முக வாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முக வாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, டிசம்பர் 11, 2011

எலும்பை -சதையை வலுப்படுத்தும் -தைலம்-மாஷ தைலம் -Masha thailam


எலும்பை -சதையை வலுப்படுத்தும் -தைலம்-மாஷ தைலம்   Masha thailam                                                                 
(ref-பைஷஜ்யரத்னாவளி - வாதரோகாதிகாரம்)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            உளுத்து – மாஷ            1.600 கிலோ கிராம்
2.            தண்ணீர் – ஜல             6.400 லிட்டர்

                இவைகளைக் கொதிக்க வைத்து 1.600 லிட்டர் ஆகக் குறுக்கி வடிக்கட்டவும்.

1.            வில்வமூலம் – பில்வமூல        250 கிராம்
2.            முன்னைவேர் – அக்னிமாந்த      250         “
3.            பெருவாகைவேர் – ஸ்யோனாக    250         “
4.            குமிழ்வேர் – காஷ்மரீ            250         “
5.            பாதிரிவேர் – பாடாலா           250         “
6.            ஓரிலை – ப்ரிஸ்னிபார்ணீ         250         “
7.            மூவிலை – சாலிபர்ணீ          250         “
8.            கண்டங்கத்திரி – கண்டகாரீ     250         “
9.            முள்ளுக்கத்திரி – ப்ருஹத்தீ    250         “
10.          நெருஞ்சில் – கோக்ஷூர         250         “
11.          தண்ணீர்                   20.000 லிட்டர்

                இவைகளைக் கொதிக்க வைத்து 5.000 லிட்டர் ஆகக் குறுக்கி வடிக்கட்டவும். பின்னர்

1.            வெள்ளாட்டு இறைச்சி – அஜமாம்ஸ    1.500 கிலோ கிராம்
2.            தண்ணீர் – ஜல                   6.000 லிட்டர்

                இவைகளைக் கொதிக்க வைத்து 1.500 லிட்டர் ஆகக் குறுக்கி வடிக்கட்டவும்.

இனி மேலே கூறியுள்ளபடி தயாரித்த

1.            உளுந்துக் கஷாயம் – மாஷகஷாயம்          1.500 லிட்டர்
2.            தசமூலகஷாயம் – தசமூல கஷாயம்         5.000        “
3.            வெள்ளாட்டு இறைச்சிச்சாறு – அஜமாம்ஸரஸம்    1.500      “
4.            பசுவின் பால் – கோக்ஷீர                  3.200 கிலோ கிராம்
5.            நல்லெண்ணெய் – திலதைல            0.800                     “

                இவைகளை ஒன்றாகக் கலந்து அதில்

1.            பூனைக்காலி வேர் – ஆத்மகுப்தமூல          12.500 கிராம்
2.            ஆமணக்குவேர் – எரண்ட மூல               12.500        “
3.            சதகுப்பை – ஸதபுஷ்ப                 12.500        “
4.            இந்துப்பு – ஸைந்தவலவண            12.500        “
5.            கல்லுப்பு – ஸ்வர்ச்சலவண             12.500        “
6.            கருப்பு உப்பு – பிடலவண                    12.500        “
7.            கீரைப்பாலை – ஜீவந்தி                 12.500        “
8.            காகோலீ – காகோலீ                   12.500        “
9.            க்ஷீரகாகோலீ – க்ஷீரகாகோலீ           12.500        “
10.          மேதா – மேதா                        12.500        “
11.          மஹாமேதா – மஹாமேதா                  12.500        “
12.          காட்டுளுந்து வேர் – மாஷபர்ணீ              12.500        “
13.          காட்டுப்பயறு வேர் – முட்கபர்ணீ             12.500        “
14.          ரிஷபகம் – ரிஷபக                          12.500        “
15.          ஜீவகம் – ஜீவக                        12.500        “
16.          அதிமதுரம் – யஷ்டீ                    12.500        “
17.          மஞ்சட்டி – மஞ்ஜிஷ்டா                12.500        “
18.          செவ்வியம் – சவ்ய                          12.500        “
19.          கொடிவேலி வேர் – சித்ரக                   12.500        “
20.          குமிழ்வேர் – காஷ்மரீ                  12.500        “
21.          சுக்கு – சுந்தீ                           12.500        “
22.          மிளகு – மரீச்ச                        12.500        “
23.          திப்பிலி – பிப்பலீ                      12.500        “
24.          மோடி – பிப்பலீ மூல                  12.500        “
25.          சித்தரத்தை – ராஸ்னா                 12.500        “
26.          அதிமதுரம் – யஷ்டீ                    12.500        “
27.          இந்துப்பு – ஸைந்தலவலண            12.500        “
28.          தேவதாரு – தேவதாரு                 12.500        “
29.          சீந்தில்கொடி – குடூசி                   12.500        “
30.          கோஷ்டம் – கோஷ்ட                  12.500        “
31.          அமுக்கராக்கிழங்கு – அஸ்வகந்தா       12.500        “
32.          வசம்பு – வச்சா                        12.500        “
33.          கிச்சலிக்கிழங்கு – ஸட்டீ                    12.500        “
                இவைகளை உப்புகள் நீங்கலாக அரைத்துக் கல்கமாக்கிக் கலந்து உப்புகளைப் பொடித்துப் போட்டுக்காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டவும்.

குறிப்பு:    

 செய்முறையில் குறிப்பிட்டுள்ள அளவில் சரக்குகளை எடுத்து ஒன்றாக்கி சுமார் 2 பங்கு தண்ணீரில் கஷாயம் வைத்து ¼ பங்கு வற்றியவுடன் வடிகட்டி உபயோகிக்கும்படி நூலில் குறிப்பிடப் பட்டிருப்பினும், சரக்குகளின் தன்மையை உத்தேசித்துத் தனித் தனியே கஷாயமாக்கிச் சேர்ப்பது தான் வழக்கம்.


பயன்படுத்தும் முறை:  

மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும். சிலர் 6 கிராம் அளவில் இதனை வெந்நீர் அல்லது சூடான பாலுடன் உள்ளுக்குத் தருவதுண்டு

தீரும் நோய்கள்:  

முகவாதம் (அர்திதம்), தலை நடுக்கம் (சிரகம்ப), கைநடுக்கம் (ஹஸ்தகம்ப), பேராசன நரம்புவலி (க்ருத்ரஸி), தோள் பகுதி சூம்பிப் போதல் (பாஹூஸோஷ), தோள்பட்டை வாதம் (அவபாஹுக), குள்ளத்தன்மை (குப்ஜரோக), உடம்புவலி (அங்கமர்க) போன்ற பலவித வாத ரோகங்கள், செவிட்டுத்தன்மை (பாதிர்ய), காதிரைச்சல் (கர்ணநாத), நோய் முதலியவற்றால் வற்றிப்போகும் உடலுறுப்புகளை (Mascular atrophy) புஷ்டியாக்குகிறது. நஸ்யம், பஸ்தி போன்ற உபயோகங்களுக்கும் பயனாகிறது.


தெரிந்து கொள்ள வேண்டியவை -

  1. எங்கெல்லாம் சதை ,எலும்புகள் வலு இழந்து உள்ளதோ அங்கெல்லாம் இந்த தைலம் சிறந்த பலன் தரும்
  2. உடலுக்கு வலு தரும் -ஆற்றலை பெருக்கும்
  3. ஆமவாதம் போன்ற -நீர்வாத நோய்களில் -இந்த தைலம் பயபடுத்தினால் நோய் அதிகரிக்கும் -வலி மிகவும் அதிகமாகும் -எனவே தக்க கவனம் தேவை
  4. மாஷ தைலம்  நரம்புக்கு தெம்பூட்டும் 
  5. மயோபதி என்னும் சதை சிதைவு நோயில் இந்த மருந்து சதைகளை மேலும் சிதைய விடாமல் பாதுகாக்கும்
  6. எலும்பு உடைந்தால் -முறிவெண்ணையுடன் சேர்த்து போட சீக்கிரம் எலும்பு கூடும்
முடிந்தால் பக்கத்தில் உள்ள கேட்கட்டில் ஒட்டு போடுங்கள்






Post Comment

புதன், டிசம்பர் 07, 2011

மூட்டுக்கு பசை உண்டாக்கும் அற்புத மருந்து -க்ஷீரபலாதைலம் (ஆவர்த்தித்தது)-KSHEERA BALA 101


மூட்டுக்கு பசை உண்டாக்கும் அற்புத மருந்து -க்ஷீரபலாதைலம் (ஆவர்த்தித்தது)-KSHEERA BALA 101

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

                சாதாரண க்ஷீரபலா தைலம் செய்த முறைப்படியே குறிப்பிட்ட அளவு நல்லெண்ணெய் திரும்பத்திரும்ப மற்ற சரக்குகளை அதிகமாக எடுத்துச் சேர்த்து மீண்டும், மீண்டும் காய்ச்சி மத்யமபாகத்தில் வடிகட்டி “ஆவர்த்தித்த க்ஷீரபலா தைலம்”
தயார் செய்யப்படுகிறது.

                மாறாத ஒரே அளவு எண்ணெய்யில், ஒவ்வொரு ஆவர்த்தனத்திற்கும் ஏற்ப பலாமூலம், பால் இவைகளின் பங்குகள் மட்டுமே கூடுதலாக அமைந்து சிறந்ததோர் நோய் தீக்கும் குணத்தை அளிக்கின்றன.ஆகையால் துளி அளவுகளில் உபயோகிக்கப்பட்டும் சிறந்த பலன்களை இவைகள் அளிக்கின்றன.

                அதாவது நல்லெண்ணெய்யின் அளவு மட்டும் மாறாது, மற்ற சரக்குகளின் அளவுமட்டும் ஆவர்த்தனத்திற்கு ஆவர்த்தனம் அதிகமாகும். எனவே அதிகமான தடவைகள் ஆவர்த்தனம் செய்யப்பட்ட தைலம் மிகவும் வீரியமுள்ளதாகிறது.

                இந்த விதமான ஆவர்த்தனம் 3 முதல் 101 தடவைகள் வரை செய்யப்படுகின்றன. ஆவர்த்தனம் அதிகமாக அதிகமாக அவற்றின் குணமும் அதிகரிக்கிறது.

அளவு:         
 (பலவித ஆவர்த்தனங்கள்)

7 முறை ஆவர்த்தித்தக்ஷீரபலா தைலம்: 10 முதல் 30 துளிகள் வரை பால், ஜீரகக் கஷாயம் அல்லது வேறு பொருத்தமான கஷாய வகைகளுடன் இரு வேளைகள் சாப்பாட்டிற்கு முன்.

28 முறை ஆவர்த்தித்த க்ஷீரபலா தைலம்:    7 முறை ஆவர்த்தித்த க்ஷீரபலா தைலத்தை போலவே பயன்படுத்த வேண்டும். இது முதலில் குறிப்பிட்டதைவிடச் சிறப்பானது.

101 முறை ஆவர்த்தித்த க்ஷீரபலா தைலம்:   5 முதல் 10 துளிகள் வரை பால் முதலியவைகளுடன் ஒரு வேளை முதல் இரு வேளைகள் வரை.

தீரும் நோய்கள்: 


 முகவாதம் (அர்திதம்), தோள் பட்டை வாதம் (அப்பாஹுக), கீல்வாயு (சந்திவாத) ஆமவாதம் (ஆமவாத) போன்ற பலவிதமான வாத நோய்கள் (வாத ரோக), நரம்புத்தளர்ச்சி (நாடீதௌர்பல்ய), இளைப்பு (கார்ஸ்ய / க்ஷய), பலவீனம் (தௌர்பல்ய), தூக்கமின்மை (அநித்ரா), சூர்யாவர்த்தம் போன்ற தலைவலிகள் (சிரோரூஜா), ரத்தக்கொதிப்பு, சரீரத்தை இது நன்கு போஷிக்கிறது.

                நரம்புமண்டலம் கடுமையாகச் செயலிழந்த நிலையிலும், தூக்கமில்லா நிலையிலும் தலைக்குத் தேய்க்கப்படுகிறது. நசிய மிடவும் பயன்படுத்தப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. ஆங்கில மருத்துவர் -மூட்டு தேய்மானம் -ஒன்றுமே செய்ய இயலாது என்று கூறும் இடத்தில் எல்லாம் இந்த மருந்து சவால் விடும் (தொடர்ந்து ஆறு மாதமாவது சாப்பிடணும்)
  2. குளுகோஸ் அமைன் சல்பேட் என்னும் -குருத்தெலும்பு வளர்ச்சிக்கு உதவும் மருந்தை விட பல நூறு மடங்கு நன்றாக கார்டிலேஜ் என்னும் குருதெலும்பை வளர்த்து சாதனை புரியசெய்யும்
  3. முதுகு தண்டு வட டிஸ்க் பிரச்சனைக்கும் இந்த மருந்து சூப்பரோ சூப்பர் மருந்து
  4. வாத நோய்களில் இந்த மருந்து கண் கண்ட மருந்து
  5. உடலை தேற்றும் ,பலம் தரும் ,வன்மை புகட்டும் ..
  6. கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் -தக்க ஆலோசனை படி இந்த மருந்தை பயன் படுத்துவது நல்லது ..
  7. க்ஷீர பலா நூறு -வாத நோய் சிகிச்சையில் பயன்படுத்தபடுவது -நூற்றுக்கு நூறு
  8. நரம்பு மண்டல நோய்க்கு சிறந்த மருந்து

Post Comment

செவ்வாய், டிசம்பர் 06, 2011

நரம்புக்கு உரம் அளிக்கும் தைலம் -க்ஷீரபலா தைலம் (சாதாரணம்)


நரம்புக்கு உரம் அளிக்கும் தைலம் -க்ஷீரபலா தைலம் (சாதாரணம்)
 (ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            பசுவின் பால் – கோக்ஷீர          3.200 கிலோ கிராம்
2.            தண்ணீர் – ஜல             3.200 லிட்டர்
3.            நல்லெண்ணெய் – திலதைல      800 கிராம்

இவைகளை ஒன்றாகக் கலந்து அத்துடன் குருந்தொட்டி வேர் (பலாமூல) 250 கிராம் அரைத்துக் கலக்கிக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிகட்டவும்.

பயன்படுத்தும் முறை:      

உட்கொள்ளவும், வெளி உபயோகத்திற்கும் பயனாகிறது. தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும், மூக்கிலிடவும் கூடப் பயன்படுகிறது.

                 
தீரும் நோய்கள்: 


 வாதநோய்கள் (வாத ரோக), நரம்புத் தளர்ச்சி (நாடீ தௌர்பல்ய) மற்றும் சாதாரண பலவீனம் (தௌர்பல்ய).

தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. இந்த க்ஷீர பலா தைலம் -பொதுவாக மசாஜ் செய்ய உதவும்
  2. நரம்பு சார்,வாத நோய்களுக்கு இந்த மருந்து நல்ல பலன் தரும்
  3. குருந்தொட்டி மூலிகை சிறந்த நரம்பு உரமாக்கி என்பது மூலிகை மருத்துவத்தில் எல்லோருக்கும் தெரியும்
  4. மூட்டு தேய்மானத்திற்கு -இந்த தைலம் +மகா நாராயண தைலம் + தான்வந்தரம் தைலம் மூன்றையும் கலந்து தேய்த்தால் மூட்டு பசை உண்டாகி மூட்டு வலி குணமாகும் என்பது எனது அனுபவம்

Post Comment

சதைக்கு வலுவேற்றும் -கார்ப்பாஸாஸ்த்யாதி தைலம்


சதைக்கு வலுவேற்றும் -கார்ப்பாஸாஸ்த்யாதி தைலம்
  (ref-ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)   

தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.            பருத்திக்கொட்டை – கார்ப்பாஸ பீஜ           200 கிராம்
2.            சித்தாமுட்டி வேர் – பலாமூல                200         “

இவற்றை 6.400 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து 1.600 லிட்டர் ஆகக் குறுக்கி வடிக்கட்டவும்.


1.            உளுந்து – மாஷ பீஜ                   200 கிராம்
2.            கொள்ளு – குலத்தா                    200         “

இவற்றை 6.400 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து 1.600 லிட்டர் ஆகக் குறுக்கி வடிக்கட்டவும்.

இனி இவ்விரண்டு கஷாயங்களையும் ஒன்று சேர்த்து அத்துடன்

நல்லெண்ணெய் – திலதைல            800 கிராம்
வெள்ளாட்டுப்பால் – அஜக்ஷீர          800         “

ஆகியவைகளையும் சேர்த்துக் கொண்டு
1.            தேவதாரு – தேவதாரு                 12.500 கிராம்
2.            சித்தாமுட்டிவேர் – பலாமூல           12.500        “
3.            சித்தரத்தை – ராஸ்னா                 12.500        “
4.            கோஷ்டம் – கோஷ்ட                  12.500        “
5.            கடுகு – ஸர்ஸப                  12.500        “
6.            சுக்கு – சுந்தீ                           12.500        “
7.            சதகுப்பை – ஸதபுஷ்ப                 12.500        “
8.            மோடி – பிப்பலீ மூல                  12.500        “
9.            செவ்வியம் – சவ்ய                    12.500        “
10.          முருங்கப்பட்டை – சிக்ருத்வக்                12.500        “
11.          மூக்கரட்டை வேர் – புனர்னவ                12.500        “

இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டவும்.

பயன்படுத்தும் முறை:- 

 பெரும்பாலும் நஸ்யம், பஸ்தி, அப்யங்க போன்ற புறவுபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. சில சமயங்களில் 10-15 மி.லி. அளவில் சூடான தண்ணீர் அல்லது பாலுடன் உள்ளுக்கும் தரப்படுகிறது.
தீரும் நோய்கள்: 

 பாரிச வாதம் (பக்ஷாகாத), முகவாதம் எனப்படும் முகத்தின் ஒரு பகுதியைச் செயலிழக்கச் செய்யும் ஒருவித வாதரோகம் (அர்தித), தோள் பட்டைப் பகுதி செயலிழத்தல் (அவபாஹூக) போன்ற பலவித வாதரோகங்கள் (வாதரோக).
தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. உடலுக்கு,மூட்டுக்கு ,முதுகுதண்டுவடத்திர்க்கு   வலுவை கொடுக்கும் அதே சமயத்தில் வலிகளை போக்கும்
  2. பொதுவான மசாஜ்க்கு இந்த தைலம் தான்வந்தரம் தைலத்திற்கு அடுத்து பயன்படும்
  3. பக்க வாதம் ,முக வாதம் போன்ற வாத நோய்களில் இந்த தைலம் சிறந்து விளங்குகிறது
  4. ஆற்றல் தரும்
  5. வலிகளை போக்கும்
  6. ப்ரும்ஹனம் என்ற உடலை தேற்ற கூடிய தன்மை இதற்க்கு உள்ளது

Post Comment