வியாழன், ஏப்ரல் 30, 2020

நோய்களின் நுழைவாசல் .

நோய்களின் நுழைவாசல் ..

டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்

நமது உடலை பாதிக்கும் நோய்கள் அனைத்திற்கும் நமது வாய்க்கும் ஒரு பெரிய தொடர்புண்டு..

வாய் துர்நாற்றம் மலசிக்கலை, நாவின் வெள்ளை படிமம் செரிமான கோளாறை, பற்கள் சிதைவு கால்சியம் குறைபாட்டை, கடைவாய் புண் அல்சரை, ஈறுகளில் வீக்கம், ரத்தக்கசிவு கிருமி தாக்கம், சத்துக்குறைபாடை குறிக்கிறது ... இவ்வாறு நாக்கின் நிறம், பற்கள், ஈறுகள், கடைவாய் முதலியவற்றை கொண்டு நமது உடலில் உள்ள நோய்களை அனுமானிக்கலாம்..

உடல் உபாதைகளை கண்டறிய துணைசெய்வதோடு மட்டுமல்லாமல் நோய் தாக்கத்தை தடுப்பதற்கும் பேருதவி புரிகிறது...வாய், பற்கள், உமிழ்நீர் கொண்டு சரியாக உணவை மென்று விழுகுவதால் பெரும்பாலான நோய்கள் (சர்க்கரை வியாதி, கொலஸ்ட்ரோல் உட்பட) தடுக்கப்படுவதோடு நோய் கிருமிகளிமிருந்தும் பாதுகாக்கிறது...

பல்துலக்குவதுடன் வாய் சுத்தம் அடைந்துவிடுவதில்லை... சரியாக பராமரிப்பு  பற்றியும், நோய்க்கான சிகிச்சைகளுள் ஒன்றாகவும் ஆயுர்வேதம் மிக தெளிவாக தினச்சரியை என்னும் அத்யாயத்தில் விளக்குகிறது...

*கண்டூசம் (oil pulling)/ கவளம் (gargling )...*

*பலன்கள்...*
முகத்தில் உள்ள சுருக்கங்கள் மாறுகிறது,
குரல் வளம், முகத்தில் உள்ள தசைகள், வாய் புத்துணர்ச்சி மேம்படுகிறது.. சுவையின்மை, வாய்ப்புண்,  வாய்க்கசப்பு, தொண்டை வறட்சி நீங்குகிறது....கண், மூக்கு, காது சம்பந்தமான நோய்களை குணமாக்குகிறது.. உதட்டில் உள்ள வெடிப்பு, பற்சிதைவு, பற்கூச்சம்,  நெஞ்செரிச்சல், குமட்டல், ஈறுகளில் வீக்கம், இரத்த கசிவு, தொண்டை வலி, டான்சில்ஸ், மூக்கடைப்பு, கிருமி தாக்கம் சரிசெய்கிறது. .. ஒற்றை தலைவலி, மூக்கடைப்பு, முகவாதம் போன்ற நோய்களுக்கு தீர்வளிக்கிறது ...

*பரிந்துரைக்கப்படுபவைகள்...*
எள் எண்ணெய்
ஆமணக்கு எண்ணெய்
தேங்காய் எண்ணெய்
கடுகெண்ணை
பாதாம் எண்ணெய்
பால்
மோர்
உப்பு, மஞ்சள் கலந்த வெந்நீர்
ஆல மர பட்டை கஷாயம்
அத்தி மர பட்டை கஷாயம்
கருங்காலி மர பட்டை கஷாயம்...
ஆகியவைகளை கொண்டு 10 நிமிடங்கள் வரை பயிற்சி பெற்று கடைபிடிக்கலாம்...

கிருமிகளின் முக்கிய நுழைவாயில் நமது வாய்.. கிருமிகள் (கொரோனாவும் அடங்கும் ) அளிக்கப்பட்டால் மட்டுமே நோய்த்தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியும்..

சமூக ஆரோக்கியம் ஒன்றே எங்களின் குறிக்கோள்..

மருத்துவ ஆலோசனைக்கு, சந்தேகங்களுக்கு அணுகவும்...

AL SHIFA AYUSH HOSPITAL
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000

Post Comment

0 comments:

கருத்துரையிடுக