குழந்தைகளின் நோய்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தைகளின் நோய்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, செப்டம்பர் 25, 2021

குழந்தைகளின் மலச்சிக்கலை எப்படி தீர்ப்பது ? | Constipation in children ...


குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வந்தால் என்ன செய்ய வேண்டும் ?

குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் காரணமும் எளிதான தீர்வுகளும் .. 



#மலச்சிக்கல் #childconstipation #malchikkal #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும்  #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் 
#அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை
#Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips  #bestayurvedadr #tipsintamilhealth 
#subscribeourchannelalshifayush

Post Comment

சனி, செப்டம்பர் 04, 2021

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஆயுர்வேத ரகசியங்கள்|Children...


குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஆயுர்வேத  மொத்த ரகசியங்கள்

Children Immune Boost Ayurvedic  Secrets


Immuno modulatory drugs
Guduchi
Amalaki
Yastimadhu
Jyothismathi
Satavari
Brahmi
Aswagandha
Pippali
Tulsi
Nimba
Bhumiamalaki
Katuki
Bringaraja
Punarnava
Rasona
Vidari
Kiratatikta

Ghee itself increases ojas and enhance immunity

In jatakarma sanskara ,giving ghee and honey is mentioned other than swarnaprashanam


ghee is best to increase intellect voice strength , ojas vishara and rakshoghna(Ch,Sus)

Immunization in child


Ghee , musta,vidanga - 1 month child

Vyosha , sariva siddha ghrtam - three month child

Musali khanda and vyosha powder with honey - 6 month child

Dhatri and musta with sugar and warm water -1.3 yrs

Dhatri and musta with jeeraka and pippali -1.6 yrs

Dhatri and musta with vidanga and pippali - 1.9 yrs

Dhatri and musta with sugar and jeeraka along with cow's milk - 2 yrs

Vidanga , vacha,ela,shunti ,pippali, musta -3.3 yrs

Punarnava , vacha,tvacha,bhunimba -3.6 yrs

Brahmi , vacha, kutaja , musta, pippali - 3.9 yrs

Musta,vidanga,chitraka,ajagandha,trikatu,vacha,abhaya - 4 yrs

Vacha with pushkaramoola - 5 yrs

Balachaturbhadra curna (B .R.chi 40) naimittika rasayana ( curative )
Musta ,ativisa ,pippali, karkataka srngi

Kasantaka churna( B . R.kasaroga chikitsa ) - amalaki,Haritaki,vibhitaki,sunti ,marica ,pippali with honey

Kaphanasaka avaleha ( a h.chi.3/45)pippali,p.moola,sunti,bibitaki with honey

Management of fever 

Sadanga paniyam (B.R.jwara chikitsa)

Guduchiyadi kwatha(B.R.jwara chikitsa)Guduchi,neem,amalaki, honey

Sephali swarasa (parijatakam) (B.R.jwara chikitsa)

Pippali fruit powder,madhu,Guduchi fresh stem swarasa 1:2:3 (B.R.jwara chikitsa)

Ativisa,karkatakasrngi,pippali,honey(A.H.U.2/57)

Kasyapa : avaleha by combination of old,husk free and well washed sashtika sali, mixed with oleagnious substance and salt.the powders of wheat and barley should be given.

Laakshadi Tailam : (A.H.U.2/54-56)
Abhyangam for child bestows strength, cures fever, vatahara.
Sringraadi ghrtam and yashtyaahwa ghritam - brhmana property.
Sthiradi ghrtam and brahmyaadi ghritam - brhmana and srotosodhana(A.H)

Yashtyaadi ghrtam - cures Emaciation.

Broad spectrum ousadha yoga for kasa (ARKD)- vyoshadi Kashayam (vyosha,amalaki,yasti,bharangi)

Aatarooshaka patraprayoga


Compound preparation
Agastya Rasayanam
Chyavanaprasam
Kushmanda Rasayanam
Vyaghri Haritaki rasayana
Vardhaman pippali
Agastya hareetaki Rasayanam
Chitaraka hareetaki
Narrasimha rasayana


Rajanyadi churnam - sarvaroga hara, jvara ,swasa etc...A.H.U.2/38-40

Pushkaradi Choornam - panchakasanut (B.R.Bala.71/75)

Khanadi Choornam - swasa,kasa(Y.R.52)

Lodhradi churnam - jvaraharam (Y.R.chi.60)

Pippali Choornam - kasa ,swasaharam (Sa.Sam.Mad 6/8)

Srngi Choornam - kasa,jwara(sha .sa.ma.6/43)

Haridradi Kashayam - jwarahara (B.R.33)

Kumarakalyanaka ghrtam - sarvbalaamayaharam (B.R.Bala.138-142)

Pippalyadi ghrtam - jeevaniya ghrtam siddham ( B.R.Bala 143-144

Rasnadi ghrtam - sarvarogaharam (A.H.U.3/51-52)

Aswagandha ghrtam - Bala vardhanam (YR B.Chi.84)

Vyaghrikusumadi avaleham -Y.R.B.Chi.65

Sivamodakam -B.R.Bala.71/105-111

Ardraka swarasa - swasa,kasa(Sha.sa.Ma1)




Dr Mohamad Saleem MD Ayurveda  is working as  Chief Ayurvedic Medical Consultant with more than 20 years of experince . His education qualification is MD Ayurveda in Kayachikitsa ( General Medicine ). 

Dr Mohamad Saleem Ayurvedic Consultaiton available @

Kadayanallur ( Main ) Al shifa Ayush hospital cell           9042225333
Chennai – Al shifa Ayush hospital cell                               9043336000
Tirunelveli - Al shifa Ayush hospital cell                             9042225999
Rajapalayam – Al Shifa ayush hospital cell                       9043336888
Theni Cell- Al Shifa Ayush hospital cell                               9047277577



#AyurvedicimmmuneBoost #குழந்தைகளின்நோய்எதிர்ப்புசக்தி #நோய்எதிர்ப்புசக்தி #Ayurvedicsectets #immune #increseimmune #immune #ayurvedaimmune #koumarabruthya #ayurvedicpediatrics #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும்  #ஆயுர்வேதமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம்  
#அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips  #bestayurvedadr #tipsintamilhealth 
#subscribeourchannelalshifayush 

Post Comment

செவ்வாய், மே 09, 2017

உங்கள் குழந்தைகள் விஷம் சாப்பிட நீங்கள் அனுமதிப்பீர்களா?

உங்கள் குழந்தைகள் விஷம் சாப்பிட நீங்கள் அனுமதிப்பீர்களா?

டாக்டர்.அ.முகமது சலீம்( cure sure).,BAMS.,M.Sc.,MBA


நமது குழந்தைகள் நமது வரங்கள். அவர்கள் நமது எதிர்கால கனவுகள் . அவர்கள் ஆரோக்கியம் நமது கடமை . ஆனால் அவர்கள் ஆசைபடுகிறார்கள் என்று கண்டதை வாங்கி கொடுத்து நாம் அவர்களது உடல் நலத்தை நாம் சிதைத்து விடுகிறோம் என்று நம்மில் எத்தனை நபர்களுக்கு தெரியும் ?


சுவைக்கு ,நிறத்திற்கு அடிமையாக்கும் அழகான பேக்கிங்கில் வரும் உணவுகளை கொஞ்சம் கூட யோசிக்காமல் உண்மை என நம்பி விஷம் தருகிறோம் என்று எத்தனை பெற்றோருக்கு தெரியும் ?


ஆசை பட்டதையெல்லாம் தின்ன கொடுப்பவர் நல்ல வேலைக்காரன் ..நல்ல பெற்றோர் எது உண்மையில் உடம்புக்கு நல்லது கெட்டது என்று தெளிந்து வாங்கி கொடுப்பார்கள். அப்படி எனில் நீங்கள் உங்கள் குழந்தைக்கு பெற்றோரா அல்லது வேலை காரரா ?


ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதத்தில் குழந்தைகளின் மருத்துவத்தில் - ஆஹார அன்ன விதிகளை என்னென்ன கோணத்தில் அணுகியிருக்கிறது என்பதை அறியும் போது பெரும் மலைப்பு வந்து நம்மை மெய்மறக்க வைக்கிறது.



இன்றோ காலத்தின் கட்டாயத்தால் மாறிப்போன உணவு முறைகளுக்கும், விளைவுகளுக்கு என்ன தீர்வு?
விளம்பரங்களை நம்பும் தாய்மார்கள் எப்படி வழி கெடுக்கப் படுகிறார்கள்?

·         குழந்தைகளின் வாயில் அகப்படும் விளையாட்டு சாதனங்களுக்கு ஆர்சனிக் காரீய பூச்சு  புற்று நோயை விளைவிக்கலாம்.

·         சைனா உணவுகளை ஆராய்ச்சியில் விளைவில் பல நோங்களை விளைவித்தாக நிரூபித்த பின்பும், அவசரகதியல் அதனை தடை விதித்தும் தொடரும் அவலங்கள்

·         அஜினோ மோட்டோ எனம் மூளையை மழுங்கடிக்கும் செரிமானத்தில்  கோளாறுகளை ஏற்படுத்தும் கடும் வேதிப்பொருள் அடங்கிய நூடுல்ஸ் எனும் மாயை.

·         மொற மொறப்புக்காக குர்குரே, லேஸ் எனும் சிப்ஸ் உணவுகளில் 2 லிருந்து 10 சதவீதம்  பிளாஸ்டிக்கும், பிளாஸ்ட்டிக்கின் மூலப் பொருள் கலந்துள்ளது யாருக்குத் தெரியும்?

·         பல சாக்லேட்டுகளில் உடலுக்கு ஊறு விளைவிக்கும் மிருக கொழுப்புகளும், சாக்கரின் எனும் செயற்கை சர்க்கரையும் Free Radicles எனும் கசடுகளும் கலந்து, குழந்தைகளுக்கு சர்க்கரை நோயையும், செரிமானத்தில் கோளாறுகளையும், ஹார்மோன்களின் அதிக சுரப்பையும் உண்டாக்கி Addictionsஎனும் பழக்கத்தை ஏற்படுத்துவது எத்தனை பெற்றோருக்குத் தெரியும்?

·         Soft Drinksஎனும் அரக்கனின் கையில் அகப்பட்ட குழந்தைகளின் நிலை அறிய கண்ணீர் வருகிறது. பெப்ஸி, கோகோகோலா போன்ற Soft Drinksஐ உங்கள் வீட்டு பாத்ரூம் கழுவிப் பாருங்கள் வெள்ளை வெளேராகிவிடும். வயிற்றில் நொதிப் பொருளில் பல வேதியியல் மாற்றங்களை உண்டு பண்ணும். உதாரணத்திற்கு வாயில் உள்ள டயலின் என்ஸைம், காரத்தன்மையிலிருந்து அமிலத் தன்மையாக மாறிவிடும் (Acidic)இ பெப்ஸின், ட்ரிப்ஸின் நீர்த்து விடும், ஹைட்ரோ குளோரிக் அமிலம் தனது PH அளவை குறைத்து காரத்தன்மையோடு மாறிவிடும். வயிற்றின் மேல், கீழ் மூடி (cardiac spincter, pyloric Antram)) இளகி, Acid Peptic Disorder, Reflux Gastritis எனும் பல வயிறுகள் பிரச்சனைகளை உண்டு செய்துவிடும். கிரெப்ஸ் Cycleஎனும் நிகழ்ச்சியில் மாறும் கொழுப்பை மாற்றி உடலை பெருக்கச் செய்கிறது. ஒன்பது ,பத்து வயது பெண்குழந்தைகள் 18 வயது பெண் போல் முதிர்ச்சி அடைந்து விடுகிறார்கள்.

·         சத்து மாவு என்ற பெயரா ல் பல சரக்குகள் தரமில்லாமல் பல சரக்கு கடைகளிலும், மெடிக்கலிலும் உலா வருகிறது. அதிலே பலர் சுவைக்காக கேசரி  தால் எனும் சிவப்பு நிற பருப்பு வகைகளையும் சேர்க்கின்றனர். அதன் மூலம் லித்தியம் விஷம் உண்டாகி கை, கால்களை முடமாக்கி விடும் அதிர்ச்சியும் உண்டு. முளைவிட்ட தானிங்கள் என்று சொல்லி பாதியில் முளைவிட வைத்தும் அரைகுறைய காய வைத்து பூஞ்சை  சேர்ந்துள்ளது தெரியாமலே  சேர்த்து விடுகிறார்கள். சோடியம் பென்சோவேட், பென்சாயிக் அமிலம் எனும் Preservatives. பல இயற்கை புரதங்களோடு சேரும் போது பல வியாதிகளை உண்டு பண்ணி விடும் என்பது ஆராய்ச்சியின் வரவு.

·         காய்கறிகள், கீரைகள் திராட்சை போன்ற பழவகைகளில் சுருட்டை பொடி போன்ற பலதரப்பட்ட பூச்சிக் கொல்லி மருத்துகளை கலந்து விடுகிறார்கள். அந்த பூச்சிக்  கொல்லி மருத்துகளை உப்புக்கலந்த வெந்நீரில்  கழுவது மூலமே சுத்தமாக்க முடியும் என்பது எத்தனை பெற்றோர்களுக்குத் தெரியும் ?

·         மெடிக்கலில் கிடைக்கும் பல சத்து மாவுகள், ப்ரோட்டின் பவுடர்களை குழந்தைகளுக்கு உண்ண கொடுப்பதன் மூலம், இயற்கையாக உணவுகளில் உள்ள புரதத்தினையும் Micro Element எனும் சத்துக்களையும் உறிஞ்சும் திறன் குறைந்து அதை கிரகிக்க உதவும் Receptors செயலிழந்து சத்துக்களே கழிவாகி நாசமாகும் என்பது எத்தனை பெற்றோh;களுக்கு தெரியும்?

·         ஹா..க்ஸ், பூ...ட், ,  போ...டா ,காம்...ளான்..போன்ற பல Health Drinkகம்பெனி நிறுவனங்கள், விளம்பர போட்டிகளில் கவனம் செலுத்துகிறதே, தவிர அதன் தரத்தை உயர்த்துவதாக தெரிய வில்லை. Retrospective Study  எனும் பின்னோக்கிய ஆராய்ச்சி முடிவுகளை வெளிவிட்டு மக்களை முட்டாளாக்கி  இதை விட்டால் சத்துக்கு வேறுவழியே இல்லை என்று விளம்பரப்படுத்தும் கம்பெனிகளின் ஒன்றின் தயாரிப்பின் விலை 500 கிராமுக்கு சராசாரியாக அதிகபட்ச விலை ரூ. 16 என்பது அதிர்ச்சி தகவல் இந்த ரூ. 16-க்கு என்ன சத்து இந்த காலத்தில் கொடுத்து விட முடியும். ஆனால் விற்கும் விலையோ ரூ. 250 க்கு மேலே .

·         செரிலேக் , நெஸ்டம் போன்ற உணவுகளில் பல நன்மைகள் இருந்தாலும் பவுடர் பாலில் உள்ள லேக்டிக் அமிலம் திரிந்து அசிடிக் அமிலமாக, லேக்டேடாக மாறி விடும். மேலும் கேசின் என்ஸைம் செயல்பட முடியாத நிலையாக மாறி பாலே அலர்ஜியாக மாறி விடும் என்ற நிலை இருக்கத்தானே செய்கிறது.
·

·         குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நொறுக்குத் தீனிகளையும் பலதடவை மாற்றாமல் பயன்படுத்திய பாமாயில் சுட்ட பலகாரங்களை கொடுத்துவிட்டு என் குழந்தை சாப்பிடவே மாட்டேங்குது என்ற சொல்லக்கூடிய பெற்றோர்களை என்ன சொல்ல?

·         மொத்தத்தில் நாம் அறிந்து வைத்திருப்பதில் பல தவறுகள் உள்ளது.

·         அறியாமல் செய்யும் தவறுகளும் மிக அதிகம்.

·         திருத்திக் கொள்ளாத உணரப்படாத தவறுகள் எண்ணற்றவை. இவைகளுக்கு தான் மேலே சொன்ன சில உதாரணம்.

ஆயுர்வேதம் சொல்லும் ஆஹார விதிகளை கடைபிடித்தால் நம்மையும் நம் செல்ல குழந்தைகளையும் நூறு ஆண்டுகள் வாழலாம், வாழ வைக்கலாம்

குழந்தைளின் ஆரோக்கியம் பேண ,மருந்தாய் உணவை கொடுக்காமல் –உணவாய் மருந்தை கொடுக்க ஆலோசனை பெற
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை      9043336000


Post Comment

வெள்ளி, ஏப்ரல் 28, 2017

குழந்தைகளுக்கான ஆயுர்வேத நோய் தடுப்பு திட்டம் -Ayurvedic Immunization Shedule


குழந்தைகளுக்கான ஆயுர்வேத நோய் தடுப்பு திட்டம் 

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர் .ஜீவா .,BAMS



இன்றைய கால கட்டத்தில் பிறந்த குழந்தை முதல் -குழந்தை பருவத்தில் பலவகையான தடுப்பூசி மற்றும் நோய் தடுப்பு மருந்துகளை கொடுத்து வருகிறோம்..கொள்ளை நோய்கள் உள்ள அந்த கால கட்டத்தில் பல வகையான நோய் தடுப்பு முறைகளை ஆயுர்வேத மருத்துவத்தில் -குழந்தை மருத்துவ பிரிவு செயல்படுத்தி உள்ளது என்பது ஆச்சர்யம் மட்டுமல்ல நிச்சயமான உண்மை .BCG என்ற தடுப்பு மருந்து காச நோய் தடுப்பு மருந்தாக எல்லாருக்கும் போடத்தான் செய்தாலும் -இன்னும் காச நோயை ஒழிக்க முடியவில்லை .,

ஆண்டி பயாடிக் இல்லாத அந்த கால கட்டத்தில் -Active immunity என்னும் தன்       நோய் எதிர்ப்பு ஆற்றலை ஆயுர்வேதம் பல வகைகளில் வளர்க்க செய்ய பல இயற்கையான மூலிகைகளை திட்டமிட்டு கொடுக்க சொல்கிறது .
         
5000 வருடங்களுக்கு முன்னால் ஆயுர்வேத ஆச்சார்யாக்களால் எழுதப்பட்ட ஆயுர்வேத பாரம்பரிய புத்தகமான ஆரோக்கிய கல்பத்ரும என்ற புத்தகத்தில் குழந்தை பிறந்த நாளிலிருந்து குழந்தையின் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காகவும் ஆரோக்யத்துடன் வளரவும் தேவையான உணவுமுறைள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

    இவ்வகை உணவுமுறை திட்டத்தினை நவீன நோய்த்தடுப்புத்திட்டம் (அ) நோய்த்தடுப்பு காலஅட்டவணை உடன் ஒப்பிடலாம்.

    குழந்தை பிறந்த நாளிலிருந்து 13 வயது வரை கொடுக்கப்பட வேண்டிய உணவு முறைகள் (ம) மூலிகைகள் பற்றி ப்ராகார யோக அத்யாயத்தில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

ப்ராகார யோகம் :-

      ப்ராகார யோகம் என்றால்- குழந்தையின் ஆரோக்கியத்தை பேணிகாக்கயும், நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிப்பதன் மூலம் நோய் வராமல் தடுபதற்காகவும் கொடுக்கப்படும் மூலிகைகளை பற்றிய மருத்துவ உருவாக்கம் ஆகும்.

       பிறந்த குழந்தைக்கான-ஆயுர்வேத நோய்தடுப்புத் திட்டம்

·         குழந்தை பிறந்த இரண்டாவது நாளிலிருந்து ஏழாம்நாள் வரை- வசம்பு+சிறு புல்லாடி (Desmodim trifolium) சாறினை மூன்று சொட்டு தினமும் உச்சந்தலையில் இட வேண்டும்.

     பயன்கள்-குழந்தையின் ஜீரணத்தன்மையும்,நோய் எதிர்ப்பு சத்தியும் வலுவடையும்.

·         15 நாட்களுக்கு பிறகு- வில்வத்தின் (பட்டை,காய்,பழம்,இலைகள்,வேர்) பஞ்சாங்கத்தோடு நெல்லிக்காய்ச் சாறு சேர்த்து ஒரு நாளைக்கு ஒரு கிராம் வீதம் 7 நாட்கள் கொடுக்க வேண்டும்.

·         ஒரு மாத வயது குழந்தைக்கு- கோரைக்கிழங்கு,பெருங்காயம்,வாயுவிடங்கம் (ம) பிரம்மி சாறு சேர்த்து தயாரிக்கப்பட்ட நெய்யினை கொடுக்க வேண்டும்.

·         மூன்று மாத குழந்தைக்கு- சுக்கு, மிளகு, திப்பிலி (ம) நன்னாரி சாரோடு வெண்ணெய் சேர்த்து 7 நாட்கள் கொடுக்கவேண்டும்.

·         ஆறு மாத குழந்தைக்கு- நிலப்பனை தண்டு சாற்றில் சுக்கு,மிளகு,திப்பிலி பொடியுடன் தேன் சேர்த்து 7 நாட்கள் கொடுக்க வேண்டும்.

·         ஒரு வயது குழந்தைக்கு:

கிழ்கண்ட மூலிகைகளை ஒவ்வெரு மாதமும் 7 நாட்கள் கொடுக்க வேண்டும்.

Ø  முதல் மாதம்-நெல்லிக்காய்+கோரைக்கிழங்கு+சுக்கு+மிலகு+திப்பிலியுடன் தேன் சேர்த்து கொடுக்க வேண்டும்

Ø  இரண்டவது மாதம்-நெல்லிக்காய் மற்றும் கோரைக்கிழங்குடன் வெண்ணெய் சேர்த்து கொடுக்க வேண்டும்

Ø  மூன்றாவது மாதம்-நெல்லிக்காய் மற்றும் கோரைக்கிழங்குடன் சக்கரை சேர்த்து வெந்நீரில் கொடுக்க வேண்டும்.

Ø  நான்காவது மாதம்-நெல்லிக்காய் மற்றும்  கோரைக்கிழங்கோடு சக்கரை மற்றும் தேன் சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø  ஐந்தாவது மாதம்-நெல்லிக்காய்,கோரைக்கிழங்கு மற்றும்  பஞ்சகோல (திப்பிலி, திப்பிலி மூலம்,ஆட்டி கொடுவேலி) பொடியோடு நெய் சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø  ஆறாவது மாதம்- நெல்லிக்காய் + கோரைக்கிழங்கு,சீரகம் மற்றும்  திப்பிலி பொடியுடன் தேன் சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø  எழாவது மாதம்- நெல்லிக்காய், கோரைக்கிழங்கு,சுக்கு, திப்பிலி மற்றும் மாதுளத்தோடு தயிருக்கு மேல் மிதக்கும் நீர் சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø  எட்டாவது மாதம்- நெல்லிக்காய், கோரைக்கிழங்கு,சுக்கு, திப்பிலி மூலம் மற்றும் குடஜ மூலிகையோடு நெய் சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø  ஒன்பதாவது மாதம்- நெல்லிக்காய், கோரைக்கிழங்கு, வாயுவிடங்கம் மற்றும் திப்பிலியோடு நெய் சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø  பத்தாவது மாதம்- நெல்லிக்காய்,கோரைக்கிழங்கு,சீரகம்,சுக்கு, மிலகு மற்றும் திப்பிலியோடு சர்க்கரை சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø  பதினொன்றாவது மாதம்- நெல்லிக்காய் மற்றும்  கோரைக்கிழங்கோடு ஆட்டுபால் சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø  12-வது மாதம்- நெல், கோரைக்கிழங்கோடு, சக்கரை (ம) சீரகப்பொடியோடு மாட்டுப்பால் சேர்த்து கொடுக்க வேண்டும்.





   மூன்று வயது குழந்தைக்கு:

o   கீழ்க்காணும் மூலிகைகளை ஒரு மாதத்திற்கு ஏழு நாட்கள் கொடுக்க      வேண்டும்.

o   அனைத்து மருந்துகளையும் சம அளவு நெய் (ம) சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

o   உட்கொள்ளும் அளவு:

மருத்துகள் - 3 கிராம்
நெய்       - 3 கிராம்
சக்கரை    - 3 கிராம்

Ø  முதல் மாதம் – சீந்தில் கொடி, திப்பிலி,வசம்பு.

Ø  இரண்டாவது மாதம்- சுக்கு,திப்பிலி,வசம்பு,பதுமுகம்,இந்துப்பு (ம) கடுக்காய்.

Ø  முன்றாவது மாதம்- வாயுவிடங்கம், கோரைக்கிழங்கு,ஏலக்காய்,வசம்பு,இஞ்சி,சுக்கு,திப்பிலி.

Ø  நான்காவது மாதம்: நன்னாரி,சுக்கு,மிலகு,திப்பிலி, வசம்பு,சீரகம்,மாசிக்காய்.

Ø  ஐந்தாவது மாதம்: மாதுளம், கோரைக்கிழங்கு, வசம்பு, கொத்தமல்லி, திப்பிலி.

Ø  ஆறாவது மாதம்: மூக்கிரட்டை,நிலவேம்பு,வசம்பு, நால்பாமரம்.

Ø  ஏழாவது மாதம்: மாஷபர்னி (காட்டுலூன்னு), கோரைக்கிழங்கு,கோவை செடியின் வேர்,காட்டுமுத்திரா, திப்பிலி (ம) வசம்பு.

Ø  எட்டாவது மாதம்: தும்பி, கோரைக்கிழங்கு,வசம்பு,பரசம்பட்டை
.
Ø  ஒன்பதாவது மாதம்: பிரம்மி, கோரைக்கிழங்கு,வசம்பு,குடஜம் (ம) திப்பிலி.

Ø  பத்தாவது மாதம்: மாலதிபுஷ்பம், வசம்பு,சீரகம்.

Ø  பதினொன்றாவது மாதம்: வன்னி இலை,சீரகம், கொடுவேலி,வசம்பு,(ம)திப்பிலி

Ø  பனிரெண்டாவது மாதம்: கோரைக்கிழங்கு, சுக்கு,மிலகு,திப்பிலி,மாதுளம்,நெல்லிக்காய், வாயுவிடங்கம்,     தாளிசபத்ரம்,கொடுவேலி,கடுக்காய்,செந்தாமரை,வசம்பு.


·         ஐந்து வயது குழந்தை:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூலிகைகளில் வசம்பிற்கு பதில் கொட்டம் சேர்த்து கொடுக்க வேண்டும்.

·         எட்டு வயது குழந்தை:

ஐந்து வயதில் குழந்தைக்கு கொடுக்கப்படும் மூலிகைகளின்        பொடியோடு விஷ்னுகிரந்தி மூலிகை வேர்,நெய் (ம) தேன் சேர்த்து கொடுக்க வேண்டும்.

·         பத்து வயது குழந்தைக்கு:

கீழ்க்காணும் மூலிகைகளை சேர்த்து தயாரிக்கப்பட்ட நெய்யினை ஒவ்வொரு மாதமும் ஏழு நாட்கள் கொடுக்க வேண்டும்.
அளவு- 10 கிராம்.

Ø  முதல் மாதம் – கடுக்காய்,சுக்கு,மிலகு, திப்பிலி,இந்துப்பு,வசம்பு,தாளிசபத்ரம்,பிரம்மி.

Ø  இரண்டாவது மாதம் – சீரகம், சுக்கு,மிளகு, திப்பிலி,இந்துப்பு,வசம்பு, கோரைக்கிழங்கு (ம) கொட்டம் ஆகியவற்றை புளிவஞ்சி சாறுடன் சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø  நான்காவது மாதம் – ஜீவனிய மூலிகைகளை கோரைக்கிழங்கு,கொடுவேலி,திப்பிலி, ஆகியவற்றை ஆட்டுபாலுடன் சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø  ஐந்தாவது மாதம் – திராட்சை, மூக்கிரட்டை, வட்டதிருப்பி,கோரைக் கிழங்கு,ஹபுஷமூலம்(JUNIPERUS COMMUNIS-இசுவத்சி),கட்பலம் மற்றும் மாதுளையோடு ஆட்டுபால் சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø  ஆறாவது மாதம்- சாரிவாதி க்ருதத்தை (நன்னாரி, கோரைக்கிழங்கு,வெட்டிவேர், சுக்கு,மிலகு, திப்பிலி,தேவதாரு,சீரகம்) ஆட்டுபால் சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø  ஏழாவது மாதம்- நாகராதி க்ருதத்தை (சுக்கு,நெல்லிக்காய்,கண்டங்கத்திரி,குடஜம், கோரைக்கிழங்கு,வில்வத்தின் பஞ்சாங்கம்) நீரில் சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø  எட்டாவது மாதம்- பிப்பலியாதி க்ருதத்தோடு (திப்பிலி,குடஜம்,இந்திரயவா,திராட்சை, சுண்டைக்காய்,கண்டகத்திரி,திக்த,தும்பை,ஓமம்,தூதுவேளை,மாதுளம்,கோரைக்ககிழங்கு,வட்டத்திருப்பி,வசம்பு,முருங்கை,பெருங்காயம்,மூக்கிரட்டை,வில்வ வேர் ,தாமரை, வாயுவிடங்கம்,நெல்லிக்காய்) தயிருக்கு மேல் மிதக்கும் நீரினை சேர்த்து தயாரித்த பின்பு ஜீரகம் (ம) கற்கண்டு சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø   ஒன்பதாவது மாதம்-வில்வாதி க்ருதத்தோடு                  ( கஸாயம் பொருட்கள்-வில்வம்,ஓமம்,கருநொச்சி,திப்பிலி, கோரைக்கிழங்கு,மாதுளம்,கல்கப் பொருட்கள்,சுக்கு,மிலகு,  திப்பிலி,ஏலக்காய்,கொடுவேலி,வாயுவிடங்கம்)சமஅளவு பால் சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø  மாற்று முறைகள்-1: சுக்கு, மிளகு, திப்பிலி,ஏலக்காய்,கொடுவேலி, வாயுவிடங்கம்,வட்டத்திருப்பி,தும்பை, கோரைக்கிழங்கோடு தயிருக்கு மேல் மிதக்கும் நீரினை சேர்த்து தயாரிக்கப்பட்ட நெய்யினை கொடுக்க வேண்டும்.

Ø  மாற்று முறைகள் 2:-வட்டத்திருப்பி,தும்பை,கோரைக்கிழங்கோடு தயிருக்கு மேல் மிதக்கும் நீர் சேர்த்து தயாரிக்கப்பட்ட நெய்யினை கொடுக்க வேண்டும்.

Ø  பத்தாவது மாதம் :-

Ø  திராயமான க்ருதத்தோடு (கஷாய பொருள்கள்-கமந்திரை,பிரம்மி,குடஜம்,கோரைக்கிழங்கு,திப்பிலி;கல்க பொருள்கள்-அதிவிடயம்,கோரைக்கிழங்கு,குடஜம்,நிலவேம்பு).

Ø  பதினொன்றாவது மாதம் :-

Ø  தாடிமாதி க்ருதத்தோடு  (கஷாய பொருள்கள்-மாதுளம்,நெல்லிக்காய்,கடுக்காய்,தாண்ரிக்காய்,வாயுவிடங்கம்,திப்பலி,கொடுவேலி,ஜீவந்தி சாறு) சம அளவு தயிருக்கு மேல் மிதக்கும் நீர் சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø  பனிரெண்டாவது மாதம் :-

   வட்டத்திருப்பி,குடஜம்,நிலவேம்பு,கொத்தமல்லி ஆகிய கஷாய பொருள்களும்;வாயுவிடங்கம்,பரசுப்பட்டை,மஞ்சள்,மரமஞ்சள், மூக்கிரட்டை,சுக்கு,மிளகு,திப்பிலி,ஓமம்,துராலபா,அதிமதுரம் ஆகிய  கல்கப் பொருள்கள் அனைத்தும் சேர்த்து தயாரிக்கப்பட்ட நெய்யுடன் தேன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.

·         பதிமூன்று வயதில்:

Ø  முதல் மாதம் – அருகம்புல் (ம) வசம்புடன் சர்க்கரை,தேன் (ம) நெய் சேர்த்து கொடுக்க வேண்டும்.

Ø இரண்டாவது மாதம் – பிரம்மி, வல்லாரை,சமீ வல்கலம்,நெல்லிக்காய்,பன்னுபிலங்கு,பலா,பிரண்டை,கா,ர்போக்கி,நிலவேம்பு,நன்னாரி

மற்ற மாதங்கள் மேலே சொன்னது போலே .



இந்த மருத்துவ மூலிகைகள் கிடைக்க வில்லை என்றால் அதற்கும் பல வகையான திட்டங்களை ஆயுர்வேத சிகிச்சை சொல்கிறது அதை பற்றி அடுத்த சில கட்டுரைகளில் பார்க்கலாம் .

குழந்தைகளின் அறிவு ஆற்றல் ,நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகம் பெற -ஆரோக்ய குழந்தையாக உங்கள் குழந்தையை வளர்க்க -ஆலோசனை மற்றும்  சிகிச்சைக்கு அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை -
கடையநல்லூர் 9042225333
ராஜாளையம்  90 4333 6888
திருநெல்வேலி 90 4222 5999
சென்னை  90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை )

Post Comment