ஞாயிறு, நவம்பர் 30, 2014

நான்காயிரம் மக்கள் இலவசமாக பருகிய நில வேம்பு குடிநீர் முகாம்30/11/2014 ஞாயிற்று கிழமை அன்று இலவச நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் .


SDPI இயக்கமும் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையும் சேர்ந்து  (30/11/2014 ஞாயிற்று கிழமை) இலவச நில வேம்புகஷாயம் வழங்கும் முகாம் ஒன்றை திருநெல்வேலி மாவட்டம் ,தென்காசி வட்டம் வடகரை என்ற கிராமத்தில் வைத்து நடத்தியது .இந்த முகாமுக்கு தேவையான நில வேம்பு குடிநீரை  நமது அல்ஷிபா ஆயுஷ் மருத்துமனை ஏற்பாடு செய்தது 

இதே கிராமத்தில் பல்வேறு இடங்களில் தெரு முனைகளில் ,வீடு வீடாக மக்களுக்கு நில வேம்பு குடிநீர் வழங்கப்பட்டது ..இந்த முகாமில்  அதிகமான மக்கள் வயது வித்யாசம் இல்லாமல் விரும்பி நில வேம்பு குடிநீரை பருகி சென்றனர் ..

கிட்டத்தட்ட  4000 மக்களுக்கு  நில வேம்பு வழங்கப்பட்டு மக்கள் பலன் அடைந்தனர்   என்று  முகாமை நடத்தி முடித்த SDPI  தன்னார்வளர்கள் கூறினார்கள் .வடகரை ஊர் முழுவதும் ,வடகரையில் உள்ள பள்ளிகள் ,வடகரை ஊரை சுற்றயுள்ள ஊர்களான அச்சம்புதூர்  கிராமத்திலும் கொடுத்தோம் .நான்காயிரம் Use and Throw Disposable டீ கப்புகளும் தீர்ந்து ,மேலும் பல நூறு டீ கப்புகளை வாங்கினோம் என்றார் SDPI நிர்வாக தலைவர் .


குறிப்பு -நாம் எந்த இயக்கத்தின் கீழோ,எந்த இயக்கத்தின் துணையோடு எப்போதும் இலவச முகாம்கள் நடத்துவதில்லை .நாம் எந்த இயக்கத்தோடும் சேராதவர்கள் ..மக்கள் நல பணியில் சில இயக்கங்கள் நம்மை அணுகும் போது நாம் அதை தவிர்க்க முடிவதில்லை ..மக்கள் நலனே ,மக்கள் சேவையே முக்கியம் .

Post Comment

இலவச ஆயுர்வேத சித்த மருத்துவ முகாம் -25/11/2014

இலவச ஆயுர்வேத சித்த மருத்துவ முகாம் ..

25/11/2014 செவ்வாய் கிழமை அன்று திருநெல்வேலி மாவட்டம் ,தென்காசி வட்டம் வாவா நகரம் என்ற கிராமத்தில் முஸ்லீம் திருமண மண்டபத்தில் வைத்து .அரசு பெண்கள் மேல் நிலை பள்ளி நாட்டு நல பணி குழுவுடன் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவனை ,ஆயுஷ் மற்றும் பாரம்பரிய மருத்துவ ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து இலவச ஆயுர்வேத சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது ..

இந்த முகாமில் நானூற்றுக்கு  நோயாளிகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன் பெற்றனர் ..

எல்லா நோயாளிகளுக்கும் இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் பல இலவச மருத்துகள் லேஹியங்கள் ,தைலங்கள் ,சூரணங்கள் ,மாத்திரைகள் ,டானிக்குகள் வழங்கப்பட்டது ..இந்த நானூற்றுக்கு மேற்ப்பட்ட நோயாளிகளுக்கும்  நில வேம்பு குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டது

Post Comment

திங்கள், நவம்பர் 03, 2014

இந்திய மருத்துவத்தை உலகறிய செய்ய -எங்களின் அடுத்த பயணத்தின் துவக்க விழா

மக்களுக்கு சேவை ஒன்றே பிரதானமாக இந்திய மருத்துவத்தையும் அனைத்து பாரம்பரிய மருத்துவத்தையும் ஒருங்கிணைத்த சென்னையில் புதிய உதயாமாகிய ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் -மருத்துவ நிலைய திறப்பு விழா 

நவம்பர் இரண்டு ஞாயிற்று கிழமை காலை சரியாக எட்டு மணியளவில் நமது ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் -மருத்துவ நிலையத்தை மதிப்பிற்குரிய பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ .தன்சிங் அவர்கள் துவக்கி வைத்தார்கள்,எனது மானசீக குரு வைத்ய உஸ்மான் அலி அவர்கள் தலைமை ஏற்றார்கள்  , பாரம்பரிய மருத்துவ ஆய்வு நிறுவன தலைவர் -டாக்டர் திருநாராயணன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள் ,எமது வளர்ச்சியின் ஆணி வேர் டாக்டர் சித்தீக் அலி M.D ( Siddha) -வர்ம மருத்துவர் இந்த நிகழ்ச்சியில் முன்னிலை வகிக்கிறார் ,மேலும் பல சித்த ஆயுர்வேத ஹோமியோபதி, யுனானி ,மருத்துவர்கள் கலந்து கொண்டார்கள்  திறப்பு விழா படங்கள் தங்களுக்காக

ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் -மருத்துவ நிலையத்தை மதிப்பிற்குரிய பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ .தன்சிங் அவர்கள் துவக்கி வைத்தார்கள்

பஞ்ச கர்ம வர்ம சிகிச்சை அறையை எமது மானசீக குரு வைத்ய உஸ்மான் அலி அவர்கள் ( வைத்ய உஸ்மான் அலி அவர்கள் மிக சிறந்த தாவரவியல் வல்லுநர் ,தாவரவியல் பேராசிரியர்  ,நடமாடும் மூலிகை களஞ்சியம் ,பேரறிஞர் )    மதிப்பிற்குரிய பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ .தன்சிங் அவர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார்கள் ..

மதிப்பிற்குரிய பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ .தன்சிங் அவர்களுக்கு நமது ஒருங்கிணைந்த சித்த ஆயுர்வேத சிகிச்சை முறைகளையும் வர்ம மருத்துவத்தின் சிறப்பு பற்றி டாக்டர் சித்தீக் அலி  M.D ( Siddha) -அவர்கள் விளக்கி கூறினார்கள் ,மதிப்பிற்குரிய பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ .தன்சிங் அவர்கள் பொறுமையுடன் அவற்றை கேட்டது மட்டுமில்லாது ,பல சந்தேகங்களையும் கேட்டு தெரிந்து கொண்டார்கள் மேலும் மதிப்பிற்குரிய பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ .தன்சிங் அவர்களுக்கு பூனை மீசை மூலிகை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது ,சிறந்த சிறுநீரக சுத்தம் செய்யும் மூலிகை ,கிட்னி பெயிலியர்க்கு மிக சிறந்த மருந்து இந்த மூலிகை என்றும் -எமது குரு வைத்யா உஸ்மான் அலி அவர்கள் முன்னிலையில் எடுத்து சொல்லப்பட்டது ,இந்த பூனை மீசை மூலிகை பற்றி உலகுக்கு எடுத்து சொல்லி அதன் செயல்பாடுகளை என்னை போன்ற பல்லாயிர கணக்கான மருத்துவர்களுக்கு எடுத்து சொன்ன கண்டுபிடித்த குருவே விளக்கியது மகிழ்ச்சியிலும் பெரிய மகிழ்ச்சி ஆனது .சட்டமன்ற உறுப்பினர் பூனை மீசை மூலிகை செடி பற்றி அறிந்து மிகவும் ஆச்சர்யம் அடைந்தார் ..அவருக்கு பதினைந்து நாட்களுக்கான தனி தனி பாக்கெட்டுகளில் பூனை மீசை காய்ந்த சமூலம் அவர்க்கு காண்பிக்கப்பட்டது ..


மாண்பு மிகு பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் தன்சிங் அவர்களுக்கு இயற்கையான பழங்கொத்துகள் வழங்கி உபசரிக்கப்பட்டு அவர்கள்  நெஞ்சார நம்மை வாழ்த்தி விடை பெற்றார் 


எங்களது வழி நடத்துகிற எமது குரு வைத்ய உஸ்மான் அலி அவர்களுக்கும் ,சித்த மருத்துவத்தை  வளர்ப்பதையே உயிர் நாடியாக கொண்டு அள்ளும் பகலும் அயராது உழைக்கும் பாரம்பரிய மருத்துவ ஆய்வு நிறுவன தலைவர் -டாக்டர் திருநாராயணன் அவர்களுக்கும் சிறு நினைவு பரிசு வழங்கி ,அவர்கள் எங்களை வாழ்த்தி விடை பெற்றார்கள் ..

ஆரம்பம் முதல் எப்போதும் போல் எனது உடன் பிறவா சகோதரர் டாக்டர் சித்தீக் அலி  MD ( Siddha) , வர்ம வல்லுநர் திறப்பு விழா முதல் மாலை வரை எம்முடன் தமது மனைவி டாக்டர் சாய்ரா சித்தீக்  MD ( Siddha) மற்றும் குடும்பத்துடன்  இருந்து நிகழ்ச்சியை மிக சிறப்பாக நடத்தி கொடுத்தார்கள் ..இந்த பயணம் அவருக்கானது ,அவரது வழி காட்டலின் பெயரில் மிக சிறப்பாக நடை பெற்றது ..அவரது தலைமையின் கீழ் இந்த நிறுவனம் நடைபெறும் என்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம் ..

நமது நீண்ட கால நண்பர் ,பொது நல வாதி ,சங்கரா டி வி  புகழ் ,சிறந்த ஆன்மீக பிரபல அஸ்வத் சங்கர் நமது அழைப்பை ஏற்று நமது நிறுவனம் வந்து நம்மை வாழ்த்தினார்கள் 

நமது அழைப்பை ஏற்று அண்ணன் டாக்டர் ஜோசப்  MD (Siddha).,M.Sc(Epidemology) அவர்களும்,எனது சீனியர் டாக்டர் பாண்டியன் BAMS அவர்களும் வந்து சிறப்பித்தார்கள் .,அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி ..எனது இந்த மருத்துவ உலக்குக்கு விதை ஊன்றிய டாக்டர் ஜாகிர் ஹுசைன் MD ( Siddha ),அவர்களும் கலந்து கொண்டார்கள் ,யுனானி மருத்துவர் டாக்டர் அப்ரோஸ் பாஷா BUMS.,M.Sc(Neuro)அவர்களும் கலந்து கொண்டார்கள் .மேலும் பல சித்த மருத்துவ நண்பர்களும் ,ஆயுர்வேத மருத்துவ நண்பர்களும் ,யோகா வல்லுனர்களும் ,பல்வேறு மருத்துவ துறை நண்பர்களும் வந்து வாழ்த்தினார்கள் ....

 நேரில் வாழ்த்திய அனைவருக்கும் ,போனில் வாழ்த்திய நண்பர்களுக்கும் ,பேஸ் புக்  மூலம் லைக்கிய ,வாழ்த்து சொன்ன நண்பர்களுக்கும் நன்றி கூற கடமை பட்டிருக்கிறேன் ..

ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் ஒருவர் இருப்பார்கள்  சென்னை மருத்துவமனை கனவை நினைவாக்க கை கோர்த்து எல்லா செயல்களிலும் வித்தியாசத்தை கூட்டி ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் -மருத்துவ நிலையத்தின் ஆணி வேர் திரு பாரூக் அவர்களுக்கும் , ரஹீமாவுக்கும் , டாக்டர் ஜவாஹிரா பானு BHMS அவர்களக்கும் எமது பெற்றோருக்கும் ,சகோதரர்களுக்கும் நன்றி கூற கடமை பட்டிருக்கிறேன் 
Post Comment