ஞாயிறு, ஜூலை 29, 2012

தாதுக்களை வலுப்படுத்தி -வாதநோய்க்கு நல்ல மருந்தாகும் சதுர்முக ரஸ -Chathurmuka Ras


தாதுக்களை வலுப்படுத்தி -வாதநோய்க்கு நல்ல மருந்தாகும்
சதுர்முக ரஸ -Chathurmuka Ras
 (ref-பைஷஜ்யரத்னாவளி - வாதரோகாதிகாரம்,மற்றும் ரச தந்திர சார )
 

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த ரஸம் ஷோதித ரஸ           10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் ஷோதித கந்தக       10          
இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன்

1.            அயபற்பம் லோஹ பஸ்ம            10 கிராம்
2.            அப்பிரகற்பம் அப்ரகபஸ்ம            10          
3.            தங்கபற்பம் ஸ்வர்ண பஸ்ம          2.5         

இவைகளைச் சேர்த்துச் சிறிது அரைத்துப் பின்னர் கற்றாழைச்சாறு (குமரிஸ்வரஸ) விட்டரைத்துச் சிறிது உருண்டைகளாகச் செய்து அவைகளை ஆமணக்கு இலைகளால் (எரண்டபத்ர) சுற்றி நெற்குவியலில் மூன்று நாட்கள் வைத்துப் (ஆவேஸ்தனம் செய்தல்) பின்னர் எடுத்துப் பொடித்து பத்திரப்படுத்தவும்.

அளவும் அனுபானமும்:      

100 முதல் 200 மில்லி கிராம் வரை இரண்டு முதல் மூன்று வேளைகள் திரிபலா சூர்ணம், தேன் இவைகளுடன்.

தீரும் நோய்கள்:  வயிற்றில் புளிப்பு நீர் அதிகமாகச் சுரத்தல் (அம்லபித்த), இரத்த சோகை (பாண்டு), பிரமேகம் (ப்ரமேஹ), தாதுக்கள் க்ஷீணமடைதல் (தாதுக்ஷய), பலவீனம் (க்ஷய), கழுத்துப் பிடிப்பு (அ) செயலிழத்தல் (மன்யாஸ்தம்ப), கால்கை வலி (அ) காக்கைவலி (அபஸ்மார), புண்கள் (வ்ரண), நாட்பட்ட சுரம் (புராண ஜ்வர), இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாஸ), வாத நோய்கள் (வாத ரோக).

தெரிந்து கொள்ள வேண்டியவை ..
 1. இதில் தங்க பஸ்பம் என்னும் ஸ்வர்ண பஸ்மம் செரக்கபட்டிருக்க வேண்டும்
 2. கை கால்  வலிப்பு என்னும் வலிப்பு நோய்க்கு இந்த மருந்தை தொடர்ந்து ..வாத குலாந்தக ரச என்னும் மாத்திரை அல்லது சித்த மருத்துவத்தில் உள்ள பேரண்ட பற்பம் என்னும் அற்புத மருந்துடன் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்
 3. தாதுக்களின் நட்டம் எங்கெல்லாம் அதிகரித்து வாத நோய்கள் தோன்றுகிறதோ அங்கெல்லாம் இந்த மருந்து மிக சிறந்த மருந்து ..
 4. அப்ரக பற்பம் சேர்ந்துள்ளதால் ..சர்க்கரை நோயாயாளிகளின் பாத எரிச்சல் ,இரத்த ஓட்டம் சீரின்மை போன்றவற்றிக்கு நல்ல பலன் தரும் ..
 5. அறாத புண்களை ஆற்ற வல்லது ..
 6. நாள்பட்ட இருமல் ,காய்ச்சலுக்கும் தரலாம் ..
 7. வயிறு புண்ணுக்கு நல்லது ...
 8. கடுமையான பலஹீனம் இந்த மருந்து சூப்பராக வேலை செய்யும்
 9. கை கால் வலி ,மூட்டு வலி ,கழுத்து வலி ,இடுப்பு வலி -போன்றவற்றிற்கும் இந்த மருந்து குணபடுத்தும்Post Comment

வயிற்றை சுத்தம் செய்து -காய்ச்சலுக்கு ,ஆஸ்த்மாவிற்கு ஆரம்ப நிலை மருந்தாகும் பேதிஜ்வராங்குச ரஸ -Bedhi Jwarankusa Ras


வயிற்றை சுத்தம் செய்து -காய்ச்சலுக்கு ,ஆஸ்த்மாவிற்கு ஆரம்ப நிலை மருந்தாகும் பேதிஜ்வராங்குச ரஸ -Bedhi Jwarankusa Ras
 (ref-பஸவராஜீயம் - ஜ்வரப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த ரஸம் ஷோதித ரஸ           10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் ஷோதித கந்தக        20          

இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன்

1.            பொரித்துப் பொடித்த வெங்காரம் டங்கண பஸ்ம   20 கிராம்
2.            பொடித்துச் சலித்த மிளகு மரீச்ச                  50          
3.            சிறிது இஞ்சிச்சாறு சேர்த்தரைத்து விழுதாக்கிய
சுத்தி செய்த நாபி வத்ஸநாபி சுத்தி                    10          

இவைகளைச் சேர்த்து இஞ்சிச்சாறு (ஆர்த்ரக ஸ்வரஸ) விட்டரைத்து மாத்திரை உருட்டும் பதத்தில் தனியே நன்கு அரைத்து விழுதாக்கிய சுத்தி செய்த நேர்வாளம் (ஷோதித தந்தி பீஜ) 60 கிராம் சேர்த்து அரைத்து 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக உருட்டி உலர வைத்து பத்திரப்படுத்தவும்.

குறிப்பு:    இஞ்சிச்சாறு உபயோகிப்பது சம்பிரதாயம்.

அளவும் அனுபானமும்:     ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை காலையில் இஞ்சிச் சாற்றுடன் கொடுக்கவும்.


தீரும் நோய்கள்: மூச்சுக் கோளாறுடனோ, மலச்சிக்கலுடனோ கூடிய நாட்பட்ட சுரம் (புராண ஜ்வர).

                 
நன்கு பேதியாக இது உட்கொள்ளப்படுகிறது.

Post Comment

வியாழன், ஜூலை 26, 2012

ஆண்மைக்கும்- மூட்டுக்கும் -வாத நோய்க்கும் சிறந்த மருந்து ப்ருஹத்வாத சிந்தாமணி-Bruhath Vatha Chinthamani Ras


ஆண்மைக்கும்- மூட்டுக்கும் -வாத நோய்க்கும் சிறந்த மருந்து
ப்ருஹத்வாத சிந்தாமணி-Bruhath Vatha Chinthamani Ras
  (பைஷஜ்யரத்னாவளி வாதவ்யாத்யாதிகாரம்)

தேவையான மருந்துகள்:

1.            தங்கபற்பம் ஸ்வர்ண பஸ்ம                30 கிராம்
2.            வெள்ளி பற்பம் ரஜத பஸ்ம                20          
3.            அப்பிரக பற்பம் அப்ரக பஸ்ம              20          
4.            அய பற்பம் லோஹ பஸ்ம               50          
5.            பவழ பற்பம் பிரவாள பஸ்ம               30          
6.            முத்து பற்பம் மௌக்திக பஸ்ம           30          
7.            ரஸசிந்தூரம் ரஸஸிந்தூர                 70          


செய்முறை:      

இவற்றைக் கல்வத்திலிட்டு போதுமான அளவு கற்றாழைச்சாறு (குமரிஸ்வரஸ) கொண்டு நன்கு அரைத்துப் பதத்தில் ரவைகளாக்கி 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

அளவும் அனுபானமும்:     

 ஒன்று முதல் இரண்டூ மாத்திரைகள் வரை நெய், தேன், சீந்தில் சாறு, ஆட்டுப்பால், பிரம்மிச்சாறு, வெற்றிலைச் சாறு அல்லது சங்க புஷ்பிச் சாறு ஆகியவற்றில் கொடுக்கவும்.


தீரும் நோய்கள்:  


வாத நோய்கள் (வாத ரோக), வாத பித்த நோய்கள் (வாத பித்தஜ ரோக), பிரமை (ப்ரம), ஜன்னி (ப்ரலாப), புணர்ச்சிச் சக்தி குன்றிய நிலை (த்வஜ பங்க / நபும்ஸகத்வ).

தெரிந்து கொள்ள வேண்டியவை
 1. எல்லா விதமான வாத நோய்களுக்கும் இந்த மருந்து மிக சிறந்த மருந்து
 2. முக்கியமாக நடுக்கு வாதம் ,கை கால் நடுக்கம் போன்றவற்றிற்கு சிறந்த மருந்து
 3. தூக்கமின்மைக்கு ..சடாமஞ்சில் அல்லது அஸ்வகந்த சூரணத்துடன் சாப்பிட நல்ல பலன் தரும்
 4. எனது அனுபவத்தில் லக்ஸ்மி விலாச ரச (தங்கம் சேர்ந்தது ) என்ற மாத்திரையுடன் இந்த மாத்திரை .தக்க பத்தியத்துடன் எடுத்துகொள்ள ..கோல்ட் ஆப்சஸ் என்னும் காச நோயால் வரும் கழுத்தில் வரும் கட்டியை கரைக்கவும் ,காசநோய் ,மற்றும் நாள்பட்ட இளைப்பு நோயாளி ,பலம் குன்றிய நோயாளிக்கும் மிக சிறந்த மருந்து
 5. பத்தியம் காத்து -குறிப்பிட்ட மண்டலம் சாப்பிட இளமை திரும்பும் ..நோயில்லா பெரு வாழ்வு வாழ உதவும்
 6. இதய தசைகளை வலுப்படுத்தும்
 7. பக்க வாததிற்கு ...ஏகாங்க வீர ரசம் மற்றும்  தனதனயனாதி கஷாயத்துடன் சாப்பிட பழைய இயல்பு நிலைக்கு திரும்பும் அளவுக்கு மருந்து வேலை செய்யும்
 8. முக வாதத்திற்கும் தருவதுண்டு
 9. உடல் உறவினால் ஏற்படும் சோர்வை நீக்கி உடலுக்கு உற்சாகம் அளிக்கும் ..விந்து இழப்பதால் ஏற்படும் சக்தி குறைவை சரி செய்யும்
 10. மூட்டு வலிக்கு சிறந்த மருந்து ...வயதான நோயாளிக்கும் இந்த மருந்து மூட்டில் உள்ள பசை தன்மையை அதிகபடுத்தி ,எலும்பையும் வலுவாக்கும் ..
 11. உடல் உறவு கொண்ட மறுநாள் ஏற்படும் முதுகு வலி ,மூட்டுவலிக்கு இந்த மருந்து சூப்பர் மருந்து
 12. தங்க பற்பம் ,வெள்ளி பற்பம் சேர்ப்பதால் விலை சற்றே அதிகம் ..
 13. பல கம்பெனிகள் ..சரிவர தங்க வெள்ளி பற்பங்களை சேர்ப்பதில்லை ..சேர்க்க வில்லை என்றால் பலனே இருக்காது ...எனக்கு தெரிந்த ஒரு பெரிய பெயர் சொல்லும் கம்பெனியும் ,யோக சொல்லிதரும் நபர் நிர்வகிக்கும் ஆயுர்வேத கம்பெனி மருந்தும் ஒரு அணு அளவும் நினைத்த பலனை தரவில்லை ...அதில் அவர்கள் சாஸ்திரம் சொல்லும் அளவுக்கு தங்க வெள்ளி பற்பங்களை சேர்ப்பார்களா என்பது எனக்கும் சந்தேகம் எழுகிறது ..
 14. முறையான பத்தியம் -எத்தனை நாள் இந்த மருந்தை எடுக்க வேண்டும் என்று படித்த ,காசுக்கு ஆசை படாத ஆயுர்வேத ஒரிஜினல் மருத்துவரை கண்டு ஆலோசனை பெற்று எடுத்தால் மூட்டு மாற்ற வேண்டும் என்ற நிலையில் உள்ள மூட்டும் ஏக இறைவன் நாடினால் சீக்கிரம் எந்த வயதிலும் குணமாக வாய்ப்புள்ளது
 15. சர்க்கரை நோயாளியும் ,இரத்த கொதிப்பு நோயாளியும் இந்த மருந்தை தக்க ஆயுர்வேத மருத்துவரின் உதவியோடு எடுத்து கொள்வது  நல்லது ..
 16. முறையாக சாப்பிட்டால் எந்த ஒரு சிறிய பக்க விளைவும் ஏற்படவே ஏற்படாது


Post Comment

அதிக இரத்த போக்கை குணபடுத்தும் -பாலஸூர்யோதய ரஸ- Baala sooryodhaya Rasa


அதிக இரத்த போக்கை குணபடுத்தும் -பாலஸூர்யோதய ரஸ- Baala sooryodahya Rasa
 (ref -பஸவராஜீயம் - ஜ்வரப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த ரஸம் ஷோதித ரஸ           10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் ஷோதித கந்தக        30          


இவைகளை நன்கு அரைத்துக் கறுத்த கஜ்ஜளி செய்து அத்துடன்,
1.            தாமிரபற்பம் தாம்பர பஸ்ம      20 கிராம்
2.            அயபற்பம் லோஹ பஸ்ம       20          
3.            அப்பிரக பற்பம் அப்ரக பஸ்ம    50          

இவைகளைச் சேர்த்தரைத்துப் பின்னர்,


1.            பொடித்துச் சலித்த மிளகு மரீச்ச                  165 கிராம்
2.            பொரித்துப் பொடித்த பெருங்காயம் ஹிங்கு        5             
3.            எலுமிச்சம் பழச்சாறு விட்டரைத்து விழுதாக்கிய
       நாபி ஷோதித வத்ஸநாபி                      30          

                                இவைகளைச் சேர்த்து எலுமிச்சம்பழச்சாறு, அத்திப்பட்டைக் கஷாயம் (உதும்பரத்வக் கஷாய), லவங்க கஷாயம் (லவங்க கஷாய) இவைகளை விட்டரைத்துப் பதத்தில் 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.


அளவும் அனுபானமும்:     ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை இரு வேளைகள் தேனுடன் கொடுக்கவும்.


தீரும் நோய்கள்:  காய்ச்சல் (ஜ்வர), இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாஸ), வயிற்றில் புளிப்பு நீர் அதிகமாக சுரத்தல் (அம்லபித்தம்), ரத்த சோகை (பாண்டு), காமாலை (காமில), கல்லீரல், மண்ணீரல் பெருத்தல் (யக்ருத் ப்லீஹ வ்ருத்தி), ரத்தப் போக்கு (அஸ்ரஸ்ருதி), சூதக சூலை (ஆர்த்தவசூல), பெரும்பாடு (அஸ்ரிக்தர), கருப்பை நோய் (யோனி ரோக)

 •  காய்ச்சலில் சுக்கு, கொத்தமல்லி, மிளகுக்கஷாயத்துடன்  இது வழங்கப்படுகிறது. 

 • பாண்டு, காமாலை, கல்லீரல் மண்ணீரல் வீக்கம் போன்றவற்றில் திரிகடுகுச் சூர்ணம், அன்னபேதிச் செந்தூரம், கரிசலாங்கண்ணித்தழை ஆகியவர்றுடன் தரப்படுகிறது. 

 • அமுக்கராச் சூரணத்துடன் கலந்து இதனை ரத்தப்போக்கு, சூதக சூலை, பெரும்பாடு, கருப்பைக் கோளாறு போன்றவற்றுக்கு தருவது வழக்கம்.
தெரிந்து கொள்ள வேண்டியவை

 1. ரக்த வஹ  ஸ்ரோதஸ் சார்ந்த நோய்களை குணபடுத்தும் ..\
 2. பெண்களின் அதிக உதிரப்போக்கினால் வரும் அனீமியாவை சரிசெய்யும் ..கருப்பையையும் வலுபடுத்தும் ..
 

Post Comment