வெள்ளி, ஏப்ரல் 03, 2020

வைரஸ்....


*வைரஸ்....* 


டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,M.Sc.,MBA

பிரபஞ்சமானது  ஓர் அறிவு உயிரினம்  முதல் ஆறறிவு ஜீவன் வரை அனைத்திற்கும் பொதுவானது மட்டுமல்ல அதைத்தாண்டி கண்களுக்கு தென்பட்டிராத நுண்ணுயிர் கிருமிகளுக்கும் (பாக்டீரியா, வைரஸ் ) பொதுவானதே...


இவ்வுலகில் பலம் பெற்றிருக்கும் ஒருவன் பலம் குறைந்தவனை ஆக்கிரமிக்கின்றான்...


பலம் வாய்ந்த சிங்கம் பலம் குன்றிய விலங்கை வேட்டையாடி உணவாக்கும்...


பலம் பொருந்திய நாடு மற்ற குறுகிய நாட்டை தன் வசப்படுத்தும்...


பலம் மிகுதியானவன் பலஹீனமானவனை வெற்றிகொள்கிறான்....


இது மிக இயல்பான நிகழ்வுகள்...



இன்றும் நாம் கற்க வேண்டியது இதுவே... வைரஸ் எனும் பலம் கொண்ட உயிர் குடிக்கும் எதிரியை நோய் எதிர்ப்பு பலம் கொண்டு வெல்வதே ஆகும்....


ஆயுர்வேதம் நோய் எதிர்ப்பு சக்தியை மூன்று வழிகளில் பெறலாம் என சொல்கிறது

1) Constitutional (மரபுஅணு  வழி கிடைப்பது)
2) Temporal (அதாவது சிலருக்கு குளிர்காலத்தில் sinusitis தொல்லை ஏற்படும் அவர்கள் வெயில் காலத்தில் ஆரோக்கியம் மிகுந்து இருப்பர்... சிலருக்கு வெயில் காலத்தில் ஒற்றை தலைவலி உண்டாகும் அவர்களே குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருப்பர்... )
3) Acquired (வாழ்க்கை முறையில் பெறுவது )


நோய் எதிர்ப்பு சக்தி அனைவரிடமும் உண்டு... அது பலம் வாய்ந்ததா அல்லது பலம் குன்றியதா என்பதை நமது *வாழ்க்கை முறையே* நிர்ணயிக்கும்...



எவ்வாறு/எதை அடிப்படையாக்கி  நிர்ணயிக்கிறது?


இரண்டு விஷயங்களை கொண்டு நிர்ணயிக்கின்றது... 1)அன்றாட உணவு
2)அன்றாட உடல் உழைப்பு


மிக எளிதானது போல் தோன்றலாம் ... ஆனால் எளிதல்ல...


 அன்றாட உணவின் கீழ் உணவு உற்பத்தியிலிருந்து(அதிக பூச்சி கொல்லி மருந்து தெளிக்கப்படாமல் )  ஆரம்பித்து உணவு சமைக்கும் பாத்திரம்(மண் பாண்டம்(சிறந்தது ) /ஈயம் /எவர்சில்வர் ), பயன்படுத்தப்படும் நீர்(சுத்தீகரிக்கப்பட்ட நீர் /மழை நீர்(சிறந்தது ) /நிலத்தடி நீர் /கடல் நீர் ), சேர்க்கப்படும் பொருள்கள் (அஜினோமோட்டோ (வேண்டாம் )), உண்ணும் முறை (வ்ருத்த அகாரம் ), உண்ணும் நேரம் (அகால போஜனம் ), உண்ணவின் அளவு என இத்தனையும் அடங்கும்...


அன்றாட உடல் உழைப்பின் கீழ் காலையில் எழுந்திருக்கும் நேரம்(ப்ரம்மமுகூர்த்தம் ), நாற்பது நிமிடங்கள் உடற்பயிற்சி, மனமார்ந்த  பிராத்தனை, எட்டு மணி நேர மனஅழுத்தம் இல்லா  வேலை, பதற்றமில்லா சொந்த வேலைகள், சுகாதாரமான சுற்றம், கவலைகள் இல்லாத மகிச்சியான  வாழ்க்கை...இவை அனைத்தும் அடங்கும்.


இவை அனைத்தையும் முறையே பெற்றவன் நோய் எதிர்ப்பு சக்தி பலம் பெற்றவன் ஆகிறான்....


நடைமுறைக்கு ஒத்துவருவதை பற்றி பேசுங்கள் எனும் உங்க மைண்டு வாய்ஸ் கேட்கிறது...


நடைமுறைக்கு ஒத்துவரும் நோய் எதிர்ப்பு சக்தி பலம் பெற எளிய வழிமுறைகள்...


ஒரு பொருள் வாங்கினால் அதனுடன் அதனை பயன்படுத்துவதற்கான guidelines manual பெற்று அதன் படி பயன்படுத்துகிறோம்...


இந்த உடலை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற வழிகாட்டல்களை (தினச்சரியா, ரிதுச்சரியா  ) கொண்டது ஆயுர்வேதம்... பயன்படுத்த தவறிவிடுகிறோம்...


நம்மில் பலரும் வருடத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை முழு உடல் இரத்த பரிசோதனை செய்துகொள்கிறோம்....


ஆனால் பஞ்ச கர்மா மருத்துவ முறையோ (purification therapy ) அல்லது ரசாயன மருத்துவமோ (Rejivunation ) எடுத்துக்கொள்வதில்லை...

இவ்விரண்டின் மூலம் நாம் நோய் எதிர்ப்பு சக்தி பலம் பெறுவதை புரிந்துகொள்ள  முடியும்...


பதினாறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இவ்விறண்டும் பொருந்தாது...


எனவே தான் ஆயுர்வேதம் அழகாய் அளிக்கிறது ஸ்வர்ணப்ரஷணம் எனும் அமிர்தத்தை...


இனியாவது விழித்துக்கொள்வோம்...


பாரம்பரிய மருத்துவத்தை மீட்டெடுப்போம்...


வரும் கால நம் சன்னதியினருக்கு வளமான ஆரோகியதுடன் இவ்வுலகை வழங்குவோம்...


மேல் கூறிய பஞ்சகர்ம மருத்துவம் மற்றும் ரசாயன மருத்துவத்தை தகுதிவாய்ந்த ஆயுர்வேத மருத்துவரை ஆலோசித்து பெறவும்....


மேலும் தகவல் பெற
AL SHIFA AYUSH HOSPITAL


அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை 
கடையநல்லூர் 9042225333 
திருநெல்வேலி 9042225999 
ராஜபாளையம் 9043336888 
தேனி 904727577 
சென்னை 9043336000


பிடித்து இருந்தால் பகிரலாமே.

Post Comment

1 comments:

Yarlpavanan சொன்னது…

சிறந்த வழிகாட்டல்
வரவேற்கிறேன்

கருத்துரையிடுக