low back pain லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
low back pain லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், பிப்ரவரி 17, 2026

பைக்குக்கு ஸ்பீடு ஓகே... உங்க முதுகுத்தண்டுக்கு?

  பைக்குக்கு ஸ்பீடு ஓகே... உங்க முதுகுத்தண்டுக்கு?

இன்றைய வேகமான உலகில், நாம் அனைவருமே ஏதோ ஒரு இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். சாலையில் செல்லும் போது நம்முடைய வாகனத்தின் வேகம் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் நம் உடலின் ஆரோக்கியம். 

வேகம் தரும் ஆபத்து

உங்கள் பைக்கின் ஸ்பீடோமீட்டரில் 120 கி.மீ வேகம் காட்டினால், நீங்கள் அதே வேகத்தில் செல்ல வேண்டும் என்று அவசியமில்லை. வண்டியைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் நாம், நம் உடலின் அச்சாணியான முதுகுத்தண்டைப் பற்றிச் சிந்திப்பதே இல்லை.

முதுகுத்தண்டு ஏன் பாதிக்கப்படுகிறது?

நமது இயல்புக்கும் ஆற்றலுக்கும் (Energy) மீறி, மிக வேகமாகவோ அல்லது அதிகப்படியான உழைப்பையோ கொடுக்கும்போது நமது உடல் சமநிலையை இழக்கிறது. இதனால்:

  • முதுகுத்தண்டு எலும்புகள் பலவீனமடைகின்றன.
  • எலும்புகளுக்கு இடையே உள்ள ஜவுகள் (Discs) பாதிப்புக்குள்ளாகின்றன.
  • தண்டுவட நரம்புகள் அழுத்தப்பட்டு பெரும் வலியை உண்டாக்குகின்றன.

ஆயுர்வேதம் கூறுவது படி, நீங்கள் நிதானமாகவும் சமநிலையோடும் (Balance) இருந்தால் மட்டுமே நோய் நிலையிலிருந்து முழுமையாக வெளிவர முடியும். "அவசரக்காரனுக்கு புத்தி மட்டு" என்பார்கள், ஆனால் இன்றைய சூழலில் "அவசரக்காரனுக்கு முதுகுத்தண்டு மட்டு" என்பதே நிதர்சனம்.

https://www.youtube.com/shorts/YPWj2wyMO9k


கடமைகள் ஆயிரம் இருந்தாலும், ஆரோக்கியமான உடல் இருந்தால் மட்டுமே அவற்றைச் சிறப்பாகச் செய்ய முடியும். எனவே, பயணத்திலும் உழைப்பிலும் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். முதுகுத்தண்டைக் காப்போம், நலமுடன் வாழ்வோம்!

 #SpineHealth #BackPainAwareness #SafeRiding #TamilHealthBlog #SpineCare #AyurvedaLife #HealthyLifestyle #BikeSafety #முதுகுத்தண்டுஆரோக்கியம் #நிதானம்பிரதானம்


Post Comment

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026

யோகாசனம் செய்வதால் முதுகு வலி ஏற்படுமா? - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!

யோகாசனம் செய்வதால் முதுகு வலி ஏற்படுமா? - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!

பலர் தங்களது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், குறிப்பாக முதுகு வலியில் இருந்து நிவாரணம் பெறவும் யோகாசனங்களை நாடுகிறார்கள். ஆனால், "ஆசனம் செய்வதால் முதுகு வலி வருமா?" என்ற சந்தேகம் பலருக்கு எழுகிறது. 

ஆசனம் செய்வதால் வலி ஏற்பட வாய்ப்புள்ளதா?

பொதுவாக, யோகாசனங்கள் முதுகெலும்பை வலுப்படுத்தவும், அதன் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கவுமே வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஒரு சில சூழ்நிலைகளில் இது முதுகு வலியை ஏற்படுத்தலாம்:

  • தவறான நிலை (Incorrect Posture): ஆசனங்களைச் செய்யும்போது உடலின் நிலையை சரியாக வைக்கவில்லை என்றால், அது தசைநார்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
  • அதிகப்படியான முயற்சி: உங்கள் உடலின் எல்லைக்கு மீறி அல்லது போதுமான பயிற்சியின்றி கடினமான ஆசனங்களைச் செய்ய முயற்சிப்பது காயங்களுக்கு வழிவகுக்கும்.

  1. வார்ம்-அப் (Warm-up) அவசியம்: ஆசனங்களைச் செய்யத் தொடங்கும் முன், உடலைத் தயார்படுத்தும் எளிய பயிற்சிகளைச் செய்வது காயங்களைத் தவிர்க்க உதவும்.
  2. தகுந்த வழிகாட்டுதல்: ஆரம்பக்கட்டத்தில் ஒரு தகுதியான யோகா ஆசிரியரின் கண்காணிப்பில் பயில்வது சிறந்தது. இது தவறான நிலைகளைத் தவிர்க்க உதவும்.
  3. உடலின் குரலுக்குச் செவிசாய்த்தல்: ஆசனம் செய்யும்போது லேசான தசை இழுப்பைத் தாண்டி, கூர்மையான அல்லது தாங்க முடியாத வலி ஏற்பட்டால், உடனடியாக அந்தப் பயிற்சியை நிறுத்திவிட வேண்டும்.
  4. முதுகுத்தண்டு ஆரோக்கியம்: ஏற்கனவே முதுகுத்தண்டில் தீவிரமான பாதிப்புகள் (Herniated disc போன்றவை) இருப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனையின்றி ஆசனங்களைச் செய்யக்கூடாது.

https://www.youtube.com/shorts/n6izq1pub68

முறையாகவும், கவனமாகவும் செய்யப்படும் யோகாசனங்கள் முதுகு வலியைத் தருவதில்லை; மாறாக, அவை உங்கள் முதுகெலும்பிற்குப் புத்துயிர் அளிக்கின்றன. எனவே, சரியான நுட்பங்களைக் கற்றுக்கொண்டு ஆரோக்கியமான வாழ்வைப் பெறுங்கள்!

#முதுகுவலி #யோகாசனம் #ஆரோக்கியம் #யோகா #SpineHealth #YogaTamil #BackPainRelief #HealthTipsTamil #SpineAyush


Post Comment

வெள்ளி, பிப்ரவரி 06, 2026

Trigger Points தவிர்த்தால் வலி போய்விடுமா?

Trigger Points தவிர்த்தால் வலி போய்விடுமா?

 இது ஒரு பெரிய தவறான புரிதல்

இன்றைய காலத்தில் “Trigger points தான் எல்லா வலிக்கும் காரணம்” என்ற ஒரு நம்பிக்கை பலரிடம் உருவாகியுள்ளது. அதனால் என்ன நடக்கிறது?

“எதைச் செய்தால் வலி வருதோ, அதைச் செய்யாம இருந்தால் வலி இல்லைய  -அப்படின்னா நோய் சரியாகிடுச்சு” என்று பலர் நினைக்கிறார்கள்.

இதுதான் மிகப் பெரிய தவறு.


Trigger Points என்றால் என்ன?

Trigger points என்பவை:

  • தசைகளில் உருவாகும் அதிக உணர்திறன் கொண்ட புள்ளிகள்

  • அழுத்தினால் வலி தரும்

  • சில சமயம் அந்த இடத்தைத் தாண்டி வேறு இடத்துக்கும் வலி அனுப்பும்

Trigger point என்பது ஒரு “வலியின் வெளிப்பாடு” (symptom) முழு நோயின் மூலகாரணம் அல்ல


Trigger points தான் வலிக்கு காரணம் என்று நினைப்பது ஏன் தவறு?

ஒரு விஷயத்தை கவனியுங்கள் 

  • வெயிலில் போனால் தலைவலி வருகிறது

  • Periods நேரத்தில் வயிற்று வலி வருகிறது

  • நீண்ட நேரம் நின்றால் கால் வலி வருகிறது

  • ஒரே posture-ல் உட்கார்ந்தால் கழுத்து வலி வருகிறது

 இவையெல்லாம் trigger situations ஆனால்…

 “வெயிலுக்கு போகலனா, periods இல்லனா, நின்னா இல்லனா - நோய் குணமாகிடுமா?” இல்லை.

 Trigger points உருவாகக் காரணமான முக்கிய காரணங்கள்

Trigger points தானாக உருவாகவில்லை.
அதற்குப் பின்னால் பல அடிப்படை காரணங்கள் இருக்கலாம் 

1️⃣ Poor Posture (தவறான உட்காரும்/நிற்கும் முறை)

  • நீண்ட நேரம் mobile, laptop

  • முன்னால் சாய்ந்து உட்காருவது
    ➡️ தசைகளில் overload → trigger points

2️⃣ Muscle Strain & Overuse

  • ஒரே வேலை, ஒரே இயக்கம்

  • ஓய்வு இல்லாமல் வேலை
    ➡️ muscle fatigue → trigger points

3️⃣ Hormonal Changes

(Periods அப்ப வரும் வலி)

Periods நேரத்தில்:

  • Estrogen, Progesterone மாற்றங்கள்

  • Pain sensitivity அதிகரிப்பு
    ➡️ trigger points activate ஆகும்
    ❗ ஆனால் hormone imbalance தான் மூலகாரணம்

4️⃣ Stress (மன அழுத்தம்)

  • Stress → muscle tightening

  • Tight muscle → poor circulation
    ➡️ trigger points உருவாகும்

 அதனால் - மனம் சீராக இல்லையென்றால், உடல் வலி தொடர்ந்து வரும்


Trigger points-ஐ மட்டும் தவிர்த்தால் வலி போய்விடுமா?

இல்லை.

Trigger points-ஐ:

  • massage செய்தால்

  • stretch செய்தால்

  • avoid செய்தால்

தற்காலிக relief கிடைக்கலாம் ஆனால் நோய் முழுமையாக சரியாகாது ஏன்?

ஏனென்றால்
Trigger point என்பது “fire alarm” மாதிரி
அது ஒலிக்கிறது
ஆனால் தீ வேற இடத்தில் இருக்கலாம்


அடிப்படை மூலகாரணம் (Root Cause) என்ன?

Trigger points தோன்றுவதற்குப் பின்னால் இருக்கக்கூடிய மூலகாரணங்கள்:

  • Poor biomechanics

  • Hormonal imbalance

  • Chronic stress

  • Poor sleep

  • Nutritional deficiency

  • Gut health issues

  • Vata imbalance (Ayurveda)

இந்த மூலகாரணம் சரியாகாமல் trigger points மட்டும் கவனித்தால் வலி திரும்பத் திரும்ப வரும்.

ஆயுர்வேத பார்வை – மிக முக்கியம்

ஆயுர்வேதம் தெளிவாக சொல்கிறது:

“Vata prakopa eva vedana kāraṇam” வாதம் சீர்கெட்டால் தான் வலி தோன்றும்.

Trigger points என்பது: வாதம் வெளிப்படும் ஒரு இடம்

ஆனால்:

  • வாதத்தை உருவாக்கிய காரணம்

  • வாழ்க்கை முறை

  • உணவு

  • மனநிலை

 இவைகளை சரிசெய்யாமல் ஒரு புள்ளியை மட்டும் சரிசெய்தால் நோய் முழுமையாக போகாது.

சரியான அணுகுமுறை என்ன?

 Trigger points-ஐ treat செய்ய வேண்டும் - அதே நேரத்தில் root cause-ஐ கண்டுபிடிக்க வேண்டும்

Posture correction- Stress management - Hormonal balance -Sleep correction -Diet correction -Vata balancing therapies

https://www.youtube.com/shorts/TyFR_wUeyfA


“Trigger points தவிர்த்தால் வலி போய்விடும்” என்பது தவறான நம்பிக்கை. Trigger points என்பது உடல் சொல்லும் எச்சரிக்கை மணி. அந்த மணி ஏன் ஒலிக்கிறது என்பதை புரிந்து சரி செய்தால் தான் நிலையான வலி நிவாரணம் கிடைக்கும்.  “வலியைத் தவிர்ப்பது – தீர்வு அல்லவலிக்கான காரணத்தைச் சரிசெய்வதே தீர்வு.”

#TriggerPointsTamil
#MusclePainTamil
#ChronicPainAwareness
#AyurvedaPainManagement
#RootCauseHealing
#VataDosha
#PainIsASignal
#SpineAyush

Post Comment

புதன், ஜனவரி 28, 2026

உங்கள் கால்கள் சமமாக இல்லையா? இடுப்பு வலிக்கு இதுதான் காரணமா?

உங்கள் கால்கள் சமமாக இல்லையா? இடுப்பு வலிக்கு இதுதான் காரணமா?

 நீங்கள் நடக்கும்போது ஒரு பக்கம் சாய்வது போல உணர்கிறீர்களா? அல்லது உங்கள் கால் சட்டையின் ஒரு பக்கம் மட்டும் தரையில் உராய்ந்து சீக்கிரம் தேய்கிறதா? இது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல; இது 'Functional Leg Length Difference' எனப்படும் கால் நீள வேறுபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்!

 ரமேஷ் ஒரு மென்பொருள் பொறியாளர். கடந்த சில மாதங்களாக அவருக்கு லேசான இடுப்பு வலி இருந்தது. ஒரு நாள் கண்ணாடி முன் நின்று கவனித்தபோது, அவர் இடுப்பு ஒரு பக்கம் சற்று உயர்ந்து காணப்படுவதையும், ஒரு கால் மற்றொன்றை விட நீளமாகத் தெரிவதையும் கண்டார். எலும்பு உடைந்திருக்குமோ என்று பயந்த அவருக்கு, உடற்பயிற்சி நிபுணர்கள் அளித்த விளக்கம் ஆச்சரியத்தை அளித்தது. இது எலும்புப் பிரச்சனையால் அல்ல, மாறாக அவரது தசைகளின் சமநிலையற்ற தன்மையால் ஏற்பட்ட மாற்றம் என்று தெரியவந்தது.

 இந்த வகை கால் நீள வேறுபாடு ஏற்படுவதற்கு நம் உடலின் தண்டுவடம் ஒரு பக்கம் சாய்வது (spine tilting) மற்றும் இடுப்பு எலும்பு சாய்வது (pelvic tilting) முக்கிய காரணங்களாகும். இதை சரிசெய்ய, நம் உடலின் மையத் தசைகளை (core muscles) வலுப்படுத்தும் பயிற்சிகள் அவசியமானவை. முறையான பயிற்சிகள் மூலம் தண்டுவடம் மற்றும் இடுப்புப் பகுதியைச் சீரமைப்பதன் மூலம் இந்த 'Functional leg length difference' பாதிப்பைச் சரிசெய்ய முடியும்.

  • Structural vs Functional: எலும்பு வளர்ச்சியிலேயே குறைபாடு இருந்தால் அது 'Structural LLD'. ஆனால் தசை இறுக்கத்தால் தோன்றுவது 'Functional LLD'.
  • பயிற்சிகள்: 'Plank' பயிற்சிகள் மற்றும் இடுப்புப் பகுதியை நீட்டிக்கும் (Stretching) பயிற்சிகள் இதற்கு நல்ல பலனைத் தரும்.
  • காலணிகள்: தவறான காலணிகள் அணிவதும் இடுப்புச் சரிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். 

https://www.youtube.com/shorts/s6AbWEMlG5M

உங்கள் உடல் அமைப்பில் சிறிய மாற்றத்தைக் கவனித்தாலும், அதை அலட்சியப்படுத்தாமல் ஆரம்பத்திலேயே தகுந்த பயிற்சிகள் மூலம் சரி செய்வது பிற்காலத்தில் வரும் தீவிர முதுகுவலியைத் தவிர்க்க உதவும்.

Hashtags: #LegLengthDifference #SpineAyush #TamilHealthTips #BackPainTamil #CoreExercises #Physiotherapy #PelvicTilt #SpineHealth #உடல்நலம் #தமிழ்மருத்துவம் #TamilHealth #IdaPingalaSushumna #Pranayama BackPainRelief #NeckPain #YogaForSpine #UpperBerth #SpineHealth #HealthyTravel # HealthWellness #lowbackpaintamil #neckpaintamil #spinetamil #drsaleem #ayurshtamil #ayurvedrountine #tamilhealttips #alshifaayush #alshifaspineayush #dincharya #paintamil #bestdr #ayurveddrneearme  #doctornearme #panchakaram #kadyanallur #viralcontent #blogtamil #digitalhealth #onlineayurveda #panchakarma #treatmentayurveda #rejuvination #rasyanam  #officetamil #ayurvedaworld  #ayuzee   #sciatica #grudrasi #gridrasi #legs #legsdifferent 


Post Comment

செவ்வாய், ஜனவரி 27, 2026

சயாடிகா (Sciatica) -வலி எந்த வகையில் எல்லாம் தெரியும் என்று உங்களுக்கு தெரியுமா ?

சயாடிகா (Sciatica) -வலி எந்த வகையில் எல்லாம் தெரியும் என்று உங்களுக்கு தெரியுமா ? 

சயாடிகா (Sciatica): 

 உங்கள் இடுப்பிலிருந்து கால் வரை ஒருவிதமான வலியோ அல்லது மரத்துப்போன உணர்வோ இருக்கிறதா? அது சாதாரண தசைப்பிடிப்பு என்று நினைத்து அலட்சியப்படுத்தாதீர்கள், அது சயாடிகாவாக இருக்கலாம்!


பலரும் முதுகு வலியைச் சரியாகக் கண்டறியாமல் தங்களுக்குச் சயாடிகா இருப்பதாகத் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். இடுப்பிலிருந்து கால் வரை வலி இறங்குவது மட்டுமே சயாடிகா கிடையாது. நம் உடலில் L4, L5, S1, S2, S3 ஆகிய ஐந்து நரம்புகளும் சேர்ந்து உருவாகும் ஒரு பெரிய நரம்புதான் சயாடிகா நரம்பு.


சயாடிகாவின் அறிகுறிகள் எப்படி இருக்கும்? வலி என்பது மட்டும் இதன் அறிகுறி அல்ல. நரம்பு அழுத்தம் எந்தப் பகுதியில் இருக்கிறதோ அதைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடும்:


  • நரம்பு அழுத்தம் L4, L5 பகுதியில் இருந்தால் வலியானது காலின் உட்புறத்தில் தெரியலாம்.
  • சிலருக்குக் கால்கள் மற்றும் பாதங்கள் மரத்துப்போதல் (Numbness) அல்லது உணர்வற்றுப் போதல் ஏற்படலாம்.
  • பாதங்களில் ஊசி குத்துவது போன்ற உணர்வு (Tingling sensation) இருக்கலாம்.
  • சிலருக்கு வலி சீராக இல்லாமல் ஆங்காங்கே விட்டு விட்டு (Patchy pain) கூடத் தெரியலாம்.

தவறான சிகிச்சைகளைத் தவிர்க்கவும்: சயாடிகா வலி வந்தவுடன் பலரும் செய்யும் தவறு, வெறும் சத்து மாத்திரைகளையோ அல்லது வைட்டமின் E மாத்திரைகளையோ எடுத்துக் கொள்வதுதான்; இது எந்தப் பலனையும் தராது. அதேபோல், முறையான மருத்துவ ஆலோசனை இன்றி வெறும் ஸ்ட்ரெச்சிங் (Stretching) பயிற்சிகள் மட்டும் செய்வதால் நரம்பு அழுத்தத்தைக் குறைக்க முடியாது.


சயாடிகாவை வெறும் தசை வலியாகவோ அல்லது 'பைரிபார்மிஸ் சின்ட்ரோம்' (Piriformis Syndrome) என்று நினைத்துக் குழப்பிக் கொள்ளாமல், சரியான நரம்பியல் சார்ந்த சிகிச்சைகளைப் பெறுவது அவசியம்.


ஆயுர்வேதத்தில் தீர்வு உண்டா? ஆயுர்வேத மருத்துவ முறையில் சயாடிகாவை 'கிரித்ரசி' (Gridhrasi) என்று அழைக்கிறோம். இதில் இரண்டு வகைகள் உள்ளன. முறையான பரிசோதனை மற்றும் சரியான சிகிச்சைகளை மேற்கொள்வதன் மூலம் சயாடிகா பாதிப்பிலிருந்து மிக எளிதாக மீண்டு வர முடியும். சயாடிகா என்பது முற்றிலும் குணப்படுத்தக்கூடிய (Treatable) ஒன்றுதான்.

https://www.youtube.com/shorts/xPO1Q9sgAVU


 #Sciatica #BackPain #Ayurveda #Gridhrasi #HealthTips #TamilHealth #NervePain #SpineCare #ஆயுர்வேதம் #சயாடிகா #முதுகுவலி #ஆரோக்கியம் SpineAyush #TamilHealth #IdaPingalaSushumna #Pranayama BackPainRelief #NeckPain #YogaForSpine #UpperBerth #SpineHealth #HealthyTravel # HealthWellness #lowbackpaintamil #neckpaintamil #spinetamil #drsaleem #ayurshtamil #ayurvedrountine #tamilhealttips #alshifaayush #alshifaspineayush #dincharya #paintamil #bestdr #ayurveddrneearme  #doctornearme #panchakaram #kadyanallur #viralcontent #blogtamil #digitalhealth #onlineayurveda #panchakarma #treatmentayurveda #rejuvination #rasyanam  #officetamil #ayurvedaworld  #ayuzee   #sciatica #grudrasi #gridrasi 



Post Comment