பாத எரிச்சல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாத எரிச்சல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், பிப்ரவரி 06, 2013

அல்சரை அடியோடு அழிக்கும் -காமதுகா ரஸ (Kamaduga Rasa)


அல்சரை அடியோடு அழிக்கும் -காமதுகா ரஸ     (Kamaduga Rasa)                                                                                        
(ref-ரஸயோகஸாகரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1.            முத்து பற்பம் – மௌக்திக பஸ்ம                300 கிராம்
2.            பவள பற்பம் – ப்ரவாள பஸ்ம                   300         “
3.            முத்துச்சிப்பி பற்பம் – மௌக்திகசுக்தி பஸ்ம     300         “
4.            பலகரை பற்பம் – வராடிக பஸ்ம                300         “
5.            சங்கு பற்பம் – சங்க பஸ்ம                     300         “
6.            காவிக்கல் – கைரிக                             300         “
7.            சீந்தில் சர்க்கரை – குடூசீஸத்வ                   300         “

இவைகளை ஒன்று கலந்து முறைப்படி ரவைகளாக்கி 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

அளவும் அனுபானமும்:     

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வீதம் சீரகச் சூர்ணம், சர்க்கரை கலந்து கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 

வயிற்றில் புளிப்புநீர் (அமிலம்) அதிகமாகச் சுரத்தல் (அம்லபித்தம்), வெள்ளை படுதல் (ஸோமரோகம்), நாள்பட்ட காய்ச்சல் (புராண ஜ்வர).

தெரிந்து கொள்ள வேண்டியவை 

எவ்வளவு மோசமான வயிறு புண் ,உணவு குழாய் புண் ,சிறுகுடல் புண் -சீரண  மண்டலத்தில் இருக்கும் புண்களை இது வியக்கத்தக்க வகையில் குணமாக்கும் 

வயிற்று வலி ,தாங்க முடியாத மேல் வயிற்று எரிச்சல் போன்றவற்றை குணமாக்கும் 

எந்த கம்பெனியும் முத்து பற்பத்தை  சேர்ப்பதில்லை ...சேர்த்தால் விலை அதிகமாகும் .,முத்து சேர்க்காத  காமதுகா ரச  பெரிய வேலையை செய்வதில்லை ..

எங்களிடம் முத்து சேர்த்தும் ..முத்து சேர்க்காத காமதுகா  ரச என்ற பற்பம்  எங்களிடம் கிடைக்கும் ..நோயாளிக்கு தக்கவாறு ,நோய்க்கு தக்கவாறு இதை முத்து சேர்ந்ததா  அல்லது முத்து சேராததா  நோயாளிக்கு சொல்லி கொடுப்போம் 

எனது அனுபவத்தில் இந்துகாந்தம் கஷாயம் அல்லது இந்துகாந்தம் கிருதம்  போன்ற மருந்தோடு தர எவ்வளவு நாள்பட்ட அல்சர் ஆனாலும் கடவுள் நாடினால் குணமாகும் 

இந்த மருந்தை நான்கு அரிசி எடை அளவுக்கு தேன் அல்லது  தண்ணீர்  விட்டு பிழியாத  தேங்காய்பால் சாற்றுடனும் தர அல்சர் பற்றி கவலை வேண்டாம் 

மருந்து சாப்பிடும் பொது நிச்சயம் எண்ணெய் எண்ணையில் பொறித்த உணவுகளை நூற்றுக்கு நூறு மூன்று மாதமாவது நிறுத்துதல் அவசியம் 

அதிகமான அமில சுரப்பை சரி  செய்யும் 

கடையில் விற்கும் பால் மருந்துகள் எனப்படும் ஜெலுசில் இதனிடம் வெட்கி மோசமாக தோற்கும் 

மேலும் வெள்ளை படுதல் ,எரிச்சல் ,சர்க்கரை நோயில் வரும் எரிச்சல் ,நாக்கில் புண் ,காரணம் தெரியா அரிப்பு வியர்க்கும் நல்ல பலன் தரும் 




Post Comment

ஞாயிறு, ஜூலை 29, 2012

தாதுக்களை வலுப்படுத்தி -வாதநோய்க்கு நல்ல மருந்தாகும் சதுர்முக ரஸ -Chathurmuka Ras


தாதுக்களை வலுப்படுத்தி -வாதநோய்க்கு நல்ல மருந்தாகும்
சதுர்முக ரஸ -Chathurmuka Ras
 (ref-பைஷஜ்யரத்னாவளி - வாதரோகாதிகாரம்,மற்றும் ரச தந்திர சார )
 

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த ரஸம் – ஷோதித ரஸ           10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் – ஷோதித கந்தக       10           “
இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன்

1.            அயபற்பம் – லோஹ பஸ்ம            10 கிராம்
2.            அப்பிரகற்பம் – அப்ரகபஸ்ம            10           “
3.            தங்கபற்பம் – ஸ்வர்ண பஸ்ம          2.5          “

இவைகளைச் சேர்த்துச் சிறிது அரைத்துப் பின்னர் கற்றாழைச்சாறு (குமரிஸ்வரஸ) விட்டரைத்துச் சிறிது உருண்டைகளாகச் செய்து அவைகளை ஆமணக்கு இலைகளால் (எரண்டபத்ர) சுற்றி நெற்குவியலில் மூன்று நாட்கள் வைத்துப் (ஆவேஸ்தனம் செய்தல்) பின்னர் எடுத்துப் பொடித்து பத்திரப்படுத்தவும்.

அளவும் அனுபானமும்:      

100 முதல் 200 மில்லி கிராம் வரை இரண்டு முதல் மூன்று வேளைகள் திரிபலா சூர்ணம், தேன் இவைகளுடன்.

தீரும் நோய்கள்:  



வயிற்றில் புளிப்பு நீர் அதிகமாகச் சுரத்தல் (அம்லபித்த), இரத்த சோகை (பாண்டு), பிரமேகம் (ப்ரமேஹ), தாதுக்கள் க்ஷீணமடைதல் (தாதுக்ஷய), பலவீனம் (க்ஷய), கழுத்துப் பிடிப்பு (அ) செயலிழத்தல் (மன்யாஸ்தம்ப), கால்கை வலி (அ) காக்கைவலி (அபஸ்மார), புண்கள் (வ்ரண), நாட்பட்ட சுரம் (புராண ஜ்வர), இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாஸ), வாத நோய்கள் (வாத ரோக).

தெரிந்து கொள்ள வேண்டியவை ..
  1. இதில் தங்க பஸ்பம் என்னும் ஸ்வர்ண பஸ்மம் செரக்கபட்டிருக்க வேண்டும்
  2. கை கால்  வலிப்பு என்னும் வலிப்பு நோய்க்கு இந்த மருந்தை தொடர்ந்து ..வாத குலாந்தக ரச என்னும் மாத்திரை அல்லது சித்த மருத்துவத்தில் உள்ள பேரண்ட பற்பம் என்னும் அற்புத மருந்துடன் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்
  3. தாதுக்களின் நட்டம் எங்கெல்லாம் அதிகரித்து வாத நோய்கள் தோன்றுகிறதோ அங்கெல்லாம் இந்த மருந்து மிக சிறந்த மருந்து ..
  4. அப்ரக பற்பம் சேர்ந்துள்ளதால் ..சர்க்கரை நோயாயாளிகளின் பாத எரிச்சல் ,இரத்த ஓட்டம் சீரின்மை போன்றவற்றிக்கு நல்ல பலன் தரும் ..
  5. அறாத புண்களை ஆற்ற வல்லது ..
  6. நாள்பட்ட இருமல் ,காய்ச்சலுக்கும் தரலாம் ..
  7. வயிறு புண்ணுக்கு நல்லது ...
  8. கடுமையான பலஹீனம் இந்த மருந்து சூப்பராக வேலை செய்யும்
  9. கை கால் வலி ,மூட்டு வலி ,கழுத்து வலி ,இடுப்பு வலி -போன்றவற்றிற்கும் இந்த மருந்து குணபடுத்தும்



Post Comment

வெள்ளி, நவம்பர் 04, 2011

பாத எரிச்சலையும் .குதி வலியையும் போக்கும் -பலாகுடூச்யாதி தைலம்


பாத எரிச்சலையும் .குதி வலியையும் போக்கும் -பலாகுடூச்யாதி தைலம்
 (ref-ஸஹஸ்ரயோகம் – தைல ப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.            சித்தாமுட்டிவேர் – பலாமூல      300 கிராம்
2.            சீந்தில்கொடி – குடூசி             300         “
3.            தேவதாரு – தேவதாரு            300         “
4.            தண்ணீர் – ஜல             14.400 லிட்டர்

                இவைகளைக் கொதிக்க வைத்து 3.600 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி நல்லெண்ணெய் (திலதைல) 900 கிராம் சேர்த்து அதில்

1.            ஜடாமாஞ்சில் – ஜடமாம்ஸீ             18.750   கிராம்
2.            கோஷ்டம் – கோஷ்ட                  18.750       “
3.            சந்தனம் – சந்தன                       18.750       “
4.            குந்துருஷ்கம் – குந்துருஷ்க             18.750       “
5.            கிரந்திதகரம் – தகர                    18.750       “
6.            அமுக்கிராக்கிழங்கு – அஸ்வகந்தா      18.750       “
7.            ஸரளதேவதாரு – ஸரள               18.750       “
8.            சித்தரத்தை – ராஸ்னா                 18.750       “

                இவைகளை அரைத்துக் கல்கமாகக் சேர்த்துக்காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டவும்.

குறிப்பு:    சம்பிரதாயத்தில் கஷாய சாமான்கள் மொத்தம் 800 கிராம், எண்ணெய் 800 கிராம், கல்க சாமான்கள் வகைக்கு 12.500 கிராம் வீதம் எடுத்துத் தயாரிக்கப்படுகிறது. மேலும் வெட்டிவேர் (உசீர), அதிமதுரம் (யஷ்டீ), கோரைக்கிழங்கு (முஸ்தா) ஆகியன வகைக்கு 12.500 கிராம் வீதம் சேர்க்கப்படுகின்றன.

பயன்படுத்தும் முறை:      

 மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும். தொடர்ந்து தலைக்கும் தடவி வரலாம்.

தீரும் நோய்கள்:  






எரிச்சல் (தாஹ), வலி (அங்கமர்த), வீக்கம் இவைகளுடன் கூடிய வாத நோய்கள் குறிப்பாக வாதரக்த எனப்படும் குதிகால்வாதம்.

தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. வாத பித்த நோய்களில் -இந்த தைலம் நல்ல பலன் தரும்
  2. மதுயஷ்டி தைலம்  போன்ற தைலங்களை போல -பாத எரிச்சல் -சர்க்கரை நோயாளிகளின் பாத எரிச்சலையும் முழுமையாக கட்டுபடுத்தும்
  3. தைல தாரை போன்று இந்த தைலத்தை ஒரு கிளாசில் சூடாக்கி எடுத்து கொண்டு பொறுமையாக குதி வலி உள்ள இடத்தில் ஊற்றிகொண்டிருக்கும் சிகிச்சை (கீழே ஒரு தட்டை வைத்து கொள்வது நல்லது )-எப்படிப்பட்ட குதி வலியையும் குறைக்கும் ..குறைந்த பட்சம் பதினைந்து நாட்களுக்கு காலை மாலை பதினைந்து நிமிடங்கள் -இந்த தைலம் உடன் முறிவெண்ணை கலந்து செய்தால் நல்ல பலன் தரும் ..
  4. உப்பு குற்றி என்னும் இந்த இடத்தில் ஏற்படும் வலிகளுக்கு அந்த இடத்தில் ஊசி போட்டாலும் (ஸ்டீராய்ட்  ஊசி ) கேட்காத வலி -மேலே சொன்ன சிகிச்சையில் நிரந்தரமாக கேட்கும்


Post Comment