ஞாயிறு, ஜூன் 12, 2011

குழந்தையின்மைக்கு மருந்தாகும் -சுகுமாரம் ரசாயனம் லேஹியம்


குழந்தையின்மைக்கு மருந்தாகும் - ஸுகுமார ரஸாயனம்
(ref-அஷ்டாங்க ஹ்ருதயம் – வித்ரதி விருத்தி சிகித்ஸா)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            மூக்கிரட்டைவேர் – புனர்னவ                 9         கிலோ
2.            தசமூலம் – தசமூல                         900         கிராம்
3.            கீரைப்பாலை – ஜீவந்தி                       900         “
4.            ஆமணக்குவேர் – எரண்டமூல                900         “
5.            அமுக்கராக் கிழங்கு – அஸ்வகந்தா           900         “
6.            தண்ணீர்விட்டான் கிழங்கு – ஸதாவரீ        900         “
7.            தர்பை – தர்பா                                900         “
8.            ஆற்று தர்பை – வம்ஸமூல?                                         900         “
9.            அமவேர் – கான இக்க்ஷமூல                 900         “
10.          குசவேர் – குஸ                             900         “
11.          கரும்புவேர் – இக்க்ஷூமூல                  900         “
12.          கொட்டைக்கரந்தை – ஹப்புஸ               900         “

                இவைகளை 10 ½ மடங்கு தண்ணீருடன் கொதிக்க வைத்துத் தண்ணீர் 1/8 பங்காக வற்றியவுடன் வடிகட்டிய கஷாயத்தில்

13.          வெல்லம் – குட                          9         கிலோ
                சேர்த்துக் கரைத்து வடிகட்டி பால் (க்ஷுர) 6 கிலோ சேர்த்துக் கொதிக்க வைக்கவும். பாகு பக்குவமான நிலையில் அத்துடன்

14.          நெய் – க்ருத                                6              கிலோ
15.          ஆமணக்கு எண்ணெய் – எரண்டதைல        6         கிலோ

சேர்த்துப் பிறகு

16.          திப்பிலி – பிப்பலீ                          150 கிராம்
17.          திப்பிலி மூலம் – பிப்பலீமூல                150         “
18.          இந்துப்பு – ஸைந்தவ லவண                 150         “
19.          அதிமதுரம் – யஷ்டீ                         150         “
20.          திராக்ஷை – த்ராக்ஷா                        150         “
21.          ஓமம் – அஜமோதா                         150         “
22.          சுக்கு – சுந்தீ                                150         “

                இவைகளின் சலித்த நுண்ணிய சூரணத்தையும் சேர்த்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.

அளவும்  அனுபானமும்:   

  2 முதல் 10 கிராம் வரை பாலுடன் இரு வேளைகள்.

தீரும் நோய்கள்: 




 வயிற்றுவலி (உதரசூல), குன்மம் (குல்ம), பிறப்பிறுப்பு சார்ந்த நோய்கள் (ஜன்னேந்திரிய ரோக), நீடித்த மலச்சிக்கல் (வர்கோவிபந்த) (அ) புராணமலபந்த). கருவுற்றிருக்கும் போது தொடர்ந்து சாப்பிட சிக்கலற்ற பிரஸவத்திற்கு உதவுகிறது. பிறப்புறுப்பு மண்டலத்தைத் தூண்டவல்லது. நீர் பெருக்கி, மிதமான மலமிளக்கி.


தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. காரணம் தெரியாத மலட்டு தன்மைக்கு இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
  2. அடி வயிறு  சார்ந்த நோய்கள் ,அபான வாயுவின் தடை போன்றவற்றிக்கு இந்த மருந்து நல்ல மருந்து
  3. அடி வயிற்றில் ஏற்படும் கட்டிகள் -பொதுவாக பெண்களின் கருப்பையில் ஏற்படும் கட்டிகளுக்கு ,பைப்ராய்ட்  கட்டிகள் ,சதைக்கட்டிகள் ,நீர்க்கட்டிகள் ,பாலி சிஸ்டிக் ஓவரி போன்ற பிரச்சனைகளுக்கு -தனியாகவோ ,த்ர்யாயந்த்யாதி கஷாய்த்துடனோ சேர்த்து பருக விரைவில் கரைந்து -அறுவை சிகிச்சை வேண்டாம் என்று ஆங்கில மருத்துவர்களே சொல்வார்கள் என்பது உறுதி
  4. சூட்டு வலி ,சூதக வலி -மாத விடாய் வலிகளுக்கு -தக்க துணை மருந்துகளோடு தர -சூலம்  என்னும் வலிகள் மாயமாய் மறைந்து போகும்
  5. இந்த ஒரு மருந்தை வைத்தே -பல குழந்தையின்மை தம்பதிகளுக்கு ஏக இறைவனின் துணை கொண்டு குழந்தை பாக்கியம் பெற்று தர உதவியது ,உதவுகிறது ..
  6. இந்த சுகுமாரம் மருந்து -லேஹியமாக ,சுகுமாரம் கஷாயமாக  ,சுகுமாரம் கிருதம் என்னும் நெய் மருந்தாக ,சுகுமாரம் அரிஷ்டமாக -பல வடிவங்களில் ,பல நிலைகளில் ,பல விதமாக கிடைக்கிறது -

Post Comment

சனி, ஜூன் 11, 2011

உடல் உஷ்ணத்தை குறைத்து தாதுக்களை வலுப்படுத்தும் -கூஷ்மாண்ட லேஹ்யம்


உடல் உஷ்ணத்தை குறைத்து தாதுக்களை வலுப்படுத்தும் -கூஷ்மாண்ட லேஹ்யம்

 (ref-பைஷஜ்யரத்னாவளி – ரக்த பித்தாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

                தோல், கொட்டை நீக்கிச் சொர சொரப்பான கண்களை உடைய சல்லடையில் தேய்த்து எடுத்த பூசணிக்காயின் வெண்ணிறமான கதுப்பு 5.000 கிலோ கிராமை நீராவியில் வேகவைத்துப் பிழிந்து, சிறிது வெய்யிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும். பின்னர் அத்துடன் பசுவின் நெய் (க்ருத) 800 கிராம் சேர்த்து அகலமான பாத்திரத்திலிட்டு தேன் போன்ற நிறம் வரும் வரை வறுக்கவும். பிறகு அதில் கற்கண்டு 5.000 கிலோ கிராம் பொடித்துச் சேர்த்து நன்கு கிளறி கைவிரல் ரேகை பதியும் அளவு கெட்டியாகிப் பாகம் வந்தவுடன் அத்துடன்,

1.            திப்பிலி – பிப்பலீ                 100 கிராம்
2.            சுக்கு – சுந்தீ                     100         “
3.            சீரகம் – ஜீரக                     100         “
4.            இலவங்கப்பட்டை – லவங்கத்வக்  25           “
5.            ஏலக்காய் – ஏலா                  25           “
6.            இலவங்கப்பத்திரி – லவங்கபத்ரி   25           “
7.            மிளகு – மரீச்ச                  25           “
8.            கொத்தமல்லி விதை – தான்யக   25           “

                இவைகளைப் பொடித்துச் சலித்துச் சேர்த்துத் திரும்பத் திரும்பக் கிளறி பத்திரப்படுத்தவும்.

ஆறியபின் தேன் (மது) 400 கிராம் சேர்க்கவும்.

குறிப்பு:    

 மேலே கூறிய முறைப்படி லேஹ்யம் செய்தால் சில நாட்களிலேயே லேஹ்யத்தில் பூர்ணம் பூத்துவிடுகிறது. எனவே சம்பிரதாயத்தில் செய்முறை சிறிது மாற்றப்படுகிறது.

                பூசனிக்காயைத் தோல் கொட்டை நீக்கிச் சொரசொரப்பான கண்களை உடைய சல்லடையில் தேய்த்துக் கேஸரமாக்கிப் பிழிந்து இட்டிலி செய்வது போன்று ஆவியில் வேகவைக்கவும். மேற்படி கேஸரத்தில் இருந்து பிழிந்தெடுத்த சாற்றில் செய்முறையில் கூறியுள்ள சர்க்கரையைக் கரைத்துச் சூடாக்கி வரவும்.

                வெந்த கேஸரத்தை சுத்தமான துணி அல்லது பாய் இவைகளில் தகடுபோல் பரப்பி வெய்யிலில் நன்கு உலர்த்தவும். உலர்ந்த பின்னர் அவற்றை எடுத்து செய்முறையில் கூறியுள்ளபடி நெய்யைச் சிறிது விட்டு வறுத்து மற்ற சரக்குகளுடன் பொடித்துச் சலித்துச் சித்தமாக்கவும். பின்னர் மேலே கூறிய சாறு, சர்க்கரை இவற்றின் கலவையை வடிக்கட்டிக் கொதிக்க வைத்துப் பதத்தில் மீதமுள்ள நெய்யைச் சேர்த்துப் பின்னர் சலித்த சூரணத்தைத் தூவி கலந்து ஆறிய பின் தேன் சேர்த்து பத்திரப்படுத்தவும்.


அளவும் அனுபானமும்:   

5 முதல் 10 கிராம் வரை சூடான பாலுடன் இரு  வேளைகள்.

தீரும் நோய்கள்: 


 இருமல் (காஸ), இரைப்பு (அ) இழைப்பு (ஸ்வாஸ), இளைப்பு (க்ஷய (அ) கார்ஸ்ய), பலவீனம் (பலக்ஷய (அ) அசக்த), நாட்பட்ட காய்ச்சல் (புராண ஜ்வர), ரத்தம் துப்புதல் (உரக்க்ஷத (அ) க்ஷதக்ஷய), குருதியழல் (ரத்த பித்த), வெள்ளைப் போக்கு (ஸ்வேதப்ரதர), மூலம் (அர்ஸஸ்), குருதி யொழுகு மூலம் (ரக்தார்ஷ), இதய நோய் (ஹ்ருத்ரோக).

                உஷ்ணமும் இளைப்பும் கூடிய நிலையில் ஒரு நாளைக்கு இரு வேளை தரவும். வெள்ளை போக்கில் ப்ரதராந்தக ரஸத்துடன் தரப்படுகிறது. ரத்தமூலத்தில் ப்ப்பூலாரிஷ்டத்துடன் தரப்படுகிறது. 

நல்லதொரு பலவிருத்திச் செய்கை வேண்டின் சிறிது கஸ்தூரி, தங்கபற்பம் (அ) வெள்ளிபற்பம் (அ) மகரத்வஜ (அ) பூரணச் சந்திரோதயத்துடன் சேர்த்து அருந்தவும். 

கோடையில் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளவும், பலவிருத்தி செய்கை வேண்டியும் எல்லோரும் உட்கொள்ளலாம். 

காமவிருத்தி செய்கை (வாஜீகரணம்) வேண்டின் இதனுடன் சாலாப்மிஸ்ரி, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, அக்ரோட், சாரைப்பருப்பு, நீர்முள்ளி வித்து, நெருஞ்சில் வித்து போன்றவற்றின் சூரணத்தையும் சேர்த்துண்ண வேண்டும். 

தெரிந்து கொள்ளவேண்டியவை
  1. வெண் பூசணியில் செய்யப்படும் இந்த லேஹியம் -உடல் எடை கூட பயன்படுத்தபடுகிறது
  2. பெண்களின் வெள்ளை படுதில் -முசலிகதிராதி கஷாயத்துடன் சாப்பிட நல்ல பலன் தரும்
  3. உடல் உஷ்ணத்தை குறைக்க இந்த மருந்தே எனது முதல் சாய்ஸ்
  4. பொதுவாக தினமும் சாப்பிட -உடல் வன்மை பெருகும் ,ஆண் பெண் மலட்டு தன்மை நீங்கும்
  5. சித்த மருத்துவத்தில் கிடைக்கும் வெண் பூசணி லேஹியம் இதுவும் குணத்தில் ஒன்றே ஆனாலும் தயாரிக்கபடும் முறை ,சேர்கின்ற மூலிகைகளில் வித்தியாசம் உள்ளது (பல கம்பெனிகள் -ஒரே மருந்தென்று லேபிளை மட்டும் மாற்றி விடுவர் )
  6. புளி தவிர்த்து இந்த மருந்தை உண்பது நல்லது ..

Post Comment

வெள்ளி, ஜூன் 10, 2011

தாய்ப்பால் சுரக்க உதவும் -சௌபாக்ய சுண்டி லேஹியம்


தாய்ப்பால் சுரக்க உதவும் -ஸௌபாக்ய சுண்டி
 (ref-ரஸரத்ன ஸமுச்சயம் – உத்தர கண்டம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

                வெல்லம் – குட            2.250 கிலோ கிராம்
                தண்ணீர் – ஜல             போதுமான அளவு

                இவற்றைக் சூடு செய்து வெல்லம் கரைந்தவுடன் வடிகட்டி, அதில் தனித்தனியே நன்கு பொடித்துச் சலித்த

                சுக்கு – சுந்தீ                     160 கிராம்
                சதகுப்பை – ஸதபுஷ்ப            100         “

                இவைகளை கரைத்துக் கொதிக்கவைத்துப் பாகு பதத்தில் நெய் (க்ருத) 240 கிராம் சேர்த்துக் கலக்கி அத்துடன்

1.            கொத்தமல்லி விதை – தான்யக        60 கிராம்
2.            வாயுவிடங்கம் – விடாங்க              20           “
3.            சிறுநாகப்பூ – நாககேஸர               20           “
4.            கருஞ்சீரகம் – க்ருஷ்ண ஜீரக           20           “
5.            மிளகு – மரீச்ச                        20           “
6.            சீரகம் – ஜீரக                          20           “
7.            ஏலக்காய் – ஏலா                       20           “
8.            திப்பிலி – பிப்பலீ                        20           “
9.            இலவங்கப்பட்டை – லவங்கத்வக்       20           “
10.          கோரைக்கிழங்கு – முஸ்தா             20           “

இவைகளைப் பொடித்துச் சலித்த சூரணத்தையும் சேர்த்து நன்கு கலந்து பத்திரப்படுத்தவும்.

 அளவும்  அனுபானமும்:   

2 முதல் 10 கிராம் வரை பாலுடன் இரு வேளைகள். (ஆட்டுப்பாலுடன் கொள்வது சிறப்பானது).

    தீரும் நோய்கள்:  



சீரணக் கோளாறுகள் (அக்னி மாந்த்ய), பலவீனம் (பலக்ஷய), இளைப்பு (கார்ஸ்ய), பிரஸவித்தப்பின்னேற்படும் கோளாறுகள் (ஸூதிகாரோக), வீட்டுவிலக்குக் கோளாறுகள் (ருதுதோஷ (அ) ஆர்த்தவ தோஷ), தாய்பால் இன்மை, யோனி நோய்கள், ஆண்மைகுன்றுதல். இது கருப்பைக்கு வலுவூட்டவல்லது.

தெரிந்து கொள்ளவேண்டியவை -
  1. பிரசவத்திற்கு பின் ஆறுமாத காலம் வரை சாப்பிட -பிரசவத்திற்கு பின் வரும் உடல் எடை கூடல் ,பலஹீனம் ,தாய்பால் குறைவு ,எலும்பு தெம்பு இன்மை ,இடுப்பு வலி ஆகியவற்றை போக்கும் ..
  2. இந்த மருந்தின் அருமை தெரிந்து -மத்திய அரசு எல்லா அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதல் பெரிய அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர் அனைவர்க்கும் கொடுத்து எல்லா தாய்மார்களுக்கும் இலவசமாக கொடுக்க செய்துள்ளது ..
  3. நல்ல பசி உண்டாக்கி


               

Post Comment