன்களில் பத்திரப்படுத்தவும்.
கஷாயம் தயாரிக்கும் முறை:
                கஷாயப் பொடி  - 60 கிராம்
                தண்ணீர்        - 960 மில்லி லிட்டர்
                                இவற்றை நன்கு கொதிக்க வைத்து 120 மில்லி லிட்டராகக் குறுக்கி ஆறிய பின் வடிக்கட்டவும்.
  
அளவு:          

 30 – 60 மில்லி லிட்டர் வரை இரு வேளைகள் கொடுக்கவும்.
  தீரும் நோய்கள்:  

வாதகப சுரம் எனும் வளிஐயக்காய்ச்சல் (வாதகபஜ்வர), குளிர்சுரம் (விஷமஜ்வர), முறைக்காய்ச்சல் (ஜீர்ண ஜ்வர) போன்ற பல விதமான காய்ச்சல்கள், இருமல் (காஸ), ஜலதோஷம் முதலியன. வயிற்றிலுள்ள உருண்டை, தட்டை மற்றும் கொக்கிப் புழுக்களை (க்ருமி கோஷ்ட) வெளியேற்றவும், மற்ற மருந்துகளுக்கு அனுபானமாகவும் பயனாகிறது.

தெரிந்து கொள்ளவேண்டியவை -

 1. மர்ம காய்ச்சல் ,வைரஸ் காய்ச்சல் ,நாள்பட்ட காய்ச்சல் ,விட்டு வரும் காய்ச்சல் அனைத்திற்கும் இந்த மருந்து நல்ல மருந்து -இதனுடன் வெட்டுமாரன் குளிகா அல்லது அம்ருதாரிஷ்டம் அல்லது நிலவேம்பு சார்ந்த மருந்துகளான மகா சுதர்சன மாத்திரையுடன் தந்தால் காய்ச்சல் ஓடியே போகும் என்று பந்தயம் கட்டலாம் ..
 2. காய்ச்சல் வந்த உடன் -கஷாயம் தருவது நல்லது இல்லை ,முதலில் வயிற்றுக்கு பட்டினி தான் நல்லது ,பசியின் தன்மை அறிந்துதான் கஷாயம் தருவது நல்லது
 3. பாரங்கி +பவள மல்லி இலை கசாயம் கூட காய்ச்சலை குறைக்கும்
 4. வெள்ளை அணுக்கள் குறைந்து போகிறது ,இரத்த தட்டுக்கள் குறைந்து போகும் பேர் தெரியா காய்ச்சலுக்கும் இந்த மருந்து நன்றாக வேலை செய்கிறது
 5. டெங்கு காய்ச்சல் –அணுக்கள் குரைக்கிற காய்ச்சல் மற்றும் சளி சேர்ந்த கப காய்ச்சல் –இருமல் சார்ந்த காய்ச்சல் –வைரஸ் காய்ச்சல் எல்லா பெயர் தெரியாத காய்ச்சலுக்கும் இந்த மருந்தை பயமின்றி தரலாம் ..தொடர்ந்து ஐந்து நாட்கள் பருகி வர –உடலின் எதிர்ப்பு சக்தி அதிகமாகி –எல்லா விதமான வைரஸ் காய்ச்சலில் இருந்தும் தடுத்து கொள்ளலாம்.
  உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க –இயற்கையாக நோய்களில் இருந்து சீக்கிரம் விடுதலை பெற –ஆயுர்வேத ஆலோசனைக்கு அணுக வேண்டிய முகவரி
  அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
  கடையநல்லூர் 90 4222 5333
  திருநெல்வேலி 90 4222 5999
  ராஜபாளையம் 90 4333 6888
  சென்னை 90 4333 6000


Post Comment

திங்கள், மே 09, 2011

இடுப்பு டிஸ்க் சார்ந்த பிரச்சனையால் ஏற்படும் -முதுகுவலிக்கு சிறந்த மருந்து -கந்தர்வஹஸ்தாதி க்வாத சூர்ணம்-Gandarva hastadhi Kashayam


இடுப்பு டிஸ்க் சார்ந்த பிரச்சனையால் ஏற்படும் -முதுகுவலிக்கு சிறந்த மருந்து -கந்தர்வஹஸ்தாதி க்வாத சூர்ணம்-Gandarva hastadhi Kashayam
(ref-ஸஹஸ்ரயோகம் - கஷாயப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            ஆமணக்குவேர் ஏரண்டமூல                     - 10 கிராம்
2.            ஆவில்பட்டை பூதிகத்வக்                         - 10       “
3.            கொடிவேலிவேர் சித்ரகமூல                      - 10       “
4.            சுக்கு சுந்தீ                                        - 10       “
5.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்  - 10       “
6.            மூக்கிரட்டைவேர் புனர்னவா                     - 10       “
7.            சிறுகாஞ்சூரி     - துராலபா                      - 10       “
8.            நிலப்பனைக்கிழங்கு முசலீ கந்த               - 10       “

மேற்கூறிய சரக்குகளை நன்கு சுத்தம் செய்து ஒன்றிரண்டாகப் பொடித்து காற்றுபுகாத கொள்கலன்களில் பத்திரப்படுத்தவும்.

கஷாயம் தயாரிக்கும் விதம்:


                                கஷாயப் பொடி – 60 கிராம்
                தண்ணீர்      - 960 மில்லி லிட்டர்
                இவற்றை நன்கு கொதிக்க வைத்து 120 மில்லி லிட்டராகக் குறுக்கி ஆறியபின் வடிக்கட்ட வேண்டியது.

அளவு:          

 30 முதல் 60 மில்லி லிட்டர் வரை இந்துப்பு, வெல்லம் சேர்த்து காலையிலும், படுக்கும்போது என இரு வேளைகள்.

தீரும் நோய்கள்:  

பசியின்மை (அ) ஜீரணமந்தம் (அக்னிமாந்த்ய). ருசியின்மை (அருசி), மலச்சிக்கல் (மலபந்த), வீக்கம் (ஷோப), நரம்புக் கோளாறுகள், கீல்வாயு (சந்திவாத) போன்ற பலவிதமான வாத நோய்கள், மலமிளக்கிச் செய்கை கிட்ட வேண்டுமாயின் இந்துப்பு மற்றும் வெல்லம் சேர்ந்து இதனை அருந்த வேண்டும்.

                பஞ்சகர்ம சிகிச்சை முறையான நவரக்கிழி, தாரை, பிழிச்சல் முதலியவற்ரைத் தொடங்குமுன், தினமும் இது உபயோகிக்கப்படுவதால் இதற்கு பாத்திக் கஷாயம்என்றும் பெயர் உண்டு.
                மற்ற மருந்துகளுக்கு அனுபானமாகவும் உபயோகிக்கலாம்.தெரிந்து கொள்ள வேண்டியவை -
 1. இடுப்பு வலி ,அடி முதுகு வலி ,பெண்களின் வெள்ளைபடுதளால் உண்டாகும் குறுக்கு வலி -போன்ற இடுப்பு வலி சார்ந்த பிரச்சனைக்கு இந்த மருந்து மிக பிரமாதமாக வேலை செய்யும் ..
 2. இடுப்பில் உள்ள டிஸ்க் நழுவல் ,டிஸ்க் கிழிதல், டிஸ்க்கின் பிதுக்கம் ,டிஸ்க்கின் எல்லாவிதமான பிரச்சனைக்கு -இந்த மருந்தோடு சஹாச்சராதி கசாயம் சேர்ந்து உள்ளே -க்ஷீர பலா நூற்று ஒன்று ஆவர்திதம் -சேர்த்து சாப்பிட நல்ல பலன் தரும்
 3. பஞ்சகர்ம என்னும் உடலை சுத்தம் செய்யும் சிகிச்சையில் மிக முக்கியமான வஸ்தி என்னும் சிகிச்சையில் பிரிவான கஷாய வஸ்திக்கு இந்த மருந்தை என்னை போன்ற ஆயுர்வேத மருத்துவர்கள் அதிகம் பயன்படுத்துவோம்
 4. ஆமணக்கு வேர் -மலமிளக்கி என்பதால் வாதம் தடையாக உள்ள எல்லா நோய்களுக்கும் -இந்த மருந்து சிறந்த மருந்து ..
 5. காந்தர்வ ஹஸ்தம் -என்றால் அரக்கனின் கை என்று பொருள் -இது ஆமணக்கின் வேறு பெயர் என்று தெரிதல் நல்லது
 6. நிலபங் கிழங்கு என்னும் ஆண்மை பெருக்கும் மூலிகை இருப்பதால் இந்த மருந்து தாதுக்கள் குறைவினால் ஏற்படும் நோய்களுக்கும் சிறந்து

Post Comment