ஆஸ்த்மாவை சரிசெய்யும் டானிக் - கனகாஸவம்-kanakasavam
(பைஷஜ்யரத்னாவளி - ஹிக்காச்வாஸசிகித்ஸா)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:-
1. நன்கு கொதித்து ஆறிய தண்ணீர் – ஜல 25.600 லிட்டர்
2. சர்க்கரை – சர்க்கர 5.000 கிலோ கிராம்
3. தேன் – மது 2.500 “
இவைகளைக் கலந்து அதில் திராக்ஷை (த்ராக்ஷா) 1.000 கிலோ கிராம்
இடித்துச் சேர்த்து அத்துடன்
1. ஊமத்தை (சமூலம்) – கனச (மூல) 200 கிராம்
2. ஆடாதோடை வேர்ப்பட்டை – வாஸாமூலத்வக் 200 “
3. அதிமதுரம் – யஷ்டீமது 100 “
4. திப்பிலி – பிப்பலீ 100 “
5. கண்டங்கத்திரி – கண்டகாரீ 100 “
6. சிறு நாகப்பூ – நாககேஸர 100 “
7. சுக்கு – சுந்தீ 100 “
8. கண்டு பாரங்கி – பார்ங்கீ 100 “
9. தாளீசப்பத்திரி – தாளீசபத்ர 100 “
ஆகியவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகிபுஷ்ப) 800 கிராம் சேர்த்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.
குறிப்பு: சர்க்கரை, தேன் இவைகளை வகைக்கு 75 சதவிகிதமும், திராக்ஷையை 75 சதவிகிதமும் அதிகமாகச் சேர்ப்பது சம்பிரதாயம்.
அளவும் அனுபானமும்:
10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.
தீரும் நோய்கள்:
இருமல் (காஸ), இரைப்பு (அ) இழைப்பு (ஸ்வாஸ), க்ஷயம். இது கபத்தை வெளியேற்றி இரைப்பு (அ) இழுப்பைக் குறைக்கிறது.
குறிப்பு -ஆஸ்த்மாவுக்கு இந்த மருந்து மட்டும் தனியாக வேலை செய்யாது ,மற்றும் தேவைக்கேற்ற பல மருந்துகளுடன் மருத்துவரின் ஆலோசனை படி சாப்பிடுவது நல்லது