புதன், ஜனவரி 13, 2010

அஜீர்ண ரோக (செரியாமை நோய்க்கு ) சிகிச்சைகள்

அஜீரண சிகிச்சை

இலகுசித்திரகசூரணம் :- சித்திரமூலம், ஓமம், இந்துப்பு, சுக்கு, மிளகு, இவைகளை, சமஎடையாகச் சூரணித்து புளித்த மோரில் 7 நாள் சாப்பிட்டால் அக்கினி திபனத்தை யுண்டாக்கி மூலவியாதியை நிவர்த்தியாக்கும்.

ஜீவாலமுக சூரணம் :- பெருங்காயம், சரக்கொன்றைப்புளி,திரிகடுகு, சித்திரமூலம், யவாக்ஷ¡ரம், இவைகள் வகைக்கு 1/4  பலம் விகிதஞ் சூரணித்து அதில் ஒரு பலம் வெலத்தை சாப்பிட்டுவர அக்கினிதீபனம் உண்டாகும். அஜீரணத்தை நிவர்த்தியாக்கும்.

வியோஷாதி சூரணம் :- சுக்கு, திப்பிலி, மிளகு, ஏலக்காய்பெருங்காயம், கண்டுபாரங்கி, பீடாலவணம், யவாக்ஷ¡ரம் சுக்குஓமம், புளியங்கொட்டைத்தோல், செவ்வியம், சித்திரமூலம், ஆனை திப்பிலி, இலவங்கப்பட்டை, மோடி, உப்பு, சீரகம் இவைகள் யாவுஞ் சமஎடையாக சூரணித்து நெய் கலந்த்து மூன்றுநாள் சாப்பிட்டால் அஜீரண ரோகங்கள் நாசமாகும். அக்கினி தீபனம்உண்டாகும்.

கணாதி சூரணம் :- திப்பிலி, இந்துப்பு, கடுக்காய், சித்திரமூலம் இவைகள் யாவைவுஞ் சமஎடையாகச் சூரணித்து, இந்த சூரணத்தை வெந்நீரில் அதிகாலையில் சாப்பிட்டால் பசியை உண்டாக்கி அக்கினி விருத்தியையும் உண்டுபண்ணும்.

பஞ்சாக்கினி சூரணம் :- கொன்னைப்புளி, மருதம்பட்டை,கொடிக்கள்ளி, பெருங்கடம்பை, கருணைக்கிழங்கு இந்த ஐந்து தினிசுகளையுஞ் சமஎடையாய் சூரணித்து, மோருடன் சாப்பிட்டால் அக்கினி விருத்தியாகும்.

பிடாலவணாதி சூரணம் :- பிடாலவணம், சித்திரமூலம், சீரகம், கருஞ்சீரகம், ஓமம், கடுக்காய், திப்பிலி, மிளகு, கொத்தமல்லி,சவ்வர்ச்சலவணம், இலவங்கப்பட்டை, புளியம்பழத்தோல், குரோசாணிஓமம், கொன்னைப்புளி, வாய்விளங்கம் இவை யாவைவுஞ் சமஎடையாகச் சூரணித்து சாப்பிட்டால், சகல வியாதிகளை நிவர்த்
திப்பதுடன் அஜீரணத்தையும் போக்கும்.

சித்திரகாதி சூரணம் :- சித்திரமூலம், செவ்வியம், மிளகு, திப்பிலி, பெருங்காயம், ஆனைதிப்பிலி, கிச்சிலிக்கிழங்கு, ஓமம், சுக்கு, யவக்ஷ¡ரம், பஞ்சலவணங்கள் இவை யாவுஞ் சமஎடையாகச் சூரணித்து கொடிமாதுளம்பழரசத்திலாவது அல்லது மாதுளம்பழரசத்திலாவது பாவனைசெய்து சாப்பிட்டால் ஆமரோகம், கிறாணி, வாய்வு, கபம், அக்கினிமந்தம் இவைகள் நிவர்த்தியாகும்.

விடங்காதி சூரணம் :- வாய்விளங்கம், நன்கு சுத்திசெய்துபழகிய சேராங்கொட்டை, சித்திரமூலம், கடுக்காய், சுக்கு இவையாவுஞ் சமஎடையாகச் சூரணித்து இந்த சூரணத்துக்கு சமம் வெல்லம், நெய்கலந்து சாப்பிட்டால் மந்தாக்கினி யுடையவர்கள் ஜடாக்கினியை அடைவார்கள்.

சஞ்சீவணி குடிகங்கள் :- வாய்விளங்கம், சுக்கு, திப்பிலி,சித்திரமூலம், கடுக்காய், தானிக்காய்த்தோல், வசம்பு, சீந்தில்கொடி, நன்குசுத்திசெய்து பழகிய சேராங்கொட்டை, அதிவிடயம், இவையாவுஞ் சமஎடையாய் கோமூத்திரத்தில் அரைத்து, குன்றியளவு மாத்திரைகள் செய்து ஒரு மாத்திரையை இஞ்சி ரசத்தில் கொடுத்
தால் அஜீரணவியாதி, இரண்டு மாத்திரைகள் கொடுத்தால் அஜீரண பேதி, மூன்று மாத்திரைகள் கொடுத்தால் பாம்புமுதலிய துஷ்ட ஜெந்துக்களின் விஷம், நான்மு மாத்திரைகள் கொடுத்தால் சந்நிபாதம் இவை யாவும் நீங்கும்.

தனஞ்செய வடுகங்கள் :- சீரகம், சித்திரமூலம், செவ்வியம், சூரத்து கரும் உப்பு, வசம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய்,பச்சைக்கற்பூரம், செருப்படை, குரோசாணி ஓமம், சிறுநாகப்பூ, இவைகள் வகைக்கு 1/4 பலம், ஓமம், திப்பிலிமூலம், சர்ஜக்ஷ¡ரம், கடுக்காய்த்தோல் இவைகள் வகைக்கு 1 பலம், ஜாதிக்காய், கிறாம்பு இவைகள் வகைக்கு 1/2 பலம், கொத்தமல்லி, இலவங்கப்பத்திரி, இவைகள் வகைக்கு 3/4 பலம்,திப்பிலி, சவுட்டு உப்பு இவைகள் பலம் 1, இந்துப்பு, சுக்கு, இவைகள் வகைக்கு பலம் 2 1/2 சுக்காங்கீரை 7 1/2  பலம், புளியங்காய் 4 பலம், இவைகள் யாவையும் அரைத்து மாத்திரைகள்செய்து உபயோகித்தால் அக்கினிதீபனம் உண்டாகும். அஜீரணம், சூலை, கிராணி இவைகள் நிவர்த்தியாகும். ருசச்f¢யை உண்டுபண்ணும்.

சங்கு வடகங்கள் :- புளி, அரசன், கள்ளி, நாயுருவி, எருக்கன் இவைகளின் க்ஷ¡ரங்கள், பஞ்சலவணங்கள் இவைகள் வகைக்கு பலம்-2, சங்குபற்பம் 1/2-பலம், திரிபலை 1/4-பலம், கிராம்பு 1/2-பலம் இவை யாவையும் மைபோல் சூரணித்து எலுமிச்சம்பழச்சாற்றினால்7-நாள் அரைத்துலர்த்தி வைத்துக்கொள்ளவும்.

ஒரு குன்றிஎடை சாப்பிட்டால் தீபனம், ஜீரணசக்தியண்டாகும். சகல ரோகங்கள், அஜீரணவாதத்தினால் உண்டான ரோகங்கள் பித்த சிலேத்திமத்தினால் உண்டான ரோகங்கள், பேதி, சூலை அநாஹம் இவைகள் நிவர்த்தியாகும்.

இலவங்காமிருத வடுகங்கள் :- மிளகு, திப்பிலி இவைகள் வகைக்கு 3/4-பலம், ஓமம், சித்தரமூலம் இவைகள் வகைக்கு 2-பலம், சொற்றுப்பு 1-பலம், திப்பிலிமூலம் 1 3/4-பலம், சுக்கு, கடுக்காய்
தோல் 2 1/2-பலம், தானிக்காய் தோல், நெல்லிப்பருப்பு, சேராங்கொட்டை, சீரகம், செவ்வியம் இவைகள் வகைக்கு பலம்-1 1/2, வெட்பாலை 5-பலம், இவை யாவையுஞ் சூரணித்து வஸ்திரகாயஞ் செய்து இந்த சூரணத்திற்கு சமஎடை கிராம்பு சூரணத்தை கலந்து இஞ்சிரசத்தினால் மூன்று நாளும் சுக்கங்கீரை ரசத்தினால் மூன்று நாளும் அரைத்து 8-குன்றிஎடை மாத்திரைகள் செய்து உபயோகித்தால் அக்கினிதீபனம், புஷ்டி, சம்பூரணசுகம் உண்டாகும். அஜீரணத்தைநிவர்த்திக்கும்.

க்ஷ£தாசாகர வடுகங்கள் :- சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், ஐந்துவித உப்புகள், மூன்றுவித க்ஷ¡ரங்கள், பாதரசம், கெந்தி இவைகள் வகைக்கு 1-பலம், நாபி 2-பலம், இவைகளை இஞ்சி ரசத்தினால் அரைத்து குன்றியளவு மாத்திரைகள் செய்து அஜீரண ரோகத்திற்கு 2-மாத்திரைகள் 5-இலவங்கத் தோடும், அல்லது 7 இலங்கத்தோடும் சாப்பிட்டால் அஜீரணம் நிவர்த்தியாகும்.

அக்கினிதுண்ட வடுகங்கள் :- சுத்திசெய்தரசம், வசநாபி, கெந்தி ஓமம், கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், சர்ஜக்ஷ¡ரம் யவாக்ஷ¡ரம், இந்துப்பு, சீரகம், சவ்வர்ச்சலவணம், வாய்விளங்கம் கடலூப்பு, சுக்கு, திப்பிலி, மிளகு இவைகள் சமஎடை நன்கு சுத்திசெய்து எட்டிவிரை இதுகள் யாவற்றிர்க்கும் சமமாக சேர்த்து எலுமிச்சம்பழச் சாற்றினால் அரைத்து மிளகு அளவுமாத்திரைகள் செய்து கடுக்காய், சுக்கு, வெல்லம் இவைகளை  அரைத்து இதில் 1/4 பலம் சூரணத்தில் ஒரு மாத்திரையை பிரத்தியோகித்தால் அக்கினிமந்தம் நிவர்த்தியாக்கும்.


தகஹ ரீதகி யோகம் :- 100 கடுக்காயை மோரில் வேகவைத்து அந்தகடுக்காயிலிருக்கும் விதையை எடுத்துவிட்டு திப்பிலி, திப்பிலிமூலம், செவ்வியம், சித்திரமூலம், சுக்கு, மிளகு, ஐந்துவித உப்புகள், பெருங்காயம், யவக்ஷ¡ரம், சீரகம், குரோசாணியோகம், இவைகள் வகைக்கு 1/4 பலம், வெள்ளைச்சிவதை வேர் 1/8 பலம் இவைகளை சூரணித்து வஸ்திரகாயஞ்செய்து புளிவஞ்சி ரசத்தினாலரைத்து இவைகளை அந்தகடுக்காயில் வைத்து வெய்யிலில் வைத்து உலர்த்திஒரு கடுக்காய் விகிதம் சாப்பிட்டால் அஜீரணம், மந்தாக்கினி ஜடாரோகங்கள், மூலரோகம், சூலை, கிறாணி, குதஸ்தானத்தில் முளைகள், மலபந்தம், ஆமவாதம், அநாஹம், இவைகளை யாவுஞ்சுவஸ்தமாகும்.

க்ஷ¡ர யோகம் :- யவாக்ஷ¡ரம், வங்காரம், இரசம், சர்ஜக்ஷ¡ரம் இந்துப்பு, இலவங்கங்கள், பீடாலவணம், சவ்வர்ச்சலவணம், திப்பிலி, கெந்தி, சுக்கு, மிளகு இவைகள் வகைக்கு 1 பலம், நாபி 1/4 பலம் சேர்த்து சூரணித்து எருக்கன் பாலினால் ஏழு நாள் அரைத்து அந்த மூசையில் வைத்து கஜபுடமிட்டு ஆறியபிறகு எடுத்து பிறகு
இலவங்கம், மிளகு, படிகாரம் இவைகள் வகைக்கு 1 பலம், சேர்த்து செவ்வையாக அரைத்து பாண்டத்தில் வைத்து 2 குன்றி எடை சாப்பிட்டால் சாப்பிடும்படியான பதார்த்தங்களை க்ஷணத்திற்குள்ளாக ஜீரணிக்கச்செய்யும், பசி தீபனம் உண்டாகும்.

அஜீரணத்திற்கு பஞ்சமூலாதி கியாழம் :- பஞ்சமூலங்கள், கடுக் காய்த்தோல், திரிகடுகு, திப்பிலி மூலம், இந்துப்பு, சிற்றரத்தை, சர்ஜ க்ஷ¡ரம், யவக்ஷ¡ரம், சீரகம், வாய்விளங்கம், கிச்சிலிக்கிழங்கு இவைகளை சமஎடையாய் கியாழம் காய்ச்சி அதில் நெய், கொடிமாதுழம்பழரசம், இஞ்சி ரசம், மோர், கள், ஏடு, கழுநீர், கஞ்சிநீர்
இவைகளை சேர்த்து பக்குவமாய் காய்ச்சி சாப்பிட்டால் அக்கினி தீபனத்தை உண்டாக்கும். குன்மம், சூலை, உதரரோகம், மேல்மூச்சு, இருமல், வாதங்கள், கபரோகங்கள் முதலியன நிவர்த்தி யாகும்.

பில்வாதி கியாழம் :- வில்வம்பழம், சுக்கு, இவைகளை சமஎடை யாக கியாழம் ¨வாத்து கொடுக்க வாந்தி, பேதி முதலியன நிவர்த்தி யாகும்.

வில்வம்பழம், சுக்கு, காயம், இவைகளை சமஎடையாக கியாழம் வைத்து குடித்தால், வாந்தி, பேதி நிவர்த்தியாகும்.

விஷீசிக்கு இலங்காதி சூரணம் :- இலவங்கள் 1/4 பலம், ஏலக்காய், ஜதிக்காய், இவைகள் வகைக்கு 1/8 பலம், அபினி 7  குன்றி எடை இவைகளை சூரணித்து 4 குன்றிஎடை சூரணத்தை வெந்நீருடன் சாப்பிட்டால் விஷீசி, சூலை, அதிசாரம், வாந்தி,  முதலியன நிவர்த்தியாகும்.

பத்தியாதி சூரணம் :- கடுக்காய், வசம்பு, பெருங்காயம், வெட்பாலைப்பட்டை, கரிசாலை, சவ்வர்ச்சலவணம், அதிவிடயம் இவைகளை சமஎடையாக சூரணித்து வெந்நீரில் கொடுத்தால் அசீரணம் விஷீசி, சூலை, இருமல் முதலியன நிவர்த்தியாகும்.

கடுதிரியரசம் :- சுக்கு, திப்பிலி, மிளகு, பெருங்காயம்இந்துப்பு, வங்காயம், சுத்திசெய்தகெந்தி, இவைகளை சம
எடையாக கல்வத்திலிட்டு வேப்பிலைச்சாற்றினால் அரைத்து இலந்தைவிதைப் பிரமாணம் கொடுத்தால் பேதி, துஷ்டமான கிறாணி, வாந்தி முதலியன நிவர்த்தியாகும்.

அஜீரணங்களுக்கு பத்தியங்கள் :- மந்தாக்கினி, அசீரணம்பேதி இவைகள் சிலேஷ்மத்தினால் உண்டாகியிருந்தால் முதலில் வாந்தியாகும்படிச் செய்யவேண்டியது. பித்தத்தினால் உண்டாகியிருந்தால் சுகபேதிக்கு கொடுக்கவேண்டியது. வாதத்தினால் உண்டானதாக இருந்தால் வியர்வை வரும்படி செய்விக்கவேண்டியது.

துவர்ப்பு, கைப்புபொருள்கள், லகுபோஜனம், கஞ்சிகள்பழகிய அரிசி, பச்சைப்பயறு, மாமிசரசம், வாழைக்கச்சல், முள்ளங்கி, கத்திரிப்பிஞ்சு, முருங்கைக்காய், பாகற்காய், நாகப்பழம், இஞ்சி, சுக்கான்கீரை, நெல்லிக்காய், சுக்கு, மாதுழம்பழம், யவதானியம், பற்பாடகம், எலுமிச்சம்பழம், கொடிமாதுழம்பழம், தேன், வெண்ணெய், நெய், மோர், இலந்தைப்பழம், காடி, புளித்த நீர், பெருங்காயம், உப்பு, ஓமம், மிளகு, வெந்தியம், கொத்தமல்லி, சீரகம், தாம்பூலம், வெந்நீர், கசப்பு, துவர்ப்பு இவைகள் உடைய பதார்த்தங்கள் அசீரணவியாதிக்கு பத்தியங்களெண்ரு
அறியவேண்டியது.

அபத்தியங்கள் :-பேதியாகுதல், மலம், மூத்திரம், அபானம்அடிக்கடி சீகிரமாக வருதல், சாப்பிட்ட பிறகு மறுபடியும் சாப்பொடுதல், இரவு விழித்தல், இரத்தம் வாங்குதல், மீன்கள், மாமிசம் அதிகமாக தண்ணீர் அருந்தல், மலபத்தமான பதார்த்தங்கள் பாலின் வேகவைத்த பதார்த்தங்கள் பால், கோவா, சாறைப்பருப்பு
வெட்டிவேர், சீதளமான பதார்த்தங்கள், கெட்ட ஜலம் விருத்தமான பதார்த்தங்கள் இவைகள் அபத்தியங்கள்.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக