திங்கள், ஏப்ரல் 20, 2020

வியர்பிக்கும் சிகிச்சை - ஓர் இரகசியம்

வியர்வை உண்டாக்கும் சிகிச்சை -
காய்ச்சலை போக்கும் ஓர் ஆயுர்வேத இரகசியம் 



டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள் 


ஆயுர்வேதம் கூறும் சிகிச்சைகள் அனைத்திற்கும் ஆரம்ப சிகிச்சைகளில் தலையாயது  இந்த வியர்வை உண்டாக்கும் ஸ்வேதான  சிகிச்சை தான்... அதாவது நீராவி சிகிச்சை preoperative procedure ( ஒரு நோய்க்கான சிகிச்சையை அளிப்பதற்கு முன்னதாக கட்டாயம் கொடுக்கவேண்டிய சிகிச்சை) ல் விவரிக்கப்பட்டுள்ளது...





ஆயுர்வேதம் ஸ்வேதன கர்மா (sudation therapy) என்ற பெயரில் நீராவி சிகிச்சையை மிக நுண்ணியமாக தெளிவுபடுத்தியுள்ளது...
வியர்வை உண்டாக்கும் சிகிட்சையான நீராவி பிடித்தல் பற்றி இதுவரை நாம் அறிந்திருப்பது வெறும் ஒரு சதவீதம் மட்டுமே.. 



மொத்தம் இருபத்துமூன்று வகையான ஸ்வேதன சிகிச்சைகளை முறையாக எடுத்துக்கொள்வது எப்படி, எந்தெந்த நோய்களுக்கு, யார் யார் எடுத்துக்கொள்ளலாம், எந்தெந்த மூலிகைகளை பயன்படுத்தி எடுத்துக்கொள்ளலாம் இன்னும் பல தகவல்களை கூறியிருப்பது அருமையிலும் அருமை..


தற்போதைய தலையாய பிரச்சனை கொரோனா தொற்று... அதற்கும் இந்த  சிறந்த, முக்கிய சிகிச்சை வியர்ப்பிக்க வைக்கும் சிகிச்சை ... இது கிருமிகளை கொல்லுமா .. அல்லது கொல்லாதா என்பதை விட .. இதே போல் உள்ள காய்ச்சலில் ஆயுர்வேதம் சொல்கிற அற்புத சிகிச்சை  பலருக்கும் தெரிந்த,  மறுக்கமுடியாத உண்மை....


பிறந்த குழந்தைக்கும் கொரோனா தாக்குதல் இருப்பதாய் வெளிவந்துள்ள தகவலை அனைவரும் அறிவீர்கள்...

மென்மையான பிறந்தகுழந்தைக்கு நீராவி பிடித்தல் சிகிச்சை சாத்தியமா...?
பிறந்த குழந்தைக்கு எவ்வாறு ஸ்வேதன சிகிட்சை கொடுக்கவேண்டும் என்பதை அறிவீர்களா?..


வியர்ப்பிக்கும் நீராவி போன்ற  சிகிச்சையில் மிக தெளிவான ஞானம் இருந்தால் மட்டுமே சிகிச்சையின் முழுமையான பலனை அடையமுடியும்.. இல்லாவிடில் விபரீதவிளைவுகளே கிட்டும்... 


அறுவைசிகிட்சையின் தந்தை சுஸ்ருதர் மற்றும் தலைசிறந்த ஆச்சாரியார் சரகர் மொத்தம் இருபத்துமூன்று வகையான வியர்வை உண்டாகும் சிகிச்சைகளை ஆயுர்வேதத்தில் குறிப்பிட்டுள்ளனர்... 


அதில் ஊஷ்ம ஸ்வேத (நீராவி - steam therapy ) என்னும் தலைப்பின் கீழ் ஏழு வகையான சிகிச்சை முறைகளை கூறியுள்ளனர்.. எளிய,  முக்கிய சிகிச்சையாக கருதப்படுவது நாடிஸ்வேதனம் எனப்படுவது.. 


இன்றைய நவீனமுறை நீராவி உள்ளிழுத்தல் சிகிச்சையும் இதுவே.. இது மிகவும் எளிமையானது ..

கவனத்தில் கொள்ள வேண்டியவை.. 
1. உணவருந்தாமல் / வெறும்வயிற்றுடன் இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ள கூடாது. 
2. சிகிச்சையின் போது கண்களை குளிர்ந்த நீரில் நனைத்த பருத்தி துணியினை கட்டிக்கொள்ளவேண்டும். 
3. எக்காரணத்தைக்கொண்டும் நீராவியின் உஷ்ணம் கண்களில் படக்கூடாது. 
4. சிகிச்சை பெறுபவருக்கு ஏற்ற மூலிகை தைலம் / எண்ணெய் பூசிக்கொண்டு தான் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
5.காற்றோட்டம் இல்லாத அறையில் சிகிச்சை எடுப்பது சிறந்தது, மின்விசிறி அணைத்துவிட்டு மேற்கொள்ளலாம். 


*வியர்ப்பிக்கும் நீராவி சிகிச்சை முறை...* 

வாயகன்ற பாத்திரத்தில் சுடுநீரை நிரப்பி கனமான போர்வையை நீராவி வெளியே செல்லாத விதம் நன்றாக போர்த்தி நீராவியை (மூலிகையிட்டு / மூலிகையிடாமலும் ) நாசி, வாய் வழியாக உள்ளிழுக்கவேண்டும்.. அவ்வாறே 15முதல் 30நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்ளவேண்டும்.  பதிமூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு face steamer பயன்படுத்துதல் பாதுகாப்பு. பச்சிளம் குழந்தைகளுக்கு ஹஸ்தஸ்வேதம் எனப்படும் இருகைகளையும் நன்றாக உரசுவதால் உண்டாகும் உஷ்ணத்தோடு கைகளை குழந்தையின் மேல் ஒற்றி எடுப்பது உகந்த முறையாகும். 

*பரிந்துரைக்கப்படும் நோய்கள்..*
1. சுவாச பிரச்சனை 
2. இருமல் 
3. மூக்கில் நீர்வடிதல் 
4. விக்கல்
5. தலை, உடல் பாரம் 
6. வலி 
7. தொண்டை கரகரப்பு 
8. முகவாதம் 
9. பக்கவாதம் 
10. மலசிக்கல் 
11. நீர்க்கடுப்பு
12. பசி, சுவையின்மை 
13. அனைத்து வாத நோய்கள்... 


*பயன்படுத்தப்படும் மூலிகைகள்..* 
இந்துப்பு, முருங்கை, ஆமணக்கு, மாவிலங்கு, சீந்தில்,  எருக்கு, மூக்கிரட்டை, பார்லி எனப்படும் வாற்கோதுமை, கொள்ளு, உளுந்து, எலந்தை, கோமியம், எள்ளு...இந்த மூலிகைகளின் எந்த பகுதியையும் (வேர், தண்டு, பட்டை, சருகு, இலை, கொட்டை, பொடி, விதை   போன்றவை )  பயன்படுத்தலாம் 

*நீராவி சிகிச்சையால் கிடைக்கும் பலன்கள்..* 
1. கிருமி தொற்று, சளி அகலும் 
2. செரிமானம் அதிகரிக்கும் 
3. கடினமான உடல்பகுதிகள் ம்ருதுவாகும் 
4. மூட்டு பகுதிகளில் உள்ள நோய்கள் (வலி, இறுகம்)  மாறும் 
5. பசியின்மை நீங்கும் 
6. இரத்த ஓட்டம் அதிகரிக்கும்

*தவிர்க்கவேண்டியவர்கள்..* 
1. மது, புகை பழக்கமுடையவர்
2. கர்பிணி பெண்கள் 
3. மஞ்சள் காமாலை நோயாளிகள் 
4. வயிற்று போக்கு நோயாளிகள் 
5. சர்க்கரை நோயாளிகள் 
6. இரத்தப்போக்கு உடையவர்கள் 
7. விஷ கடி அல்லது விஷமருதியவர்கள் 
8. நாவறட்சி, தொண்டை வறட்சி உடையவர்கள் 
9. தொடர் உடல் மெலிவு உடையவர்கள்..கட்டாயம் நீராவி சிகிச்சையை  தவிர்ப்பது பாதுகாப்பு. 

*தவறான முறையை மேற்கொண்டால் உண்டாகும் விபரீத / எதிர்மறை விளைவுகள்..*
1. உடல் உஷ்ணம் அதிகம் ஆதல் 
2. உஷ்ணம் / பித்தம் சம்பந்தமான நோய்கள் 
3. தொண்டை, நாவறட்சி 
4. சரும எரிச்சல் 
5. மயக்கம் 
6. தலைசுற்றல்
7. சருமத்தில் கொப்புளங்கள்..போன்றவை உண்டாக்க கூடும்.. 

வியர்வை சிகிச்சை பற்றி சந்தேகங்களுக்கு அணுகவும்.. 

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை 
கடையநல்லூர் 9042225333 
திருநெல்வேலி 9042225999 
ராஜபாளையம் 9043336888 
தேனி 904727577 
சென்னை 9043336000

பகிரலாமே ..

Post Comment

0 comments:

கருத்துரையிடுக