புதன், டிசம்பர் 08, 2010

1.அஜமோதார்க்கம்-Ajamodarkam


1.            அஜமோதார்க்கம்-Ajamodarkam
(அர்க்கப்ரகாச)


தேவையான மருந்துகள்:-

1.            ஓமம் அஜமோதா    1,000 கிராம்
2.            தண்ணீர் ஜல        10 லிட்டர்


செய்முறை:-

                ஓமத்தை ஒன்றிரண்டாகப் பொடித்துத் துணியில் மூட்டை கட்டி பன்னிரண்டு மணி நேரம் ஊறவைத்து அர்க்கம் இறக்கும் முறைப்படி அர்க்கம் தயாரிக்கவும்.

ஓமம்

சீதசுரம் காஞ்செரியா மந்தம் பொருமல்
பேதி இரைச்சல் கடுப்பு பேர் மம்  ஓதிருமல்
பல்லோடு பல்மூலம் பகம் இவை நோயென் செயு மோர்
சொல்லோடு போம் ஓமெனச்சொல். 

குரோசானி ஓமம்.
வெகு மூத்திரம் வாதம் வீரிய நட்டம் புண்
உகு பேதி உட்கடுப்புனூடே _ மிகு கரப்பான்
தீராக்கபம் இவை போம் செய்யக் குரோசானி என்றால்
வாரா மயக்கம் உறுமால்.


அளவும் அனுபானமும்:- 15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீரில் கலந்த இரு வேளைகள்.


                தீரும் நோய்கள்:- வயிற்றுப் போக்கு (அதிஸார), செரியாமை (அஜீர்ண), பசியின்மை (அக்னிமாந்த்ய), நாட்பட்ட பேதி அல்லது பெருங்கழித்தல் (கிரஹணீ), சிறுநீர்ப்பை நோய்கள் (பஸ்தி ரோக).

Post Comment

3 comments:

Chitra சொன்னது…

தகவலுக்கு நன்றிங்க.

Unknown சொன்னது…

தகவலுக்கு நன்றி.
உங்கள் பிரார்த்தனையும் எதிர்பார்ப்பும் இறைவன் நிச்சயம் நிறைவேற்றி வைப்பான்.
நாங்களும் பிரார்த்திக்கிறோம்..

Muruganandan M.K. சொன்னது…

நன்றி. ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்கள் புளக் பார்த்தேன். படங்களுடனும் விளக்கங்களுடனும் அம் மருத்துவ முறைகளை சிறப்பாகக் கொண்டு வருகிறீர்கள். பாராட்டுக்கள்.

கருத்துரையிடுக