புதன், மே 11, 2011

இன்று ....

அகவை  முப்பத்தைந்து ஆனது இன்றோடு
ஆயினும் செய்ய வேண்டிய கடமைகள் -கடல் அளவு
இன்றே இயன்றதை செய்ய பிணி நீக்கும் பணிகளும் -மகிழ்ச்சியும் நேரமின்மையுடனும்
ஈந்து விட நான் கற்ற (கற்றுகொண்டிருக்கும் ) மருத்துவம் -எல்லோருக்கும் சேர்ந்திட
உள்ளம் ,உயிர் சேர்ந்து பிசைந்த கல்வியறிவை ஏற்றிவைக்க நண்பர்களுடன் ,இயற்கையுடன் எல்லோருடைய
ஊணுயிர் வளர மண்ணுயிர் பயனுற வெறி கொண்டு
எல்லாம் வல்ல இறைவனிடம் "என்னை நாடி வரும் நோயாளிகளின் பிணி நீக்கி  தருவாய் எந்த மருந்துக்கோ மருத்துவனுக்கோ ஆற்றல் இல்லை -உனதருள் இன்றி " என்று
ஏக்கத்துடன் கேட்டவனாய் ..வட்டி இல்லாமல் ,பிறர் கை எதிர் பாராமல் எனது கனவு மருத்துவமனையையும் கட்டிட வேண்டி
ஐவேளை தொழுகையுடன் -அழுகையுடன் கேட்கிற பிரார்த்தனையில் இந்திய மருத்துவத்தை என்னால் இயன்ற அளவுக்கும்
ஒருமித்த கருத்துடன் எல்லாருக்கும் சேர்த்திட  இந்த தளத்தின் மூலமாகவும் சேவை செய்திட
ஓர் வாய்ப்பை அளித்த ஏக இறைவனுக்கும் நன்றி கூறியவனாக
ஔஷதங்களை ஆராய்ந்து உலகுக்கு சொல்வேன் என்ற உறுதியுடன் "என் பணி ,பிணி நீக்குவதே எல்லோருக்கும் இந்த தளத்தின் அறிவு கொடுப்பது மூலமாக ..


Post Comment

செவ்வாய், மே 10, 2011

வெள்ளை அணுக்களை குறைக்கும் காய்ச்சலையும் சரி செய்யும் -காய்ச்சலை சரி செய்யும் பீரங்கி -பார்ங்யாதி க்வாத சூர்ணம்



டெங்கு காய்ச்சல் –பன்றி காய்ச்சல் இரண்டையும் குணப்படுத்தும் –வராமல் தடுக்கும் மருந்து –பாரங்யாதி கஷாயம் 


வெள்ளை அணுக்களை குறைக்கும் காய்ச்சலையும் சரி செய்யும் -காய்ச்சலை சரி செய்யும் பீரங்கி -பார்ங்யாதி க்வாத சூர்ணம்
 (ref-ஸஹஸ்ரயோகம் - கஷாயப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:



1.            கண்டுபாரங்கி – பார்ங்கீ      - 10 கிராம்
2.            கோரைக்கிழங்கு – முஸ்தா        - 10       “
3.            பர்பாடகம் – பர்பாடக             - 10       “
4.            கொத்தமல்லிவிதை – தான்யக    - 10       “
5.            சிறுகாஞ்சூரி – துராலபா           - 10       “
6.            சுக்கு – சுந்தீ                     - 10       “
7.            நிலவேம்பு – பூநிம்ப              - 10       “
8.            கோஷ்டம் – கோஷ்ட             - 10       “
9.            திப்பலி – பிப்பலீ            - 10       “
10.          முள்ளுக்கத்திரி – ப்ருஹத்தீ       - 10       “
11.          சீந்தில்கொடி – குடூசீ              - 10       “

மேற்கூறிய சரக்குகளை நன்கு சுத்தம் செய்து ஒன்றிரண்டாக இடித்து காற்றுப்புகாத கொள்கலன்களில் பத்திரப்படுத்தவும்.
கஷாயம் தயாரிக்கும் முறை:
                கஷாயப் பொடி  - 60 கிராம்
                தண்ணீர்        - 960 மில்லி லிட்டர்
                                இவற்றை நன்கு கொதிக்க வைத்து 120 மில்லி லிட்டராகக் குறுக்கி ஆறிய பின் வடிக்கட்டவும்.
  
அளவு:          

 30 – 60 மில்லி லிட்டர் வரை இரு வேளைகள் கொடுக்கவும்.
  தீரும் நோய்கள்:  

வாதகப சுரம் எனும் வளிஐயக்காய்ச்சல் (வாதகபஜ்வர), குளிர்சுரம் (விஷமஜ்வர), முறைக்காய்ச்சல் (ஜீர்ண ஜ்வர) போன்ற பல விதமான காய்ச்சல்கள், இருமல் (காஸ), ஜலதோஷம் முதலியன. வயிற்றிலுள்ள உருண்டை, தட்டை மற்றும் கொக்கிப் புழுக்களை (க்ருமி கோஷ்ட) வெளியேற்றவும், மற்ற மருந்துகளுக்கு அனுபானமாகவும் பயனாகிறது.

தெரிந்து கொள்ளவேண்டியவை -

  1. மர்ம காய்ச்சல் ,வைரஸ் காய்ச்சல் ,நாள்பட்ட காய்ச்சல் ,விட்டு வரும் காய்ச்சல் அனைத்திற்கும் இந்த மருந்து நல்ல மருந்து -இதனுடன் வெட்டுமாரன் குளிகா அல்லது அம்ருதாரிஷ்டம் அல்லது நிலவேம்பு சார்ந்த மருந்துகளான மகா சுதர்சன மாத்திரையுடன் தந்தால் காய்ச்சல் ஓடியே போகும் என்று பந்தயம் கட்டலாம் ..
  2. காய்ச்சல் வந்த உடன் -கஷாயம் தருவது நல்லது இல்லை ,முதலில் வயிற்றுக்கு பட்டினி தான் நல்லது ,பசியின் தன்மை அறிந்துதான் கஷாயம் தருவது நல்லது
  3. பாரங்கி +பவள மல்லி இலை கசாயம் கூட காய்ச்சலை குறைக்கும்
  4. வெள்ளை அணுக்கள் குறைந்து போகிறது ,இரத்த தட்டுக்கள் குறைந்து போகும் பேர் தெரியா காய்ச்சலுக்கும் இந்த மருந்து நன்றாக வேலை செய்கிறது
  5. டெங்கு காய்ச்சல் –அணுக்கள் குரைக்கிற காய்ச்சல் மற்றும் சளி சேர்ந்த கப காய்ச்சல் –இருமல் சார்ந்த காய்ச்சல் –வைரஸ் காய்ச்சல் எல்லா பெயர் தெரியாத காய்ச்சலுக்கும் இந்த மருந்தை பயமின்றி தரலாம் ..தொடர்ந்து ஐந்து நாட்கள் பருகி வர –உடலின் எதிர்ப்பு சக்தி அதிகமாகி –எல்லா விதமான வைரஸ் காய்ச்சலில் இருந்தும் தடுத்து கொள்ளலாம்.
    உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க –இயற்கையாக நோய்களில் இருந்து சீக்கிரம் விடுதலை பெற –ஆயுர்வேத ஆலோசனைக்கு அணுக வேண்டிய முகவரி
    அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை –
    கடையநல்லூர் 90 4222 5333
    திருநெல்வேலி 90 4222 5999
    ராஜபாளையம் 90 4333 6888
    சென்னை 90 4333 6000


Post Comment

திங்கள், மே 09, 2011

இடுப்பு டிஸ்க் சார்ந்த பிரச்சனையால் ஏற்படும் -முதுகுவலிக்கு சிறந்த மருந்து -கந்தர்வஹஸ்தாதி க்வாத சூர்ணம்-Gandarva hastadhi Kashayam


இடுப்பு டிஸ்க் சார்ந்த பிரச்சனையால் ஏற்படும் -முதுகுவலிக்கு சிறந்த மருந்து -கந்தர்வஹஸ்தாதி க்வாத சூர்ணம்-Gandarva hastadhi Kashayam
(ref-ஸஹஸ்ரயோகம் - கஷாயப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            ஆமணக்குவேர் – ஏரண்டமூல                     - 10 கிராம்
2.            ஆவில்பட்டை – பூதிகத்வக்                         - 10       “
3.            கொடிவேலிவேர் – சித்ரகமூல                      - 10       “
4.            சுக்கு – சுந்தீ                                        - 10       “
5.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்  - 10       “
6.            மூக்கிரட்டைவேர் – புனர்னவா                     - 10       “
7.            சிறுகாஞ்சூரி     - துராலபா                      - 10       “
8.            நிலப்பனைக்கிழங்கு – முசலீ கந்த               - 10       “

மேற்கூறிய சரக்குகளை நன்கு சுத்தம் செய்து ஒன்றிரண்டாகப் பொடித்து காற்றுபுகாத கொள்கலன்களில் பத்திரப்படுத்தவும்.

கஷாயம் தயாரிக்கும் விதம்:


                                கஷாயப் பொடி – 60 கிராம்
                தண்ணீர்      - 960 மில்லி லிட்டர்
                இவற்றை நன்கு கொதிக்க வைத்து 120 மில்லி லிட்டராகக் குறுக்கி ஆறியபின் வடிக்கட்ட வேண்டியது.

அளவு:          

 30 முதல் 60 மில்லி லிட்டர் வரை இந்துப்பு, வெல்லம் சேர்த்து காலையிலும், படுக்கும்போது என இரு வேளைகள்.

தீரும் நோய்கள்:  

பசியின்மை (அ) ஜீரணமந்தம் (அக்னிமாந்த்ய). ருசியின்மை (அருசி), மலச்சிக்கல் (மலபந்த), வீக்கம் (ஷோப), நரம்புக் கோளாறுகள், கீல்வாயு (சந்திவாத) போன்ற பலவிதமான வாத நோய்கள், மலமிளக்கிச் செய்கை கிட்ட வேண்டுமாயின் இந்துப்பு மற்றும் வெல்லம் சேர்ந்து இதனை அருந்த வேண்டும்.

                பஞ்சகர்ம சிகிச்சை முறையான நவரக்கிழி, தாரை, பிழிச்சல் முதலியவற்ரைத் தொடங்குமுன், தினமும் இது உபயோகிக்கப்படுவதால் இதற்கு “பாத்திக் கஷாயம்” என்றும் பெயர் உண்டு.
                மற்ற மருந்துகளுக்கு அனுபானமாகவும் உபயோகிக்கலாம்.



தெரிந்து கொள்ள வேண்டியவை -
  1. இடுப்பு வலி ,அடி முதுகு வலி ,பெண்களின் வெள்ளைபடுதளால் உண்டாகும் குறுக்கு வலி -போன்ற இடுப்பு வலி சார்ந்த பிரச்சனைக்கு இந்த மருந்து மிக பிரமாதமாக வேலை செய்யும் ..
  2. இடுப்பில் உள்ள டிஸ்க் நழுவல் ,டிஸ்க் கிழிதல், டிஸ்க்கின் பிதுக்கம் ,டிஸ்க்கின் எல்லாவிதமான பிரச்சனைக்கு -இந்த மருந்தோடு சஹாச்சராதி கசாயம் சேர்ந்து உள்ளே -க்ஷீர பலா நூற்று ஒன்று ஆவர்திதம் -சேர்த்து சாப்பிட நல்ல பலன் தரும்
  3. பஞ்சகர்ம என்னும் உடலை சுத்தம் செய்யும் சிகிச்சையில் மிக முக்கியமான வஸ்தி என்னும் சிகிச்சையில் பிரிவான கஷாய வஸ்திக்கு இந்த மருந்தை என்னை போன்ற ஆயுர்வேத மருத்துவர்கள் அதிகம் பயன்படுத்துவோம்
  4. ஆமணக்கு வேர் -மலமிளக்கி என்பதால் வாதம் தடையாக உள்ள எல்லா நோய்களுக்கும் -இந்த மருந்து சிறந்த மருந்து ..
  5. காந்தர்வ ஹஸ்தம் -என்றால் அரக்கனின் கை என்று பொருள் -இது ஆமணக்கின் வேறு பெயர் என்று தெரிதல் நல்லது
  6. நிலபங் கிழங்கு என்னும் ஆண்மை பெருக்கும் மூலிகை இருப்பதால் இந்த மருந்து தாதுக்கள் குறைவினால் ஏற்படும் நோய்களுக்கும் சிறந்து

Post Comment