ஞாயிறு, ஜனவரி 02, 2011

இரத்தசோகை நோயை குணப்படுத்தும் -தாத்ரீ அஷ்ரிடம்-Daathree arishtam


. இரத்தசோகை நோயை குணப்படுத்தும் -தாத்ரீ அஷ்ரிடம்-Daathree arishtam
  (ref-சரகஸம்ஹிதா - பாண்டுசிகித்ஸா)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:-

1.            நெல்லிக்கனி – ஆமலகீ           2000 எண்ணிக்கைகள்
2.            சர்க்கரை – ஸர்க்கர              2.5 கி.கிராம்
3.            தேன் – மது                      312.5 கிராம்
4.            திப்பிலி – பிப்பலீ               100 கிராம்

நெல்லிக்கனிகளை நன்றாக இடித்துப் பிழிந்து வடிகட்டிக் கிடைத்த சாற்றில்சர்க்கரை, சாற்றின் அளவில் எட்டில் ஒரு பங்கு அளவுக்கு (312.500 கிராம்) தேன் இவைகளைக் கலந்து திப்பிலியை பொடித்துச் சேர்த்து இரண்டு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.


அளவும் அனுபானமும்:    

15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


தீரும் நோய்கள்:- 

 இரத்தசோகை (பாண்டு), காமாலை (காமால (அ) காமிலா), இதய நோய்கள் (ஹ்ருத்ரோக), வயிற்று உப்புசம் எனும் வயிற்றுப் பெருமல் (ஆத்மான), விட்டு விட்டு வரும் காய்ச்சல்கள் (விஷமஜ்வர), விக்கல் (ஹிக்க), சர்க்கரை நோய் (மது மேஹ).
                பசியுண்டாக்கி, செரிப்புண்டாக்கி மற்றும் மிதமான மலமிளக்கி.

எனக்கு தெரிந்த வகையில் மார்கெட்டில் கிடைக்கும் அத்தனை இரத்த விருத்தி டானிக்குகளை விட சிறந்த ஒன்று இந்த தாத்யாரிஷ்டம் என்னும் இந்த நெல்லிக்காய் டானிக் என்பதே உண்மை ..
 

Post Comment

சனி, ஜனவரி 01, 2011

உடல் வலு சேர்க்கும் -திராக்ஷாரிஷ்டம் -no-2


   

தயாரிக்கும் வேறொரு முறை
 
உடல் வலு சேர்க்கும் -திராக்ஷாரிஷ்டம் -no-2
 
(ref -சாரங்கதரசம்ஹிதா – மத்யமகண்டம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            திராக்ஷை – த்ராக்ஷா                   2.500  கிலோகிராம்
2.            தண்ணீர் – ஜல                       25.600  லிட்டர்

இவைகளைக் கொதிக்க வைத்து 6.400 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி வெல்லம் (குட) 10.000 கிலோ கிராம் சேர்த்து அதனுடன்

1.            இலவங்கப்பட்டை – லவங்கத்வக்       50  கிராம்
2.            ஏலக்காய் – ஏலா                       50           “
3.            இலவங்காப்பத்திரி – லவங்கடத்ர       50           “
4.            சிறுநாகப்பூ – நாக்கேஸர               50           “
5.            ஞாழல் பூ – ப்ரியாங்கு                 50           “
6.            மிளகு – மரீச்ச                        50           “
7.            திப்பிலி – பிப்பலீ                      50           “
8.            வாயுவிடங்கம் – விடங்க               50           “


ஆகியவைகளைப் பொடித்துச் சேர்த்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.

குறிப்பு:  
(i) தண்ணீரை இரண்டு மடங்காகச் சேர்த்து ¼ ஆகக் குறுக்கி வடிகட்டுவது சம்பிரதாயம்.
  (ii) நூலில் காட்டாத்திப்பூவைச் சேர்க்கும்படி கூறப்படாவிடிலும், சிலர் காட்டாத்திப்பூவைச் சேர்ப்பது வழக்கம். காட்டாத்திப்பூவைச் சேர்க்காத போதிலும் சந்தானம் தொடங்கி நடைபெறுகிறது.


அளவும் அனுபானமும்:    

10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.


தீரும் நோய்கள்: 






செரியாமை (அக்னிமாந்த்ய), மலச்சிக்கல் (மலபந்த), இருமல் (காஸ), இரைப்பு (அ) இழைப்பு (ஸ்வாஸ), பலவீனம் (தௌர்பல்ய), க்ஷயம் (க்ஷய), இரத்தம் துப்புதல் (உரக்க்ஷதம்)


கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு காலத்தில் (பிரஸவ காலத்தில்) தரப்படுகிறது. இதயப் பட படப்பில் அர்ஜூனாரிஷ்டத்துடன் தரபடுகிறது.


நல்லதொரு உடல்தேற்றி, இதயத்திற்கு வலுவூட்டி, மிதமான மலமிளக்கி

Post Comment

பலஹீனம் ,மயக்கத்தை குணபடுத்தும் -திராக்ஷாரிஷ்டம்-Draksha arishtam


பலஹீனம் ,மயக்கத்தை குணபடுத்தும் -திராக்ஷாரிஷ்டம் -Draksha arishtam
(ref-கதநிக்ரஹ - ஆஸவாதிகார)-

தேவையான மருந்துகளும் செய்முறையும்:-

1.            திராக்ஷை – திராக்ஷா                        5.000 கிலோ கிராம்
2.            தண்ணீர் – ஜல                             51.200   லிட்டர்

இவைகளைக் கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி அத்துடன்

சர்க்கரை  5.000 கிலோ கிராம், தேன் 5.000 கிலோ கிராம் இவைகளைக் கலந்து

1.            ஜாதிக்காய் – ஜாதிபல                            25  கிராம்
2.            இலவங்கம் – லவங்க                            25           “
3.            தக்கோலம் – தக்கோலம்                          25           “
4.            பேரீச்சம்பழம் – கர்ஜூர பலம்                     25           “
5.            சந்தனக்கட்டை – சந்தன                           25           “
6.            திப்பிலி – பிப்பலீ                                  25           “
7.            இலவங்கப்பட்டை – லவங்க த்வக்                25           “
8.            இலவங்கப்பத்திரி – லவங்க பத்ர                  25           “
9.            ஏலக்காய் – ஏலா                                25           “
இவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ 350 கிராம் சேர்த்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.

அளவும் அனுபானமும்:   
   
10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீருடன் இரு வேளைகள்.

தீரும் நோய்கள்:  

பசிக்குறைவு (அக்னி மாந்த்ய), ருசியின்மை (அருசி), வாயுக்கட்டு எனும் உப்புசம் (ஆத்மான), மூலம் (அர்ஷ), க்ஷயம் (க்ஷய), இளைப்பு (கார்ஸ்ய), பலவீனம் (தௌர்பல்ய), சோகை (பாண்டு), இரத்தபித்தம் (ரத்தப்போக்கு, ரத்தம் போதல், மூக்கில் ரத்தம் வடிதல், ரத்த மூத்திரம் போன்றன), இதய நோய்கள் (ஹ்ருத்ரோக).

                இது சிறந்ததொரு உடல்தேற்றி, பசியுண்டாக்கி, செரிப்புண்டாக்கி, இதயத்திற்கு வலுவுண்டாக்கி, மிதமான மலமிளக்கி. 

Post Comment