வெள்ளி, ஏப்ரல் 24, 2020

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை வழங்கிய -முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இலவசமாய் பருகிய கப சுர குடிநீர்.

 கப சுர குடிநீர் இலவசமாய் கடையநல்லூரில் ....தொடர்ந்து பல நாட்களாக ..



அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை வழங்கும் -முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இலவசமாய் பருகிய கப சுர குடிநீர்.

கொரோனா போன்ற நோய்களில் இருந்து தற்காத்து கொள்ள உடல் எதிர்ப்பு சக்தி அதிகமாக்குவது மட்டுமே ஒரே வழி என்று நாம் அனைவரும் அறிவோம்.

அதனை உணர்ந்த தமிழக அரசும் ஆரோக்கியம் எனப்படும் ஒரு ஷகீம் மூலமாக நேற்று 23/04/2020 கப சுர குடிநீர்   மக்களுக்கு பரிந்துரைத்துள்ளது ..


இதை உணர்ந்த நமது கடைநல்லூர் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை கடந்த சில நாட்களாக மக்களுக்கு இலவசமா வீதி தோறும் வழங்கி வருகிறது.

ஒரே ஒரு டீ கேனில் போட்டு எடுத்து கொண்டு, ஐம்பது மக்களுக்கு கொடுக்க போட்டோ எடுத்து சேவை செய்வதாய் பலரும் விளம்பர படுத்தி கொண்டு இருக்க நாங்கள் எங்களது மருத்துவ மனை குழு சத்தம் இல்லாமல் ஊர் முழுவதும் கொடுத்து விடுவோம் என்று உறுதி கொண்டோம் ..

எங்களது மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் ஜாவாஹிரா பானு மற்றும் டாக்டர் பிரியங்கா தலைமையில், மருந்தாளுநர்கள் திரு. மணி , திரு அருண் ,திரு. முப்புடாதி, பஞ்ச கர்ம தெரபிஸ்ட்  ஜான் மற்றும் பின்னணியில் ஓட்டுநர்கள்  திரு யாசிர், ஏஜென்சி சேல்ஸ் தலைமை திரு சாகுல் , லேப் டெக்நீஷியன் திரு இப்ராஹீம் .. அகிலா, முப்படாதி ,ஷகீலா அவர்களின் உதவியோடு இந்த இலவச கப சுர குடிநீர் வழங்கி வருகிறோம்.
கப சுர குடிநீர் ஒரு நாளைக்கு 150 லிட்டர் காய்ச்சி கொடுக்க  பிரியாணி புகழ் ரஹ்மானியா புறம்  ஷரீப் ஹோட்டல் முதலாளி திரு முகமது அலி அவர்கள் தினமும் அவர்களது பிரியாணி தேகஷாவில் பதினைந்து குடம்  தண்ணீரில் கப சுர குடிநீர் காய்ச்சி எங்களுக்கு  கொடுத்து வருகிறார். நாங்கள் அவர்க்கு தேவையான அளவுக்கு கப சுர குடிநீர் சூரணத்தை கொடுத்து 150 லிட்டர் காய்ச்சி இலவசமாய் ஊர் முழுவதும் வழங்கி வருகிறோம்


இது வரை எங்களது மருத்துவமனை அமைந்துள்ள தலைமை இடமான கடைநல்லூரில் கடந்த சில நாட்களாக நாங்கள் ஒரு நாளைக்கு கிட்டதட்ட 150 லிட்டர் அளவுக்கு கப சூடிநீர் காய்ச்சி கிட்டதட்ட ஒரு நாளைக்கு நான்காயிரத்து ஐநூறு நபர்கள் குடிக்கும் அளவுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம்.

இது வரை சராசியாக பயன்பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்த பட்சம் முப்பதாயிரத்திற்கு மேல் இருக்கலாம்.. இன்னும் சேவை தொடரும். இன்றும் சேவை செய்ய எங்களது குழு பணியாற்றி கொண்டு இருக்கிறது . நோன்பு ஆரம்பிப்பதால் மற்ற இடங்களில் கிருஷ்ணாபுறம், மேல கடையநல்லூர், மாவடிக்கள் பகுதிகளிலும் இன்னும் தேவை படுகிற இடங்களில் தொடர்ந்து இலவச கப சுர குடிநீரை வழங்க உள்ளோம்.

கடந்த பல மாதங்களாக எங்களது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையில் நாங்கள் தொடர்ந்து இலவசமாக நிலவேம்பு குடிநீரை வழங்கி வந்துள்ளோம். இதை போன்று வருகிற எல்லா நாட்களிலும் ஊரடங்கு உத்தரவு தளர்ந்த பின் தினமும் இலவசமாக வழங்க உள்ளோம் .. அது வரை வீடு வீடாக தயார் செய்து தக்க பாதுகாப்புடன் கப சுர குடிநீரை வழங்க உள்ளோம் .













இந்த சேவை பணியில் நாங்கள் யாரிடமும் எந்த உதவியும் இது வரை கேட்டதில்லை. எந்த இயக்கமும் அமைப்பும் பங்கு பெற வில்லை . இனி எந்த பொது நல அமைப்புகள் , இயக்கங்கள் , சேவை செய்யும் மனப்பான்மை உள்ளவர்கள் யார் கேட்டாலும் பெரிய அளவில் வழங்க முற்பட்டால் நாங்கள் இணைந்து செயல்பட தாயாராக உள்ளோம். தக்க அனுமதி , அரசின்  உத்தரவுகளை மீறாமல் செயல் பட தயாராக இருந்தால் நீங்களும் எங்களுடன் சேர்ந்து கொள்ளலாம்.


மருத்துவ சேவையில் என்றென்றும்
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
பதினைந்து படுக்கை வசதி கொண்ட ஆயுர்வேத, ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர், தென்காசி மாவட்டம்
செல் 9042225333

Post Comment

0 comments:

கருத்துரையிடுக