ஆண்மை இரகசியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆண்மை இரகசியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மார்ச் 21, 2017

சிட்டு குருவி லேகியத்தின் ரகசியம் ..

உலக சிட்டு குருவி தினம் –மார்ச் 20-

நவீன அறிவியல் வளர்ச்சியில் சிட்டுகுருவி காணமல் போனதா?..அன்றைய பாரம்பரிய அறிவியல் சாஸ்திரத்தில் சிட்டுகுருவி லேஹ்யம் செய்து சிட்டுகுருவியை காணாமல் செய்து விட்டோமோ என்று பட்டிமன்றமே வைக்கலாம்.

போக உணவர்வை அதிகரிக்க –போலி மருத்துவர்கள் உபயோகப்படுத்தியதே இந்த மாய வார்த்தை –சிட்டு குருவி லேகியம்..


ஜீவகாருண்யம் பேணுகிற சித்தர்களா –சிட்டு குருவிகளை அழித்து லேஹியம் செய்திருப்பார்கள் என்று யோசித்து கொண்டு இருக்கும் போது தான்-அண்ணன் மருத்துவர் ஸ்ரீராம் MD (S) அவர்கள் தனது சித்த மருத்துவம் டெலிக்ராம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது உண்மை என்று உணர முடிந்தது ..


நீர்முள்ளி விதையின் குழு உரிச்சொல் (பரிபாஷை ) சிட்டுக்குருவி .


நீர்முள்ளி விதை சிட்டுக்குருவியின் விருப்பமான உணவுகளில் ஒன்று ..

ஆக சிட்டுக்குருவி என்றால் நீர்முள்ளி விதை எனபது உண்மை ..

விந்துவை கட்டும் –போக உணர்வை அதிகபடுத்தும் சிட்டுக்குருவி லேஹியதில் –சிட்டுக்குருவியே இல்லை எனபது தான் உண்மை என உணர முடிகிறது ..


சிட்டு குருவி லேஹ்யம் எப்படி செய்யலாம் வீட்டிலே ?

ஜாதிக்காய் ,ஜாதிபத்திரி ,தக்கோலம் ,அதிமதுரம் ,மாயக்காய், அதிவிடயம் ,குரோசனி,திரிபலை ,தாளிசபத்திரி ,தகர விதை ,பூனைகாலி விதை ,திரிகடு ,செண்பக மொட்டு ,கொட்டம்,வால்மிளகு ,கஞ்சா (இதற்க்கு பதில் கசகசாவிதை ),முந்திரி பழம், நாட்டு சர்க்கரை ,கற்கண்டு ,அபின் (இதுவும் இப்போது கிடைக்காது –சேர்க்க முடியாது ),தாற விதை –இவை எல்லாம் கிட்டதட்ட 15 கிராம் அளவுக்கு –நீர்முள்ளி விதை (சிட்டு குருவி ) தேவையான் அளவு பால் ,நெய் சேர்ந்து செய்யலாம் சிட்டு குருவி லேகியம்.


பரிபாஷை தெரியாதவன் மருத்துவன் ஆக முடியாது என்பற்கு உதாரணம் இந்த சிட்டு குருவி லேஹ்யம் ..

போலி மருத்துவரிடம் –ஆண்மை குறைவுக்கு மருந்து எடுத்து ஏமாற வேண்டாம் ..BAMS.,BSMS.,BUMS.,மருத்துவ படிப்பு படித்த –காசுக்கு ஆசைப்படாத ஏமாற்றாத –சித்த –ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொண்டு நிவாரணம் பெறுங்கள் .

ஒருங்கிணைந்த பாரம்பரிய மருத்துவ ஆலோசனை பெற –முன்பதிவுக்கு
டாக்டர் க்யூர் ஷ்யூர் முகமது என்கிற டாக்டர் அ முகமது சலீம்.,BAMS.,M.Sc.,MBA,

திருநெல்வேலி கிளை -அல் – ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
ஒருங்கிணைந்த பாரம்பரிய மருத்துவ சிகிச்சை & ஆராய்ச்சி நிலையம்
2 , ராஜராஜேஸ்வரி நகர் ,புதிய பேருந்து நிலையம் ,திருநெல்வேலி: 
90 4222 5999 

கடையநல்லூர் கிளை -அல் – ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
34/23 பீர் முகமது தைக்கா தெரு, அரசு மேல்நிலை பள்ளி அருகில், தங்கள் மெடிக்கல் பின்புறம். கடையநல்லூர் 90 4222 5333 

ராஜபாளையம் கிளை -அல் – ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
195 , PACR சாலை, பத்மா மருத்துவமனை பஸ் ஸ்டாப் ,. ராஜபாளையம்: 
90 4333 6888.

சென்னை கிளை
ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையம் ,4, துரைசாமி நகர் முதல் தெரு ,கீழ்கட்டளை (Near KFC) தொலை பேசி எண் 90 4333 6444

Post Comment

வியாழன், மே 15, 2014

அமுக்ரா சூர்ணம் சாப்பிட்டால் பாலுணர்வு அதிகமாகுமா ?

அமுக்கராச் சூரணம்
சித்த வைத்திய திரட்டு


ஆதாரப் பாடல் :
                “ கொள்ளவே யசுவகந்தி சூர ணங்கேள்
                   குலமான லவங்கமொன்று நாகப்பூ விரண்டு
                   தள்ளவே யேலம்நால் மிளகோ ரெட்டு
                   தளமான திப்பிலியீ ரெட்டு சுக்கு
                  வில்லவே முப்பத்தி ரண்டுங் கூட்டி
                 விசையான வசுவகந்தி யறுபத்து நாலு
                நள்ளவே சுத்திசெய் துலர்த்திக் கொண்டு
                நலமாக விளவறுப்பாய்ச் சூரணந்தான் செய்யே
               செய்யப்பா சமனாகச் சர்க்கரையைக் கூட்டி “
                          -       அகஸ்தியர் வைத்திய இரத்தினச் சுருக்கம் – 360

சேரும் பொருட்களும் அளவும் :


இலவங்கம்                 0.39 %                   சிறுநாகப்பூ                  0.79 %                  
ஏலம்                                 1.57 %                   மிளகு                              3.15 %
திப்பிலி                           6.30 %                   சுக்கு                                   12.60 %
அமுக்கரா வேர்       25.20 %                 சர்க்கரை                        50.00 %


அளவும், துணை மருந்தும் :

1 கிராம் முதல் 2 கிராம் வரை பசுவின் பால் அல்லது நெய்யுடன் தினமும் இரண்டு வேளைகள் கொடுக்கவும்.

தீரும் நோய்கள் :
எண்வகைக் குன்மம், இடப்பாட்டு ஈரல் நோய், குத்துவாய்வு, வெட்டை, பிரமியம், விக்கல், பாண்டு, இரைப்பு, இளைப்புச் சயம், வறட்சி, கை கால் எரிவு தீரும்

குறிப்பு :
சுரத்திற்குப் பிறகு சிறந்த உடல் தேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை ..

சித்த அமுக்ரா சூரணம் என்று கடைகளில் கிடைக்கும் சித்த மருந்தும் -அஸ்வகந்த  சூர்ணம் என்று கிடைக்கும் ஆயுர்வேத மருந்தும் ஒன்றில்லை ..

உடல் பலஹீனத்தை மாற்றுவதோடு மட்டுமல்லாமல் வெட்டை சூட்டை தணிக்கும் .

உடலுக்கு ஆற்றலை தருவதோடு மட்டுமல்லாது குன்ம நோய் -உடல் எரிச்ச்சலை போக்கும் 

ஒருதடவைக்கு  கிட்டதட்ட பத்து கிராம் எடுத்து உபயோகிப்பது நல்லது ..

கை கால் வலிகளுக்கும் தொடர்ந்து சாப்பிட நல்ல பலன் தரும் 

குறைந்தது ஒரு மண்டலமாவது சாப்பிட்டால் மட்டுமே பலனை உணர முடியும் .

பல பற்ப சிந்தூரங்களுக்கு கலந்து கொடுக்கும் தாய் மருந்தாக -Base மருந்தாக இதனை பயன்படுத்தலாம் .

பாலியல் உணர்வை வளர்க்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை 

இதில் கலந்திருக்கும் சர்க்கரை என்பது நாட்டு சர்க்கரை மட்டுமே 




Post Comment

திங்கள், பிப்ரவரி 28, 2011

நரம்பு தளர்ச்சியை போக்கும் -ஆண்மை எழுச்சியை அதிபடுத்தும் -சிறந்த மருந்து - அஸ்வகந்தா சூர்ணம்-Aswagandha choornam


நரம்பு தளர்ச்சியை போக்கும் -ஆண்மை எழுச்சியை அதிபடுத்தும் -சிறந்த மருந்து - அஸ்வகந்தா சூர்ணம்-Aswagandha choornam
  (ref-பாவப்ரகாச நிகண்டு)

தேவையான மருந்துகள்:

சீமை அமுக்கிராக் கிழங்கு – அஸ்வகந்தா (போதிய அளவு)


செய்முறை:   

நன்கு தேறிய சீமை அமுக்கிராக் கிழங்கை கல், மண் நீக்கி சுத்தம் செய்து நுண்ணிய தூளாக்கவும். பின்னர் அதைச் சலித்து பத்திரப்படுத்தவும்.


அளவு:   

 2 முதல் 4 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள் உணவுக்கு முன்.


அனுமானம்:   

  பால், தண்ணீர், சர்க்கரை


தீரும் நோய்கள்: 



பலவீனம் (தௌர்பல்ய (அ) அசக்த), நரம்புத் தளர்ச்சி (நாடீதௌர்பல்ய), தூக்கமின்மை (அநித்ர), இதய நோய்கள் (ஹ்ருத்ரோக),   சிறுநீருடன் விந்து வெளிப்படல், தானே விந்து நழுவுதல் (சுக்ரமேஹ), வாத நோய்கள் (வாதவிகார). 

க்ஷயரோகத்தில் இது 600 மி.கி. திரிகடுகுச் சூரணம், 600 மி.கி. சீந்தில் சர்க்கரை (குடூசி சத்வ), 1500 மி.கி. கற்கண்டுடன் தரப்படுகிறது.

 க்ஷீணரோகங்களிலும் (வலுவிழக்கச் செய்யும் நோய்கள்), உடல்பலமிழந்த நிலைகளிலும் இது 200 மி.கி. மூங்கிலுப்பு (வம்ஸலோசன), 200 மி.கி. சீந்தில் சர்க்கரை (குடூச்சி சத்வ), 125 மி.கி. திப்பிலி (பிப்பலீ), 200 மி.கி. லவங்கம் மற்றும் 30 -60 மி.கி. மகரத்வஜத்துடன் கலந்து தரப்படுகிறது. 

தூக்கமின்மை மற்றும் எலும்பு முறிவு (அஸ்திபங்க) நிலைகளில் இது சூடான பாலுடன் தரப்படுகிறது.


  பெண்கள் கர்ப்பமாக இருக்கும் சமயங்களில் இது 125 மி.கி. தண்ணீர் விட்டான் கிழங்குப் பொடி (ஸதாவரீ சூர்ண), 125 மி.கி. பால் முதுக்கன் கிழங்கு, 125 மி.கி. அதிமதுரப் பொடி (யஷ்டீமது) சேர்த்து கற்கண்டு கலந்த சூடான ஆட்டுப்பாலுடன் தரப்படுகிறது.


மேலும் அஸ்வகந்தா என்ற மூலிகை பற்றி தெரிந்து கொள்ள -இந்த லிங்கை பயன் படுத்துங்கள் http://ayurvedamaruthuvam.blogspot.com/2010/02/part-7.html

Post Comment

சனி, டிசம்பர் 18, 2010

ஆண்மை அதிகரிக்கவும் -ஜெனரல் டானிக் -அஸ்வகந்தா அரிஷ்டம்-Aswagandarishtam

அஸ்வகந்தா அரிஷ்டம்-Aswagandarishtam
(Ref-பைஷஜ்யர த்னாவளி - மூர்ச்சாதிகாரம்)



தேவையான மருந்துகளும் செய்முறையும்:-



2.            நிலப்பனைக்கிழங்கு – முசலீ                 1.000     “
3.            மஞ்சட்டி – மஞ்ஜிஷ்டா                      0.500     “
4.            கடுக்காய் (கொட்டை நீக்கியது)- ஹரீதகீ      0.500     “
5.            மஞ்சள் – ஹரித்ரா                          0.500     “
6.            மரமஞ்சள் – தாருஹரித்ரா                   0.500     “
7.            அதிமதுரம் – யஷ்டீமது                      0.500     “
8.            சித்தரத்தை – ராஸ்னா                       0.500     “
9.            முதுக்கன் கிழங்கு – விடாரி                 0.500     “
10.          மருதம்பட்டை – அர்ஜுனத்வக்               0.500     “
11.          கோரைக்கிழங்கு – முஸ்தா                  0.500     “
12.          கருஞ்சிவதை – த்ரிவ்ருத்                    0.500     “
13.          சிறு காஞ்சூரி – துராலப்பா                   0.400     “
14.          நன்னாரி (கருப்பு) – க்ருஷ்ண ஸாரிவா        0.400     “
15.          வெண்சந்தனம் – ஸ்வேத சந்த               0.400     “
16.          செஞ்சந்தனம் – ரக்த சந்தன                  0.400     “
17.          வசம்பு – வாச்சா                             0.400     “
18.          கொடிவேலிவேர்ப்பட்டை – சித்ரகத்வக்        0.400     “
19.          தண்ணீர் – ஜல                              102.400 லிட்டர்
20.          சர்க்கரை – ஷர்க்கர                           6.0000   கி.கிராம்
21.          தேன் – மது                                  10.0000 “ 


முதல் பதினெட்டு சரக்குகளையும் நீரில் கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி அதில் சர்க்கரை, தேன் இவைகளைச் சேர்த்து அத்துடன்


1.            சுக்கு – சுந்தீ                           100  கிராம்
2.            மிளகு – மரீச்ச                        100         “
3.            திப்பிலி – பிப்பலீ                      100         “
4.            சிறுநாகப்பூ – நாககேஸர               100         “
5.            இலவங்கப்பட்டை – லவங்கத்வக்       100         “
6.            இலவங்கப்பத்திரி – லவங்கபத்ர         200         “
7.            ஏலக்காய் – ஏலா                       200         “
8.            ஞாழல்பூ – ப்ரியாங்கு                  200         “
9.            காட்டாத்திப்பூ – தாதகீபுஷ்ப             800         “
ஆகியவைகளை எடுத்துக் கொண்டு அதில் முதல் எட்டு சரக்குகளை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ சேர்த்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.

அளவும் அனுபானமும்:   
  10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீருடன் இரு வேளைகள்.

தீரும் நோய்கள்:  

  1. உடல் மிகவும் மலிவடைந்த நிலையிலும், க்ஷுண ரோகங்களிலும் கூஷ்மாண்ட லேஹ்யத்துடன் தரப்படுகிறது. 
  2. மூலம் (அர்ஷ), க்ஷயரோகம், ஞாபகம் இன்மை (ஸ்மிருதிக்ஷய) போன்றவைகளில் பெரிதும் பயனளிக்கவல்லது. 
  3. மலட்டுத் தன்மைக்கு ஸதாவரீ ரஸாயனத்துடன் தரப்படுகிறது. 
  4. உள்ளங்கை, பாதங்களில் ஏற்படும் எரிச்சலில் (ஹஸ்த பாத தாக) சந்தனாஸவத்துடன் வழங்கப்படுகிறது.
  5. நீண்ட நாட்களுக்கு இதனைத் தொடர்ந்து உபயோகிக்க மூர்க்கை (மூர்ச்சா), கால் கைவலி எனும் காக்கைவலி (அபஸ்மார) உன்மாதம் (உன்மாத), மூளைக்கோளாறுகள், நரம்புத் தளர்ச்சி (நாடீதௌர்பல்ய) மற்றும் பலவித வாத நோய்கள் (வாதரோகங்கள்), இளைப்பு (கார்ஸ்ய) ஆகியன நீங்கும்.

ஆயுர்வேதத்தில் இந்த மருந்து கை  கால் வலி குறைக்கவும்,நரம்பு தெம்பு தரவும் ,உடல் நோய் எதிர்ப்பு சக்தி கூடவும் ,ஆண்மை பெருக்கவும் -பொதுவான ஹெல்த் டானிக் இந்த மருந்தை பயன்படுத்துவோம்

Post Comment

வியாழன், ஆகஸ்ட் 05, 2010

சுய இன்பம் -சரியா ? தவறா ?-ஆயுர்வேத அணுகுமுறை ..


சுய இன்பம் தவறா?
         
 தவறில்லை என ஆயுர்வேதத்திலேயே வாதிட சில காரணங்கள்

1. கிலைப்யம் எனும் ஆண்மைக்குறைவு (Impotence or Erectile dysfunction)-க்கு முக்கிய காரணம் ஆச்சார்யா சரகா கூறியது அசேவனம் - உபயோகப்படுத்தாதது அல்லது அதைப்பற்றிய அறிவு இல்லாதது அல்லது உணர்ச்சிகள் அற்ற நிலை.
         
          ஆச்சார்யா சுசுருதா - ஆறுவை சிசிச்சையின் தந்தை சரகாவிற்கு ஒருபடி மேலே போய் 6 விதமான கிலைப்யம் எனும் ஆண்மைக்குறைவு நோயினில் - ஒரு விதம் ஸ்திர சுக்ர நமித்தஜம் (தங்கி விட்ட சுக்ரம்) என்றதோர்  பிரிவையே எடுத்துரைக்கிறார் .

2.  வாத்சாயனார்  முதல் நந்தி ஆச்சார்யா வரை உள்ள காமசூத்திர புத்தகங்களை எழுதியவர்கள் கூட சுய இன்பத்திற்கு எதிராக இப்புத்தகங்களில் ஒன்றைக்கூட காணமுடியவில்லை.

3. அடக்க கூடாத 13 மலமுத்ராதி வேதங்களில் ரேதஸ் எனும் Semen (விந்து ) 13வதாக உள்ளது. எனவே காம எண்ணங்களோ விந்து  கூட அடக்ககூடாத வேகம் என்பது தெளிவு.

தவறு தான் என ஆயுர்வேதத்திலேயே வாதிட சில காரணங்கள்.

1. அதிகமான சுக்ரமும், உயிர் தாது ஓஜஸூடைய நட்டமும் பலகீனத்தை ஏற்படுத்திவிடும்.

2. கை என்பது கரடு முரடான பகுதி யோனி மிகவும் மென்மையான பகுதி ஒருவன் கையினால் விந்தை வெளிப்படுத்துவான் எனில் அவனது உறுப்பு மென்மையான பகுதியில் சீக்கிரம் உணர்ச்சி  வசப்பட்டு விந்து முந்திவிட காரணமாகிறது.

3. தாது க்ஷயத்திற்கும் (அழிவிற்கு) காரணமாகி உடல் மெலியும்.

4.  மனம், சுக்ரம் ஓஜஸ் ஒன்றுக்கொன்று பிணைக்கப்பட்டால் ஞாபகசக்தி குறைவு கவன சிதைவு மனஒருமை இன்மை தடுமாற்றம் மயக்கம் என்பவை தோன்ற காரணமாகிவிடும்.


 தவறு என்று சொல்வதற்கில்லை என்றாலும் கூட சில காரணங்களுக்காக எதிர்க்காமல் இருக்கலாம் பால்வினை நோய்களால் மனிதன் பாழ்பட்டு போவதை விட கையால் இழந்து சில மனசஞ்சலத்திற்கு ஆளாகலாம்.

வள்ளுவன் கூட
“தொடிதற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ” - 1159

          அதிகம் விந்தையழித்தால் விடிற்சுடம் அத் தீ உடலழிக்கும் உடன்  மனமழிக்கும் என்கிறார் . என்றும் இக்குறளுக்கு பொருளுணரலாம்.

உடலில் சுக்ர தாது குறையும் போதெழும் குறிகுணங்கள்
         
மூட்டுகளில் பிடிப்பில்லாமல் இருப்பது (சந்தி சிதிலத்வம்) தோள்பட்டை சந்தியில் வலி, மாம்ச குறைவு, இளைப்பு, இரத்த சோகை உடம்பின் பலகீனம், வாய் உலர்தல் , சில சமயங்களில் குறி மற்றும் விதைகளில் வலி ,விந்து கொஞ்சமாக சீக்கிரமாக வெளியேறுதல் பசியின்மை, உடல் இளைப்பு என சரக வாக்பட்ட மருத்துவ ஆச்சார்யார் கள் அந்த காலத்திலேயே தெளிவாக எடுத்துரைத்துள்ளார் கள்.

இப்பழக்கத்திற்கு (சுய இன்ப) தீர் வு என்ன?

          சமதோஷ, சம தாதுக்கள், சம மலங்கள், நிகழ்காலத்தில் இருக்கும் அத்மா மனங்கள் தெளிவான ஆரோக்கியமான பஞ்சேந்திரங்கள் தான் முழு ஆயுள் 

இவைகளை நிலை நிறுத்தும் ஆயுளின் உபதூண்கள் முக்கியமான மூன்று அவைகள்.

பிரம்மச்சர்யம்  
உணவு
தூக்கம்

எப்பொழுதெல்லாம்  பிரம்மச்சர்யம்  எனும் தூண் சரியாக  இல்லையோ உணவு (நல்ல சத்துள்ள மற்றும் தூக்கம் (மன நிம்மதி ஊசலாட்ட மில்லாத தூக்கம் ) எனும் இரு தூண்களையாவது பலமாக வைத்திருந்தால் ஆயுளை நிலை நிறுத்தி விடலாம்.

          ஒரு சராசரி மனிதன் அதிக சத்துக்களை உடலுக்குத் தராத உணவுகளை உண்டுவிட்டு, தினமும் அல்லது அதிக எண்ணிக்கையில் சுய இன்பம் மேற்கொண்டால் என்ன ஆகும் சிந்தித்து  பாருங்கள். உணவு மற்றும் மற்ற முறைகளில் இழப்பை சரி செய்யமால் தான் செய்வது சரி சரி  என தவறிழைத்தால் அம்மனிதனுக்கு நிச்சயம் கேடுதான். இதற்கு மேல் புகை மது என்றால் அழிவின் விளிம்புதான்.

          எனவே நல்ல உணவு, ஆரோக்யமான மனநிலை, சுயகட்டுப்பாடு, தனிமையற்ற சூழ்நிலைகள், மனிதனை, புதுப்பிக்கும் பொழுதுபோக்குகள், ஆன்மீகத்தில் ஈடுபாடு, யோகாசனங்கள் மற்றும் வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் மனிதனுடைய வெளி இவை தான் இப் பழக்கத்திற்கு  தீர்வு.

          நிச்சயமாக நல்ல உணவில்லாமல் சுய இன்பம் என்பது மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தீபத்திற்கு உதாரணமாக கூறலாம். எண்ணை ஊற்றாமல் எரிகிறது பிரகாசமாக எரிகின்றதென்று வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தால் திரியை கூட சாம்பலக்கிவிடும் தீபமாகிவிடும் அணையப்போகும் விளக்கு பிரகாசமாய் எரி யும் சில சமயங்களில் சுயகட்டுப்பாடில்லாத உணர்ச்சிகள் உத்வேகமாய் இருந்தாலும் மடைதிறந்த வெள்ளமாய்  தோன்றினாலும் ஒன்றுமில்லாமல் வழிந்தோடிவிடும்.

          ஆண்மை பெருக்கும் உணவுகளான உளுந்தில் செய்த பலகாரங்கள், பேரிச்சம் பழம், பாதாம், பிஸ்தா, ரஸகுல்லா பால்கோவா, போன்ற இனிப்பு வகைகள் அளவான எள் பதார் த்தங்கள், நிறைய பால், நெய், பாஸ்மதி அரி சிவகைகள் நெய் பாலில் பிசைந்த கோதுமை மாவால் சப்பாத்தி பரோட்டா பூனைக்காலி விதை அமுக்கிரான் கிழங்கு பொடி செய்து இட்டிபொடி போல சேர்த்தல்  அசைவ பிரியரகளுக்கு கோழி, வெள்ளாடு , மீன், முட்டை முக்கியமாக ஆட்டின் உடைய விதைகளில் செய்த சூப்பு போன்ற உடலை வளர்க்கக்கூடிய உணவுகள், இனிப்பு சுவை மற்றும் மனதிற்கு பிடித்த உணவுவகைகள் அதிக கலோரி  தரக்கூடிய புரோட்டின் மற்றும் கொழுப்புகள் அடங்கிய உணவுவகைகள் உண்டால் எப்பொழுதும் கேடு வராது 

          யோகாசனங்கள், தியானம், பிராணயாமம், காயகல்ப சிகிச்சை, மூலாதரம் முதல் ஆங்ஙை வரை குண்டிலினியை எழுப்பச் செய்யும் ஹடயோகங்கள், ஆரோக்கியமான மனநிலை அனைத்து மனிதனையும் உடலையும் சக்தி இழப்பையும் சீர் படுத்தி மனிதனை செம்மைபடுத்தும்.

Post Comment