மர்மம் – வர்மம் – என்பது உயிர்சக்தி தடம்புரியும் புள்ளிகள்.
உயிர்நிலைப் புள்ளிகளடங்கிய சக்தி ஓட்டங்களில் அடியோ, தாக்குதலோ ஏற்படும்போது உடலில் உலாவும் உயிர்வேகம் அதனை தொழிலை செய்யாமல் பிறழ்ந்து மரணத்தையோ, உடல் ஊனத்தையோ, தொடர்ந்த வலிகளையோ ஏற்படுத்தும்.
அவை தசைகளிலோ, தசை நார்களிலோ, நரம்புகளிலோ இரத்தக் குழாய்களிலோ, எலும்புகளிலோ, மூட்டுகளிலோ அமைந்திருக்கும்
இந்த புள்ளிகளில் 3 தோஷங்களும், 5 பூதங்களும், ஓஜஸ் எனும் ஏழு தாதுக்களின் சாரங்களும், சத்வ, ரஜ, தம குணங்களும் அதனதன் விகிதாச்சார அடிப்படையில் புதைந்து கிடக்கின்றன.
இவை உடலில் உள் உறுப்புகளையும், பிரபஞ்சத்தையும் 13 ஸ்ரோதஸ் எனும் Channels எனும் வழிகளும், பாஹ்ய அந்தர் எனும் உள் வெளி மார்கங்களையும் 6 சக்கரங்களையும் இணைத்து வைக்கும் மாயப் புள்ளிகள்.


