அர்க்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அர்க்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, டிசம்பர் 10, 2010

ஓம வாட்டர் என்கிற கலப்பட மருந்து -அதிர்ச்சி தகவல்



சாதாரண வயிற்று உப்புசம் ,செரிமான கோளாறு ,அடிக்கடி மலம் கழித்தல் ,வயிறு வலி ,குழந்தைகளின் மாந்தம் ,பசியின்மை ,வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு எல்லா மக்களும் ஓம வாட்டர் என்கிற மருந்தை நாம் பயன்படுத்தி வருகிறோம்..ஓம தீநீர் என்று சித்த மருத்துவத்திலும் ,அஜமோத அர்கம் என்று ஆயுர்வேத மருந்திலும் கிடைக்கிற தயாரிக்கபடுகிற இந்த ஓம வாட்டர் இப்போது சித்த மருத்துவம் ,ஆயுர்வேத மருத்துவம் சொல்கிற –பதங்கமாதல் என்கிற வேக வைத்து ஆவியாக்கி அதிலிருந்து பெறப்படுகிற முறைகளில் செய்யப்படுவதே இல்லை என்பது தான் இந்த அதிர்ச்சி தகவல்

பின்னர் எந்த முறைகளில் ஓம வாட்டர் தயாரிக்கபடுகிறது .

ஓம வாட்டர் என்னும் ஓம தீநீர் தயாரிக்கும் ஏமாற்று முறை .முறை  ஒன்று -

ஓமத்தை நன்கு தண்ணீரில் நான்கு அல்லது  ஐந்து நாட்கள்  ஊற வைத்து. பின்னர் அதை கொதிக்க வைத்து  வடிகட்டி அதனில் ஓமத்தின் எசன்ஸ் என்னும் செயற்கை மணமூட்டியை  சில துளிகள் சேர்த்து மிக எளிதாக தயாரிக்கிறார்கள் .அவர்கள் சேர்கிற எந்த ஓம எசன்ஸ் -வலிகளுக்கு பயன்படுத்த கூடிய வெளி பிரயோகமாக மட்டுமே பயன்படுத்த கூடியதும் இதில் சேர்க்க படுகிறது என்பது வேதனையான விஷயம் .








ஓம வாட்டர் தயாரிக்கும் குறுக்கு வழி முறை -இரண்டு 


தைமால்  என்கிற ( கால் வலிக்கு தேய்க்கும் வலி நிவாரண பாமில் உள்ள பொருள் இது )   ஓம உப்பு  .இது பொதுவாக  வெளியே வலிக்கான தைலம் தயாரிக்க மட்டுமே பயன்படுத்த படுகிறது


இந்த ஓம உப்பை  பதினைந்து அல்லது இருபது லிட்டர் கொதிக்க வைத்து மிதமான சூட்டில் உள்ள வெந்நீரில் கலந்து வைத்து -நூறு மிலி பாட்டிலில் வைத்து ரூபாய் பத்து முதல் நாற்பது ரூபாய் வரை நூறு மிலி யை விற்கிறார்கள் ..ஆனால் மொத்த பதினைந்து அல்லது இருபது லிட்டர் ஓம வாட்டருக்கு ஆகும் செலவு  வெறும் முப்பது ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா ?


செயற்கையான –போலி ஓம வாட்டரால் ஏற்படுகிற பக்க விளைவுகள் என்ன?

தைமால் இயற்கையான பொருளாக இல்லாமல்  கலப்பட வேதிப்பொருளாக  அதிகம் கலந்தால் வயிறு எரியும் ..வயிறு புண்ணாகும் ..மேலும் செரிமான கோளாறுகள் மட்டுமல்லாது -பல நோய்களை நாமே வர வைத்து கொள்வோம்

தைமால் யார் பயன்படுத்த கூடாது  



குறிப்பு -உண்மையிலே ,தைமால்  -இயற்கையிலிருந்து கிடைத்தாலும் -நிச்சயமாக அவை ஓம வாட்டர் செய்ய சிறந்த வழி இல்லை ..இது ஒரு குறுக்கு வழி 



ஆயுர்வேதம் மேலே சொன்ன வழிகளில் ஓம திராவகத்தை தயாரிக்க சொல்ல வில்லை ...பின்னர் எப்படி தயாரிக்க சொல்கிறது


ஆயுர்வேதம்    சித்த மருத்துவம் பதங்கமாதல் என்கிற டிஸ்டிலேஷன் படி தான் ஓம தீநீர்  அல்லது  அஜமோத அர்க்கம்    தயார் செய்ய  சொல்லியிருக்கிறது...இங்கே சொடக்குங்கள் ..






Post Comment

வியாழன், டிசம்பர் 09, 2010

ஓமவாட்டர் என்ற பெயரில் கடைகளில் கிடைப்பது என்ன ?

ஓமவாட்டர் என்ற பெயரில் கடைகளில் கிடைப்பது என்ன ?-Oma water

பொதுவாக ஓமத்தை -நாம் மேலே சொன்ன அர்க்கமாக்கும் நிகழ்ச்சியில் சொன்னது போல் தயாரிக்கவேண்டும் .
அதாவது அஜமோதார்க்கம் என்னும் ஆயுர்வேத மருந்தே ஓம வாட்டர் அல்லது ஓமதீநீர் என்பதாகும் ...

ஆனால் உண்மையில் மார்க்கெட்டில் கிடைப்பது என்ன ?..
நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் ஓம உப்பை -வெந்நீரில் கலந்து (ஓமத்தை தண்ணீரில் கலந்து -ஆவியாக்கி பதங்கமாக்காமல் -அர்க்க எந்திரம் இல்லாமல் )-சர்வ சாதாரணமாக விற்று விற்கிறார்கள் .



நல்ல ஓம உப்பாவது பரவாயில்லை -தைமால் போன்ற வேதி பொருள் அடங்கிய -கெமிக்கலை தான் இப்போது எசன்ஸ் கடைகளிலும் விற்கிறார்கள் ..

இதனால் பக்க விளைவுகள் உண்டா என்று -ஆராச்சியில் தான் தெரிய வேண்டும் .
ஆனால் நிச்சயம் எந்த விளைவை நினைத்து குடிக்கிறோமோ அது நிச்சயம் பலிக்கபோவதில்லை ..

எல்லாம் ஏமாற்று வேலை ஆகி விட்டது -
பொய் உண்மை போல் ஆகிவிட்டது ..

குழந்தைகளுக்கு வயிற்று போக்கு -மாந்தம் என்று -இந்த கலப்பட ஓம வாட்டரை என்ன கொடுத்தால் தகுமா ?

Post Comment

கற்பூராத்யர்க்கம் -karpooradyarkam


2.            கற்பூராத்யர்க்கம்-karpooradyarkam

தேவையான மருந்துகள்:
1.            கற்பூர கற்பூரா       250 கிராம்
2.            ஓமம் அஜமோதா         1000  ,,
3.            தண்ணீர் ஜல        10 லிட்டர்

கற்பூர மரத்தின் படம்

செய்முறை:
                ஓமத்தைப் பொடித்தும், கற்பூர மர பட்டை
துணியில் சட்டிப்போட்டும் முறைப்படி அர்க்கம் தயாரிக்கவும்.

அளவும் அனுபானமும்: 15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீரில் கலந்து இரு வேளைகள்.

தீரும் நோய்கள்:- வயிற்றுப்போக்கு (அதிஸார), செரியாமை (அஜீர்ண), பசியின்மை (அக்னிமாந்த்ய), நாட்பட்ட பேதி (கிரஹணீ), வாந்திபேதி எனும் காலரா (விஷுஸிகா). வாய்துர்நாற்றம் (முக தௌர்கந்த்யா) மற்றும் வாய் எரிச்சலிலும் பயனாகிறது.

அடுத்து ஓமவாட்டர் என்ற பெயரில் கடைகளில் கிடைப்பது என்ன ?
 

Post Comment

புதன், டிசம்பர் 08, 2010

1.அஜமோதார்க்கம்-Ajamodarkam


1.            அஜமோதார்க்கம்-Ajamodarkam
(அர்க்கப்ரகாச)


தேவையான மருந்துகள்:-

1.            ஓமம் அஜமோதா    1,000 கிராம்
2.            தண்ணீர் ஜல        10 லிட்டர்


செய்முறை:-

                ஓமத்தை ஒன்றிரண்டாகப் பொடித்துத் துணியில் மூட்டை கட்டி பன்னிரண்டு மணி நேரம் ஊறவைத்து அர்க்கம் இறக்கும் முறைப்படி அர்க்கம் தயாரிக்கவும்.

ஓமம்

சீதசுரம் காஞ்செரியா மந்தம் பொருமல்
பேதி இரைச்சல் கடுப்பு பேர் மம்  ஓதிருமல்
பல்லோடு பல்மூலம் பகம் இவை நோயென் செயு மோர்
சொல்லோடு போம் ஓமெனச்சொல். 

குரோசானி ஓமம்.
வெகு மூத்திரம் வாதம் வீரிய நட்டம் புண்
உகு பேதி உட்கடுப்புனூடே _ மிகு கரப்பான்
தீராக்கபம் இவை போம் செய்யக் குரோசானி என்றால்
வாரா மயக்கம் உறுமால்.


அளவும் அனுபானமும்:- 15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீரில் கலந்த இரு வேளைகள்.


                தீரும் நோய்கள்:- வயிற்றுப் போக்கு (அதிஸார), செரியாமை (அஜீர்ண), பசியின்மை (அக்னிமாந்த்ய), நாட்பட்ட பேதி அல்லது பெருங்கழித்தல் (கிரஹணீ), சிறுநீர்ப்பை நோய்கள் (பஸ்தி ரோக).

Post Comment