ஞாயிறு, ஜூலை 22, 2012

அதிக இரத்தபோக்கை சரிசெய்து கருப்பைக்கு வலு சேர்க்கும் அசோகாதிவடீ-Ashokadi vati


அதிக இரத்தபோக்கை சரிசெய்து கருப்பைக்கு வலு சேர்க்கும்
அசோகாதிவடீ-Ashokadi vati
                                                                                              
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            பொடித்த அசோகப்பட்டை – அசோகத்வக் 500 கிராம்
2.            தண்ணீர் – ஜல                   8.000 லிட்டர்

இவைகளை நன்கு கொதிக்க வைத்து ஒரு லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி மறுபடியும் வடிகட்டிய அக்கஷாயத்தைக் கொதிக்க வைத்து நன்கு கெட்டியாகும் வரை குறுக்கி அத்துடன் பொடித்துச் சலித்த அசோகப்பட்டைச் சூர்ணம் 60 கிராம் சேர்த்து நன்கு கலக்கிக் கிளறவும். இது அசோக ரஸக்ரியை எனப்படும்.

1.            அசோகப்பட்டை ரசக்கிரியை – அசோகரஸக்ரியா    100 கிராம்
2.            அன்னபேதிச் செந்தூரம் – காஸீஸ பஸ்ம                25           “
இவைகளைக் கல்வத்திலிட்டு அசோகப்பட்டைக் கஷாயம் (அசோகத்வக் கஷாய) விட்டு நன்கு அரைத்துப் பதத்தில் 500 மில்லி கிராம் எடை உள்ள மாத்திரைகளாக்கவும்.

                               
 அளவும் அனுபானமும்:      

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வீதம் இரண்டு முதல் மூன்று வேளைகள் தேன் அல்லது தண்ணீருடன்.

                                 
தீரும் நோய்கள்:  



பெரும்பாடு (அஸ்ரிக்தர), சூதகக் கட்டு (நஷ்டார்த்தவ (அ)ஆர்த்தவரோத), கருப்பை / பெண்குறி வலி (யோனி சூல), சூதக வலி (ஆர்த்தவசூல (அ) ரஜக்ரிச்சர), கருப்பை சார்ந்த நோய்கள் (கர்பாஸய ரோக).

                
 மேற்கூறிய நிலைகளில் இது கருவேப்பிலை ஈர்க்கு, வேப்பிலை ஈர்க்கு, மிளகாய் விதை, நீர்முள்ளி விதை, சுக்கு, கொத்தமல்லி ஆகியவற்றின் கஷாயத்துடன் தரப்படுவது வழக்கம்.

              
  இது கருப்பைக்கு வலுவைத் தரக்கூடியது.


தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. அதிக உதிரப்போக்கை இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
  2. மாதவிலக்கில் ஏற்படும் வலிக்கு சப்தசார கஷாயத்துடன் மூன்று மாத விலக்கு வரை சாப்பிட நன்கு பலன் தரும்
  3. குறிப்பு -அசோகபட்டை என்று இப்போது கிடைப்பது அசோகா பட்டை இல்லை ..நெட்டிலிங்கம் என்னும் மரத்தின் பட்டை தான் ...

Post Comment

கிராணிக்கும் ,பேதிக்கும் ..காலராவுக்கும் மருந்தாகும் அஷ்டாக்ஷரீ குடிகா-Astaksheeri Gutika


கிராணிக்கும் ,பேதிக்கும் ..காலராவுக்கும் மருந்தாகும்
அஷ்டாக்ஷரீ குடிகா-Astaksheeri Gutika
(ref-ஆரோக்ய கல்பத்ருமம் – க்ரஹணீ சிகித்ஸா)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            அபின் – அஹிபேன                        10 கிராம்
2.            சந்தனம் – சந்தன                           10           “
3.            செஞ்சந்தனம் – ரக்தசந்தன                   10           “
4.            ஜாதிக்காய் – ஜாதீபல                        10           “
5.            சுத்தி செய்த லிங்கம் – ஷோதித ஹிங்குள    10           “
6.            திப்பிலி – பிப்பலீ                            10           “
7.            பொரித்த பெருங்காயம் – ஹிங்கு           10           “
8.            அதிவிடயம் – அதிவிஷா                   10           “

இவைகளை அபின், இலிங்கம் நீங்கலாகப் பொடித்துச் சலிக்கவும். பின்னர் கல்வத்திலிட்டுப் பொடித்துச் சிறிது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்தறைத்த லிங்கத்துடன் க்ஷெ சூரணத்தைச் சேர்த்து,

1.            வில்வமூலம் – பில்வமூல
2.            சுக்கு – சுந்தீ
3.            சீரகம் – ஜீரக
4.            சிறுகாஞ்சூரிவேர் – துராலபா
5.            கோரைக்கிழங்கு – முஸ்தா
6.            ஓமம் – அஜமோதா
7.            கொத்தமல்லி விதை – தான்யக

இவைகளைக் கொண்டு தயாரித்த கஷாயம் விட்டரைத்து விழுதானவுடன் அபினியைச் சிறு, சிறு துண்டுகளாக்கிச் சேர்த்து நன்கு கரைய அரைத்துப் பின்னர் எலுமிச்சம்பழச் சாறு (ஜம்பீரஸ்வரஸ) விட்டரைத்துப் பதத்தில் 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

அபினி பொடிக்க முடியாத ஒரு பொருளாகையால் அதை மேலே கூறிய கஷாயத்தை விட்டு நன்கு கரைத்தோ அல்லது சிறு சிறு துண்டுகளாக நறுக்கிச் சிறிது கஷாயம் விட்டு நன்கு அரைத்தோ சேர்க்க வேண்டும்.

அளவும் அனுபானமும்:      

ஒரு மாத்திரை வீதம் இரண்டு அல்லது மூன்று வேளைகள். தயிர், மோர், தண்ணீர் அல்லது தேனுடன் கொடுக்கவும்

.
தீரும் நோய்கள்:  


பேதி (அதிஸாரம்), சீதபேதி (அ) சீதக்கடுப்பு (ப்ரவாஹிஹ), பெருங்கழிச்சல் (க்ரஹணீ), ரத்தமூலம் (ரக்தார்ஷ), இரத்தக் கொதிப்பு.

தெரிந்து கொள்ள வேண்டியவை ..
  1. அபின் இப்போது கிடைப்பது அரிது ..அரசு நெறிமுறைப்படி மருந்து கம்பெனிகள் வாங்கி சேர்ப்பது மிக மிக கஷ்டம் ...
  2. இந்த மருந்தும் மார்க்கெட்டில் கிடைப்பதில்லை ..

Post Comment

புதன், ஜூலை 18, 2012

குடிகாரர்களுக்கு அடையாள அட்டை வேண்டும்



  1. டாஸ்மாக்கில் குடிப்பவர்களுக்கு ரேஷன் கார்டு போல் ஒரு அடையாள அட்டை வழங்க பட வேண்டும் ..
  2. எவ்வளவு குடிக்கிறார்கள் என்பதை அந்த கார்டில் பதிய வேண்டும்
  3. பில் மற்றும் மாதத்தில் எவ்வளவு குடித்திருக்கிறார்கள் என்பதையும் அருகில் உள்ள அரசு சுகாதார நிலையத்திற்கும் ,எவ்வளவு செலவு செய்துள்ளார்கள் என்பதை அவர்கள் குடும்பத்திற்கும் தெரிய படுத்த வேண்டும் ..
  4. அடையாள அட்டை தமிழ் நாட்டில்  எங்கு குடித்தாலும் பதிய பட வேண்டும் ..
  5. பதினெட்டு வயதுக்குள் குடிக்கும் நபர்களை காட்டி கொடுக்கும் நபருக்கு பாராட்டும் ,குடிகார மாணவரின்   பெற்றோருக்கு சமூகத்தில் ஒரு குறைந்த பட்ச தண்டனையும் வழங்கப்பட்ட வேண்டும்
  6. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் குடிபோதைக்கும் அடிமையானவரை திருத்திட மாத்திரைகளும் ,அதற்கான விளம்பரமும் வைத்திடல் வேண்டும் ..
டாஸ்மாக்கிற்கு பூட்டு  வேண்டாம் ..இதை கேளுங்கள் ...நண்பர்களே ...
 

Post Comment