வெள்ளி, மே 19, 2017

விளக்கெண்ணெய் விஷமா ? அம்ருதமா ?

விளக்கெண்ணெய் உள்பிரயோகம்  விஷமா ? அம்ருதமா ?

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர். ஜீவா., BAMSநவீன உலகம் ஆமணக்கு விதையை உலகத்தில் மிக சிறந்த விஷம் உள்ள விதையாக அறிவிக்கிறது. அதில் ரெசின் என்கிற விஷம்   முழு விதை வடிவில் எடுத்து கொண்டால் மரணத்தை கூட வர வைக்கும் என்று பயமுறுத்துகிறது. ஆனால் அந்த விதையில் இருந்து தயாரிக்கபடுகிற எண்ணையை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகம் (The Food and Drung Administration - FDA), `விளக்கெண்ணெய் பொதுவாகப் பாதுகாப்பானது’ (GRAS - Grossly recognized as Safe) எனச் சான்று தந்துள்ளது.


பின்னர் விளகெண்ணையில் எது விஷம் ? எது அம்ருதம் ?

இன்றைய நவீன விஞ்ஞான அறிவியல் படி ஆமணக்கு விதையை இயந்திரங்கள் மூலம் அழுத்தி பிழியும் முறை எந்த அளவுக்கு உள்ளே பயன்படுத்த தகுந்தது என்று சொல்ல முடியாது பல Toxic விஷ சத்துக்கள் அதிலே இருக்கவும் வாய்ப்புகள் உள்ளது இந்த வகையில் தயாரிக்கபடும் விளக்கெண்ணெய் வெளி பிரயோகத்திற்கு வேண்டுமானால் பாதுகாப்பானதாக இருக்கலாம் உள்ளே பயன் படுத்து பற்றி நாம் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்

கடையில் விற்கும் அனைத்து விளக்கெண்ணெய்களும் உள்ளே பயன்படுத்த தக்கவையா என்பது மில்லியன் டாலர் கேள்வி ?

Cold pressed Castor Oil என்கிற முறையில் இப்போது கிடைக்கிற விளக்கெண்ணைய் உள்ளே மற்றும் வெளி பிரயோகத்திற்கு ஏற்றது என்று நண்பர்கள் சொல்கிறார்கள் இதையே Virgin Castor oil என்றும் விற்கிறார்கள். உண்மையில் இந்த முறையில்தான் நாம் பயன்படுத்துகிற விளக்கெண்ணெய் என்பதற்கு என்ன உத்தரவாதம்-அதிலும் விஷ சத்துக்கள் இருக்காது என்பதற்கு எப்படி நாம் உறுதியாக நம்ப முடியும் ? இதை சுத்தாமாக்க ஏதேனும் வழிகள் உள்ளதா என்பதையும் பார்ப்போம்


அம்ருதமான விளக்கெண்ணெய் என்பது எது ?

நமது வீட்டில் தயாரிக்கபடுகிற காய்ச்சி ஊற்றிய விளக்கெண்ணெயே மிக சிறந்தது. நமது முன்னோர்கள் நமது தாத்தா காலத்தில் ( இப்போதும் பல கிராமங்களில் .தென் தமிழகத்தில் எப்போதும் எல்லா வீட்டிலும்  விளக்கெண்ணெய் எளிதாக கிடைக்க கூடிய வீட்டில் செய்ய கூடிய ) இந்த சர்வ ரோக நிவாரணியை எப்போதும் கை வசம் செய்து வைத்திருந்தார்கள் . குழந்தைகள் முதல் கர்ப்பிணிகள் ,பெரியவர்கள் வரை எல்லோரும் பல விதமாக இந்த காய்ச்சி ஊற்றின எண்ணெய் பயன்படுத்தி வந்தார்கள் .

எளிதாக வீட்டில் ஆமணக்கு எண்ணெய்-விளக்கெண்ணெய்-கொட்டை முத்து எண்ணெய் செய்வது எப்படி ?

1.            சிற்றாமணக்கு விதை ( எந்த ஆமணக்கு விதையை வேண்டுமானாலும் எடுத்துகொள்ள வேண்டும் ) முதலில் சிறிது வறுக்க வேண்டும் (இளஞ்சூட்டில் )
2.            உரலில் இட்டு அல்லது புட்டு பதத்தில் இந்த விதைகளை இடித்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும்
3.            வாய் குறுகிற பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து முதலில் கொதிக்க வைக்க வேண்டும் தண்ணீரை மட்டும் உயர் வெப்ப நிலையில் காய்ச்ச வேண்டும் ( தண்ணீர் அளவு நான்கில் ஒரு பங்கு அல்லது பத்தில் ஒரு பங்கு என்று சில கிராமங்களில் மாறுபடுகிறது )
4.            பின்னர் இடித்து வைத்துள்ள ஆமணக்கு விதையை அந்த பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்
5.            கொதிக்க வைக்கும் போது சிறிய கரண்டியை கொண்டு மேலே பொங்கி வெளிவரக்கூடிய தண்ணீர் கலந்த எண்ணையை ஒரு பாத்திரத்தில் சேகரிக்க வேண்டும் .மேலும் சிறிது தண்ணீர் ஊற்றி  மேலே வரக்கூடிய எண்ணையில் சேகரித்து வைத்து கொண்டே வர வேண்டும்
6.            பின்னர் சேகரித்து வைத்துள்ள எண்ணையை சூடு செய்து அதில் உள்ள மிச்சம் உள்ள தண்ணீர் எல்லாம் ஆவியாகும் வரை சூடு செய்து பதம் வந்த உடன் இறக்கி தக்க பாத்திரத்தில் வைத்து கொள்ள வேண்டும்

துளிர் என்ற அமைப்பின் தன்னிகரில்லா சேவை சித்த மருத்துவத்தை உலகறிய செய்யும் முயற்சியில் திண்டுக்கல் டாக்டர். C.P.கோகுலகுமார் MD ( Siddha ) மற்றும் டாக்டர் .ஸ்ரீராம் MD ( Siddha ) அவர்கள் யூடியூபில் ஒரு வீடியோ எப்படி இந்த காய்ச்சி ஊற்றிய விளக்கண்ணைய் தயாரிப்பது எப்படி என்கிற வெளிவிட்டுள்ளார்கள்..அந்த வீடியோ லிங்க்

கடைகளில் கிடைக்க கூடிய விளக்கெண்ணெயை சுத்தமாக்க எளிதான வழி-


மேலே சொன்ன மாதிரி ஆமணக்கு விதையை வாங்கி காய்ச்ச காலம் அல்லது பொருள் அல்லது நேரம் இல்லாதவர்கள் கடைகளில் விற்கும் Cold press Castor oil or virgin Castor oil –உள்ளே பயன்படுத்தலாம் என்கிற லேபிளோடு உள்ள விளக்கெண்ணையை வாங்கி இரு மடங்கு இளநீர் சேர்த்து மிக மிக  மெதுவாக காய்ச்சி (காய்ச்சும் போது அதில் சீரகம் சேர்க்கலாம்) ,இளநீர் ஆவியாகி வெறும் எண்ணெய் மட்டும் உள்ள நிலையில் அதை நாம் பயமின்றி பயன்படுத்தலாம் .

கவனம் தேவை :

தரமின்றி  தயாரிக்கப்படும் ஆமணக்கு எண்ணெய் விளக்கெண்ணெய் விஷத்திற்கு நிகரானது. இந்த எண்ணெயினை உபயோகிப்பதாலும், தேய்த்து குளிப்பதாலும் எந்த வித பலனும் இல்லை. உடலில் இருக்கும் கொஞ்சநஞ்ச ஆற்றலும் அழிந்து போகவும் வாய்ப்பு உள்ளது

நல்ல ஆமணக்கு எண்ணெய் பற்றிய கூடுதல் தகவல்கள் . -ஆமணக்கு எண்ணெய்யின் அற்புதங்கள்:-

ஆயுர்வேதத்தில் ஆமணக்கு எண்ணெய் :-

சமஸ்கிருதத்தில் ஆமணக்கு எண்ணெய் ஏரண்ட தைலம் மற்றும் கந்தர்வஹஸ்தம் என அழைக்கப்படுகிறது.
·         இதன் சுவை - இனிப்பு (ம) துவர்ப்பு.
·         உஷ்ண தன்மை வாய்ந்தது சீக்கிரத்தில் செரிமானம் ஆகாது.
·         உள்ளுக்குள் உட்கொள்ளும் பொழுது மிக எளிதில் உடலின் அனைத்து பாகங்களுக்கும் பரவக்கூடியது.

ஆயுர்வேதத்தில் ஆமணக்கு எண்ணையின் மருத்துவ பயன்கள் :-

ஆயுர்வேத மருத்துவத்தில் வெளிபிரயோகம், உள்பிரயோகம் மட்டுமல்லாமல் பஞ்சகர்ம சிகிச்சையிலும் ஆமணக்கு எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கின்றது.

உள்ளுக்குள் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் :-

 • ஸ்ரோதா விஷோதனம் – அனைத்து  உடல் அங்கங்களிலும் பரவி கெட்ட கழிவுகளை வெளியேற்றுகிறது.
 • ·         இலகுவான மலம் வெளியேறும்.
 • ·         நோய் வராமல் ஆரோக்கியத்துடன் வாழ வழி வகுக்கும்.
 • ·         தோஷங்கள் (ம) கழிவுகள் மலம் வழியாக வெளியேற்றப்படுகிறது.
 • ·         புத்தி (ம) ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
 • ·         செரிமான தன்மை அதிகரிக்கும்.
 • ·         குணப்படுத்தப்படும் நோய்கள் :-
 • ·         விஷக்காய்ச்சல்.
 • ·         மலச்சிக்கல்.
 • ·         இருதய நோய்.
 • ·         மூல நோய்கள்.
 • ·         உடல் வலிகள்.
 • ·         சொரியாசிஸ் போன்ற தோல் நோய்கள்.
 • ·         வயிற்று பொருமல்.
 • ·         வயிற்றில் கட்டிகள்.
 • ·         வயிற்றுப்பகுதியில்  அளவுக்கு அதிகமான நீர் தேங்கியிருந்தல்.
 • ·         இடுப்பு  பிடிப்பு  
 • ·         கீல்வாதம்
 • ·         மலக்குடல் தொங்குதல்
 • ·         கெட்ட நீரினால் ஏற்படும் உடல் வீக்கம்
 • ·         கட்டிகள்.
 • ·         முடக்கு வாதம்.

ஆமணக்கு எண்ணையின் வெளிபிரயோக பயன்கள் :- (சுஸ்ருத  சம்ஹிதை (ம) பாவப்ரகாஷநிகண்டு.

 • ·         த்வச்யம் தோலின் ஆற்றலை அதிகரிக்கும்.
 • ·         விருஷ்யம் - ஆண்மை திறனை வலுவூட்டும்.
 • ·         வயஸ்தாபனம் - வயது முதிர்ச்சியினை தடுத்து இளமையை தூண்டுவிக்கும்.
 • ·         யோனி விசோதனம் - பெண்களின் பிறப்புறுப்பினை சுத்தி  படுத்த பயன்படுகிறது.
 • ·         சுக்ர விசோதனம் - விந்தினை சுத்தி படுத்தி அதன் எண்ணிக்கையையும், ஆற்றலையும் அதிகரிக்க பயன்படுகிறது.
 • ·         காந்திகரம் - தோலினை பொலிவூட்டுகிறது.


பஞ்சகர்ம சிகிச்சையில் ஆமணக்கு எண்ணெய் :-

பஞ்சகர்ம சிகிச்சையில் இரண்டாவது சிகிச்சையான விரேசன  சிகிச்சையில் ஆமணக்கு எண்ணெய் பெரும் பங்கு வகிக்கின்றது.

·         வாதம், பித்தம், ரத்த தோஷத்தை வெளியேற்றுவதில் விரேசன சிகிச்சை மிகவும் சிறந்தது.
·         30-120 மிலி ஆமணக்கு எண்ணெயினை பாலுடன் சேர்த்து கொடுப்பதன் மூலம் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் மலம் மூலம் வெளியேற்றப்படுவதே விரேசனம் ஆகும்.
·         விரேசனம் அல்லாமல் தினசரி உபயோகத்திலும் ஆமணக்கு எண்ணெய்யினை உட்கொள்ளலாம். அளவு : 2.5 - 5 மிலி.

வீட்டு பிரயோகத்தில் ஆமணக்கு எண்ணெய் :-

                    கண் பார்வை திறனை அதிகப்படுத்த ஆமணக்கு எண்ணெய்யினை அஞ்சனமாக உபயோகப்படுத்தலாம்.
                    ஆயுட்காலத்தை அதிகப்படுத்த உச்சந்தலையில் ஆமணக்கு எண்ணெய்யினை தடவிய பின் அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
                    மலச்சிக்கலுடன் சேர்ந்த உடல் வீக்கத்திற்கு(சரக சம்ஹிதா சிகிச்சை ஸ்தானம்) - ஆமணக்கு எண்ணெய்யினை பாலுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.

ஆயுர்வேத மருந்துகளில் ஆமணக்கு எண்ணெய்:-

                    கந்தர்வஹஸ்தாதி தைலம்
                    பிருஹத் சைந்தவாதி தைலம்
                    ஹிங்கு திரிகுண தைலம்
                    வாதாரி ரஸ்
                    கல்யாண க்ஷார
                    ஆமவாதாரி ரஸ்
                    சிம்ஹநாத குக்குலு

ஆயுர்வேத குறிப்பேடுகள் :-

                    சரக சம்ஹித சிகிச்சை ஸ்தானம் (12வது அத்யாயம்).
                    சுஸ்ருத சம்ஹிதை சூத்ர ஸ்தானம்.
                    பாவப்ரகஷா நிகண்டு பூர்வ காண்டம்
                    யோகரத்னகர வாதவியாதி  சிகிச்சை.

சித்த மருத்துவத்தில் விளக்கெண்ணெய்

கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் அம்மா சஞ்சீவி பெட்டில் உள்ள மருந்தில் ஒன்றான பாவனா பஞ்சாகுல தைலம் என்பது சுத்தமான விளகெண்ணை ஆகும் இந்த மருந்து சுக பிரசவத்திற்கு மிக மிக முக்கியமான மருந்தாக பயன்படுகிறது

சித்தாதி எண்ணெய் என்கிற அற்புத மருந்தில் உள்ள முக்கியமான மருந்தும் நல்ல விளக்கெண்ணெயுடன் பல மூலிகைகள் சேரும் .

ஆமணக்கு எண்ணெயில்  விஷம் :-

மேலே கூறப்பட்டுள்ள அத்தனை அதிசயங்களையும் ஆற்றக் கூடிய ஆமணக்கு எண்ணெய் இன்றைய காலக்கட்டத்தில்-கலப்படம் ,சரியாக சுத்தி செய்யாமல் ,பழங்கால முறைகளை கணக்கில் கொள்ளாமல் ,வெறும் அழுத்தி பிழிந்து  தயாரிக்கப்படும் முறையினால் விஷ குணமாக மாற வாய்ப்புள்ளது

இன்றைய காலக்கட்டத்தில் கிடைக்கும் ஆமணக்கு எண்ணெய்யினை உட்கொள்வதால் எவ்வித நன்மையும் கிடைக்காமல் குமட்டல், வயிற்றுப்போக்கு, கடுமையான மலச்சிக்கல், தோல் வெடிப்பு, தலைச்சுற்று, தசைப்பிடிப்பு போன்ற ஒவ்வாமைகள் வந்து சேர்க்கின்றன.

சிறந்த சித்த ஆயுர்வேத மருத்துவர்களை தேர்ந்தெடுத்து ஆமணக்கு எண்ணெய்யின் அனைத்து அற்புதங்களையும் பெறுவீர்.
சிறந்த ஆயுர்வேத சித்த ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை  9043336000 (ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை கீழ்கட்டளை)

Post Comment

0 comments:

கருத்துரையிடுக