வேதனைகள் .. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேதனைகள் .. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜனவரி 14, 2018

நானும் தமிழன் தான் ..

தமிழர் என்னும் சுய அடையாளத்தை மீட்டெடுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ..

டாக்டர் .அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA



நானும் தமிழன் தான் ..



• வருடத்தில் ஒரு நாள் வேட்டி தினம் கொண்டாட பாக்கெட் வேட்டி கட்டிய ..காதி கிராப்டை மறந்த நானும் ...தமிழன் தான்


• யூ டியூபில் குக்கரில் பொங்கல் செய்வது எப்படி என தெரிந்து கொள்ளும் நானும் ...தமிழன் தான்


• ஏறு தழுவ தெரியாத ..ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பெப்ஸி, கோகோ கோலா குடிக்கிற – அப்பன் காசில் KTM  பைக்  ரேஸ் மாவீரன் நானும் தமிழன் தான்


• அண்டை வீட்டாரின் பெயர் கூட தெரியாத ,பெற்றோரை முதியோர் இல்லத்திலும் ,கட்டிய பெரியவீட்டில் அகதியான நாகரிக அனாதையாக்கின பெற்றோருடன்  ஸ்கைப்பில் மட்டுமே பேசி பாசம் கொள்ளும் நானும் தமிழன் தான்


• உண்பது விஷம் என்று தெரிந்தும் ..பாக்கெட்டில் Expiriy Date மட்டும் பார்க்கிற நானும் தமிழன் தான்


• உலகமயமாதலில் என கோவணம் கூட உருவப்பட்டு இருப்பதை கூட உணர்ந்து கொள்ளாது TV யில் எனது சினிமா தலைவன் அரசியலுக்கு வந்து எல்லாம் மாற்றி தருவான் என்று ஆசை கொள்ளும் நானும் தமிழன் தான்


• ஏட்டு சுரைக்காய் கல்விக்கு இளமையை அடுக்கு வைத்த இலக்கு அறியா நானும் தமிழன் தான்


• மைக்ரோ ஓவனும் ,ப்ரிட்ஜும் ஆரோக்யத்தின் அஸ்திவாரம்  என்று ஹோட்டலில் பகட்டு என்று பெருமை பேசும் நானும் தமிழன் தான் 


• தமிழை மூன்றாம் பாடமாக கூட எடுக்க தயங்கும் நீட் பள்ளிகளில் ,தமிழில் பேசினால் அபராதம் விதிக்கும் அடிமை பள்ளிகளில்  எம் பிள்ளைகளை படிக்க பெருமை பேசும் நானும் தமிழன் தான்


• மலம் கழிக்க கூட Western toilet மட்டுமே உபயோகிக்க தெரிந்த நாங்களும் தமிழன் தான்


• சமூக வலை தள போராளியாய் மட்டும் ,மீடியா சொல்வதெல்லாம் உண்மை என்று செல்போனில் வாட்ஸ் ஆப் ,பேஸ் புக் ,ட்விட்டர்  என்று பொழுதை வீணாக்கும் நாங்களும் தமிழர் தான் ,


• அணை கட்ட போராடாத , குளிர் பதன கிடங்குகளை கட்ட போராடாத – மதம் என்னும் போர்வையில் பிரித்தாளும் சூழ்ச்சியில் குளிர் காய விரும்பும் விட்டில் பூச்சிகளான நாமும் தமிழன் தான் .


• விவசாயம் உயிர் மூச்சு , விவசாயம் தொழில்களில் முதன்மை என்று வெட்டி பேச்சு பேசி . .டை கட்டிய முழு நேர கார்பரேட் அடிமைகளாய் மாறிப்போனதே தெரியாத நாங்களும் தமிழன் தான்
.

• ஹைபிரிட் முளைக்காத உயிரில்லா விதைகள்,ரசாயனம் கலந்து மலடாகி போன நிலத்தில் சிஸேரியன் போன்று ட்ராக்டர் கொண்டு சிதைத்த  நிலங்கள்...வெள்ளைதான் வேண்டும் என்று டபுள் பாலிஷ் அரிசி உண்ணுகிற நாமும் தமிழன் தான்


• ஆர்கானிக் உணவு, நஞ்ஜில்லா உணவு, இயற்கை உணவு, டாக்டர் சிவராமன் சொல்கிறார், அல் ஷிபா கியூர் ஷ்யூர் சொல்கிறார் என்று வெறும் ஏட்டுசுரக்காய் கதையோடு ஒரு சிறிதும் வாழ்வியலை, உணவை மாற்றாத நாங்களும் தமிழன் தான்


• எது உண்மை ,எது போலி  என்று இனம் பிரித்து அறிய முடியாத  அளவுக்கு மூலிகை கதைகள் பார்வேர்ட் செய்யும் திடீர் எழுத்தாளர் நாங்களும் தமிழர் தான்


• தாடி வைத்து ,சாமியார் வேடம் தரித்து , காலையில்  TV யில் ஆதாரமே இல்லாமல்  விடும் கட்டு கதைகளை உண்மை என நம்பும் நாங்களும் தமிழர் தான்


• நோயாளி வரும் போதே அவர்கள் அனுமதி இல்லாமல் படம் பிடித்து ,அதை தொலை காட்சியில் விளம்பர படுத்தி  நல்ல மார்கெட் டெக்னிக் தெரிந்த போலி வர்ம ஆசான்களின் பல ஆயிரம் .லட்ச கணக்கில்  பணத்தை இழந்து ஏமாந்து , உண்மையான மருத்துவர்கள் யார் என்று தெரிந்து கொள்ளாத நாங்களும்  தமிழர் தான்


• உள்ளே சாப்பிட கெமிக்கல் மருந்துகள் ,வெளியே பூச இயற்கை மருந்துகள் என்று ஆயுர்வேதம் என்றால் அழகு சாதன பொருட்கள்  என்று தவறாய் அறிந்த –தாய் மருத்துவம் ,தமிழர் மருத்துவமாம் சித்த  மருத்துவம்   எந்த அளவுக்கு வேலை செய்யும் என்று தெரியாத நாங்களும் தமிழர்கள் தான்   


மாற்றத்தால் ஆனது இந்த உலகு ..என்றுமே மாறாதது தமிழர் பாரம்பரியம் .
தமிழர் என்று சொல்லடா ..தலை நிமிர்ந்து நில்லடா என்று கர்வம் கொண்டு சுய அடையாளம் என்றும் இழக்காமல் ,

பாரம்பரியம் மாறாமல்,மரபை கட்டிகாத்து,சுதேசி பொருட்களை பயன்படுத்தி.சித்த,ஆயுர்வேத மருத்துவம் கொண்டு நோய் நீங்கி வாழ்வாங்கு வாழ மீண்டும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.


மரு. அ. முகமது சலீம் ( புனை பெயர் க்யூர்  ஷ்யூர்)., BAMS., M.Sc(உளவியல்)., M.Sc(யோகா)., M.Sc(வர்மம்)., MBA

Dr.ஐ.ஜவாஹிரா சலீம் .,BHMS., PG Dip Panchakarma ., PG Dip Acu

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவனை
கடையநல்லூர்    90 4222 5333
சென்னை         90 4333 6444
திருநெல்வேலி    90 4222 5999
ராஜபாளையம்    90 4333 6888
தேனி            90 4727 7577



Post Comment

செவ்வாய், ஜூன் 27, 2017

நீங்கள் அடுத்த வீட்டின் அந்தரங்கத்தை எட்டி பார்பவரா ?

உங்களது வீட்டில் நடப்பவற்றை யாராவது திருட்டுத்தனமாய் பார்க்க அனுமதிப்பீர்களா ?


டாக்டர் .அ .முகமது சலீம் ( cure sure ).,BAMS.,M.Sc.,MBA


ஒட்டு கேட்பது குற்றமா ?

மறைந்து இருந்து நோட்டம் விடும் பழக்கம் பெரிய நோயா ?


ஒரு செயல் அதை  செய்யும் போது குற்ற உணர்வு உங்களுக்கு வரும் என்றால் அது ஒரு தவறாகத்தான் இருக்க முடியும் . மனித உணர்வுகள் புனிதமானவை ..மீடியாக்கள் –டிவி நிகழ்சிகள் அனைத்தும் நாம் செய்வது குற்றம் என்ற உணர்வுக்கே வர முடியாமல் தொடர வைத்து விடுகிறது .




இப்போது நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக நூல் பக்கத்தில் உள்ள வீடியோக்களை எதேச்சையாக பார்க்கும் போது கவனித்த விஷயம் –அந்த வீடியோவின் பார்வையாளர்கள் கிட்டத்தட்ட எழு லட்சம். நான் அந்த தொலை காட்சியின் டி ர் பி யை பற்றி கணக்கு எடுக்கவே இல்லை . நம்மை அடுத்த வீட்டை எட்டிபார்க்கும் ஒரு மிக மோசமான் ஒரு கீழ்த்தரமான எண்ணத்தை நமது மனதில் குப்பையாக விதைக்கபோகிறோம் .









நீங்கள் மன நோயாளியாக மாற விரும்புவீர்களா ?

  • அடுத்தவரை ஒப்பிட்டு வாழ்வதே நமது எல்லா மன நோய்க்கும் காரணம்


  • மற்றவரின் அந்தரங்கம் அறிந்து கொள்வது சரி என்று பட கூடிய மோசமான மன நிலைக்கு தள்ளபடுவோம்


  •  கீழ்த்தரமான மன நிலையை மாற்றாமல் நாம் செய்யும் தவறுக்கு நாம் வக்கீலாகவும் ,அடுத்தவர் தவறுக்கு நீதிபதியாகவும் மாறி –குறையை ஒத்து கொள்ளாத மன நிலைக்கு தள்ளபடுவோம்


  • அடிமையாகி விடுவோம் – நம்மை நமது மன நிலையை தூய்மையாக்க முடியாது என்ற நிலைக்கும் –அடுத்து என்ன ? என்று நமது நேரத்தை குப்பையாக்கி அடிமையாய் கிடப்போம்


  • பாசம் ,பணிவு ,அன்பு ,உறவுகள் என்ற சொற்கள் இனி கனவு உலகத்தில் மட்டுமே இருக்கபோகிறது .நிகழ் உலகத்தை மறந்து  நிழல் உலகத்தில் மீள முடியா மன நோயாடு வாழ்வோம்


  • உயிர் போகும் அளவுக்கு கண் முன் பிரச்சனை இருந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் நமது கவனம் வேறு எதை நோக்கியோ பயணிக்கும் ..


  • நமது பாரம்பரியத்தில் –கலாசார அடையாளம் எல்லாம் இழந்து வெறும் சதை பிணங்களாய் வாழ்வோம் . நீச்சல் உடை அணிந்து நடு வீட்டில் இருக்கலாம் என்ற மேற்கத்திய கலாசாரம் இதன் மூலம் புகுத்த படும் போது நமது சுய அடியாளம் இழந்து பரதேசிகளாய் மாறிப்போவோம்


  • காசுக்காக எதை செய்யவோம் துணிவோம் ..பணம் எல்லாம் செய்யும் என்ற மன அமைதி இல்லா நிலைக்கு தள்ளபடுவோம்


  • Moral Value , Attitude எல்லாம் தலை கீழாய் மாறிபோகும் –வாழ்க்கை சீரழிந்து போகும்


  • இது என்னை பாதிக்காது என்று உங்களது மன நிலைக்கு மட்டும் தான் தள்ள படுவீர்கள்


  • சம தோஷ சம தாது ..பிரசன்ன ஆத்மேந்திர்ய மன என்ற –ஆரோக்யமான மன நிலை என்று ஒன்று எதுவும் இருக்க போவதில்லை ..நமது மனம் கேவலமான மன நிலைக்கு வந்து அதுவே இல்ல உடல் மன நோய்க்கும் காரணமாய் மாறி விடும்


பொழுதுபோக்கு நமது ஆயுள் முழு பொழுதையும் போக்கிவிடும் பயன் இல்லாமல் –நோயுடன் ..நீங்கள் இந்த வலையில் சிக்க விரும்புகிறீர்களா ?

நிகழ் காலத்தில் –உணர்வோடு –அமைதியோடு வாழ இயற்கை சித்தாந்தகளை கடைபிடிப்போம் .மெய் உணர்வோடு வாழ்வோம் .
இயற்கை ஆயுஷ் மருத்துவம் மற்றும் மன நல ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )






Post Comment

சனி, ஜூன் 24, 2017

உடல் எடை குறைக்க ஆரோக்கியமற்ற வழிமுறைகள்

மரணத்தை கூட வரவைக்கும் தவறான உடல் எடை குறைப்பு வழி முறைகள்



டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure ).,BAMS.,M.Sc.MBA
டாக்டர்.G.வர்தினி .,BHMS.


Danger  of Wrong W ay to Reduce Weight-




இந்த  தலைமுறையில்  இருக்கும் நம் அனைவரும் உடலின் எடை மீது மிக அதிக கவனம் செலுத்துகிறோம். இப்போதைய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் எடையை குறைக்க தீவிர சிந்தனை செய்கின்றனர். அதற்காக அவர்கள் அபாயகரமான காரியங்கள் பல செய்கின்றனர்.


எடை இழக்க பல வழிகள்  உண்டு.  ஆனால்  அது அனைத்தும் நல்லது அல்ல. இதனால் உடலுக்கும் மனதுக்கும் தீங்கு விளைவிக்கும் ஆற்றலும் உள்ளது. உடல்  எடையை குறைப்பதற்காக நம் மேற்கொள்ளும் வழிகளில்  உள்ள பயங்கரத்தை நாம் பார்ப்போம் .


எடை இழக்க ஆரோக்கியமற்ற வழிகள் :-


உணவை  தவிர்த்தல்  (Skipping  Meals , Fasting)

உடல் எடையை தவிர்க்க நம் அனைவரும் கையாளும்  ஒரே  வழி  உணவுகளை  தவிர்ப்பதாகும்.  ஆனால் இது  உடலுக்கு  மிக  மோசமான  விளைவுகளை  தரவள்ளது. மேலும்  உணவுகளை   தவிர்த்துக்கொண்டே வந்தால் காலப்போக்கில் வளர் சிதை மாற்றம்  அடைந்து உடல் எடையை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது . கடுமையாக   விரதம் இருந்தால் உடல் எடை   குறையலாம் . ஆனால்   நினைவில்  கொள்ளுங்கள்  நீங்கள்   இழக்கும்  எடை , விலைமதிப்பற்ற  தசைகளையும்  , வளர்ச்சிதை   மாற்றத்தையும்  குறைக்கிறது . இதனால்  வளர்ச்சிதை மாற்ற  நோய்கள்  மற்றும்  நீரழிவு   ஆபத்துகள்  வர  வல்லது .



குறைந்த   கலோரி  உணவுகள் :-

நம்  உடலுக்கு  கொழுப்புகள்  மிக  முக்கியம் . ஆரோக்கியமான   கொழுப்புகள்  , கொழுப்பை   எரிக்க   உதவுகிறது . குறைந்த  கலோரி  உணவுகளை  எடுப்பதால்  உடலுக்கு   தேவையான  வைட்டமின்கள்  மற்றும்  தாதுக்கள்   நமக்கு  சரிவர  கிடைப்பதில்லை .இதனால்  உடல்  எடையை   மட்டும்   குறைக்காமல்   நாம்  பல்வேறு  நோய்களையும்  வரம்  பெற்று  வாங்கிக்கொள்கிறோம்.

மருத்துவ  மேற்பார்வைப்படி  ஒரு  நாளைக்கு  1,200 கலோரிகள்   எடுக்க வேண்டும் . அவ்வாறு  எடுப்பதனால்  ஆரோக்கியமான  எடையோடு   நோயற்று  வாழலாம் .



மருந்துகள்   மற்றும்  மாத்திரைகள்  :-



எடை  இழப்புக்கான  மாயமான    மாத்திரைகள்  எதுவும்  இல்லை . ஆனால்  துரதிருஷ்டவசமான , கோகைன்  போன்ற   மருந்துகள்  விரைவான  ஆற்றல்  தருகின்றது . மேலும்  அது   இதயத்தையும் , மூளையையும்  கடுமையாக  பாதிக்கின்றது . மேலும்  மலச்சிக்கலையும்  உண்டுபடுத்தும் .இதை  தவிர்த்து  மேலும் , பல்வேறு   பாதிப்புகளையும்  வழங்கவள்ளது .


நீங்கள்   மருந்துகளை   எடுத்துக்கொள்ளும் .  நபராக  இருந்தால்  உங்கள்   மருத்துவரிடம்  அதன்  பக்கவிளைவுகளையும்  கேட்டுக்கொள்வது  நல்லது .



Fad Diet :-

ஆரோக்கியமற்ற   மற்றும்  சமநிலையற்ற  உணவு   மூலம்  விரைவான  எடை  இழப்பாகும் .எந்தவித  உடற்பயிற்சியும்  இல்லாமல்  இது  எடையை  குறைக்க  வல்லது . ஆனால் , இது  நமது   உடலில்  இருக்கும்  நீரினை  குறைக்கிறது .



அதிக    உடற்பயிற்சி  :-


ஊட்டச்சத்து  குறைவாக  உள்ளவர்கள்  , உடல்  எடையை  குறைக்க  தீவிரமாக  உடற்பற்சி  மேற்கொண்டால்  அது  பல  மோசமான  விளைவுகளை   தரவல்லது . இதனால்  நீர்ப்போக்கு  மற்றும்  *Electrolyte Imbalance*  போன்றவை  ஏற்படும் . உடல்  எடையை  இழக்க  வேண்டியது   அவசியம் . ஆனால்  அது  ஆரோக்கியமான  உணவு  மற்றும்  உடற்பயிற்சி   மூலம்  மேற்கொள்ள  வேண்டும்.




கடுமையாக   வாந்தி  எடுத்தல் :-



இப்போதைய   இளையர்கள்  பலர்  , தங்கள்  உண்டபின்  , அது  உடல்  எடையை  அதிகரிக்கும்  என்று எண்ணி ,சுயமாக  கட்டாயமாக  வாந்தி  எடுக்கின்றனால்  இதனால்  உடல்  எடை  குறையும்  என்கிறார்கள் . இது  மிகவும்  தவறு . மீண்டும்  மீண்டும்  வாந்தியெடுத்தால்  உமிழ் நீர்ச்சுரப்பிகளில்   நீர்போக்கு  மற்றும் வீக்கத்தை  ஏற்படுத்தும்   அதே  போல் , வயிற்று  அமிலம்  உங்கள்   உணவுக்குழாய்  மற்றும்  பல்  சிதைவை  ஏற்படுத்தும்   மேலும்  Bullumia  என்ற  வழிவகுக்கும் . 




நீர் சத்தை  இழக்கும் கழிவு நீக்க  மற்றும்  Detox   Plans :-

உடலில்  இருக்கும்  நீரையும்  , மலத்தையும்  வெளிக்கொண்டு  வருவது  ஆபத்தானது .  இதனால்  நீர்போக்கு  மற்றும்  Electrolyte  Imbalance போன்றவை  ஏற்படுத்தும் . மருத்துவமேற்பார்வை இல்லாமல்    திரவம்  நிறைய  இழப்பு  ஆபத்தானது .மேலும்  உண்ணாவிரதத்தை  கடைபிடித்தால்  அது  அபாயகரமான   பல  பாதிப்புகளை  தரவல்லது .அதற்கு  பதிலாக , நீங்கள்  சாப்பிட  வேண்டிவற்றை  கவனத்தில்  கொள்ளுங்கள்   உங்கள்  உடலை  சுத்தப்படுத்தவோ  அல்லது  குறைக்கவோ  விரும்பினால் , நிறைய  தண்ணீர்  குடிக்கவும் ,உயர்  ஃபைபர்  உணவுகளை  நிறைய  சாப்பிடவும் . 




அறுவை  சிகிச்சை :-




இது , கடைசியான  வழி , உடல்  எடை  குறைக்க  பல்வேறு வழிகள்   தோற்றுபோனாலும்  அறுவை  சிகிச்சை   எடையை  குறைக்கலாம் .



ஆனால்  இது  பல்வேறு   பக்கவிளைவுகளை   தரவல்லது .
உடல்  இழப்பு   என்பது  ஆரோக்கியமான  எடையை  தக்கவைப்பதே  ஆகும் . நாம்  வாழும்  வாழ்க்கைக்கு  ஏற்ப  நமது  உணவு  முறைகளை   தேர்ந்தெடுக்கவேண்டும் . மேலும்  ஆரோக்கியமான  உணவு, மற்றும்  ஆரோக்கியமான  உடற்பயிற்சியை  நோயில்லாத  வாழக்கைக்கு  வழிசெய்யும்.



இயற்கை மருத்துவ சிகிச்சை பெற சிறந்த ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர்  90 4222 5333
திருநெல்வேலி  90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888

சென்னை 90 4333 6000 (ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை கீழ்கட்டளை, சென்னை)

Post Comment

சனி, மே 13, 2017

நீட் பரீட்சை எழுதாமல் தமிழ் நாட்டில் மருத்துவர் ஆகலாம் ?



தமிழ் நாட்டில் டாக்டராவது மிக மிக எளிது

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA


மருத்துவர் ஆவது தமிழ் நாட்டில் எப்போதுமே எளிது ..

வட இந்தியாவில் இருந்து வரும் மக்களுக்கு மருத்துவர் ஆவதில் முதல் உரிமை ..




கல்வி தகுதி –தேவையே இல்லை ..

தமிழில் பேச கூட தேவை இல்லை .அரை குறை தமிழ் போதும்

மஞ்சள் நிற போஸ்டரை –ஊரெல்லாம் ஒட்டி நானும் டாக்டர் என்று சொல்லலாம் ..

லோக்கல் டிவியில் அனால் கட்டாயம் விளம்பரம் கொடுக்க வேண்டும் ..
எந்த ஒரு பதிவு எண்ணும் அவசியம் இல்லை

யாரும் இவர்களை கேட்க முடியாது ..கேட்டாலும் ஓடிபோய் வேறு இடத்தில் கிளினிக் போடுவார்கள் ..

கஷ்டப்பட்டு ஐந்தரை வருட BAMS படிப்பை அவர்களது பெயர்க்கு பின்னால் அசால்டாக சேர்த்து விடுவார்கள் ..உண்மையில் இவர்களில் பலர் பள்ளி படிப்பை முடிக்காதவர்கள் .

தமிழ் நாட்டில் சாபக்கேட்டில் இந்த சூழ்நிலையும் ஒன்று ..

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு –பிஸ்வாஸ் மூல பவுந்திர கிளினிக்கை திறக்க ,ஆண்மை குறைவு என்று போஸ்டர் ஊரெல்லாம் அடித்து ஒட்ட அனுமதி அளித்திருக்கிறது ..

தப்பான போஸ்டரை ஓட்டினால் போலீஸ் தண்டனை ..இவர்களுக்கு இல்லை போலும் ..

இவர்கள் கிளினிக் சென்று பார்த்தல் –ஊசி மருந்து என்று ஆங்கில மருத்துவர்கள் தோற்று போவர்கள் ..

இவர்களிடம் சிகிச்சை பார்த்து ஏமாந்து மலத்தை அடக்கும் திறனை இழந்த நோயாளிகள் ஏராளம் ஏராளம் ..

முதல் தடவை சிகிச்சை செல்லும் போது வெறும் நூறு ரூபாய் பீஸ் என்பவர்கள் ..ஆசனவாய் புண் ஆன பின் காட்ட செல்லும் போது-உங்களுக்கு மட்டும் தான் இப்படி ஆகி விட்டது –டிரஸ்ஸிங் செய்ய தினமும் ஐநூறு ...என்று இருபதாயிரம் காலி செய்த மக்கள் ஏராளம்.


யார் இந்த பூனைகளுக்கு மணி கட்டுவது ?

இந்த நிலைமை எப்போது மாறும் ?

மக்களின் ஏமாறும் மன நிலை எப்போது மாறும் ?


Post Comment

வெள்ளி, ஏப்ரல் 21, 2017

உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாகும் இடம் இந்தியா..

உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாகும் இடம் இந்தியா..
டாக்டர்.அ.முகமது சலீம் ( cure sure).,BAMS.,M.Sc.,MBA

ஆயுர்வேத மருந்து சாபிட்டால் கிட்னி பெயிலியர் ஆகி விடுமா சார்  என்று கேட்கும் பல நோயாளிகள் இங்கே உள்ளனர்.நமது பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேத ,சித்த மருந்துகளை நோயாளிக்கு பரிந்துரைத்தால் நோயாளிகள் நம்மிடம் கேட்கும் முதல் கேள்வி பக்க விளைவுகள் ஏதும் இருக்குமா சார் ? அவர்களுக்கு நாம் பொறுமையாக எப்போதும் சொல்வது –நிச்சயம் இல்லவே இல்லை .தகுதி வாய்ந்த மருத்துவர் ,தகுதி வாய்ந்த மருந்துகளை ,எப்படி சாப்பிட வேண்டும் ,எவ்வளவு அளவு எடுத்து கொள்ள வேண்டும் ,எந்த அனுபானத்துடன் எடுத்து கொள்ள வேண்டும் என்பதை பொருத்து மருந்துகளின் நல்ல விளைவுகளில் நோயின் நிவாரணம் இருக்கிறது .



கொஞ்சம் கூட பயமே இல்லாமல் ,மருத்தவரின் எந்த ஒரு பரிந்துரையும் இல்லாமல் மெடிகல் ஷாப்பில்,பல சமயங்களில் மளிகை கடைகளிலும் கிடைக்க கூடிய ஆங்கில மருந்தை எடுத்து கொள்ள கூடிய மக்களை நினைத்து ஒரு ஆச்சர்யம் ஏற்படத்தான் செய்கிறது..

இன்றைக்கு உள்ள கஷ்டம் நீங்கினால் போதும் –நாளை என்ன ஆனாலும் பரவாயில்லை என்ற மன நிலையில் தான் பல நோயாளிகள் –ஆங்கில மருந்தை எடுத்து கொண்டு உள்ளார்கள் ..உண்மையில் அவர்கள் மனதில் ஆங்கில மருந்து ஆபத்து இல்லை என்ற எண்ணம் உள்ளது என்றே தோன்றுகிறது.

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக ஆராய்ச்சி செய்து ,அந்த சோதனை ,இந்த சோதனை என்று பல அறிவியல் அணுகு முறைக்கு மேலே தான் ஒரு ஆங்கில மருந்து உருவாக்கபடுகிறது. பல ஆண்டுகள் மக்கள் பயன்படுத்திய பின்னரும் அவர்களது ஆராய்ச்சிகள் தொடர செய்கிறது.ஆனால் பக்க விளைவுகள் உள்ளது என்று பின்னர் அதே மருந்தை தடை செய்ய வேண்டும் என்றும் திடீர் என்று சொல்லி விடுகிறார்கள். தடை என்று சொன்ன அதே மருந்துகள் இந்தியாவில் மட்டுமே தாராளமாக கிடைக்கிறது. மருந்து கம்பெனிகளின் வணிக முறைகள் நினைத்தால் ஒரு போரை விட பயங்கரமாக உள்ளது ..என்ன செய்ய

கடந்த சில வருடங்களில் உலகம் எங்கும் தடை செய்யபட்ட ஆங்கில மருந்தின் எண்ணிக்கை முன்னூறுக்கும் மேலே ..அவை எல்லாம் சரியான பல வருட ஆராய்ச்சிக்கு பின் தான் வெளிவந்துள்ளது என்பது தான் ஆச்சர்யமான தகவல் .




மருந்துகளின் combination என்ற ஒரு நிலை இந்தியாவில் மட்டுமே தான் அதிகம் உள்ளது . ஒரு மருந்தோடு இன்னொரு மருந்தை இணைத்து ஒரு மருந்தாக்கும் இந்த combination நிலை எல்லாமே ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்த படவே இல்லை என்பது தான் உண்மை .இந்திய அரசாங்கமே முன்னூறுக்கும் மேற்பட்ட Combination அங்கில மருந்தை தடை செய்துள்ளது –அதை அரசு gezzetலும் வெளி விட்ட பின்னும் அவை மிக மிக தாராளமாக கிடைக்க செய்கிறது


இந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத் தொட்டியாகத்தான் இன்றளவும் தெரிகிறது. ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சேர்த்துவைக்கப்படும் பிளாஸ்டிக் , இரும்புக் குப்பைகள் வந்து கொட்டுவது இந்தியாவில்தான். அதுப்போல உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாவதும் இந்தியாவில்தான்.

பலநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் மட்டும் விற்பனையில் இருக்கும் கூட்டு மருந்துகள் எத்தனை தெரியுமா? முன்னூறுக்கும்  மேலே ..


சரி, இப்போது அதில் சில மருந்துகளை அவை என்ன என்ன மருந்துகள் என்று  பார்ப்போம்.

1 . அனால்ஜின் ( Analgin) பயன்பாடு – வலி நிவாரணி
பக்க விளைவு – எலும்பு மஜ்ஜை சீர்கேடு

2 . நிமிசுலைட் (Nimisulide) பயன்பாடு – வலி நிவாரணி மற்றும் காய்ச்சல்
பக்க விளைவு – கல்லீரல் செயல் இழப்பு

3 . பினைல் ப்ரோபநோலமைன் ( phenyl propanolamine பயன்பாடு – சளி மற்றும் மூக்கு ஒழுகுதல்
பக்க விளைவு – மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் திடீர் அடைப்பால் சுயநினைவு இழத்தல்

4 . சிசாபிரைடு ( cisapride ) பயன்பாடு – மலச்சிக்கல் மற்றும் அதிக அமிலம் சுரத்தலை கட்டுப்படுத்துவது.
பக்க விளைவு – இதயத் துடிப்பு சீர்கேடு

5 . குயிநோடக்ளர் (quinodochlor ) பயன்பாடு -வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல்
பக்க விளைவு – கண்பார்வை பாதிப்பு

6 . பியுரசொளிடன் (Furazolidone ) பயன்பாடு – வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல்
பக்க விளைவு – புற்றுநோய்

7 . நைட்ரோபியுரசொன் (Nitrofurozone ) பயன்பாடு – கிருமிகளை அழித்தல்
பக்க விளைவு – புற்றுநோய்

8 . ஆக்சிபென் பியுட்டசொன் ( Oxyphenbutozone ) பயன்பாடு – வலி நிவாரணி
பக்க விளைவு – எலும்பு மஜ்ஜை சீர்கேடு

9 . பைப்பரசின் ( Piperazine ) பயன்பாடு – வயிற்றுப் புழுக்களை அழித்தல்
பக்க விளைவு – நரம்புச் சிதைவு

10 . பினப்தலின் (Phenophthalein ) பயன்பாடு – மலமிலக்கி
பக்க விளைவு – புற்றுநோய்

சரி, இந்த பத்து மருந்துகளின் விற்பனைப் பெயர்கள் தெரியணும் இல்லையா

1 . அனால்ஜின் – Paralgan-M,Novalgin,
2 . நிமிசுலைட் -Monogesic,N lid,Nam,Nelsid,Nimbus,Nimulid,Nise,Nugesic,Sumo,Zydol
3 . பினைல் ப்ரோபநோலமைன் – D-cold,Coldact,
4 . சிசாபிரைடு -Alipride,Cisapro,Santiza,Unipride
5 . பியுரசொளிடன் – Furoxone
6 . பைப்பரசின் -Piperazine citrate
7 . குயிநோடக்ளர் – Entero quinol

இதைத்தான் நம் சில ஆங்கில மருத்துவர்கள் தடை செய்யப்பட்டாலும் பரவாயில்லை என்று எழுது எழுதுன்னு எழுதுகிறார்கள். ஏன் நோயாளிகளே  வலுக்கட்டாயமாக மருத்துவரை பரிந்துரைக்கவும் செய்து விடுகிறார்கள் . நமக்கு உடனே நோய் சரியாக வேண்டும், பக்க விளைவுகள் வந்தால் பின்னாடி பார்த்துக்கொள்ளாலாம் என்கிற நினைப்பு. இதற்கு முழுக்காரணமும் மருந்து நிறுவனங்களும் , சில மருத்துவர்களுமேதான். 

ஒட்டு மொத்த ஆங்கில மருத்துவர்களை குறை சொல்லவே முடியாது. மிக சில நாட்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கும் பல ப்ரிஸ்கிரிப்ஷன் மருந்தைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பல ஆண்டுகள் ஒரு துளி பயமும் இன்றி மெடிகல் ஷாப்பில் எடுத்து கொள்ளும் நோயாளிகளே இந்தியாவில் மிக மிக அதிகம்

தேவை விழிப்புணர்வு –
மருந்தின் அட்டைபெட்டியில் ஆபத்து என்று போட தேவை இல்லை ...உள்ளே வைக்கும் மிக மிக மிக சிறிய பேப்பரில் மிக மிக மிக பொடி எழுத்தில் இந்த மருந்து ஆபத்து விளைவிக்கும் என்று சொன்னால் போதும் என்று இங்கே ஆட்சியாளர்களே  –மருந்து கம்பெனிகளின் வேலையாட்களாய் மாறிய இந்தியா தான் என்னை போன்ற சராசரி மக்களை பயமுறுத்துகிறது.

இந்தியா நமது தாய் நாடு என்றால் ..இந்திய மருத்துவமே நமது தாய் மருத்துவம் .தாய் மருத்துவம் முதலில் நாடுவோம் ..அதையும் தரமான படித்த அனுபவும் வாய்ந்த அல்லது உண்மையில் மருத்துவ பாரம்பரிய மிக்க மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுதில் தவறு இல்லை என்பது எனது தனிபட்ட கருத்து..போலி மருத்துவரிடம் ,போலி மருந்துகளிடம் ,தடை செய்யப்பட அங்கில மருந்துகளிடம் நாம் எச்சரிக்கையாய் இருப்போம்

தரமான இந்திய மருத்துவ சிகிச்சைக்கு ,தரமான் தாய் மருத்துவ சிகிச்சைக்கு அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை #அல்_ஷிபா_ஆயுஷ்_மருத்துவனை
#கடையநல்லூர் 90 4222 5333
#திருநெல்வேலி 90 4222 5999
#ராஜபாளையம் 90 4333 6888
#சென்னை 90 4333 6000


Post Comment