குதி வலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குதி வலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஏப்ரல் 21, 2021

எந்த சிகிச்சைக்கும் பாத வலிக்கு தீர்வு கிடைக்கவில்லையா?முற்றிலும் மாறுபட...


எந்த சிகிச்சைக்கும் பாத வலிக்கு தீர்வு கிடைக்கவில்லையா??

 

நிரந்திர தீர்வு - குதிகால் வலிக்கு எளிமையான சிகிச்சை

 

முற்றிலும் மாறுபட்ட எளிய சிகிச்சையில் தீர்வு

 

ஆயுர்வேத சிகிச்சை முறைப்படி உள்ள இஷ்டிகா ஸ்வேதனம் ..

செங்கலை பயன்படுத்தி முற்றிலும் மாறுபட்ட முறையில் தீர்வு ..

 

வீட்டு மருத்துவம் -  கவனத்துடன் செய்ய வேண்டியவை.

 

1. செங்கல் - 1

2. அரிசி கழுகிய நீர் - 2000 - 3000ml

3. எண்ணெய் / தைலம் - 25 ml (abhyangam / massage)

 

Calcaneal spur / கால்சியம் சத்து கூடுதலாக சேரும் போது வருவது - இளம் வயதினர் முதல் முதியவர் வரை காணப்படுவது

2. Plantar fascitis- சிறியவர் முதல் எந்த வயதினருக்கும் காணக்கூடியது.

 

Facebook id https://www.facebook.com/drsaleem.ayush​

Facebook page link https://www.facebook.com/Dr-Mohamad-S...

​ Facebook  Group Link https://www.facebook.com/groups/22238...​

youtube channel link https://m.youtube.com/channel/UCOzuUA...​

 Instagram link https://instagram.com/drsaleemayush?i...​

Twitter link https://twitter.com/AyushDrsaleem​

Telegram link to join https://t.me/joinchat/MWLLycY3uuEzMTdl

 

ஆரோக்கியமும் ஆயுர்வேதமும்

 ஆயுர்வேத மருத்துவம்

 சித்த மருத்துவம்

ஆயூஷ் மருத்துவம்

ஹோமியோபதி மருத்துவம் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை#Ayurveda, #Ayush #Alshifaayush #curesure4u #curesure

 

#டாக்டர்_முகமது_சலீம்_MD_Ayurveda

#அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை

#curesure4u #curesure #Alshifaayush #AlShifaayushforall #Dr_mohamad_saleem_MD_Ayurveda #அல்ஷிபா

#அல்ஷிபாஆயுஷ்  #மருத்துவம்  #உணவேமருந்து

#குதிகால்வலி

 


Post Comment

சனி, ஏப்ரல் 17, 2021

குதிகால் வலியை நூற்றுக்கு நூறு குணமாக்கும் ஆயுர்வேதம் -ஆதாரபூர்வமானது - ...


குதிகால் வலியை நூற்றுக்கு நூறு குணமாக்கும் ஆயுர்வேதம் -ஆதாரபூர்வமானது

 

எந்த சிகிச்சைக்கும் உங்களது குதி கால் வலி குறைய வில்லையா ?

MCR  செருப்பு போட்ட பின்னும் எந்த மாற்றம் இல்லையா ?

உங்களது அனைத்து சிகிச்சைகளும் பலன் தர வில்லையா ?

காலையில் எழுந்ததும் நடக்க அவதிப்படுபவரா?

 

வாதகண்டகம் (அ) குதிங்கால் வலிக்கு தீர்வுகள்

 

காரணங்கள் -

*உயர்ந்த ஹீல் கொண்ட காலணிகள்

*கடினமான காலணிகள்

*பொருத்தமற்ற பாதணிகள்

*உடல் பருமன்

 

1. Plantar fascitis

2. Calcaneal spur

3. Achilles tendonitis

          

ஆயுர்வேதத்தில் கூறப்பட்டிருக்கும் தீர்வுகள்

 

1. Abhyangam

2. Swedanam - ishtika swedanam ( will describe in next video)

3. Agni karma

4. Raktavasechanam(blood letting)

5. Virechanam

6. Vasthi

 

 

       நோயின் நிலையையும் தன்மையும் அறிந்து ஆயுர்வேத மருத்துவ ஆலோசகரின் ஆலோசனையுடன் இச்சிகிச்சைகளை எடுக்க குதிங்கால் வலி குணமாகும்.

 

#டாக்டர்_முகமது_சலீம்_MD_Ayurveda

#அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை

#curesure4u #curesure #Alshifaayush #AlShifaayushforall #Dr_mohamad_saleem_MD_Ayurveda #அல்ஷிபா

#அல்ஷிபாஆயுஷ்  #மருத்துவம்  #உணவேமருந்து

 


Post Comment

சனி, ஜனவரி 12, 2013

சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை போக்கும் -கோக்ஷுராதி குக்குலு (GOKSHURADHI GUGGULU )


சிறு நீர் கழிப்பதில் சிரமத்தை போக்கும் -கோக்ஷுராதி குக்குலு  (GOKSHURADHI GUGGULU )                                                                          
(ref-ஸாரங்கதர ஸம்ஹிதா - மத்யமகண்டம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1.            நெருஞ்சில் கஷாயம்
 – கோக்ஷுர கஷாய    4.200 கிலோவில் (4.2 கிலோ நெருஞ்சில் + 8.4 லிட்டர் தண்ணீர் 4.2 லிட்டர் கஷாயம் விட்டுக் கொதிக்கவைத்து எடுக்கவும்)
2.            சுத்தி செய்த குக்குலு
– ஷோதித குக்குலு 350 கிராமைக் கரைத்துக் கொதிக்க வைத்துப் பதத்தில்
3.            திரிகடு சூர்ணம் – த்ரிகடுசூர்ண    150 கிராம்
4.            திரிபலா சூர்ணம் – த்ரிபலா சூர்ணம்     150         “
5.            கோரைக்கிழங்கு சூர்ணம் – முஸ்தா     50           “

இவைகளைக் கலந்து திரிபலா கஷாயத்தால் நன்கு அரைத்து உலர்த்தி ரவைகளாக்கி 500 மி.கி. எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

அளவு:          

ஒன்று முதல் நான்கு மாத்திரைகள் வரை கோரைக்கிழங்குச் சூரணம், சிறுபீளை (பாஷாணபேத) சூரணம் அல்லது வெட்டிவேர்ச் சூரணத்துடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 



பிரமேகம் (ப்ரமேஹ), நீர்ச்சுருக்கு (மூத்திரக்ரிச்சர), மூத்திரம் தடைபடுதல் (மூத்ராகாத), கல்லடைப்பு (அஸ்மரீ), வெள்ளை (ப்ரதர), குதிகால் வாதம் (வாத ரக்த), சுக்கிலம் சீர்கேடடைந்த நிலை (சுக்ரதோஷ).

தெரிந்து கொள்ள வேண்டியவை -
  1. நீர் கடுப்பு ,நீர் தாரை எரிச்சல் ,உஷ்ண  கடுப்பு போன்ற பிரச்சனைக்கு -கோக்ஷுராதி கஷாயம் என்னும் நெருஞ்சில் கஷாயத்தில் சாப்பிட அதிசய குணம் தரும் 
  2. நீர் பிரிவதில் சிரமத்தால் உண்டாகும் கால் வீக்கத்திற்கு சந்திர பிரபா வடி போன்ற மருந்துகளுடன் சாபிடலாம் 
  3. கல் அடைப்பிற்கு -சிறுகண் பீளை கஷாயத்தில் (வீர தராதி கசாயத்தில் கூட ) கொடுக்க நல்ல பலன் தெரியும் ..
  4. விந்து வந்த பின் வரகிற எரிச்சலுக்கு தக்க துணை மருந்துடன் தர  நல்ல பலன் தரும் 

Post Comment

ஞாயிறு, ஏப்ரல் 15, 2012

பழுக்காத கட்டிகளுக்கும் ,வலிகளுக்கும் மேல் பூச்சு -ஸுரதாரு லேபம்.-Suradaru lepam


பழுக்காத கட்டிகளுக்கும் ,வலிகளுக்கும் மேல் பூச்சு -ஸுரதாரு லேபம்.-Suradaru lepam
                                                                                              
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            தேவதாரு – தேவதாரு            50 கிராம்
2.            சுக்கு – சுண்டீ                     50           “

இவைகளைப் பொடித்துச் சலித்து அத்துடன் தனியே பொடித்துச் சலித்த நவாச்சாரம் (நவக்ஷார) 50 கிராம் சேர்த்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.
                இது நீர்க்கும் தன்மை உள்ளதாகையால் காற்றுப் புகாத கொள் கலன்களில் பத்திரப்படுத்த வேண்டும்.

பயன்படுத்தும் முறை:  
மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

                 
எலுமிச்சம் பழச்சாறு, மோர் அல்லது சூடான தண்ணீர் இவற்றுடன் கலந்து மேலே பூசலாம்.

தீரும் நோய்கள்:  

ஆரம்ப நிலையிலும், பழுக்கும் நிலையிலும் உள்ள கட்டிகள் (விஷ்போட (அ) வித்ரதி), வீக்கம் (ஸோத), வலி (ருஜா), யானைக்கால் (ஸ்லீபாத).

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. வீக்கம் சார்ந்த வலிகளுக்கு இந்த மருந்தை பற்றிடலாம் ..நல்ல குணம்  தெரியும்
  2. பழுக்காத கட்டிகளுக்கு கஞ்சி தண்ணீருடன பற்றிட சீக்கரம் உடையும்
  3. ஊசி குத்துதல் போன்ற வலிகளுக்கு இந்த மருந்தை பற்றிட நல்ல பலன் தெரியும்
     



Post Comment

வியாழன், டிசம்பர் 22, 2011

வீக்கமுள்ள வாத வலிகளுக்கு-விஷமுஷ்டி தைலம்-Visha Mushti thailam


வீக்கமுள்ள வாத வலிகளுக்கு-விஷமுஷ்டி தைலம்-Visha Mushti thailam
(ref-பஸவராஜீயம் - ரோகப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            பழுத்த எட்டிப்பழங்களைப் பிசைந்து கொட்டை நீக்கி எடுத்த கதுப்பு – விஷமுஷ்டீ பலமஜ்ஜ 800 கிராம்.

2.            புளித்தகாடி – காஞ்ஜிக 6.400 கிலோ கிராம் இவ்விரண்டையும் நன்கு கலந்து அத்துடன்.
3.            800 கிராம் எட்டிப்பழக் கொட்டைகளை சிறிய துண்டுகளாக நறுக்கி 6.400 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து (1.600 லிட்டராகக்) குறுக்கி வடிகட்டிய கஷாயம் 1.600 லிட்டர்

4.            எலுமிச்சம்பழச்சாறு – ஜம்பீரஸ்வரஸ    1.600 கிலோ கிராம்
5.            நல்லெண்ணெய் – திலதைல      1.600                     “
6.            விளக்கெண்ணெய் – எரண்டதைல  0.800                     “
7.            எட்டிக்கொட்டை – விஷமுஷ்டீ (சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு அரைத்து விழுதாக்கியது)         0.800 கிலோ கிராம்

இவைகளை நன்கு கலந்து கொதிக்க வைத்துக் கரபாகத்தில் இறக்கி வடிக்கட்டவும்.

பயன் படுத்தும் முறை:           
 
 மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

குறிப்பு:     

வெய்யில் நாட்களிலும், பித்தம் உடையவர்களுக்கும் (பித்த தேஹி) கொடுக்கும் போதும் மிகவும் கவனத்துடன் உபயோகிக்க வேண்டும்

தீரும் நோய்கள்:  


மூட்டுகள் மற்றும் அவயவங்களைப் பற்றிய வாதரோகங்கள் மற்றும் இரண இசிவு (காயத்தின் காரணமாக ஏற்பட்ட வலிப்பு).

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. வலிகளை-வீக்கம் கலந்த வலிகளை போக்கும்
  2. நீர்வாதங்களில் தக்க துணை மருந்தோடு பயன்படுத்தலாம்
  3. சுத்தம் செய்து தான் -எட்டிபழம் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை -வெளிபிரயோகம் என்றால் எட்டி -விஷம் என்று உணருதல் நல்லது


Post Comment