புதன், ஏப்ரல் 15, 2020

கொரோனா .. வரும்ம்.... ஆனா வராது...*

*வரும்ம்.... ஆனா வராது...*


கொரோனா உங்களுக்கு வருமா..? வராதா...?



டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம்., BAMS.,MSc., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்



#வரும்...*


#காரணங்கள்...*


1) மக்கள் தொகை அதிகம்...உலகிலேயே இந்தியா மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் உள்ளது... மக்கள் தொகை 130கோடி.. அதிக மக்கள் தொகை காரணமாக எளிதில் பரவுவதற்க்கான வாய்ப்புகள் அதிகம்...


2) சுகாதாரம் குறைவு... தனி மனித சுகாதார குறைவு மற்றும் சுற்றுப்புற சுகாதார குறைவு பிற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் அதிகம் அதனால் கொரோனா தாக்குதலுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது...


3) மருத்துவ வசதி குறைவு...இந்திய மக்கள் தொகைக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு மருத்துவர்களும், மருத்துவ வசதிகளும் மிக குறைவு... ஏன் மருத்துவமனைகளே இல்லாத கிராமங்கள் இன்றும் உள்ளன.. மருத்துவம் பெற இயலாத எளிய மக்களிடமிருந்து அதிகம் கொரோனா பரவுவதற்கான வழிகள் உள்ளன...



4) கொரோனா மற்றும் தடுப்பதற்கான விழிப்புணர்வு குறைவு... விழிப்புணர்வு குறைப்பாட்டினால் அடித்தட்டு மக்கள் வரை தனிமனித சுகாதாரத்தை ஏற்படுத்த முடிவதில்லை... இதன் மூலம் கொரோனா முடிவுறாமல் அதிகரிக்கிறது.


5) நகரங்களில் தொழில்நுட்ப பயன்பாடு அதிகம்... நகர் புறங்களில் அதிக தொழில்நுட்ப பயன்பாடுகளினால் காற்று, உணவு, நீர் மாசடைந்து அதன் மூலம் மற்ற வைரஸ் தாக்குதல்களுக்கு ஆளாக எளிதில் நேரிடுகிறது.



6) ஒருங்கிணைத்த மருத்துவ முறை குறைவு... ஒருங்கிணைந்த மருத்துவ முறையின் விழிப்புணர்வு அறவே இல்லாத நாடு இந்தியா.. அதனால் பல மருத்துவ துறைகளில் இருக்கும் பல சக்திவாய்ந்த மருந்துகள் நோயாளிகளுக்கு பயன்படாமல் இருக்கிறது.. இதன் மூலம் எளிதில் நோயை கட்டுப்படுத்த முடியாமல் மேலும் பரவும் நிலை உண்டாகிறது.




7) மருத்துவ கழிவுகளை கையாளுதல் சம்மந்தமான சுகாதார குறைவு... Biomedical waste management எனப்படும் மருத்துவ கழிவுகளை கையாளுதல் முறையாக இல்லாததால் அவற்றை அப்புறப்படுத்த வீதிகளில் எரிவதினால் மக்கள் எளிதில் நோய் தொற்றிற்கு ஆளாகின்றனர். கை கழுவுகிற பழக்கம் கூட நம்மிடம் இதுவரை அதிகம் இல்லை.




8) அனைவருக்கும் அனைத்திலும் அலட்சியம் அதிகம்... விழிப்புணர்வற்ற தேசமென்பதால் பொதுஇடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் தங்களுக்கும் சமூகத்திற்கும் நோய் வரும் காரணத்தை ஏற்படுத்துகின்றனர்...




9) நகர்ப்புறங்களில் பாரம்பரியம் கைவிடப்பட்ட ஒன்று...சிறு தும்மலுக்கும் சிறப்பு மருத்துவரை காண செல்லும் பட்டணத்தவர்களுக்கு பாரம்பரிய மருத்துவத்தில் கிடைக்கும் அடிப்படை உடலாற்றலும் இல்லாது போவதோடு நோய் தாக்குதல்களும் எளிதில் உண்டாகிவிடுகிறது. எதற்கு எடுத்தாலும் ஆன்டி பாயாடிக் போடுகிற பழக்கம் நம்மை எதிர்ப்பு சக்தியை கேள்வி குறியாக்கிவிடும்.





10) இளம் வயதிலேயே கைமருத்துவதையும், சுகாதாரத்தையும் புகட்டாமை...சீர் +அகம் =சீரகம். சீரான ஆரோக்கியத்திற்கு சீரகம். இது போன்ற சிறிய எளிய கைமருந்துகளை பள்ளிகளிலேயே குழந்தைகளுக்கு புகட்டாமல் பிற அனைத்தையும் புகட்டுவதால் பிஞ்சுகள் அறிவுக்குருடர்களாய் வளர்ந்து நோய் எதிர்க்கும் மருந்து கையிலிருந்தும் பயன்படுத்த தெரியாது நோய்வாய்ப்படுகின்றனர். எளிதில் பரவவும் வழிசெய்துவிடுகின்றனர்.






11 ) மனஅழுத்தம், பயம் காரணமாக கொரோனா தொற்று நோயாளி உடனடியாக பரிசோதனைக்கு முன்வருவதில்லை... விழிப்புணர்வு அற்ற நோயாளிகள் தனிமைப்படுத்தல் போன்றவற்றிக்கு பயந்து மருத்துவ பரிசோதனைக்கு முன்வராது தான் சந்திக்கும் மனிதர்களுக்கும் நோய் பரப்பிவிடுகின்றனர்.




12) பொதுமக்களுக்கு, மருத்துவர்களுக்கு போதிய தற்காப்பு கவசம் விநியோகம் இல்லை... ஸ்வாசத்தினால் பரவும் நோய்க்கு பொது ஜனங்களுக்கு போதிய முகக்கவசமும், நோயாளிகளை கையாளும் மருத்துவர், மற்ற மருத்துவ பணியாளர்களுக்கு PPE எனப்படும் பாதுகாப்பு உடையும் குறைவாக இருப்பதால் நோய் பரவி தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது.




13) ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்துதல் (Research and Development) முறை அதிவேகத்தில் இல்லை...ஆராய்ச்சிகளை வலுவாகவும், திறம்பட மேம்படுத்தவும் போதிய நுட்பங்களும், பொருளாதாரமும் பிற நாடுகளை காட்டிலும் பின்தங்கியே உள்ளோம்..அந்த வாய்ப்பை நோய் அதிவேகமாய் பரவ எடுத்துக்கொள்கிறது.






14) பொதுக்கூட்டங்கள் அதிகம்... சுயபுத்தி செயல்பாடுகள் இந்தியாவில் குறைவே.. அரசியல் மாநாடு முதல் திருமணங்கள் வரை கூட்டம் கூடாமல் நிகழாது.. இதன் மூலமும் நோய் ஏராளமாய் பரவிவிடுகிறது...






15 ) முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு மிகக்குறைவு... பிற நாடுகளை பார்த்தும், பிற மாநிலங்களை பார்த்தும், பிற மாவட்டங்களை பார்த்தும் முன்னெச்சரிக்கை இல்லாது நடந்துக்கொள்வதினால் மிக அருமையை கொரோனா வந்து நிற்கிறது...




16 ) Anti Biotic Resistance என்கிற ஒரு பெரிய அச்சுறுத்தல்




17 ) யூ டியூப் திடீர் மருத்துவர்கள், போலி மருத்துவர்கள் சொல் பேச்சை கேட்டு அலட்சியமாய் இருந்தாலும் வரலாம்





வராது...*





#காரணங்கள்...


அரசு சொல்கிற ..
அரசு கடைபிடிக்க சொல்கிற ..
அரசாங்க விதி முறைகளை அலட்சிம் இல்லாமல் கடை பிடித்து – சமூக விலகல், சுய ஒழுக்கம், சுய தூய்மை போன்றவற்றை கடைபித்தாலே நமக்கு வராது என்று சொல்லலாம்





1) இயற்கையான நோயெதிர்ப்பு சக்தி அதிகம் பெற்றவர்கள் இந்தியர்கள் அதனால் பெரும்பாலானோர் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது... உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தால் வர வாய்ப்புகள் குறைவு.


2) ஊரடங்கு உத்தரவும், பின்பற்றுதலும்... வெகுசிலரை தவிர அனைவரும் ஊரடங்கை பின்பற்றுதலால் மீள வாய்ப்புகள் அதிகரிக்கிறது.நீங்கள் வீட்டில் இருக்கும் வரை உங்களுக்கு வராது .





3) BCG (காசநோய் தடுப்பூசி ) போன்ற முறையான கட்டாய தடுப்பூசி நுரையீரலை தாக்கும் வைரஸிடமிருந்து வெகுவாக தப்பிக்க முடிகிறது... இந்தியா போன்ற வெகு சில நாடுகளில் தான் இதனை பின்பற்றுகிறது. அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இது நடைமுறையில் இல்லை.





4) பலகுடும்பங்களில் இன்றும் வேப்பிலை, மஞ்சள் கிருமிநாசினியாக அனுதினமும் பயன்படுத்தப்படுகிறது... அறிவியல் அறிந்தோ அறியாமலோ இவற்றை பயன்படுத்துவதினால் கிருமிகள் தாக்கத்தை பெருமளவில் தடுத்து நோயினை விரட்டுகிறது.இஞ்சி, மிளகு, லவங்கம், பூண்டு இல்லாத வீடுகளே இல்லை... 99% வீடுகளில் பயன்படுத்தப்படும் இந்த உணவு பொருட்கள் நுரையீரல் நோயையும், சளியையும் அண்டவிடாது காக்கிறது.


5 ) பிற வல்லரசு நாடுகளில் இல்லாத விவசாயமும், மருத்துவ மூலிகைகள் அதிகம் பெற்ற நாடு என்பதால் உணவும், விளைபவையும் இந்நாட்டு மக்களுக்கு ஏற்ற மருந்தாகிப்போகிறது ...





6 ) கிராமங்களில் தொழில்நுட்பத்தைக்காட்டிலும் கால்நடை பராமரிப்பும் அதிகம்...அவற்றை சுகாதாரமாக பராமரிப்பதிலும், அவற்றுடன் வாழ்வதாலும் உடல் வலுவுற்றவர்களை திகழ்கின்றனர்.




7 ) சீரான பருவகால மாற்றம்... இயற்கை அளித்த பரிசால் பருவகால மாற்றம் நோய் கிருமியை கொள்கிறது. எல்லா காலநிலைக்கு ஏற்ற உடல்வாகு நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பளிக்கிறது.




8 ) சிறந்த சிகிச்சை மற்றும் மருந்து தயாரிப்பு... உலகில் பல முன்னணி நாடுகளுக்கும் மருந்துகள் விநோயோகம் செய்கிறது இந்தியா. பல உலக நாடுகளில் பணியாற்றும் மருத்துவர்களும் இந்தியர்கள் என்றே ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.





சிந்தித்து செயலாற்றுவோம்..



*AL SHIFA AYUSH HOSPITAL*


அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை


கடையநல்லூர் 9042225333


திருநெல்வேலி 9042225999


ராஜபாளையம் 9043336888


தேனி 904727577




சென்னை 9043336000

Post Comment

0 comments:

கருத்துரையிடுக