ஞாயிறு, மே 27, 2012

ஹோமியோவிலும் டெங்கு காய்ச்சலுக்கு மருந்து

ஆயுர்வேத சித்த மருத்துவத்தை போல் ஹோமியோ மருத்துவத்திலும் டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தும் ,நோயை குறைக்க சரி செய்ய ,உயிர் இழப்பை போக்கிட சிறந்த மருந்துகள் உள்ளது
ஹோமியோவில் கீழ் கண்ட மருந்துகள் பொதுவாக டெங்கு காய்ச்சலுக்கு பயன்படுகிறது


Aconite.
Arnica, 
Arsenic-alb, 
Arum-tri., 
Baptisia., 
Belladonna., 
Bryonia., 
Cantharis., 
China officinalis Colocynthis.,
Eupatorium perfoliatum., 
Ferrum metallicum., 
Gelsemium., 
Hamamelis., 
Ipecac., 
Lachesis, 
Merc-sol, 
Nux vomica., 
Podophyllum., 
Rhus toxicodendron., 
Rhus-venenata., 
Sanicula., 
Secale cornutum and Sul-acidum

மேலே சொன்ன பல மருந்துகளில்  ஈபடோரியம் பெர்போளியோட்டம் -Eupatorium perfoliatum என்ற மருந்தே சிறந்த ஹோமியோவில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் சிறந்த ஹோமியோ மருந்தாக விளங்குகிறது


டெங்கு சாதாரண காய்ச்சலுக்கு மேலே சொன்ன மருந்துகளில்
Arsenic album, Bryonia, Eupatorium perfoliatum, Gelsemium, and Rhus toxicodendron  மருந்துகள்  30 ,200 வீர்யத்தில் பயன்படுத்தி வெற்றி கொள்ளலாம்


உயிர் இழப்பை ஏற்படுத்த கூடிய டெங்கு ஹெமரோஜிக் காய்ச்சல் (Dengue Haemorrhagic fever (DHF)) இரத்த தட்டுக்களையும் ,வெள்ளை அணுக்களையும் பரிசோதித்து மருத்துகள் எடுத்துகொள்வது நல்லது ...இந்த வகை டெங்கு ஹெமரோஜிக் காய்ச்சலில் குமட்டல் ,வாந்தி ,பற்களில் இரத்தம் கசிவு ,இரத்த வாந்தி ,கருப்பு நிற மலம் ,ஆசன வாய் வழியாக இரத்தம் வெளியேறுதல் ,உடலில் திட்டு திட்டாக கருப்பு நிறமாதல் ,அதிக காய்ச்சல் ,குறையாத காய்ச்சல் போன்ற குறிகுணங்கள் தோன்றலாம் ..
இந்த நிலையில் ஹோமியோ மருந்துகளில் Crotalus horridus, Ferrum metallcum, Hamamelis, Ipecac, Lachesis and Secale-cor along-மருந்துகள்  30 ,200 வீர்யத்தில் பயன்படுத்தி வெற்றி கொள்ளலாம்..ஆனால் மிக்க கவனம் தேவை 
இந்த மருந்துகளில் இபிகாக் என்ற மருந்தே சிறந்த மருந்தாக பயபடுத்தபட்டதாக பல ஆராய்சிகள் நிரூபிக்கின்றன ..

குறிப்பு -டெங்கு காய்ச்சல் இடத்தில் வசிப்பவர்கள் ,டெங்கு காய்ச்சல் பரவி விடலாம் என பயப்படுபவர்கள் ஈபடோரியம் பெர்போளியோட்டம் மருந்தை  200 வீர்யத்தில் பெரியவர்கள் காலை மாலை நான்கு பில்ஸ் சுவைத்து இரண்டு நாட்களுக்கு சாப்பிடுவதன் மூலம் தடுத்து விட முடியும் ,குழந்தைகள் ஈபடோரியம் பெர்போளியோட்டம் மருந்தை 30 வீர்யத்தில் காலை மாலை மூன்று  பில்ஸ் சுவைத்து இரண்டு நாட்களுக்கு சாப்பிடுவதன் மூலம் தடுத்து விட முடியும்.
நன்றி -எனது ஹோமியோ மனைவி (டாக்டர் ஜவாஹிரா பானு..,B.H.M.S )

Post Comment

வியாழன், மே 24, 2012

டெங்கு காய்ச்சல் -வராமல் தடுக்கவும் -வந்தால் என்ன செய்யலாம் ?

டெங்கு காய்ச்சல் பற்றி விழிப்புணர்வே அதை தடுக்கும் என்பதால் அதை பற்றி தெரிந்து கொள்வது அவசியம் ..

டெங்கு பற்றி கட்டுரை படிக்க தன்னம்பிக்கை தொடரில் மருத்துவர் ராஜேந்திரன் அவர்கள் எழுதிய கட்டுரை படிக்க இங்கே கிளிக் செய்யவும்


டெங்கு காய்ச்சலுக்கு ஆயுர்வேத சித்த மருந்துகளில் தடுப்பு மருந்துகள் உள்ளதா ?


 1. டெங்கு வராமல் தடுக்க -நில வேம்பு கஷாயம் தினமும் -காலை மாலை முப்பது மிலி வெறும் வயிற்றில் -மூன்று வாரங்கள் தொடர்ந்து எடுத்து கொண்டால் டெங்கு முதலான வைரசினால் பரவக்கூடிய காய்ச்சலை தடுத்து விட முடியும் ..
 2. டெங்கு காய்ச்சல் பரவக்கூடிய இடத்தில் உள்ளவர்கள் ,,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
 3. இந்த நில வேம்பு கஷாயம் -குடிநீர் எளிதாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் -சித்த மருத்துவ பிரிவில் -இலவசமாக கிடைக்கும்
 4. நிலவேம்பு தயாரிக்க நினைப்பவர்கள் ..இந்த கட்டுரையை( இங்கே கிளிக் செய்யவும் நிலவேம்பு குடிநீரில் உள்ள ஒன்பது மூலிகைகளின் படங்கள் ) படித்து எளிதாக வீட்டிலே தயாரிக்கலாம் ..தயாரிக்க பயன்படும் மூலிகை பொருட்கள் அருகில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ..
 5. நில வேம்பு கஷாயம் கசப்பு சுவை உடையது ..கசப்பை தாங்காதவர்கள் பனங்கற்கண்டு சேர்த்து கொள்ளலாம் ..அல்லது தேன் சேர்த்து கொள்ளலாம் ..
 6. ஆயுர்வேதத்தில் ..அம்ருதாரிஷ்டம்  இருபத்தைந்து மில்லி மருந்து சம அளவு வெந்நீருடன் காலை மாலை பருக ..வராமலும் தடுக்கலாம் ...வந்தாலும் பயப்படாமல்  ஓட ஓட விரட்டலாம் ..அம்ருதாரிஷ்டம் பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்நோய் எதிர்ப்பு சக்தி தரும் -எந்த வித காய்ச்சலையும் குணபடுத்தும் -அமிர்தாரிஷ்டம்-Amrutha Arishtam
 7. மேலும் சடங்க பானியம் என்னும் -நில வேம்பில் உள்ள ஒன்பது பொருட்களில் உள்ளவற்றில் ஆறு மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படும் குடிநீரும் நல்ல பலன் தரும் -இது பாட்டில் மருந்தாக பல கேரளா கம்பெனிகள் தயாரிக்கின்றன ..
 8. மேலும்வெள்ளை அணுக்களை குறைக்கும் காய்ச்சலையும் சரி செய்யும் -காய்ச்சலை சரி செய்யும் பீரங்கி -பார்ங்யாதி க்வாத சூர்ணம்-டெங்கு காய்ச்சலுக்கும் நன்றாக பயன்படும் -இதுவும் ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கிறது
 9. எனது பழைய கட்டுரைகளில் கூறியுள்ள காய்ச்சலுக்கு பயன்படும் இந்த மருந்துகளும் நன்றாக பயன்படும் ..
 10. மூலிகை பாராசிட்டமால் -ஸுதர்சன சூர்ணம்-Sudarshana choornam-என்ற மருந்து -எல்லாவிதமான காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தாகவும் ,காய்ச்சலை குணமாக்கவும் பயன் படும் என்பதில் இந்த கட்டுரையில் சவால் விட்டது போல் இப்போதும் என்னால் சவால் விட முடியும் .
 11. மேலும் சித்த மருந்துகளில் பிரம்மானந்த  பைரவம் ,வாத சுர குடிநீர் ,மிக மிக குறைந்த அளவிலே லிங்க செந்தூரம் போன்றவையும் காய்ச்சல் வராமலும் வந்தாலும் தடுக்கவும் உதவும்
டெங்கு காய்ச்சல் வந்த பின் ஆயுர்வேத சித்த மருத்துவம் என்ன செய்ய வேண்டும்

 1. காய்ச்சல் வந்த பின் முதலில் பட்டினி கிடப்பது நல்லது ...ஆயுர்வேதத்தில் லங்கனம் பரம ஔசதம் என்பார்கள் ...சத்தான எளிதில் செரிக்கூடிய கஞ்சி வகைகளே மிகவும் நல்லது ..திட உணவை முற்றிலும் காய்ச்சல் குறைந்தாலும் தவிர்ப்பது நல்லது
 2. ஊசி மருந்தை கொண்டு உடனடியாக காய்ச்சலை குறைக்கிறேன் என்று ஸ்டீராய்ட் கலந்த ஊசிகளை  தவிர்ப்பது நல்லது ...உங்களுக்கு ஊசி போட போகும் மருத்துவரிடம் இந்த ஊசியிலே டெக்சா அல்லது ஸ்டீராய்ட் இல்லேயே என்பதை உறுதிபடுத்துவது நல்லது ...ஏனெனில் ஸ்டீராய்ட் உடனடியாக காய்ச்சலை குறைக்கலாம் ...ஆனால் அதில் ஆபத்து அதிகம் ..
 3. மேலே சொன்ன ஆயுர்வேத மருத்களையும் சித்த மருத்துகளையும் சாப்பிடலாம்..
 4. ஆங்கில மருந்தோடு கூட நான் சொன்ன மேலே சொன்ன ஆயுர்வேத சித்த மருத்துகளை எடுத்துகொள்ளலாம் ...ஆங்கில மருந்தில் டெங்கு காய்ச்சலுக்கு மருந்தில்லை என்று அவர்களே சொல்லிவிட்டார்கள் ..
 5. ம்ருத்துன்ன்ஜய  ரசம் ,விஷம ஜ்வரான்குச லோஹம் ,வெட்டுமாரன் குளிகா போன்ற மருந்துகளும் நல்ல பலன் தரும்
டெங்கு காய்ச்சலால் இரத்த தட்டுக்கள் குறைகிறதே ..இதை தடுக்க ,சரி செய்ய வழி இல்லையா ?
 1. இரத்த தட்டுக்களை குறைய விடாமல் காக்கவும் ,இரத்த தட்டுக்களை மிக வேகமாக இரத்த பிளாஸ்மா ஏற்றுவது போல் வேகமாக கூட்ட அற்புத மருந்து ஆடாதோடை மூலிகை ...இது ஆயுர்வேதத்தில் இரத்த பித்த நோய்களில் மிக சிறந்த மருந்தாக கூறப்படுகிறது ...எனவே ..ஆரம்ப நிலையில் இரத்த தட்டுக்கள் குறைந்த நோயாளிகள் ( அதாவது ஒரு இலட்சத்திற்கும் மேல் இரண்டு இலட்சத்திற்கும் உள் உள்ளவர்கள் )..இந்த ஆடாதோடை இலையை சாறு எடுத்து அதனை சற்று சூடு செய்து ஐந்து முதல் பத்து மிலி அளவுக்கு ஒரு வாரம் சாப்பிட்டு வர  நல்ல பலன் தெரியும் ...ஒரே நாளில் அணுக்கள் கூடியிருப்பதை கண் கூடாக பார்க்கலாம்
 2. ஆடாதோடை பச்சை இலை கிடைக்காதவர்கள் ..ஆடாதோடை குடிநீராக கடைகளில் இருந்தும் ,அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தும் பெற்று கொள்ளலாம் ..
 3. ஆடாதோடை இப்போது வசாகா என்ற மாத்திரையாக ஹிமாலய கம்பெனி தனி மூலிகை கேப்ச்யூளாக தாயாரிக்கிரார்கள் ...அருகில் உள்ள மருந்து கடைகளில் இதை எளிதாக பெற்று கொள்ளலாம்
 4. மேலும் மஹா மஞ்சிஷ்டாதி கஷாயம் ,இரகத்த பிட்டதாந்தக லோஹா மாத்திரைகளை,சீந்தில் சேர்ந்த மாத்திரைகளை  சாப்பிட்டும் அதிகமாக்கி கொள்ளாலாம் ..இரத்த தட்டுக்கள் ஐம்பதாயிரத்திற்கு உள்ளே உள்ளவர்கள் இதை மட்டும் சாப்பிட்டு ரிஸ்க் எடுக்க கூடாது ..அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் இரத்தம் ஏற்றுவது நல்லது ..
சந்தேகங்களை எனது மெயில் முகவரியில் கேட்கலாம் ..
நாங்கள் ..மேலே சொன்ன மருந்துகளை எங்களது கிளினிக்கில் இலவசமாக பல நோயாளிகளுக்கு கொடுத்து வருகிறோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம் ..நோயாளிகள் சீக்கிரம் குணம் அடைகிராரர்கள் என்பதே அதில் சிறப்பு ..எனது முந்தைய பதிவுகளான -கீழ்க்கண்ட கட்டுரைகள் காய்ச்சல் பற்றி பல விவரங்களை தரும் என்று நம்புகிறேன் ..

 1. மர்ம காய்ச்சல் -ஆயுர்வேத தீர்வு
 2. மர்ம காய்ச்சல் -ஆயுர்வேத தீர்வு
 3. விஷ காய்ச்சலுக்கு ஆயுர்வேதம்
 4. நிலவேம்பு குடிநீரில் உள்ள ஒன்பது மூலிகைகளின் படங்கள்


Post Comment

சனி, மே 12, 2012

அகில உலக மருத்துவ வர்மாலாஜி என்னும் வர்ம கருத்தரங்கம்
வர்மத்தில் அகில உலக இரண்டாவது  கருத்தரங்கு

இன்று கோவையில் வேத சத்தி என்னும் அகில உலக வர்ம கான்பெரன்ஸ் இன்றும் நாளையும் நடைபெறுகிறது ..


 எனக்கு வர்மத்தை கற்றுத்தந்த ஆசான் சண்முகம் அவர்கள் நடத்துகிற இந்த International varmalogy conference 2012...என்ற பெரிய ஆராய்ச்சிகள் அடங்கிய இந்த நிகழ்ச்சியில் சித்த மருத்துவர்களும் ,ஆயுர்வேத மருத்துவர்களும் ,ஹோமியோ மருத்துவர்களும் ,ஆங்கில பல துறை மருத்துவர்களும் ,பேராசிரியர்களும் கலந்து கொள்கிறார்கள் ..

 • இது எனது வாழ்க்கையில் ஒன்றரை வருடங்களாக காத்திருந்த நிகழ்ச்சி இது ...
 • ஆசான் சண்முகம் அவர்களின் மாணவன் என்று கூறுவதில் நான் எப்போதும் பெரு மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன் ..

 • ஆசான் சண்முகம் அவர்கள் இந்த மருத்துவ வர்மாலாஜி கான்பெரன்சிலும் என்னையும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை சமர்பிக்க சொன்னார்கள் 

 • ஆசான் சண்முகம்அவர்கள் வழி நடத்த கடந்த ஒன்றரை வருடங்களாக முக்குற்றங்களும் வர்மமும் ஆயுர்வேத சித்தாந்தகளும் என்கிற தலைப்பில் எனக்கு வாய்ப்பு அளிக்கபட்டிருந்தது...

 • எல்லா வேலைகளும் முடிவுற்று ,இன்று அதனை ஆசான் முன்னிலையிலும் ,பல மருத்துவர்கள் முன்னிலையிலும் வெளிவிட்டிருக்க வேண்டிய இந்த வேளையில் ....

 மருத்துவ வர்மாலாஜி கருத்தரங்கில் எனது ஆராய்ச்சி கட்டுரை சமர்பிக்க செல்ல இயலாத காரணங்கள்

 1. எனது பகுதியில் டெங்கு காய்ச்சல் அதிகம் உள்ளமையால் ,டெங்கு காய்ச்சலால் சிலர் மரணித்த சம்பவங்களும் ,இரத்த தட்டுக்கள் குறையும் அணுக்கள் குறைகிற காய்ச்சல் அதிகம் உள்ளமையால் ..மக்களுக்கு சேவை பணி செய்ய வேண்டிய கட்டாயத்தில் (கொள்ளை நோய்கள் பரவினால் ..அதை தடுக்க இந்த டெங்கு காய்ச்சலுக்கு நாங்கள் நில வேம்பு குடிநீர் ,ஆடாதோடை குடிநீர் ,விஷ ஜவர குடிநீர் போன்றவற்றையும் ,சீந்தில் அடங்கிய மாத்திரைகளையும் இலவசமாக கொடுத்து கொண்டிருக்கிறோம் )உள்ளேன் ..கருத்தரங்கிற்கு செல்ல வேண்டிய வழிகள் எல்லாம் அடைக்கப்பட்டு விட்டன ...
 2. எனது விடுப்புக்கு செல்லும் வழிகள் எல்லாம் அடைக்கப்பட்டு விட்ட நிலையில் என்னால் ஒன்றுமே செய்ய இயலாத நிலை ..மருத்துவ வர்மாலாஜி கருத்தரங்கில் எனது ஆய்வு கட்டுரையை சமர்பிக்க இயலாத நிலை ..பல நாள் தவம் இருந்தவன் ..வரம் கிடைக்கும் சற்று முன் ஏமாந்தது போல் ஆகி விட்டது ...
 3. வெளிப்படையாக சில விஷயங்களை என்னால் ஏன் மருத்துவ வர்மாலாஜி கருத்தரங்கிற்கு செல்ல இயலவில்லை என்று சொல்ல இயலாத நிலை ...
 4. மருத்துவ வர்மாலாஜி கருத்தரங்கில் கலந்து கொள்ளாதது ...இரண்டு கைகளும் வெட்டப்பட்டது போல் ,கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டது போல் உணர்கிறேன் ..
 5. எனது ஆராய்ச்சி கட்டுரைக்காக நான் கோவைக்கும் எனது ஊருக்கும் சென்று வந்த பல பயணங்கள் ,நான் உடலால் பட்ட கஷ்டங்களும் ,மனதால் பட்ட கஷ்டங்களும் வீணாகி போனதே என்று நினைக்க எனது நெடு நாள் கனவு வீணாகிபோனது ..
 6. மனதிற்குள் தாங்க இயலாத துக்கம் ..ஆற்ற முடியாத வருத்தம் ...
 7. மருத்துவ வர்மாலாஜி கருத்தரங்கில் எனது ஆராய்ச்சி கட்டுரை சமர்பிக்க பட இயலவில்லையே என்று ஏங்கி தவிக்கிறேன் ... 
ஒன்றரை வருட கனவு இன்று கலந்து கொள்ள இயலாததால் கனவாகிபோனதே ...எனது எண்ணங்கள் எல்லாம் கருத்தரங்கிலே தான் உள்ளது ..
நான் கலந்து கொள்ள வில்லை என்றாலும் கூட ..எனது பெரு மதிப்பிற்குரிய ஆசான் சண்முகம் அவர்கள் நடத்தும் இந்த கருத்தரங்கை மிக மிக வெற்றிகரமாக  நடந்து வர்மம் உலங்கெங்கும் பரவிட ஆசான் சண்முகம் அவர்களின் மாணவன் என்ற முறையிலும் ..ஆசான் சண்முகம் அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்தியவனாக ...

வர்மம் இந்தியனுக்கு உரியது ...
வர்மம் தமிழனுக்கு உரியது ...
வர்மம் சித்த மருத்துவத்தின் கூறு ...
வர்மம் நோய் அழிக்கும் 

,வர்மத்துடன் இணைந்த ஆயுர்வேதமும் ,சித்த மருத்துவமும் சீக்கிரம் நோய் அகற்றும் என்று எனது கருத்தை கூறியனாக...மருத்தவ வர்மாலாஜி கருத்தரங்கில் எனது ஆராய்ச்சி கட்டுரை ...பல ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு நடுவே புத்தகமாக பிரசுரம் ஆனது என்ற மகிழ்ச்சியுடன் ...

ஆசான் சண்முகம் அவர்களுடன் எனது உறவு மென் மேலும் வளர பிரார்த்தியுங்கள் என்றவனாக ...

ஆசான் சண்முகம் அவர்களது சேவை பற்றி அறிய ..மேலும் விவரங்களுக்கு ..
  www.varmam.org

 

Post Comment