செவ்வாய், ஜூன் 08, 2010

மழலை நலமும், மாறுபடும் உணவு முறைகளும்


ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதத்தில் குழந்தைகளின் மருத்துவத்தில் - ஆஹார அன்ன விதிகளை என்னென்ன கோணத்தில் அணுகியிருக்கிறது என்பதை அறியும் போது பெரும் மலைப்பு வந்து நம்மை மெய்மறக்க வைக்கிறது. 

இன்றோ காலத்தின் கட்டாயத்தால் மாறிப்போன உணவு முறைகளுக்கும், விளைவுகளுக்கு என்ன தீர்வு?
  • விளம்பரங்களை நம்பும் தாய்மார்கள் எப்படி வழி கெடுக்கப் படுகிறார்கள்?

  •  குழந்தைகளின் வாயில் அகப்படும் விளையாட்டு சாதனங்களுக்கு ஆர்சனிக் காரீய பூச்சு  புற்று நோயை விளைவிக்கலாம்.

  • சைனா உணவுகளை ஆராய்ச்சியில் விளைவில் பல நோங்களை விளைவித்தாக நிரூபித்த பின்பும், அவசரகதியல் அதனை தடை விதித்தும் தொடரும் அவலங்கள்

  • அஜினோ மோட்டோ எனம் மூளையை மழுங்கடிக்கும் செரிமானத்தில்  கோளாறுகளை ஏற்படுத்தும் கடும் வேதிப்பொருள் அடங்கிய நூடுல்ஸ் எனும் மாயை.

  •  மொற மொறப்புக்காக குர்குரே, லேஸ் எனும் சிப்ஸ் உணவுகளில் 2 லிருந்து 10 சதவீதம்  பிளாஸ்டிக்கும், பிளாஸ்ட்டிக்கின் மூலப் பொருள் கலந்துள்ளது யாருக்குத் தெரியும்?

  •  பல சாக்லேட்டுகளில் உடலுக்கு ஊறு விளைவிக்கும் மிருக கொழுப்புகளும், சாக்கரின் எனும் செயற்கை சர்க்கரையும் Free Radicles எனும் கசடுகளும் கலந்து, குழந்தைகளுக்கு சர்க்கரை நோயையும், செரிமானத்தில் கோளாறுகளையும், ஹார்மோன்களின் அதிக சுரப்பையும் உண்டாக்கி Addictionsஎனும் பழக்கத்தை ஏற்படுத்துவது எத்தனை பெற்றோருக்குத் தெரியும்?

  •  Soft Drinksஎனும் அரக்கனின் கையில் அகப்பட்ட குழந்தைகளின் நிலை அறிய கண்ணீர் வருகிறது. பெப்ஸி, கோகோகோலா போன்ற Soft Drinksஐ உங்கள் வீட்டு பாத்ரூம் கழுவிப் பாருங்கள் வெள்ளை வெளேராகிவிடும். வயிற்றில் நொதிப் பொருளில் பல வேதியியல் மாற்றங்களை உண்டு பண்ணும். உதாரணத்திற்கு வாயில் உள்ள டயலின் என்ஸைம், காரத்தன்மையிலிருந்து அமிலத் தன்மையாக மாறிவிடும் (Acidic)இ பெப்ஸின், ட்ரிப்ஸின் நீர்த்து விடும், ஹைட்ரோ குளோரிக் அமிலம் தனது PH அளவை குறைத்து காரத்தன்மையோடு மாறிவிடும். வயிற்றின் மேல், கீழ் மூடி (cardiac spincter, pyloric Antram)) இளகி, Acid Peptic Disorder, Reflux Gastritis எனும் பல வயிறுகள் பிரச்சனைகளை உண்டு செய்துவிடும். கிரெப்ஸ் Cycleஎனும் நிகழ்ச்சியில் மாறும் கொழுப்பை மாற்றி உடலை பெருக்கச் செய்கிறது. ஒன்பது ,பத்து வயது பெண்குழந்தைகள் 18 வயது பெண் போல் முதிர்ச்சி அடைந்து விடுகிறார்கள்.

  •  சத்து மாவு என்ற பெயரா ல் பல சரக்குகள் தரமில்லாமல் பல சரக்கு கடைகளிலும், மெடிக்கலிலும் உலா வருகிறது. அதிலே பலர் சுவைக்காக கேசரி  தால் எனும் சிவப்பு நிற பருப்பு வகைகளையும் சேர்க்கின்றனர். அதன் மூலம் லித்தியம் விஷம் உண்டாகி கை, கால்களை முடமாக்கி விடும் அதிர்ச்சியும் உண்டு. முளைவிட்ட தானிங்கள் என்று சொல்லி பாதியில் முளைவிட வைத்தும் அரைகுறைய காய வைத்து பூஞ்சை  சேர்ந்துள்ளது தெரியாமலே  சேர்த்து விடுகிறார்கள். சோடியம் பென்சோவேட், பென்சாயிக் அமிலம் எனும் Preservatives. பல இயற்கை புரதங்களோடு சேரும் போது பல வியாதிகளை உண்டு பண்ணி விடும் என்பது ஆராய்ச்சியின் வரவு.

  • காய்கறிகள், கீரைகள் திராட்சை போன்ற பழவகைகளில் சுருட்டை பொடி போன்ற பலதரப்பட்ட பூச்சிக் கொல்லி மருத்துகளை கலந்து விடுகிறார்கள். அந்த பூச்சிக்  கொல்லி மருத்துகளை உப்புக்கலந்த வெந்நீரில்  கழுவது மூலமே சுத்தமாக்க முடியும் என்பது எத்தனை பெற்றோர்களுக்குத் தெரியும் ?

  •  மெடிக்கலில் கிடைக்கும் பல சத்து மாவுகள், ப்ரோட்டின் பவுடர்களை குழந்தைகளுக்கு உண்ண கொடுப்பதன் மூலம், இயற்கையாக உணவுகளில் உள்ள புரதத்தினையும் Micro Element எனும் சத்துக்களையும் உறிஞ்சும் திறன் குறைந்து அதை கிரகிக்க உதவும் Receptors செயலிழந்து சத்துக்களே கழிவாகி நாசமாகும் என்பது எத்தனை பெற்றோh;களுக்கு தெரியும்?

  •  ஹா...க்,பூ...ட், , போ...டா போன்ற பல Health Drinkகம்பெனி நிறுவனங்கள், விளம்பர போட்டிகளில் கவனம் செலுத்துகிறதே, தவிர அதன் தரத்தை உயர்த்துவதாக தெரிய வில்லை. Retrospective Study  எனும் பின்னோக்கிய ஆராய்ச்சி முடிவுகளை வெளிவிட்டு மக்களை முட்டாளாக்கி  இதை விட்டால் சத்துக்கு வேறுவழியே இல்லை என்று விளம்பரப்படுத்தும் கம்பெனிகளின் ஒன்றின் தயாரிப்பின் விலை 500 கிராமுக்கு சராசாரியாக அதிகபட்ச விலை ரூ. 6 என்பது அதிர்ச்சி தகவல் இந்த ரூ. 6-க்கு என்ன சத்து இந்த காலத்தில் கொடுத்து விட முடியும். ஆனால் விற்கும் விலையோ ரூ. 120 !

  •  செரிலேக் , நெஸ்டம் போன்ற உணவுகளில் பல நன்மைகள் இருந்தாலும் பவுடர் பாலில் உள்ள லேக்டிக் அமிலம் திரிந்து அசிடிக் அமிலமாக, லேக்டேடாக மாறி விடும். மேலும் கேசின் என்ஸைம் செயல்பட முடியாத நிலையாக மாறி பாலே அலர்ஜியாக மாறி விடும் என்ற நிலை இருக்கத்தானே செய்கிறது.

  •  குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நொறுக்குத் தீனிகளையும் பலதடவை மாற்றாமல் பயன்படுத்திய பாமாயில் சுட்ட பலகாரங்களை கொடுத்துவிட்டு என் குழந்தை சாப்பிடவே மாட்டேங்குது என்ற சொல்லக்கூடிய பெற்றோர்களை என்ன சொல்ல?

  •  மொத்தத்தில் நாம் அறிந்து வைத்திருப்பதில் பல தவறுகள் உள்ளது.

  •  அறியாமல் செய்யும் தவறுகளும் மிக அதிகம்.
 திருத்திக் கொள்ளாத உணரப்படாத தவறுகள் எண்ணற்றவை. இவைகளுக்கு தான் மேலே சொன்ன சில உதாரணம்.

ஆயுர்வேதம் சொல்லும் ஆஹார விதிகளை கடைபிடித்தால் நம்மையும் நம் செல்ல குழந்தைகளையும் நூறு ஆண்டுகள் வாழலாம், வாழ வைக்கலாம்

Post Comment

0 comments:

கருத்துரையிடுக