வியாழன், ஏப்ரல் 02, 2020

சளிக்கு முதல் சாய்ஸ் - தாளீஸாதி சூர்ணம்-

சளிக்கு முதல் சாய்ஸ் - தாளீஸாதி சூர்ணம்- Taleesadhi Choornam

சளி, இருமல் போன்ற சுவாச நோய்களில் மிக மிக சிறந்த எளிமையான மருந்து. TB போன்ற நோய்களிலும் ஆற்றல் வாய்ந்த எல்லா நுண் கிரிமிகளையும்  அழிக்கும் இந்த மருந்து தாளிசாதி சூரணம்.

எளிமையே வலிமை என்பதற்க்கு ஒரு உதாரணம் 


தேவையான மருந்துகள்:

1.            தாளீசபத்திரி – தாளீசபத்ர         - 10 கிராம்
2.            மிளகு – மரீச்ச                   - 20       “
3.            சுக்கு – சுந்தீ                      - 30       “
4.            திப்பிலி – பிப்பலீ                  - 40       “
5.            குகைநீர் – துகாக்ஷீரி              - 50       “

குறிப்பு:     

மூங்கிலுப்பு (வம்ஸலோசன) உபயோகிப்பதும் உண்டு.
6.            ஏலக்காய் – ஏலா            - 5         “
7.            இலவங்கப்பட்டை – லவங்கத்வக்  - 5         “
8.            சர்க்கரை – ஸர்க்கர               - 320    “

செய்முறை:   

  முறைப்படி சரக்குகளைப் பொடித்துச் சலித்த பின்னர் அவற்றுடன் சர்க்கரையைப் பொடித்துச் சலித்துச் சேர்க்கவும்.


( Ref -சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம்  எட்டாவது அத்தியாயம் -ராஜாயக்ஷம சிகிச்சை )





அளவு:        

  1 முதல் 3 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள் கொடுக்கவும்.

அனுபானம்:     

 தேன்நெய்தண்ணீர்.

தீரும் நோய்கள்: 

இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாச), உணவில் விருப்பமின்மை (அரோசக), ஜலதோஷம், காய்ச்சல் (ஜ்வர), செரியாமை (அச்னி மாந்தய), வாந்தி (சர்தி), வயிற்று உப்புசம் எனும் பொருமன் (ஆத்மான).


ஆராய்ச்சி வைரஸுக்கு எதிர்க்கும் விதமாக உள்ளதா .. ஆதாரம் 





தெரிந்து கொள்ள வேண்டியது
  1. சரக சம்ஹிதை -காச  நோய் உடன் ஒப்பிடப்படுகிற ராஜயாகஷமா என்னும் தீராத இருமல், இளைப்பு, உடல் தாதுக்கள் தேய்வு  சிகிச்சையில் சொல்லபட்டு  உள்ளது . 
  2. பல ஆய்வுகள் தாளிசாதி சூரணம் - TB நோய் பாக்டீரியாவை அழிக்கும் திறன் உள்ள பல மூல பொருட்கள் உள்ளது என்று நிரூபிக்கிறது. 
  3. பல தேவை இல்லாத நுண்ணுயிர்களை , வைரஸ்களை அழிக்க வல்லது என்றும் நிரூபிக்க பட்டுள்ளது.
  4. சித்தாவில் பயன்படுத்தப்படும் தாளீசாதி சூர்ணதிர்க்கும்(சற்று பசுமை சார்ந்த கருப்பு நிறம் ) ,ஆயுர்வேதத்தில் சொல்லப்படும் இந்த தாளீசாதி சூர்ணதிர்க்கும் (வெளிறிய வெள்ளை நிறம் )நிறைய வித்தியாசம் உண்டு
  5. ஆயுர்வேதத்தில் பயன்படுத்தபடும் தாளீசாதி சூர்ணம் -இனிப்பும், திப்பிலி காரமும் தூக்கலாக இருக்கும்
  6. தாளீசாதி சூர்ணம் -வெற்றிலை சாறில் (வெற்றிலையில் வைத்து மென்று) சாப்பிட்டால் எப்படியாப்பட்ட இருமலும் உடனே நிற்கும் ,சளியை நெஞ்சிலிருந்து வெளியே தள்ளி விடும்
  7. தாளீசாதி சூர்ணம் -எல்லா ஆயுர்வேத ,சித்த மருந்து கடைகளிலும்,,நாட்டு மருந்து கடைகளிலும்  கிடைக்கும் ,அரசு சித்த, ஆயுர்வேத மருத்துவ பிரிவில் எப்போதும் கிடைக்கும்
  8. வீட்டிலே முதலுதவி பெட்டியாக இருக்க வேண்டிய மருந்தில் மிக முக்கியமானது
  9. குழந்தைகளுக்கு -ஆறு மாத குழந்தைக்கும் கொடுக்கலாம்(மிக மிக குறைவாக -இரு மிளகு எடை அளவுக்கு -தாய்பாலில் அல்லது தேனில் கொடுக்கலாம் )
  10. இந்த மருந்து உபயோகப்டுத்தியவர்கள் - இருமல் சிரப் என்னும் மாயைக்கு சிக்க மாட்டார்கள் என்பது உறுதி

மேலும் ஆயுர்வேத  ஆலோசனைக்கு மருந்து விவரங்களுக்கு 
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை 
கடையநல்லூர் 9042225333 
திருநெல்வேலி 9042225999 
ராஜபாளையம் 9043336888 
தேனி 904727577 
சென்னை 9043336000 

Post Comment

0 comments:

கருத்துரையிடுக