ஆயுர்வேத மருந்துகளின் செய்முறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆயுர்வேத மருந்துகளின் செய்முறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜனவரி 26, 2011

கிட்னி பைலியர்,சொரியாசிஸ் நோய்களுக்கான டானிக் - புனர்னவாஸவம்-Punarnavasavam


கிட்னி பைலியர்,சொரியாசிஸ்  நோய்களுக்கான டானிக் - புனர்னவாஸவம்-Punarnavasavam
(ref-பைஷஜ்ய ரத்னாவளி - சோபாதிகாரம்)


 
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.            நன்கு கொதித்து ஆறிய தண்ணிர் ஜல - 25.600 லிட்டர்
2.            சர்க்கரை ஸர்க்கர                    - 5.000 கிலோகிராம்
3.            தேன் மது                           - 2.500                 “


இவைகளை நன்றாகக் கலந்து திராக்ஷை (த்ராக்ஷா) 1.000 கிலோ கிராம் இடித்துச் சேர்த்து அத்துடன்


1.            சுக்கு சுந்தீ                               - 50 கிராம்
2.            மிளகு மரீச்ச                             - 50       “
3.            திப்பிலி பிப்பலீ                            - 50       “
4.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ     - 50       “
5.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ    - 50       “
6.            நெல்லிமுள்ளி ஆமலகீ                    - 50       “
7.            மரமஞ்சள் தாருஹரித்ரா                 - 50       “
8.            நெருஞ்சில் கோக்ஷூர                   - 50       “
9.            முள்ளுக்கத்திரி வேர் ப்ருஹத்தீ          - 50       “
10.          கண்டங்கத்தரி கண்டகாரீ               - 50       “
11.          ஆடாதொடை வேர் வாஸாமூல       - 50       “
12.          ஆமணக்கு வேர் ஏரண்டமூல          - 50       “
13.          கடுகரோஹிணீ கடுகீ                 - 50       “
14.          யானைத்திப்பிலி கஜ பிப்பலீ          - 50       “
15.          மூக்கரட்டை வேர் புனர்னவ            - 50       “
16.          வேப்பம்பட்டை நிம்பத்வக்            - 50       “
17.          சீந்தில் கொடி குடூசீ                  - 50       “
18.          உலர்ந்த முள்ளங்கி சுஷ்கமூலக       - 50       “
19.          சிறுகாஞ்சூரி வேர் துராலபா           - 50       “
20.          பேய்ப்புடல் பட்டோல           - 50       “


ஆகியவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீ புஷ்ப) 800 கிராம் சேர்த்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.

குறிப்பு:    சர்க்கரை, திராக்ஷை ஆகியவற்றை வகைக்கு 75 சதவிகிதமும், தேன் 87 ½ சதவிகிதமும் அதிகம் சேர்ப்பது சம்பிரதாயம்.

அளவும் அனுபானமும்:     15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


தீரும் நோய்கள்:  

வீக்கம் (அ) நீர்க்கோவை (ஸோத) ஷோப), பெருவயிறு (மஹோதர, உதர), சோகை (பாண்டு), (காமால, காமில), நீர்க்கட்டு (மூத்திராசங்க); கல்லீரல், மண்ணீரல் வீக்கம் (யக்ருத்ப்லீக வ்ருத்தி).
வீக்கம், பெருவயிறு, சோகை, காமாலை போன்ற நோய்களில் புனர்னவ மண்டூரத்துடன் இது கலந்துதரப்படுகிறது. கோக்ஷூராதி சூர்ணத்துடனும் இது கொடுக்கப்படுகிறது.

இது ஒரு நல்ல சிறுநீர் பெருக்கியாகும்.

கிட்னி பைலியர் நோயாளிகள்-
 புனர்ணவாஸவத்தில்  இனிப்பு உள்ளது -பெரும்பான்மையான கிட்னி பைலியர் நோயாளிகளுக்கு சர்க்கரை நோய் உள்ளதால் -மிக மிக கவனத்துடன் தருவது நல்லது ..கிட்னி பைலியர் நோயாளிகள் இந்த மருந்தை தக்க படித்த ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை படி தான் இந்த மருந்தை எடுக்க வேண்டும் ..
தனியாக சாப்பிட கூடாது ..

(கிட்னி பைலியர் நோயாளிகள் பூனை மீசை என்ற மூலிகையை கொடுத்து ஓரளவுக்கு அவர்களின் உப்பு சத்தை டயாலிசிஸ் இல்லாமல் சரிசெய்ய முடிகிறது ..
இந்த மூலிகையின் முழு விவரம் விரைவில் எழுதுகிறேன் ..)





எனது அனுபவத்தில் இந்த புனர்ணவாஸவத்தை அடிக்கடி தோல் நோய் குறைக்க பயன்படும் ஆயுர்வேத  மாத்திரையுடன் சாப்பிட்டு வர மிக கொடுமையான சொரியாசிஸ் நோய் குணமாவதை கண் கூடாக பார்த்திருக்கிறேன் ..

Post Comment

புதன், ஜனவரி 19, 2011

பசியின்மையை போக்கிடும் நல்ல டானிக் -பிப்பல்யாஸவம்-Pippalyasavam


பசியின்மையை போக்கிடும் நல்ல டானிக் -பிப்பல்யாஸவம்-Pippalyasavam
 (ref-சாரங்கதர ஸம்ஹிதா மத்யமகண்டம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            நன்கு கொதித்து ஆறிய தண்ணீர் ஜல       - 25.600 லிட்டர்
2.            வெல்லம் குட                          - 15.000 கிலோகிராம்


இவைகளை நன்கு கலந்து அதில் திராக்ஷை (த்ராக்ஷா) 3.000 கிலோகிராம் இடித்துக் கலக்கி அத்துடன்,


1.            திப்பிலி பிப்பலீ                 - 25 கிராம்
2.            மிளகு மரீச்ச                        - 25       “
3.            செவ்வியம்  - சவ்ய                   - 25       “
4.            மஞ்சள் ஹரித்ரா                    - 25       “
5.            கொடிவேலி வேர் சித்ரக              - 25       “
6.            கோரைக்கிழங்கு முஸ்தா             - 25       “
7.            வாயுவிடங்கம் விடங்க               - 25       “
8.            கொட்டைப்பாக்கு க்ரமுக              - 25       “
9.            பாச்சோத்திப்பட்டை லோத்ரா          - 25       “
10.          பாடக்கிழங்கு பாத்தா                 - 25       “
11.          நெல்லிமுள்ளி ஆமலகீ               - 25       “
12.            ஏலவாலுகம் ஏல வாலுக              - 25       “
13.          விளாமிச்சவேர் உஸீர                - 25       “
14.          சந்தனம் சந்தன                      - 25       “
15.          கோஷ்டம் குஷ்த்த                   - 25       “
16.          இலவங்கம் லவங்க                  - 25       “
17.          கிரந்தி தகரம் தகர                   - 25       “
18.          ஜடாமாஞ்சில் ஜடமாம்ஸீ             - 25       “
19.          இலவங்கப்பட்டை லவங்கத்வக்       - 25       “
20.          ஏலக்காய் ஏலா                     - 25       “
21.          இலவங்கப்பத்திரி லவங்கபத்ர         - 25       “
22.          ஞாழல் பூ ப்ரியாங்கு                 - 25       “
23.          சிறுநாகப்பூ நாககேஸர               - 25       “


இவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 500 கிராம் சேர்த்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.


அளவும் அனுபானமும்:   

  10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


தீரும் நோய்கள்: 

பசியின்மை (அக்னிமாந்த்ய), பெருங்கழிச்சல் (க்ரஹணீ), சீதபேதி (ப்ரவாஹிகா), மூலம் (அர்ஸஸ்), குன்மம் (குல்ம), இளைப்பு (கார்ஸ்ய), க்ஷயம் (க்ஷய), சோகை (பாண்டுரோக)  

Post Comment

காய்ச்சலை போக்கும் சீந்தில் ,நிலவேம்பு சேர்ந்த -பஞ்சதிக்தாரிஷ்டம்-pancha thikata arishtam


காய்ச்சலை போக்கும் -சீந்தில் ,நிலவேம்பு சேர்ந்த -பஞ்சதிக்தாரிஷ்டம்-pancha thikata arishtam

தேவையான மருந்துகளும் செய்முறையும் :

1.            நிலவேம்பு பூநிம்ப                    - 0.625 கிலோகிராம்
2.            கடுக ரோஹிணி கடுகீ                - 0.625                 “
3.            கோரைக்கிழங்கு முஸ்தா             - 0.625                 “
4.            பர்பாடகம் பர்பாடக                   - 0.625                 “
5.            சீந்தல்பொடி குடூசி                   - 0.625                 “
6.            தண்ணீர் ஜல                      - 51.200 லிட்டர்


இவைகளைக் கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி வெல்லம் (குட) 5.000 கிலோகிராம் சேர்த்துக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 750 கிராம் போட்டு ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.

அளவும் அனுபானமும்:    

10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.



 தீரும் நோய்கள்: காய்ச்சல்கள் (ஜ்வர), மலேரியா போன்ற நச்சுக் காய்ச்சல்களும் முறைக் காய்ச்சல்களும் (சதுர்த்திகா ஜ்வர, விஷமஜ்வர), நாட்பட்ட தோல்நோய்கள் (புராண சர்மரோக), வயிற்றுப் பூச்சிகள் (க்ருமி), பசியின்மை (அக்னிமாந்த்ய)

Post Comment

செவ்வாய், ஜனவரி 18, 2011

அடிக்கடி மலம் கழிதலை பசியை தூண்டி சரி செய்யும் -முஸ்தாரிஷ்டம்-Mushtarishtam


அடிக்கடி மலம் கழிதலை பசியை தூண்டி சரி செய்யும் -முஸ்தாரிஷ்டம்-Mushtarishtam
(ref-பைஷஜ்யரத்னாவளி அக்னிமாந்த்யாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            கோரைக்கிழங்க முஸ்தா        - 10.000 கிலோ கிராம்
2.            தண்ணீர் ஜல                   - 51.200 லிட்டர்

இவைகளைக் கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி வெல்லம் (குட) 15.000 கிலோ கிராம் சேர்த்து அதில்

1.            ஓமம் அஜமோதா               - 100 கிராம்
2.            சுக்கு சுந்தீ                     - 100    “
3.            மிளகு மரீச்ச                   - 100    “
4.            இலவங்கம் லவங்க             - 100    “
5.            வெந்தயம் மேதிக              - 100    “
6.            கொடிவேலி வேர் சித்ரக         - 100    “
7.            ஜீரகம் ஜீரக                    - 100    “ 

ஆகியவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 800 கிராம் சேர்த்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.


அளவும் அனுபானமும்:    

15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


 தீரும் நோய்கள்: 

 செரியாமை (அஜீர்ண), பசியின்மை (அக்னி மாந்த்ய), வாந்திபேதி எனப்படும் cholera (விஷூ ஸிகா), பெருங்கழிச்சல் (க்ரஹணீ), வயிற்றுப் போக்கு (அதிஸார), சீதபேதி (ப்ரவாஹிகா).

Post Comment

வியாழன், ஜனவரி 13, 2011

இரத்தத்தை கூட்டும் - லோஹாஸவம்-Lohasavam


இரத்தத்தை கூட்டும் - லோஹாஸவம்-Lohasavam
(ref-சாரங்கதர ஸம்ஹிதா - மத்யமகண்டம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:-

1.            நன்கு கொதித்து ஆறிய தண்ணீர் ஜல  - 25.600 லிட்டர்
2.            வெல்லம் குட                         - 5.000 கிலோகிராம்
3.            தேன் மது                            - 3.200 கிலோகிராம்

இவைகளை நன்கு கலந்து அக்கலவையில்


1.            இரும்பு அரப்பொடி (சுத்தி செய்தது) லோஹசூர்ண  - 200 கிராம்
2.            சுக்கு சுந்தீ                                     - 200    “
3.            மிளகு மரீச்ச                                   - 200    “
4.            திப்பிலி பிப்பலீ                                  -  200              “
5.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ             - 200    “
6.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ           - 200    “
7.            நெல்லிமுள்ளி ஆமலகீ                          - 200    “
8.            ஓமம் அஜமோதா                               - 200    “
9.            வாயுவிடங்கம் விடங்க                         - 200    “
10.          கொடிவேலி வேர் சித்ரக                         - 200    “
11.          கோரைக்கிழங்கு முஸ்தா                        - 200    “


ஆகியவைகளைப் பொடித்துப் போட்டுக் கலந்து காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 1.000 கிலோ கிராம் சேர்த்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.


அளவும் அனுபானமும்:   
  15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


தீரும் நோய்கள்: 

 நாட்பட்ட காய்ச்சல்கள் (புராண ஜ்வர), சீரணக் கோளாறுகள் (அக்னி விகார), வயிற்றுப் போக்கு (அதிஸார), பெருங்கழிச்சல் (க்ரஹணீ), சோகை (பாண்டு), குன்மம் (குல்ம), மூலம் (அர்ஷ), கல்லீரல், மண்ணீரல் வீக்கம், நோய்கள் (யக்ரித் ப்லீக வ்ருத்தி, ரோக), பெருவயிறு (மஹாதரம் (அ) ஸ்வயது (அ) ஜத்தர) 


                சோகை, காமாலையில் (பாண்டு, காமால) புனர்னவாஸவத்துடன், பெரு வயிற்றில் (மகோதரம்) கோக்ஷூராதி சூர்ணத்துடனும், வயிற்றுப்போக்கு சீத பேதியில் கற்பூராரிஷ்டம் மற்றும் பப்பூலாரிஷ்டத்துடனும், இருமல் (காஸ), இரைப்பிருமலில் (ஸ்வாஸகாஸ) வாஸாரிஷ்டம், கனகாஸவத்துடனும் இம்மருந்து கலந்துதரப்படுகிறது.
            

Post Comment

புதன், ஜனவரி 12, 2011

உடல் சூட்டை தணிக்கும் ஜில் ஜில்-குமார்யாஸவம்-Kumaryasavam


உடல் சூட்டை தணிக்கும் ஜில் ஜில்-குமார்யாஸவம்-Kumaryasavam
(ref-சாரங்கதர ஸம்ஹிதா - மத்யமகண்டம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:-

1.            சோற்றுக் கற்றாழைச் சாறு குமாரீரஸ - 12.800 லிட்டர்
2.            வெல்லம் குட                         - 5.000 கிலோ கிராம்
3.            தேன் மது                            - 2.500                 “

இவைகளை நன்கு கலந்து அதில் 2.500 கிலோ கிராம் சுத்தி செய்த இரும்பு அரப் பொடியை (லோஹபஸ்ம) அக்கலவையையே சிறிது விட்டு நன்கு அரைத்துக் கலந்து பின்னர்

1.            சுக்கு சுந்தீ                                - 25 கிராம்
2.            மிளகு மரீச்ச                             - 25       “
3.            திப்பிலி பிப்பலீ                           - 25       “
4.            கிராம்பு லவங்க                          - 25       “
5.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்             - 25       “
6.            இலவங்கப்பத்திரி லவங்கபத்ர              - 25       “
7.            ஏலக்காய் ஏலா                           - 25       “
8.            சிறுநாகப்பூ நாககேஸர                     - 25       “
9.            கொடிவேலி வேர் சித்ரக                   - 25       “
10.          மோடி பிப்பலீமூல                         - 25       “
11.          வாயுவிடங்கம் விடங்க                    - 25       “
12.          யானைத் திப்பலி கஜபிப்பலீ                - 25       “
13.          செவ்வியம் சவ்ய                          - 25       “
14.          கொட்டைக்கரந்தை ஹப்புஸா              - 25       “
15.          கொத்தமல்லி விதை தான்யக              - 25       “
16.          கொட்டைப்பாக்கு க்ரமுக                   - 25       “
17.          கடுக ரோஹிணீ கடுரோஹிணீ             - 25       “
18.          கோரைக்கிழங்கு முஸ்தா                  - 25       “
19.          கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ       - 25       “
20.          தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ     - 25       “
21.          நெல்லிமுள்ளி ஆமலகீ                    - 25       “
22.          சித்தரத்தை ராஸ்னா                       - 25       “
23.          தேவதாரு தேவதாரு                      - 25       “
24.          மஞ்சள் ஹரித்ரா                          - 25       “
25.          மரமஞ்சள் தாருஹரித்ரா                   - 25       “
26.          பெருங்குரும்பை மூர்வா                   - 25       “
27.          திராக்ஷை த்ராக்ஷா                        - 25       “
28.          நாகதந்தி வேர் தந்தி மூல (நேர்வாள வேர்)   - 25       “
29.          புஷ்கர மூலம் குஷ்த்த                     - 25       “
30.          சித்தாமுட்டி வேர் பலாமூல                  - 25       “
31.          பேராமுட்டி வேர் அதீபலாமூல             - 25       “
32.          பூனைக்காலி வேர் துராலபாமூல            - 25       “
33.          நெருஞ்சில் கோக்ஷூர                     - 25       “
34.          சதகுப்பை ஸதபுஷ்ப                       - 25       “
35.          ஹிங்குபத்ரி ஹிங்குபத்ரி                  - 25       “
36.          அக்கராகாரம் அகார கரபா                  - 25       “
37.          உடங்கன் விதை உட்டிங்கணபீஜ            - 25       “
38.          வெள்ளை மூக்கிரட்டை ஸ்வேதபுனர்னவ    - 25       “
39.          சிகப்பு மூக்கிரட்டை ரத்த புனர்னவ           - 25       “
40.          பாச்சோத்திப்பட்டை லோத்ரா               - 25       “
41.          பொன்நிமிள பற்பம் ஸ்வர்ணமாக்ஷிக பஸ்ம - 25       “

இவைகளை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 400 கிராம் சேர்த்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.

அளவும் அனுபானமும்:    

10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


தீரும் நோய்கள்: 

ருசியின்மை (அருசி), பசியின்மை (அக்னிமாந்த்ய), இளைப்பு (கார்ஸ்ய), பக்கசூலை (பக்டிசூல), இரைப்பைப் புண்கள் மற்றும் முன்சிறுகுடற் புண்கள் (பரிணாமசூல), பெருவயிறு (மஹாதரம்), மலம், மூத்திரம், அபானவாயு ஆகியவற்றின் பந்தனத்தால் ஏற்படும் மூச்சு முட்டலும், குமட்டலும் (உதாவர்த்த), மூத்திரச் சுருக்கு (மூத்திர கிரிச்சர), பிரமேகம் (ப்ரமேஹ), கல்லடைப்பு (அஷ்பரீ), குடற்பூச்சிகள் (க்ருமி கோஷ்ட), ரத்தம் துப்புதல், மூக்கில் இருந்து ரத்தம் வடிதல் மற்றும் பலவித ரத்தப் போக்குகள், ரத்த பித்தம், சீர்கேடடைந்த விந்து (சுக்ர தோஷ). மூன்று மாதங்கள் வரை தொடர்ந்து சாப்பிட சூதக சூலை (ஆர்த்தவசூல) தீரும்.

மார்கெட்டில் கிடைக்கும் தனியான சோற்று கற்றாழை மருந்துகள் ,உணவுகள் ,சோற்று கற்றாழை சார்ந்த பொருட்களை எல்லாம் விட இந்த மருந்து பல நூறு மடங்கு சிறந்தது
 
குறிப்பு  -கர்ப்பிணிகள் சாப்பிட கூடாது

Post Comment

ஞாயிறு, ஜனவரி 09, 2011

அடிக்கடி ஏற்படும் கிராணி கழிச்சலை குணபடுத்தும் -குடஜாரிஷ்டம்-Kutajarishtam


அடிக்கடி ஏற்படும் கிராணி கழிச்சலை குணபடுத்தும் -குடஜாரிஷ்டம்-Kutajarishtam
(ref -பைஷஜ்யரத்னாவளி - அதிஸாராதிகார)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:-

1.            வெட்பாலைப்பட்டை குடஜத்வக்            5.000 கிலோகிராம்
2.            திராக்ஷை த்ராக்ஷா                        2.500     “
3.            இலுப்பைப் பூ மதூகபுஷ்ப                  500         “
4.            குமிழ்வேர் காஸ்மரீ                       0.500     “
5.            தண்ணீர் ஜல                        51.200   லிட்டர்


இவைகளைக் கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி வெல்லம் (குட) 5.000 கிலோகிராம் சேர்த்துக் காட்டாத்திப்பூ (தாதகீ புஷ்ப) 1.000 கிலோகிராம் போட்டு ஒரு மாதம் வைத்திருந்து வடிகட்டவும்.


அளவும் அனுபானமும்:   

  15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


தீரும் நோய்கள்:  

வயிற்றுப்போக்கு (அ) பேதி (அதிஸார), பெருங் கழிச்சல் (க்ரஹணி), சீதபேதி (ப்ரவாஹிகா), ரத்தபேதி (ரக்தாதிஸார), வயிற்றுப் கடுப்பு, காய்ச்சல் (ஜ்வர), மூலம் (அர்ஸஸ்).

மூல நோயில் திராக்ஷாரிஷ்டம் மற்றும் அபயாரிஷ்டத்துடனும், ரத்த பேதியில் ப்ப்பூலாரிஷ்டத்துடனும், சீதபேதியில் லோஹாஸவத்துடனும் இஃது கலந்து தரப்படுகிறது.

சாப்பிட்ட உடன் மலம் கழிக்க வைத்திடும் நோயான -கிராணி (கிரஹனி) அதாவது -IRRITABLE BOWEL SYNDROME -IBS-நல்ல மருந்து .இந்த IBS க்கு தாடிமாஷ்டக சூரணத்துடன் சாப்பிடுவது நல்லது 

Post Comment

காய்ச்சலை போக்கும் -கிராதாரிஷ்டம்-Kiratharishtam


காய்ச்சலை போக்கும் -கிராதாரிஷ்டம்-Kiratharishtam





தேவையான மருந்துகளும் செய்முறையும்:-

1.            நிலவேம்பு பூநிம்ப                    2.000 கிலோகிராம்
2.            தண்ணீர் ஜல                      51.200 லிட்டர்

இவைகளைக் கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி வெல்லம் (குட) 6.000 கிலோ கிராம், தேன் (மது) 2.000 கிலோ கிராம் சேர்த்து அத்துடன்,

1.            திப்பிலி பிப்பலீ                 150 கிராம்
2.            மோடி பிப்பலீ மூல                  150         “ 
3.            செவ்வியம் சவ்ய                    150         “ 
4.            கொடி வேலி வேர் சித்ரகமூல         150         “ 
5.            சுக்கு சுந்தீ                           150         “ 
6.            நிலவேம்பு பூரும்ப                   137.5     “

ஆகியவைகளைப் பொடித்துப் போட்டு ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.

அளவும் அனுபானமும்:    

10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


தீரும் நோய்கள்: 

 காய்ச்சல்கள் (ஜ்வர), மலேரியா போன்ற நச்சுக் காய்ச்சல்கள் (விஷமஜ்வர), முறைக்காய்ச்சல் (சதுர்த்திகா ஜ்வர), வயிற்றுப் பூச்சி (க்ருமி).

Post Comment