எதிர்ப்பு சக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எதிர்ப்பு சக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஏப்ரல் 06, 2021

தடுப்பூசி Vs நோய் எதிர்ப்பு சக்தி | தடுப்பூசி போடலாமா ? | நோய் எதிரிப்ப...


 


கொரோனா தடுப்பூசி Vs நமது உடலின் இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி

 

கொரோனா தடுப்பூசி போடலாமா ?

 

நோய் எதிர்ப்பு ஆற்றல் பற்றிய ஆயுர்வேதம்?

 

ஆயுர்வேத ஆயூஷ் மருந்துகள் எடுக்கும் போது

கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளலாமா ?

 

ஒரு நாள் மருந்தில் உடல் எதிர்ப்பு சக்தி உண்டாக்குமா ?

 

பலவீனமான அடிப்படை நோயெதிர்ப்பு சக்தியுடன் மனிதர்கள் பிறக்கின்றனர். நமது சூழலில் உள்ள நுண்ணுயிரிகளுடன் தொடர்ந்து தொடர்புகொள்வதன் மூலமும், நமது குடலுக்குள்ளும், புதிய நுண்ணுயிரிகளுக்கு எதிராக போராட கற்றுக்கொள்கிறோம், இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

 

 

 

கடந்த 40 ஆண்டுகளில், சுகாதாரம் என்ற பெயரில் அதிகப்படியான நுண்ணுயிர் எதிர்ப்பின் பயன்பாடு மற்றும் தாவரங்கள், மண் மற்றும் பிற உயிரினங்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ளாதது படிப்படியாக நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தியுள்ளது,

பொதுவான வெளிப்புற காரணி காரணமாக ஒரு சமூகத்தில் ஏற்படும் ஒரு தொற்றுநோயின் இந்த கருத்து கி.பி 2 ஆம் நூற்றாண்டில் சரகா சம்ஹிதாவின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது . சரகா, காற்று, நீர் மற்றும் நிலம் என நுண்ணுயிரிகளின் பரவலின் முக்கிய ஆதாரங்களை ஆசிரியர் குறிப்பிடுகிறார். தற்போதைய சகாப்தத்தில் இது மிகவும் பொருத்தமானது, இந்த வழிமுறைகள் மூலம் பரவும் நோய்த்தொற்றுகள் காரணமாக மட்டுமல்ல, மனித சுரண்டல், காலநிலை மாற்றம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் பிற இரசாயனங்கள் அதிகப்படியான பயன்பாடு காரணமாக மண், நீர் மற்றும் காற்றின் ஒட்டுமொத்த தாக்கப்படுகிறது.

 

#ayurveda

#immunebooster

#immunityboostingtips

#ayushtips

#covid19

#coronavirusprevention

#AYUSH

#immunesystembooster

#NOCORONA

#immunesystem

 

 

Facebook id https://www.facebook.com/drsaleem.ayush

Facebook page link https://www.facebook.com/Dr-Mohamad-S...

​ Facebook Link https://www.facebook.com/groups/22238...

youtube channel link https://m.youtube.com/channel/UCOzuUA...

 Instagram link https://instagram.com/drsaleemayush?i...

Twitter link https://twitter.com/AyushDrsaleem

Telegram link to join https://t.me/joinchat/MWLLycY3uuEzMTdl

 


Post Comment

சனி, மே 16, 2020

உடலின் மொழி அறிந்தால்...*


உடலின் மொழி அறிந்தால்...*



டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,

டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.

ஆயுர்வேத மருத்துவர்கள்




நோய் என்று வந்துவிட்டால் நம் மனம் தேடுவது உடனே நோயை சரிசெய்திடும் மருந்தை தான்..



அத்தகைய மருந்திற்கு அந்நோயை சரிசெய்ய என்னென்ன தகுதிகள் உள்ளது.. என்னென்ன பாதகங்களை அது ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதை நாம் ஆராய்ந்து பார்ப்பதுமில்லை, நமக்கு பொறுமையும் இல்லை...



உடல் நிலை அதன் நலனை எந்த அளவு நோயின் பிடியில் கொடுத்துள்ளது என்பதை எத்தனை பேரால் அறிந்துகொள்ள முடியும்... உடலில் நோயுற்றபோது அதன் மொழியில் சொல்வது நீர் வேண்டாம், உணவு வேண்டாம் கண்களை மூடி படுத்துக்கொள்ள என்பதுமட்டுமே..


ஆனால் உடலில் மொழி புரியாமல் நோயை சரிசெய்கிறோம் என்று மாத்திரைகளை விழுங்குவது, ஊசி போட்டுக்கொள்வது, ட்ரிப்ஸ் ஏற்றுவது, டானிக் எடுத்துக்கொள்வது போன்றவற்றை செய்து விடுகின்றோம்...



சற்றே சிந்தியுங்கள்... சோர்வுண்ட குழந்தையோ அல்லது துவண்டு இருக்கும் பறவையோ, வளர்க்கும் விலங்கோ குதூகலப்படுத்த என்ன செய்வோம்?... அதற்கு பிடித்தவற்றை பிடித்தவாறு அவர்களிடத்தில் செய்து உற்சாக படுத்துவோமா...? இல்லை உனக்கு பிடித்ததைதானே தருகிறேன் இந்தா பெற்றுக்கொள் என்று எரிந்துவிழுவோமா...?



முதலாவதை அனைவரும் ஆமோதிக்கிறீர்கள் என்று நம்புகிறேன்... காரணம்... அதிலிருந்துதான் முழுமையான, மகிழ்ச்சியான தீர்வு கிடைக்கும்...



அப்படியானால் உங்கள் உடலால் இயலாத நிலையில்... அதாவது செரிக்கும், உரிந்துகொள்ளும் சக்தி இல்லாத உடலை அதனை மேலும் வருத்தும் விதமாக மாத்திரைகளை எடுத்துக்கொள்வது சரிதானா?



மாத்திரைகளை செரித்து நலம்பெறு என்றும், ஊசிகளை போட்டுகொண்டு மீண்டேறு என்பதை மனம் நன்மைக்குத்தானே என்று ஏற்றுக்கொண்டாலும் உங்களின் உடல் இயல்பான நிலைக்கு திரும்பாது... அதனால் தான் காய்ச்சலோ, சளியோ, தலைவலியோ, வயிறுவலியோ நோய் தீர்ந்த அடுத்த இரண்டு முதல் ஐந்து நாட்களுக்கு சோர்வாக, அசௌகரியமாக உணர்வு ஏற்படுகிறது.. பக்கவிளைவுகளாக அல்சர் போன்றவைகளும் உண்டாகிறது...



இயல்பான நிலைக்கு திருப்ப தேவை உடல் இழந்த செரிமான சக்தி, உரிந்துகொள்ளும் சக்தியை தாமாக பெறுவதே... மருந்து மனதிற்கு எளிதாக இருப்பதை விட உடல் எளிதாய் செரித்துக்கொள்ள ஏதுவான வகையில் இருத்தல் வேண்டும்..



*மருந்துகளில் கசாயத்திற்கு மட்டுமே அந்த தகுதி உள்ளது...*



உலகில் உள்ள எந்த நோய்க்கும் கஷாயம் கொடுக்கலாம்...ஒரு பகுதி மூலிகையுடன் எட்டு பகுதி தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு நான்கில் ஒரு பங்காக வற்றிய பின் வடிகட்டி கிடைப்பது கஷாயம்..



கஷாயத்தை தனி சிறப்பு என்னவென்றால் ஒரு பொருள் உமிழ்நீரில் கலந்து, உணவுக்குழாய் வழி இரைப்பையை அடைந்து, பித்தம் மற்றும் அமிலத்துடன் கலந்து செரிக்க எடுத்துக்கொள்ளும் ஒன்னரை மணி நேர செயலை கோப்பையில் இருக்கும் கஷாயம் தம்மிடையே ரெடியாக வைத்திருப்பது தான்...சிறிது நேரம் 100° C கொதிநிலையில் இந்த தகுதியை கஷாயம் பெற்றுவிடுகிறது.



பொதுவாக எந்த நோய்க்கு நாம் கஷாயம் எடுத்துக்கொண்டாலும் நோய் குணமாவதுடன் இலவச இணைப்பாக நாம் பெறுவது நோயெதிர்ப்பு ஆற்றல், போஷாக்கு, கழிவு வெளியேற்றம், பசி தூண்டுவிப்பு, செரிமானம் மேலும் கசாயத்தில் இருக்கும் antioxidant property வயதுமுதிர்வதை தடுப்பதாக பல ஆராய்ச்சிகளும் உள்ளது.



மேலும் நாமே வீட்டில் தயார் செய்துகொள்ளும் கசாயத்தில் contamination கிருமி ஒட்டிருக்கும் என்ற பயம் இருக்காது, மற்ற மருந்துகளில் சேர்க்கப்படும் preservatives பதப்படுத்தும் மருந்து சேர்க்கப்பட்டிருக்காது, காலாவதி பயம் இருக்காது, பக்க விளைவுகள் இருக்காது, கைதேர்ந்த மருத்துவரை போன்றொரு திருப்தி கிடைக்கும்.



கஷாயம் கசக்கும் என்ற மாயையை குழந்தைகள் மனதில் பதியவைக்காமல் கஷாயத்திற்கு கட்டுப்படாத நோயில்லை என்று கூறி வளர்த்தால் எதிர்காலத்தில் கொரோனா போன்று எந்த நோயும் அவர்களை அணுகமுடியாது..



சந்தேகங்களுக்கு அணுகவும்...


*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000.

ஆயுர்வேதமும் அகிலம் அறிய பகிரலாமே

Post Comment

செவ்வாய், ஏப்ரல் 28, 2020

தேவை வெள்ளையன்..

தேவை வெள்ளையன்.. 


டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்


உடலை தாக்க வரும் நோய்களிடமிருந்தும், கிருமிகளிடமிருந்தும் காத்துக்கொள்ள நமக்கு தேவை இரத்த வெள்ளை அணுக்களின் பலம்..

நோய்யெதிர்ப்பு சக்தி என்பது போர் படை வீரர்களை போல் செயல்படும் லியுகோசைட்ஸ் ( இரத்த வெள்ளை அணுக்கள்)...

இந்த வெள்ளை அணுக்களின் பிறப்பிடம் எலும்பு மஜ்ஜை, நிணநீர் சுரப்பி ஆகும்.. இவற்றில் ஆயுட்காலம் சராசரியாக மூன்று வாரங்கள்...

வெள்ளை அணுக்களின் சராசரி அளவு 4000 - 11,000 ஆகும்... இந்த அளவிலிருந்து கூடினாலும் ( லுகீமியா ), குறைந்தாலும் (லியூகோபீனியா) நோயாகவே கருதப்படும்..

வெள்ளை அணுக்களை ஐந்து வகைகளாக பிரித்து விளக்கப்படுகிறது..
அவை
நியூட்ரோபில்
ஈசினோபில்
பேசோபில்
லிம்போஸைட்
மோனோஸைட்

இந்த ஐந்து வகை வெள்ளை இரத்த அணுக்களின் அளவுகளும்,  வேலைப்பாடுகளும் மாறுபடுகிறது..

பொதுவாக இவற்றை அடிப்படையாக கொண்டே நோய்களுக்கான மருத்துவம் கொடுக்கப்படுகிறது...

*நியூட்ரோபில்*
சராசரி அளவு எழுபது சதவீதம்... இந்த வகை இரத்தஅணுக்கள் அதிகரிப்பது புற்றுநோய், குடல்வால் நோய் போன்ற அலர்ஜி, மூட்டு சம்மந்தமான நோய்கள், மேலும் சில இரத்தக்கோளாறுகளை குறிக்கிறது...
மருந்துகளின் பக்கவிளைவு, வைட்டமின் பி12 குறைவு, ஒருவகை காசநோய், இரத்தசோகை போன்றவற்றால் இவ்வகை வெள்ளை இரத்த அணுக்கள் குறையும்..

*லிம்போஸைட்*
சராசரி அளவு இருபது சதவீதம்.. குழந்தைகளுக்கு பொதுவாக ஐம்பது சதவீதம் காணப்படும்..காசநோய் போன்ற நாள்பட்ட நோய்கள், அம்மை நோய், ஹோர்மோன் கோளாறுகள் காரணமாக இதன் எண்ணிக்கை அதிகரிக்கும்.. எய்ட்ஸ், புரதசத்து குறைவு போன்றவற்றால் இதன் அளவு குறையும்..
மேலும் இவை நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமான அணுக்கள்..

*மோனோஸைட்*
சராசரி அளவு நான்கு சதவீதம்.. டைபாய்டு, மலேரியா, இதய உறை நோய், மூட்டு வாத நோய், காசநோய் போன்றவற்றால் இவற்றின் அளவு அதிகரிக்கிறது.. எலும்பு மஜ்ஜையில் பிரச்சனை என்றால் இதன் அளவு குறைகிறது.. மேலும் உடலில் நுழையும் நோய்க்கிருமிகளை போரிட்டு அழிக்கும் பெருமை இவ்வகை அணுக்களை சேரும்..

*ஈசினோபில்*
சராசரி அளவு நான்கு சதவீதம்.. ஆஸ்துமா, குடல்புழு, சிலவகை புற்றுநோய் இதன் அளவை அதிகரிக்கும்.. குறிப்பாக ஈசினோபிலியா நோய் பாதிப்புடையவர்களுக்கு இதன் மொத்த அளவை பரிசோதிப்பதுண்டு..

*பேசோபில்*
சராசரி அளவு ஒரு சதவீதம் மட்டுமே.. உணவு ஒவ்வாமை, நாள்பட்ட நோய்கள், புற்றுநோய், கதிரியக்க சிகிச்சை போன்றவற்றால் இதன் அளவு அதிகரிக்கிறது.. மன அழுத்தம், தைராய்டு கோளாறு காரணமாக இதன் அளவு குறைகிறது...

இந்த அடிப்படை இரத்த அணுக்களின் அளவை, காரணங்களை, விளைவுகளை அறிந்துவைத்திருப்பது இக்காலத்தில் அவசியமான ஒன்றாகும்...

மருத்துவ ஆலோசனைக்கு, சந்தேகங்களுக்கு அணுகவும்....

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277 577
சென்னை 9043336000

Post Comment

சனி, ஏப்ரல் 25, 2020

இந்திய மக்களை காக்க வந்த இந்துகாந்தம் கஷாயம் - உடல் எதிர்ப்பு சக்தி தரும் ஆயுர்வேத வரம்

இந்திய மக்களை காக்க வந்த இந்துகாந்தம் கஷாயம் - உடல் எதிர்ப்பு சக்தி தரும் ஆயுர்வேத வரம் 

டாக்டர். அ. முகமது சலீம்., BAMS.,M.Sc.,MBA
ஆயுர்வேத மருத்துவர் 

இந்துகாந்த கஷாயம் ...இந்திய மக்களை காக்க வந்த ஒரு ஆயுஷ் அமைச்சகம் வழிகாட்டிய ஒரு அற்புத மருந்து .. 


கேரளா, கோவா, புது டெல்லி போன்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகமும் ஆரோக்கியம் என்கிற திட்டத்தை கையில் எடுத்துள்ளது .. 

பாரம்பரிய சிகிச்சை வாயிலாக நாம் இந்த கோவிட் 19 என்கிற கொரோனா கொள்ளை நோயை விரட்ட உடல் எதிரிப்பு சக்தியை அதிகரிக்கும் ஓர் அட்சய மருந்தை உண்டாக்கிடும் மருந்தை கண்டுபிடிப்பது அவசியம் .


அந்த அட்சய மருந்து ஆயுர்வேத புத்தகங்களில் ஆராய்ந்த போது  எல்லா ஆயுர்வேத மருத்துவர்களும் பரிந்துரைத்தது இந்த இந்துகாந்தம் கஷாயம். 



இந்து காந்த கஷாயம் செயல் திறன் எப்படி ?


முக்குற்ற உடலுக்கும் கொடுக்க முடியும் 

மூன்று தோஷங்களையும் சமப்படுத்த வேண்டும் 

உடல்  ஓஜஸை  அதிகரிக்க வேண்டும் 

காய்ச்சல் வராமல் தடுக்க உதவ வேண்டும் 

அடிக்கடி வருகிற காய்ச்சலை குணப்படுத்த வேண்டும் 

இளைத்த உடலை தேற்ற  வேண்டும் 

கண்களுக்கு தெரியாத கிரிமிகளை  கொல்ல  வேண்டும் 

காச நோய் போன்ற க்ஷய நோய்களில் பயன்படுத்தி இருக்க வேண்டும் 

கல்லீரலை சுத்த படுத்தும் அளவுக்கு இருக்க வேண்டும்  

கல்லீரல் வீக்கதினால் உண்டாக்கிற பெரிய  வயிறை  சரி செய்யும் அளவுக்கு இருக்க வேண்டும் 


வயிறு உள்ள அக்னியை முறை படுத்த வேண்டும் 

வயிற்று புண்ணுக்கும்  தரும் அளவுக்கு இருக்க வேண்டும் 

எளிதாக கிடைத்திடல் வேண்டும் 

என்கிற பல வறிமுறைகளுக்கு பொருந்துகிற ஓர் அற்புத மருந்து தான் இந்த இந்துகாந்தம் கசாயம் 


எப்படி தயாரிப்பது ..
அதில் உள்ள மூலிகைகள் என்ன ? 

இதில் பதினெட்டு மூலிகைகள் உள்ளது . 


1. ஆவில் பட்டை என்கிற சிற வில்வம் 
2 . தேவதாரு பட்டை 
3. தஷ மூலங்கள் - அதாவது வில்வம் , குமிழ், முன்னை, பாதிரி, பெருவாகை, முள்ளுகத்தரி ,கண்டங்கத்தரி, ஓரிலை, மூவிலை 
4. ஷட் பலம் என்கிற ஆறு பொருட்கள். 
அதில் திப்பிலி, திப்பிலி மூலம், சவ்யம், கொடுவேலி சுத்தம் செய்தது, சுக்கு , யவ க்ஷாரம் .  இந்துப்பு பயன்படுத்தலாம். 









இந்துகாந்தம் என்றால் பொருள் என்ன ? .. 

காந்தம் இருக்கிறதா ?

காந்தம் என்றால் ஒளி என்றே பொருள் அதில் நாம் பார்க்கிற Magnet -காந்தம் இல்லவே இல்லை .. நம்மை சரி செய்யும் ஒளி என்கிற ஆற்றலே   உள்ளது .. 
எல்லாமே மூலிகை பொருட்கள் தான் ..

இந்து என்றால் நிலவு, காந்தம் என்றால் ஒளி -பிரகாசம் என்று பொருள். உடலை எல்லா வகையிலும் பிரகாசிக்க செய்கிற இந்த மருந்து வரம் தான். 

இந்துகாந்த கசாயதில் உள்ள மூலிகைகளை நெய்யில் காய்ச்சி  உடலில் எளிதாக சேரும் அளவுக்கு மிக சிறந்த பலனை தரவல்ல இந்துகாந்த கிருதம் என்கிற நெய் மருந்தை ஆயுர்வேதம் நமக்கு தந்துள்ளது .. 

யார் யார் பயன்படுத்தலாம் 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த பத்தியமும் இல்லாமல், எந்த பயமும் இல்லாமல் நாம் இந்த இந்து காந்தம் கசாயத்தை பருகி -கொரோனா போன்ற நோயுடன் போராடலாம் 

எந்த வித ஆங்கில மருந்துகளோடும் இதை பருகலாம் 

இந்து காந்தம் கசாய சூர்ணமாகவும் , தயாரித்தே கிடக்கிற பாட்டில் மருந்தாகவும், கசாய மாத்திரைகளாகவும் கிடைக்கிறது .. 

மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள ஆயுர்வேத மருத்துவர்களை அணுகுங்கள். சந்தேகம் தெளிய 


*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000




Post Comment