செவ்வாய், டிசம்பர் 21, 2010

எல்லா விதமான வலிகளை போக்கும் -சூப்பர் டானிக் -பலாரிஷ்டம்-Balarishtam


எல்லா விதமான வலிகளை போக்கும் -சூப்பர் டானிக் -பலாரிஷ்டம்-Balarishtam
(ref பைஷஜ்யரத்னாவளி - வாதவ்யாத்யதிகாரம்)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:-

1.            சித்தாமுட்டிவேர் – பலாமூல                 5.000  கிலோ கிராம்
2.            அக்கராக்கிழங்கு – அஸ்வகந்தா              5.000     “
3.            தண்ணீர் – ஜல                              51.200   லிட்டர்


இவைகளை கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி வெல்லம் 15.000 கிலோ கிராம் மற்றும், 


1.            கீரைப்பாலை – விடாரி                      100  கிராம்
2.            ஆமணக்கு வேர் – ஏரண்டமூல               100         “
3.            சித்தரத்தை – ராஸ்னா                       50           “
4.            ஏலக்காய் – ஏலா                            50           “
5.            முதியார் கூந்தல் – ப்ரஸாரணி              50           “
6.            இலவங்கம் – லவங்க                       50           “
7.            விளாமிச்சைவேர் – உசீர                     50           “
8.            நெருஞ்சில் – கோக்ஷூர                     50           “
9.            காட்டாத்திப்பூ – தாதகீ புஷ்ப                 800         “
இவைகளை முறைப்படி கலந்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.



அளவும் அனுபானமும்:    

15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இருவேளைகள்.


தீரும் நோய்கள்:  

பசியின்மை (அக்னி மாந்த்ய),  
பலவீனம் (தௌர்பல்ய),
நரம்புத் தளர்ச்சி (நாடீதௌர்பல்ய),  
கீல்வாயு (வாத ரக்த),  
ஆம வாதம் (ஆமவாத),
வாத நோய்கள் (வாதஜரோக).

Post Comment

திங்கள், டிசம்பர் 20, 2010

சர்க்கரை நோயாளிகளின் பாத எரிச்சலை குணபடுத்தும் -அயஸ்கிருதி-Ayaskruthi


சர்க்கரை நோயாளிகளின் பாத எரிச்சலை குணபடுத்தும் -அயஸ்கிருதி-Ayaskruthi
(ref-அஷ்டாங்க ஹ்ருதயம் – சிகித்ஸா ஸ்தான)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:-

1.            வேங்கை – அஸன                              1.000     கி.கிராம்
2.            கொடுகாரை (நரிவேங்கை)- தினிஸ                1.000     “
3.            பூர்ஜப்பட்டை – பூர்ஜத்வக்                    1.000     “
4.            மருதம்பட்டை – அர்ஜூனத்வக்               1.000     “
5.            ஆவில்தோல் – கரஞ்ஜ                      1.000     “
6.            கருங்காலி – கதிர                           1.000     “
7.            வெண் கருங்காலி – ஸ்வேதகதிர             1.000     “
8.            வாகை – சிரீஷ                             1.000     “
9.            இருபூள்கட்டை (தோதகத்தி) – சிம்ஸூப       1.000     “
10.          சிறுகுறிஞ்சான் – மேஷ ஸ்ருங்கி             1.000     “
11.          சந்தனம் – சந்தன                            1.000     “
12.          செஞ்சந்தனம் – ரக்தசந்தன                   1.000     “
13.          மரமஞ்சள் – தாரு ஹரித்ரா                  1.000     “
14.          பனைவேர் – தாளமூல                      1.000     “
15.          புரசு – பலாஸ                              1.000     “
16.          காரகில் – அகரு                            1.000     “
17.          தேக்கு – ஸாகதாரு                         1.000     “
18.          குங்கிலியமரம் – ஸால                      1.000     “
19.          கொட்டைப்பாக்கு – ச்ரமுக                   1.000     “
20.          வெள்ளை நாகமரம் – தவ                   1.000     “
21.          வெட்பாலைப்பட்டை – குடஜத்வக்            1.000     “
22.          குந்துருக்கமரம் – சாககர்ண                  1.000     “
23.          பெருவாகை மரம் – ஸ்யோனாக              1.000     “
24.          தண்ணீர் – ஜல                             102.400 “


இவைகளை நன்கு கொதிக்க வைத்து 25.600 ஆகக் குறுக்கி வடிகட்டி வெல்லம் 10.000 கிலோ கிராம், தேன்  1.630 கிலோ கிராம் சேர்த்து அத்துடன் 


1.            வெட்பாலை அரிசி – இந்தரயவ               50  கிராம்
2.            பெருங்குரும்பை – மூர்வா                   50           “
3.            கண்டுபாரங்கி – பார்ங்கீ                    50           “
4.            கடுகரோஹிணீ – கடுகீ                    50           “
5.            மிளகு – மரீச்ச                             50           “
6.            அதிவிடயம் – அதிவிஷா                    50           “
7.            கள்ளி – ஸ்னுஹி                           50           “
8.            ஏலக்காய் – ஏலா                          50           “
9.            பாடக்கிழங்கு – பாட்டா                    50           “
10.          ஜீரகம் – ஜீரக                               50           “
11.          பெருவாகை – ஸ்யோனாக                   50           “
12.          மருக்காரை – மதனபல                       50           “
13.          ஓமம் – அஜமோதா                         50           “
14.          வெள்ளைக்கடுகு – ஸ்வேதஸர்ஸப           50           “
15.          வசம்பு – வாச்சா                             50           “
16.          கருஞ்சீரகம் – க்ருஷ்ண ஜீரக                 50           “
17.          பெருங்காயம் – ஹிங்கு                        50           “
18.          வாயுவிடங்கம் – விடங்க                    50           “
19.          தைவேளை – பஸுகந்தா                    50           “
20.          திப்பிலி – பிப்பலீ                            50           “
21.          மோடி – பிப்பலீ மூல                        50           “
22.          செவ்வியம் – சவ்ய                          50           “
23.          கொடிவேலிவேர் – சித்ரக                    50           “
24.          சுக்கு – சுந்தீ                                50           “
25.          இரும்புத்தகடு – திகினலோஹபத்ர            800         “


இவைகளை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு இரும்புத் தகட்டை கருங்காலித்தணலில் பழுக்கக் காய்ச்சி க்ஷெ கலவையில், தகடு கரையும் வரையில் நனைத்துக் காட்டாத்திப்பூ ஒரு கிலோ கிராம் சேர்த்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.

அளவும் அனுபானமும்: 

10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


தீரும் நோய்கள்: 

 இரத்த சோகை எனும் வெளுப்பு நோய் (பாண்டு),  
பிரமேசம் (ப்ரமேஹ),  
குட்டம் (குஷ்ட),  
வெண்குட்டம் (ஸ்வித்ர),  
மூலம் (அர்ஷ),  
செரியாமைக் கோளாறுகள் (அஜீர்ண),
நாட்பட்ட சீதபேதி (ரத்தாதிகார),  
அதிக உடற்பருமன் (மேதோவ்ருத்தி),  
குடற்பூச்சிகள் (க்ருமி கோஷ்ட).


குறிப்பு:    இரும்புத் தகட்டிற்குப் பதிலாக சுத்தி செய்த இரும்பு அரப் பொடியை அக்கலவையைச் சிறிது விட்டு நன்கு அரைத்துக் கலக்கியும், கருங்காலியின் குணம் மேலோங்க கஷாயச் சரக்குகளுடன் கருங்காலியையே 2.500 கிலோ அதிகமாகச் சேர்த்துக் கஷாயமாக்கி உபயோகித்துத் தயாரிப்பதும் சம்பிரதாயம். நன்கு ஸந்தானம் ஆவதற்காக காட்டாத்திப்பூ சேர்க்கப்படுகிறது.

குறிப்பு -சர்க்கரை ,தேன் மருந்தில் சேருவதால் -பாத எரிச்சலை கட்டுபடுத்த நினைக்கும் சர்க்கரை நோயாளிகள் நிச்சயம் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருந்து இந்த மருந்தை சாப்பிட வேண்டும் -இந்த மருந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகாது என்பது உறுதி ..

Post Comment

ஞாயிறு, டிசம்பர் 19, 2010

பெண்களின் அனைத்து நோய்க்கும் சர்வ நிவாராணி -அசோகாரிஷ்டம்-Asokarishtam


பெண்களின் அனைத்து நோய்க்கும் சர்வ நிவாராணி -அசோகாரிஷ்டம்
அசோகாரிஷ்டம்-Asokarishtam
(Ref-பைஷஜ்யரத்னாவளி - ஸ்த்ரீரோகாதிகாரம்)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:-

1.            அசோகப்பட்டை – அசோக த்வக்              5.000  கிலோ கிராம்
2.            தண்ணீர் – ஜல                               51.200   லிட்டர்
3.            வெல்லம் – குட                             10.000 கிலோ கிராம்

முதலிரண்டு சரக்குகளையும் நன்கு கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி வெல்லம் சேர்த்து அத்துடன் 

1.            கருஞ்சீரகம் – க்ருஷ்ண ஜீரக                 50  கிராம்
2.            கோரைக்கிழங்கு – முஸ்தா                  50           “
3.            சுக்கு – சுந்தீ                                50           “
4.            மரமஞ்சள் – தாருஹரித்ரா                   50           “
5.            ஆம்பல்கிழங்கு – உத்பலகந்த                50           “
6.            கடுக்காய் (கொட்டை நீக்கியது)- ஹரீதகீ      50           “
7.            தான்றிக்காய் (கொத்டை நீக்கியது)- பிபீதகீ      50           “
8.            நெல்லிமுள்ளி – ஆமலகீ                    50           “
9.            மாம்பருப்பு – ஆம்ராஸ்தி மஜ்ஜ              50           “
10.          ஜீரகம் – ஜீரக                               50           “
11.          ஆடாதோடை – வாஸாபத்ர                  50           “
12.          சந்தனம் – சந்தன                            50           “
13.          காட்டாத்திப்பூ – தாத்கீபுஷ்ப                  800         “


இவைகளை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ சேர்த்து சீலிலமண் செய்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.


அளவும் அனுபானமும் :  

  15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீருடன் இரு வேளைகள்.

  தீரும் நோய்கள் :

                பெரும்பாடு (அஸ்ரித்தர), வெள்ளை படுதல் (ஸ்வேதப்ரதர), வெட்டை, சூதக சூலை (ஆர்த்தவ சூல, யோனி ருஜா போன்றன), பெண்களின் மலட்டுத் தன்மை (நஷ்ட புஷ்பக) போன்ற பெண்களின் தீவிர நோய்கள் (தீவ்ரஸ்த்ரீ ரோக).

                சூதகக்கட்டு (நஷ்டார்த்தவ), சூதக சூலை (ஆர்த்தவ சூல) போன்றவற்றில் அசோகாதி வடியுடன் தரப்படுகிறது. பெண்களின் மலட்டுத்தன்மைக்கு (நஷ்ட புஷ்பக) சதாவரீ ரஸாயனம், அஸ்வகந்தாரிஷ்டத்துடன் தரப்படுகிறது. 

வலியும், பெருமளவில் ரத்தப் போக்குடனும் கூடிய வீட்டு விலக்குக் கோளாறுகளில் பப்பூலாரிஷ்டத்துடன் தரப்படுகிறது. 

வெள்ளப் போக்கில் (ஸ்வேத ப்ரதர) அப்ரகபஸ்ம, அயநிமிளை, காந்தம், சீந்தில், சர்க்கரை, இலவங்கப்பொடி, தாளீச பத்ரி, பனைவெல்லம், அமுக்கரா கிழங்கு தண்ணீர் விட்டான் கிழங்கு ஆகியவற்றுடன் தரப்படுகிறது. 

இது கருப்பை மற்றும் அதைச் சார்ந்த தசைகளுக்கு வலுவூட்டுவதுடன் மாதாந்திர ருதுப் போக்கை ஒழுங்கு படுத்துகிறது.

Post Comment