வர்மம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வர்மம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜனவரி 16, 2023

மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா

 மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள்.

அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா இதய அறுவை சிகிச்சை மற்றும் குழந்தை பேறு சிசேரியன்- நோயாளி விழிப்புடன், நோயாளி கண் விழித்து கொண்டே நடக்கிறது வீடியோவை கடைசி வரை பாருங்கள்.. மிக பெரிய.. நீங்கள் இது வரை தெரிந்திராத ஒரு புதிய விஷயம் இது.. இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்ளும் அளவுக்கான வீடியோ.. நீங்கள் அக்குபஞ்சர் படித்து இருந்தாலோ.. அக்குபஞ்சர் பற்றி ஞானம் உள்ளவராக இருந்தாலும் இதுவும் ஒரு பெருமை படும் காணொளி இது... போதி தர்மர்க்கு முன்னோடி..


ஆயுர்வேத மர்ம சித்த வர்ம மருத்துவத்தில் பல சூக்ஷ்மங்கள் உள்ளது.. இதே போல சித்த ஆயுர்வேத மருத்துவத்திலும் பல மயக்க புள்ளிகள் உள்ளது .. வட இந்தியாவில் பல் பிடுங்க ஆயுர்வேத முறை படி - சில புள்ளிகள், அசைவுகள் கொண்டு .. வலி இல்லாமல் பல் பிடுங்க படுகிறது .. ஷேர் செய்து பெருமை அடையுங்கள்.. #acupunctureansthesia #dentalextraction #painlessteethremoval #withoutanesthesia #openheartsurgery #LSCS #tamilhealth #அக்குபஞ்சர் #மயக்கவியல் #ஆயுர்வேதமயக்கவியல் #வழிஇல்லாமல்பல்பிடுங்க # இதயஅறுவைசிகிச்சை #ayurveda

Post Comment

வெள்ளி, செப்டம்பர் 17, 2021

மருந்தில்லா மருத்துவம் செய்த அற்புதம் | டாக்டர் ஜாவாஹிரா டைரியில் இருந்த...


மருந்தில்லா மருத்துவம் செய்த அற்புதம் டாக்டர் ஜாவாஹிரா டைரியில் இருந்து விளக்கங்கள் மற்றும் feedbacks உத்தர வஸ்தி, ஹிஜாமா , மர்மம் , பி ஆர் பி , ஹோமியோபஞ்சர் இந்த ஐந்து சிகிச்சைகள் பற்றி இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளுங்கள் .. 1. உத்தர வஸ்தி உத்தர வஸ்தியின் பயன்கள் ஃபெலோபியன் குழாய் அடைப்பு, கருப்பை நார்த்திசுக்கட்டி, கர்ப்பப்பை வாய் அரிப்புகள், எண்டோமெட்ரியோசிஸ், கர்ப்பப்பை வாய் பாலிப், மலட்டுத்தன்மை போன்ற நிலைகளிலும் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையில் உத்திர வஸ்தி சிகிச்சையானது கையாளப்படுகிறது. 2. ஹிஜாமா நபி (ஸல்) அவர்கள் ஹிஜாமா சிறந்த மருந்துகளில் ஒன்று என்று விளக்கினார்: "நீங்களே சிகிச்சை செய்யும் மிகச் சிறந்த மருந்து ஹிஜாமா, அல்லது அது உங்கள் மருந்துகளில் சிறந்த ஒன்று" அல்லது "நீங்கள் பயன்படுத்தக்கூடிய சிறந்த சிகிச்சை ஹிஜாமா. ” [ஸஹீஹ் புகாரி ஹதீஸ்-எண்: 5371] 3. மர்மம் - வர்மம் தலைவலி , உடல்வலி , முதுகெலும்பு சீரமைப்பு , மூட்டுகளில் வலி போன்ற பொதுவான வியாதிகள் மர்ம சிகிச்சை மூலம் புத்துயிர் பெறலாம்.இந்த சிகிச்சை மூலம் பிறந்த குழந்தை மூலம் வயதானவர் வரை அனைத்து தரப்பினர்க்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது.இந்த மருந்தில்லா மருத்துவ சிகிச்சையை அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையில் பல்வேறு நோய் நிலைகளில் உடனடி வலி நிவாரண சிகிச்சையாக பெற்ற ஆயிரக்கணக்கானோர் துயரம் நீக்கியுள்ளோம். 4. பி ஆர் பி மூட்டு வலிக்கு பி ஆர் பி முடி உதிர்தலுக்கு பி ஆர்‌ பி 5 ஹோமியோபஞ்சர் #Drjawahariasaleem #medicineless #உத்தரவஸ்தி #ஹிஜாமா #மர்மம் #ஹோமியோபஞ்சர் #வர்மம் #prp #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush

Post Comment

வியாழன், மே 13, 2021

கொரோனா நோயாளிகளின் ஆக்சிஜன் அளவை ( Spo2) அதிகபடுத்தும் வர்ம புள்ளிகள்


கொரோனா நோயாளிகளின் ஆக்சிஜன் அளவை ( Spo2) அதிகபடுத்தும் வர்ம புள்ளிகள் 

How to improve oxygen saturation covid positive patients  through Varmam stimulation in Tamil

This channel is an Education video to awareness about Ayurveda and Ayush sysem of medicine 

Dr Mohamad Saleem MD Ayurveda  is working as  Chief Medical Consultant , In order to fight against the current covid pandemic, the awareness given by him is very useful to many peoples.


 
The channel has the motto to bring more videos which is certainly in people’s interest  #howtoimproveoxygen #SPo2lavelincrease 
#oxygenKaiseBantahai #varmamtoimproveoxygenlevel
#pressurepointstoimproveoxygenlevel #covidcareathome #covid19 #covid_19 #ayurvedatreatmentforcovid19 #waytoincreaseoxygenlevel #pulsoximeter #coranaawarenessvideo #coranatamil #covid19tamil #tamilhealth #healthtips #covidupdatetoday #currentsituationinindia #indiacovidsituation #bestayurvedadr #tipsintamilhealth 
#subscribeourchannelalshifayush #alshifayush #varmamaruthuvam #நுரையீரல்காற்றின்அளவைஅதிகரிக்க #spo2வைஅதிகரிக்க 

Dr.A,Mohamad Saleem.,BAMS.,MD(Ayu).,Snr.Gen.Med.Asst. Med officer Al Shifa ayush hospital, 11 main road, Kadayanallur , Tenaksi District Cell :9042225333 
 also at
Al shifa hospitals at Chennai,Tirunelveli, Rajaplayam, Theni
Chennai – Al shifa Ayush hospital cell  9043336000
Tirunelveli - Al shifa Ayush hospital cell 9042225999
Rajapalayam – Al Shifa ayush hospital cell 9043336888
Theni Cell- Al Shifa Ayush hospital cell 9047277577


This video discusses about education awareness  varmam 
1. Vilangu varmam 
2. Adappakalam 
3. Ullangal vellai varmam 
4. Manipuram varmam- manipuraka adangal
5. Patchi ner varmam 
6. Sippikuzih varmam
7. Ettel pirithal varmam
8. simiz iruppu varmam

Sincere thanks to My guru Dr shanmugom – kovai, Thiruvannamlai  thiru arunai guru parmpariyam Asan Palpandiyan , my brother Dr Siddique ali MD Siddha Asst Prof Special medicine siddha at government anna hospital and Dr balu sir

மக்களை காக்கும் சீரான பணியில் வர்ம மருத்துவம் என்றும் உதவும்.  வர்மம் சித்த மருத்துவத்தின் சொத்து, ஆயுர்வேத மருத்துவனாக சித்த மருத்துவம் பாரபம்பரியம் கொண்டு பத்து வருடத்திற்க்கு மேலாக வர்மம் சிகிச்சை அளிப்பவனாக  இந்த வர்ம புள்ளிகளை மக்களின் நலன் காக்க இந்த pandemic situation மக்களை காக்க இந்த வர்ம மருத்துவம் உதவும் என்றே இந்த வரம் புள்ளிகளை  பொது மக்கள் பார்வையில் வெளிவிடுகிறேன் .. 

வர்ம  மருத்துவ புள்ளிகள் இரண்டு பக்கம் கூர்  உள்ள கத்தி .. பார்த்து பயன்படுத்த வேண்டும் .. 
#விலங்கு_வர்மம் 
#அடப்ப_கால வர்மம் 
#உள்ளங்கால்வெள்ளை வர்மம் 
#மணிபூரக_வர்மம் 
இந்த நான்கு வர்மங்களே Spo2 வை அதிகரிக்க போதுமானது .. 
மற்றவர்களுக்கு எப்படி செய்வது, நமக்கு நாமே செய்து கொள்வது  என்று விளக்கமாக இந்த காணொளி உதவும் 
உங்களால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு இதை பகிர்ந்து உதவுங்கள் 

Post Comment

செவ்வாய், அக்டோபர் 20, 2015

இலவச வர்ம மருத்துவ சிகிச்சை பெற வேண்டுமா ?

வர்ம மருத்துவம் என்னும் எல்லா விதமான நோய்களுக்கும் மருந்தில்லா மருத்துவ வரம்




வர்மம் என்றால் என்ன ?

வர்மம் என்பது உயிர் ஆற்றல் . வர்மம் என்பது ”உயிர் நிலைகளின் ஓட்டம்”. வர்மம் – என்பது உயிர்சக்தி தடம்புரியும் புள்ளிகள். உயிர்நிலைப் புள்ளிகளடங்கிய சக்தி ஓட்டங்களில் அடியோ, தாக்குதலோ ஏற்படும்போது உடலில் உலாவும் உயிர்வேகம் அதனை தொழிலை செய்யாமல் பிறழ்ந்து மரணத்தையோ, உடல் ஊனத்தையோ, தொடர்ந்த வலிகளையோ ஏற்படுத்தும். அவை தசைகளிலோ, தசை நார்களிலோ, நரம்புகளிலோ இரத்தக் குழாய்களிலோ, எலும்புகளிலோ, மூட்டுகளிலோ அமைந்திருக்கும் இந்த புள்ளிகளில் 3 தோஷங்களும், தச வாயுக்கள் ,தச நாடிகள் ,நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்னும் 5 பூதங்களும், ஓஜஸ் எனும் ஏழு தாதுக்களின் சாரங்களும், சத்வ, ரஜ, தம குணங்களும் அதனதன் விகிதாச்சார அடிப்படையில் புதைந்து கிடக்கின்றன. இவை உடலில் உள் உறுப்புகளையும், பிரபஞ்சத்தையும் 13 ஸ்ரோதஸ் எனும் Channels எனும் வழிகளும், பாஹ்ய அந்தர் எனும் உள் வெளி மார்கங்களையும் 6 சக்கரங்களையும் இணைத்து வைக்கும் மாயப் புள்ளிகள்.


வர்ம மருத்துவம் என்றால் என்ன ?
எல்லா நோய்க்கும் காரணம் தச நாடிகளின் பாதிப்பு ,சர ஓட்டத்தில் ஏற்படுகிற தடை , வர்ம புள்ளிகளின் ஆற்றல் குறைபாடு ,பிரபஞ்சத்தோடு ஏற்படுகிற பிணைப்பில் ஏற்படுகிற தடை ,தச வாயுக்களின் தடை ,முக்குற்ற வேறுபாடு , உடலின் பஞ்ச பூதங்களின் மாறுபாடு –இந்த அனைத்து காரணத்தையும் நமது உடலில் உள்ள வர்ம புள்ளிகளை ஒழுங்காக்குவதன் மூலம் ,வர்ம புள்ளிகளின் ஆற்றல் மாறுபாட்டை சரி செய்வதன் மூலம் நாம் குணப்படுத்த முடியும் என்பதே வர்ம மருத்துவத்தின் சாராம்சம் .சீனத்து அக்குபஞ்சர் சிகிச்சைக்கு  நமது வர்ம மருத்துவமே தாய் என்கிறது வரலாறு.



வர்ம மருத்துவத்தில் குணமாகும் நோய்கள் எவை ?

வர்மம் மருத்துவம் என்றால் நமது அனைவருக்கு நினைவுக்கு வருவது இந்தியன் தாத்தா தான் . உயிரை கொள்ள , ஆளை அடிக்க ,செயல் இழக்க செய்யத்தான் இந்த வர்ம மருத்துவம் என்று நாம் தவறாக புரிந்து வைத்திருக்கிறோம். சித்த மருத்துவத்தின் ஒரு பிரிவாக இருக்கும் இந்த வர்ம மருத்துவம் பல நோய்க்களுக்கு மருந்து இல்லாமலும் சிகிச்சை அளிக்கிறது .
  1. முதுகு வலி ,கழுத்து வலிக்கு காரணமான டிஸ்க் பிரச்சனைகள்
  2. மூட்டு எலும்பு தேய்மானம் ,மூட்டு வலி , டென்னிஸ் எல்போ ,முடக்கு வாதம் ,தோள்பட்டை வலி ,குதிகால் வலி  மற்றுமுள்ள அனைத்து வலிகளுக்கும்
  3. நரம்பியல் நோய்கள் –நடுக்கு வாதம் பார்க்கின்சொனிசம், மைக்ரேன் ,பக்கவாதம் , முக வாதம் ,நரம்பு தளர்ச்சி
  4. வாழ்வியல் நோய்களான சர்க்கரை நோய் ,இரத்த அழுத்தம் தூக்கமின்மை ,மன அழுத்தம் ,பதட்டம் ,வயிற்று புண்
  5. .ஆஸ்த்மா அலர்ஜி ,உடல் எதிர்ப்பு ஆற்றல் குறை நோய்கள்
  6. காரணம் தெரியாத தலைசுற்று
  7. மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் , CP child ,Autism ,Hyperactive Child, குழந்தைளின் ஞாபக மறதி, பிடி வாதம்
  8. சுக பிரசவம் எளிதாக்கிட
  9. விந்து அணுக்கள் இல்லாத நிலை ,கரு முட்டை இல்லாத நிலை ,குழந்தை இன்மைக்கும்
  10. ஆபத்து காலத்தில் உயிரை காப்பாற்ற உதவும்

ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் வர்ம மருத்துவத்தில் சிறப்பு என்ன ?
இருபத்தைந்து ஆண்டுகள் வர்ம மருத்துவத்தில் அனுபவம் வாய்ந்த மருத்தவரின் ஆலோசனையோடு ,பல வர்ம ஆசான்களிடம் வர்மம் பயின்ற ,முறையாக மருத்துவம் படித்த ,MD ( Siddha)  சிறப்பு மருத்துவமாக பயின்ற சித்த மருத்துவர்களின் துணையோடு ,வர்ம மருத்துவத்துடன் ஆயுர்வேத மர்ம சிகிச்சையும் ,பஞ்ச கர்ம சிகிச்சை முறைகளையும் சேர்ந்து வர்ம சிகிச்சை மேற்கொள்வதே  ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தின் சிறப்பு.


ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் ஏழு தடவை சிகிச்சையில் முன்னேற்றத்தை உணரலாம்.
ஆபத்து காலத்தில் உடனடியாக தீர்வை வர்ம மருத்துவம் கொடுத்தலும் பல நாள்பட்ட நோய்களுக்கு வாரம் ஒரு முறை அல்லது இரு முறை வர்ம சிகிச்சை என்று தொடர்ந்து குறைந்தது ஏழு தடவை சிகிசையிலே பல நாள்பட்ட நோய்கள் குணமாகும் / முன்னேற்றத்தை உணர முடியும்.மேலே சொன்ன அனைத்து நோய்களுக்கும் ஆண் பெண் மருத்துவர்களை கொண்டு ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் சிகிச்சை அளிக்கபடுகிறது . ஏற்கனவே எடுத்து கொண்டிருக்கும் மருந்துளோடு சேர்ந்தும் சிகிச்சை அளிக்கபடுகிறது. பக்க விளைவுகள் எதுவும் இல்லை ,பத்தியம் இல்லை ,மருந்து எதுவும் சாப்பிட வேண்டியதே இல்லை என்பதும் கூடுதல் சிறப்பு .

உடலில் நரம்பு மண்டலம் , எலும்பு மண்டலம் , தசை மண்டலம் , என்ற மூன்று பகுதிகளிலும் நோய்கள் கண்ட நிலையில் இவற்றை முற்றிலும் குணப்படுதுவதே எங்களின் சிறப்பாகும் வர்ம தத்துவங்களையும் + தச நாடி ஓட்டம் அறிந்து நாடி பார்த்து வர்ம மருத்துவத்தில் முறையாக பயிற்சி பெற்ற சித்த மருதுவத்துவரால் மருந்தில்லாமல் சிகிச்சை  அளிக்கப்படும். ஆலோசனை மற்றும்  முன் பதிவுக்கு  ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையம் ,4, துரைசாமி நகர் முதல் தெரு ,கீழ்கட்டளை (Near KFC) தொலை பேசி எண் 90 4333 6444


வருகிற ஞாயிறு 25/10/2015 காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை வர்ம மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற நமது ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் நடைபெற உள்ளது. இதில் வர்ம மருத்துவத்தில் உலகத்திலே மிக சிறந்த வர்ம மருத்துவர் மற்றும் அவரது தலைமையில் ஐந்து மருத்துவர்கள் அடங்கிய குழு –இலவசமாக வர்ம மருத்துவ சிகிச்சை மேற் கொள்ள உள்ளார்கள் –உங்களுக்கு தெரிந்த நோயாளிகளுக்கு இதை ஷேர் செய்து அவர்கள் பயன் பெற உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் . முன் பதிவுக்கு  90 4333 6444





Post Comment

ஞாயிறு, அக்டோபர் 13, 2013

க்ஷிப்ர மர்மம் -கைகளில் உள்ள மர்ம புள்ளி

ரச வஹ ,பிராண வஹ ஸ்ரோதசையும்,அவலம்பக கபத்தையும் காப்பாற்றும் -சதை நாரினால் ஆன க்ஷிப்ர மர்மம்


Post Comment

தல ஹ்ருதய மர்மம் – கைகளில் உள்ள மர்ம புள்ளி ..

இந்த மர்ம புள்ளி –பிராண வஹ ஸ்ரோதஸ் உடன் தொடர்புடையது ...

Post Comment

வெள்ளி, அக்டோபர் 04, 2013

மர்மம் & மர்ம சிகிச்சைகள்

மர்மம் – வர்மம் – என்பது உயிர்சக்தி தடம்புரியும் புள்ளிகள். 

உயிர்நிலைப் புள்ளிகளடங்கிய சக்தி ஓட்டங்களில் அடியோ, தாக்குதலோ ஏற்படும்போது உடலில் உலாவும் உயிர்வேகம் அதனை தொழிலை செய்யாமல் பிறழ்ந்து மரணத்தையோ, உடல் ஊனத்தையோ, தொடர்ந்த வலிகளையோ ஏற்படுத்தும். 

அவை தசைகளிலோ, தசை நார்களிலோ, நரம்புகளிலோ இரத்தக் குழாய்களிலோ, எலும்புகளிலோ, மூட்டுகளிலோ அமைந்திருக்கும் 

இந்த புள்ளிகளில் 3 தோஷங்களும், 5 பூதங்களும், ஓஜஸ் எனும் ஏழு தாதுக்களின் சாரங்களும், சத்வ, ரஜ, தம குணங்களும் அதனதன் விகிதாச்சார அடிப்படையில் புதைந்து கிடக்கின்றன. 

இவை உடலில் உள் உறுப்புகளையும், பிரபஞ்சத்தையும் 13 ஸ்ரோதஸ் எனும் Channels எனும் வழிகளும், பாஹ்ய அந்தர் எனும் உள் வெளி மார்கங்களையும் 6 சக்கரங்களையும் இணைத்து வைக்கும் மாயப் புள்ளிகள். 


Post Comment