சனி, ஏப்ரல் 18, 2020

உங்களது உயிர் கடிகாரத்தை நீங்களே உடைக்கிறீர்களா ?

உங்களது உயிர் கடிகாரத்தை நீங்களே உடைக்கிறீர்களா ?


டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்


உயிருக்கு ஆயுர்வேதம் சொல்லும் மூன்று தூண்களில் தூக்கமும் ஒன்று ..
தூக்கம் ..

தூக்கமின்மைக்கு ஆயுர்வேதம் சொல்கிற இயற்கையான தீர்வு பற்றி அடிப்படை கட்டுரை ..

சில ஆண்டுகளுக்கு  முன் சிர்கார்டியன் ரிதம் பற்றி -நோபல் பரிசு பெற்றவர்கள் உலகுக்கு எடுத்து சொன்னது- இரவில் கண் விழித்தால் எல்லா நோய்கள் வரவும் காரணமாகிறது.




ஆழ்த்த தூக்கம் ஓர் வரம்..

உறக்கத்தினால் உடல் சோர்வு போவதுடன்,  உடல் மெலிவு / உடல் பருமன், பலம் /பலவீனம், நினைவாற்றல் /ஞாபகமறதி, மனமகிழ்ச்சி /மனக்கவலை, பெண்மை, ஆண்மைகுறைவு, பகுப்பாய்வு திறன் என அனைத்திற்கும் தூக்கத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு...


தூக்கம் பற்றி ஆயுர்வேத மருத்துவத்தில் ராத்ரிச்சரியை என்னும் அத்தியாயம் கூறுகிறது...



தூக்கத்தின் வகைகள்... 



வியாதி ஜனித நித்திரை என்கிறது ஒரு வகை .. அதாவது நோய்யை உண்டாக்கும் தூக்கம்.



சோம்பலினால் தூண்டப்படும் உறக்கம், உடல் மற்றும் மனம் உழைப்பின் களைப்பில் உண்டாகும் உறக்கம், உடல் உபாதையினால் உண்டாகும் உறக்கம், இவை ஏதுமின்றி இயற்கையான உறக்கம் என பலவற்றை விவரிக்கின்றது...


*சிறந்த நேரம்..*

சூரியனின் தாக்கம் குறைந்து, ஒளி மற்றும் ஒலி குறைந்து, குளுமையான இயற்கை காற்று அதிகரிக்கும் வேலையான இரவு பொழுது எல்லா காலத்திலும் தூங்குவதற்கு சிறந்த நேரம்.

*கால அளவு..* 

சிறப்பான ஆரோக்கியத்திற்கு பின்பற்றவேண்டிய தூக்கத்தின் காலஅளவு
வயது பொறுத்து மாறுபடுகிறது...

பிறந்த அன்று முதல் ஒரு மாத வரை குழந்தை 18-20மணி நேரம் தூங்கவேண்டும்.

ஒன்று முதல் ஆறு மாதங்கள் வரை குழந்தை 15-18மணி நேரம் தூங்கவேண்டும்.

ஆறு மாதங்கள் முதல் ஒரு வயது வரை 14-16மணி நேரம் தூங்கவேண்டும்.

ஒன்று முதல் இரண்டு வயது வரை 12-14மணி நேரம் தூங்கவேண்டும்.

இரண்டு முதல் ஐந்து வயது வரை 10-12மணி நேரம் தூங்கவேண்டும்.

ஐந்து முதல் பதினாறு வயது வரை 9-10மணி நேரம் தூங்குவது அவசியம்.

பதினாறு வயதிற்கு மேற்பட்டோர் 8மணிநேரம் தூங்குவது அவசியம்.

அறுபது வயதை கடந்தோர் 4-6மணி நேரமாவது தூங்குவது அவசியம்.

மனோபாவத்தை கொண்டு கூறுகையில்...

சாத்வீக (நல்ல மனப்பக்குவம் ) மனோபாவமுடையோர் 4-6 மணிநேரமும்...

ராஜஸீகம் (கோபம், க்ரோதம் அதிகம் வெளிப்படும் ) மனோபாவமுடையோர் 8மணிநேரமும்...

தாமஸீக (மேற்குறிய இரண்டிற்கும் இடையில் ) மனோபாவமுடையோர் 10-12 மணிநேரமும் தூங்கவேண்டும்...

இரவு தூக்கம் கெடுவதால் உண்டாகும் ஆரோக்கிய குறைபாடு...

மலசிக்கல், மயக்கம், கவனக்குறைவு, சோர்வு, நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, உள்ளங்கை, பாதங்களில் எரிச்சல், கண் சம்பந்தமான நோய்கள் உண்டாகிறது.


விதிவிலக்கு : உடல் பருமன், கப நோய்கள், விஷ கடி, விஷம் அருந்தியவர்கள், அதிக கொழுப்புள்ள உணவை உட்கொண்டவர்கள் இதில் விதிவிலக்கு...

பகலில் உறங்குவதால் உண்டாகும் ஆரோக்கிய குறைபாடுகள்.. 

தலைவலி, தலைபாரம், செரியாமை, சளி, சர்க்கரை நோய், உடல் அரிப்பு, புலன்கள் பாதிப்பு, தலைசுற்றல், உடல் வலி, உடல் பாரம் போன்றவை உண்டாகிறது.

விதிவிலக்கு : மனநோயாளிகள், வயோதிகர்கள், குழந்தைகள், அதிக பயணம் மேற்கொண்டவர்கள், வயிற்று உபாதை உள்ளவர்கள் இதில் விதிவிலக்கு..

Insomnia எனப்படும் தூங்கமின்மை நடுத்தர வயதை கடந்தோர்களை பரவலாக பாதிக்கிறது..

ஆண்டு கணக்கில் தூக்கமின்மைக்கு தூக்கமாத்திரை எடுத்துக்கொள்வோர் ஏராளம்...

சிலகாலங்களில் தூக்கத்திற்கு ஒரு மாத்திரை, அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளான  வயிற்று கோளாறு, தலைவலி, சிறுநீரக கோளாறு என ஒவ்வொன்றிற்கும் மாத்திரைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது..

சிறந்த சிகிச்சை.. 

அபியங்கம் எனப்படும் முழு உடல் எண்ணெய் தேய்ப்பு, கண்களில் எண்ணெய் விடுதல், காதுகளில் எண்ணெய் விடல், தலை மற்றும் முகத்தில் சந்தனகலவை பூசிகொள்ளுதல், எண்ணெய் குளியல்.... உறக்கத்தை தூண்டும் சிறந்த சிகிச்சைகள்...

வெகுசிலர் அதிக தூக்கத்தினால் அவதிப்படுவார்கள்... அவர்கள் உபவாசம், நீராவி குளியல், வமன சிகிச்சை, விரேசன சிகிச்சை பிறவற்றை மேற்கொள்ளவேண்டும்.

சந்தேகங்களுக்கு அணுகவும் 

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000

Post Comment

0 comments:

கருத்துரையிடுக