வியாழன், டிசம்பர் 11, 2014

சென்னையில் என்னை சந்திக்க ..

ஆயுர்வேத மருத்துவ ஆலோசனைக்கு சென்னையில் என்னை சந்திக்க ..

மாதத்தின் இரண்டாம் ஞாயிறு மற்றும் கடைசி ஞாயிறு எனது மருத்துவ ஆலோசனை சென்னையில் உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்

வருகிற ஞாயிற்று கிழமை ( 14/12/2014)  காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு மணி வரை என்னை சென்னையில் சந்தித்து ஆலோசனை பெறலாம் ..

முன் பதிவுக்கு  90 4333 6444  என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் ..

முதுகு தண்டுவட நோய்கள் (தாங்க முடியாத முதுகு வலி ,கழுத்து வலி ,டிஸ்க் பிரச்சனைகள் ,அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு மோசமான நிலையில் உள்ள முதுகு தண்டுவட நோய்கள் ) எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் நமது சிகிச்சை முறையால் ஏக இறைவன் நாடினால் முற்றிலும் குணமாக்க முடியும் ..

மேலும் கீழ் கண்ட நோய்களுக்கு சிறப்பு ஆலோசனை நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்

  •  மூட்டு வலி ,
  •  முதுகு தண்டு வட  நோய்கள் 
  • ஆஸ்த்மா அலர்ஜி நோய்கள் 
  • வயிற்று புண் 
  • குழந்தை இன்மை 
  • கிட்னி பெயிலியர் 
  • சிறுநீரக கற்கள் ..

தொடர்புக்கு   90 4333 6444

Post Comment

செவ்வாய், டிசம்பர் 09, 2014

ஓராயிரம் பயனுற்ற நமது அடுத்த இலவச நில வேம்பு குடிநீர் முகாம்

 7/12/2014- ஞாயிற்றுகிழமை  அன்று திருநெல்வேலி மாவட்டம் ,தென்காசி வட்டம் பண்பொழி கிராமத்தில் தாருஸ்லாம் பள்ளி வளாகம் மற்றும் பண்பொழி கிராமத்தில் ஆறு இடங்களில் நமது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையும்  SDPI இயக்கத்துடன் இணைந்து காய்ச்சலை தடுக்கவும் ,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இலவச நில வேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது .இந்த முகாமில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரத்துக்கு மேற்பட்ட பயனாளிகள் இலவசமாக நில வேம்பு  குடிநீரை பருகி பயன் பெற்றனர் .இந்த முகாமில் இலவசமாக நாம் நில வேம்பு குடிநீரை வழங்கினோம் .









Post Comment

செவ்வாய், டிசம்பர் 02, 2014

சென்னையில் காய்ச்சலை விரட்டும் இலவச நில வேம்பு குடிநீர் ..

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ,டெங்கு ,சிக்கன் குனியா போன்ற காய்ச்சலுக்கும் ,மர்ம காய்ச்சலுக்கும் அரு மருந்தாகும் நில வேம்பு குடிநீர் கிட்டத்தட்ட மூன்று வருட காலமாக காய்ச்சல் என்று கேட்பவர்களுக்கு நமது தலைமை மருத்துவ மனையில் வழங்கி வருகிறோம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே ..
                                 
தீராத காய்ச்சல் என்று நிலவேம்பு குடிநீர் வேண்டும் என்ற முகாம் தெரியாத பல வாசக நண்பர்களுக்கும் தபால் செலவை மட்டும் வாங்கி கொண்டு தமிழகம் முழுவதும் சில வருடங்களாக அனுப்பி வருகிறோம் ..


பொதுவாக இந்த சேவைக்கு நாம் எந்த இயக்கத்தையோ சார்ந்திருக்க வில்லை ,எந்த தனி நபரிடம் இருந்தோ இது வரை இந்த சேவைக்கு உதவி கேட்டதில்லை . இந்த சேவையை பல இயக்க மக்கள் மக்களுக்கு கொண்டு செல்ல உதவி இருக்கிறார்கள் 

சென்னை மக்களுக்கும் நமது உதவி கிடைக்க நாம் இப்போது இலவச நிலவேம்பு குடிநீரை நமது புதிய கிளை மருத்துவமனை ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில்         ( தொடர்புக்கு  தொலை பேசி எண்  90 4333 6444) கடந்த மாத இறுதி முதல் துவங்கி உள்ளோம் .தினமும் இலவசமாக நமது சென்னை மருத்துவ மனையில் நில வேம்பு குடிநீர் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம் ..





Post Comment