செவ்வாய், ஏப்ரல் 28, 2020

தேவை வெள்ளையன்..

தேவை வெள்ளையன்.. 


டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்


உடலை தாக்க வரும் நோய்களிடமிருந்தும், கிருமிகளிடமிருந்தும் காத்துக்கொள்ள நமக்கு தேவை இரத்த வெள்ளை அணுக்களின் பலம்..

நோய்யெதிர்ப்பு சக்தி என்பது போர் படை வீரர்களை போல் செயல்படும் லியுகோசைட்ஸ் ( இரத்த வெள்ளை அணுக்கள்)...

இந்த வெள்ளை அணுக்களின் பிறப்பிடம் எலும்பு மஜ்ஜை, நிணநீர் சுரப்பி ஆகும்.. இவற்றில் ஆயுட்காலம் சராசரியாக மூன்று வாரங்கள்...

வெள்ளை அணுக்களின் சராசரி அளவு 4000 - 11,000 ஆகும்... இந்த அளவிலிருந்து கூடினாலும் ( லுகீமியா ), குறைந்தாலும் (லியூகோபீனியா) நோயாகவே கருதப்படும்..

வெள்ளை அணுக்களை ஐந்து வகைகளாக பிரித்து விளக்கப்படுகிறது..
அவை
நியூட்ரோபில்
ஈசினோபில்
பேசோபில்
லிம்போஸைட்
மோனோஸைட்

இந்த ஐந்து வகை வெள்ளை இரத்த அணுக்களின் அளவுகளும்,  வேலைப்பாடுகளும் மாறுபடுகிறது..

பொதுவாக இவற்றை அடிப்படையாக கொண்டே நோய்களுக்கான மருத்துவம் கொடுக்கப்படுகிறது...

*நியூட்ரோபில்*
சராசரி அளவு எழுபது சதவீதம்... இந்த வகை இரத்தஅணுக்கள் அதிகரிப்பது புற்றுநோய், குடல்வால் நோய் போன்ற அலர்ஜி, மூட்டு சம்மந்தமான நோய்கள், மேலும் சில இரத்தக்கோளாறுகளை குறிக்கிறது...
மருந்துகளின் பக்கவிளைவு, வைட்டமின் பி12 குறைவு, ஒருவகை காசநோய், இரத்தசோகை போன்றவற்றால் இவ்வகை வெள்ளை இரத்த அணுக்கள் குறையும்..

*லிம்போஸைட்*
சராசரி அளவு இருபது சதவீதம்.. குழந்தைகளுக்கு பொதுவாக ஐம்பது சதவீதம் காணப்படும்..காசநோய் போன்ற நாள்பட்ட நோய்கள், அம்மை நோய், ஹோர்மோன் கோளாறுகள் காரணமாக இதன் எண்ணிக்கை அதிகரிக்கும்.. எய்ட்ஸ், புரதசத்து குறைவு போன்றவற்றால் இதன் அளவு குறையும்..
மேலும் இவை நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமான அணுக்கள்..

*மோனோஸைட்*
சராசரி அளவு நான்கு சதவீதம்.. டைபாய்டு, மலேரியா, இதய உறை நோய், மூட்டு வாத நோய், காசநோய் போன்றவற்றால் இவற்றின் அளவு அதிகரிக்கிறது.. எலும்பு மஜ்ஜையில் பிரச்சனை என்றால் இதன் அளவு குறைகிறது.. மேலும் உடலில் நுழையும் நோய்க்கிருமிகளை போரிட்டு அழிக்கும் பெருமை இவ்வகை அணுக்களை சேரும்..

*ஈசினோபில்*
சராசரி அளவு நான்கு சதவீதம்.. ஆஸ்துமா, குடல்புழு, சிலவகை புற்றுநோய் இதன் அளவை அதிகரிக்கும்.. குறிப்பாக ஈசினோபிலியா நோய் பாதிப்புடையவர்களுக்கு இதன் மொத்த அளவை பரிசோதிப்பதுண்டு..

*பேசோபில்*
சராசரி அளவு ஒரு சதவீதம் மட்டுமே.. உணவு ஒவ்வாமை, நாள்பட்ட நோய்கள், புற்றுநோய், கதிரியக்க சிகிச்சை போன்றவற்றால் இதன் அளவு அதிகரிக்கிறது.. மன அழுத்தம், தைராய்டு கோளாறு காரணமாக இதன் அளவு குறைகிறது...

இந்த அடிப்படை இரத்த அணுக்களின் அளவை, காரணங்களை, விளைவுகளை அறிந்துவைத்திருப்பது இக்காலத்தில் அவசியமான ஒன்றாகும்...

மருத்துவ ஆலோசனைக்கு, சந்தேகங்களுக்கு அணுகவும்....

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277 577
சென்னை 9043336000

Post Comment

0 comments:

கருத்துரையிடுக