ஞாயிறு, பிப்ரவரி 28, 2016

விந்து முந்துதல் -தகவல்கள் ..நிவாரணங்கள்



விந்து முந்துதல்.

விந்து முந்துதலை ஆங்கிலத்தில் Premature ejaculation என்பார்கள். இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சினையாகும்.

பத்து ஆண்களில் ஒருவர் என்ற விகிதத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தகவல்கள்  தெரிவிக்கின்றன. உறவின் போது பெண் உணர்வின் உச்ச கட்டத்தை எய்துவதற்கு முன்னரே ஆணுக்கு உணர்வின் உச்ச கட்டம் எட்டி விந்து வெளியேறிவிடுவதைத்தான் விந்து முந்துதல் என்கிறோம்.







வாஜீகர்ண சிகிச்சை மூலம் விந்து முந்துதலுக்கு ஆயுர்வேதத்தில் சிறப்பு சிகிச்சை அளிக்கலாம் ..

வாஜீகர்ண சிகிச்சை பற்றி படிக்க இங்கே கிளிக்  செய்யவும் ..

ஆயுர்வேத வாஜீகர்ண சிகிச்சை பெற -ஆலோசனை பெற முன் பதிவுக்கு  www.healz.in  தொடர்பு கொள்ளவும் 

Post Comment

சனி, பிப்ரவரி 27, 2016

விந்து முந்துதலை குணமாக்கும் யுனானி மருந்து -ஹப்-எ-ஜிர்யான்


விந்து முந்துதலை குணமாக்கும் -விந்துவை கட்டியாக்கும் ,விந்து ஒழுகுதலை குணப்படுத்தும் யுனானி மருந்து -ஹப்-எ-ஜிர்யான்


ஹப்--ஜிர்யான்
(Ref-கராபாதீனேஜதீத்)

தேவையான மருந்துகள் :
1.    உலர்ந்த ஸிங்காரா கிழங்கு -       ஸிங்காராகுஷ்க்             100 கிராம்
2.    ஆலம்பால்ஷீரேபர்கத்                     வேண்டிய அளவு

செய்முறை :
            
ஸிங்காராவை நன்றாகப் பொடித்து ஒரு கல்வத்திலிட்டு ஆலம்பால் வேண்டிய அளவு சேர்த்து மாத்திரை உருட்டும் பதம் வரை நன்றாக அரைத்து 500 மி.கி. மாத்திரைகளாக உருட்டி உலர்த்தி பத்திரப்படுத்தவும்.


            
அளவு : 4 மாத்திரைகள் வீதம் பசுவின் பாலுடன் (நுரைப் பால்) ஒரு நாளைக்கு இருவேளைகள்.

           
தீரும் நோய்கள் : தூக்கத்தில் இந்திரியம் (விந்து) நழுவுதல் (கஸ்ரத்--எஹ்டிலம்), சீக்கிரத்தில் இந்திரியம் வெளிப்படுதல் (சுரத்--இன்ஜால்), சுக்கிரமேகம் (ஜிர்யான்), தானே விந்து வெளிப்படல் (ஸைலான்--மணி)


தெரிந்து கொள்ளவேண்டியவை ..


  1. முதலில் உடலின் உஷ்ணம் குறைவாக்கப்பட வேண்டும் 
  2. அபான வாயுவின் தன்மை ஒழுங்குற சமநிலை படுத்தல் வேண்டும் 
  3. நீர்த்து போன விந்துவை கட்டிதன்மை பெறவும் ,விந்து முந்துதலை சரியாக்கவும் ,விந்து ஒழுகுதலை குணப்படுத்த தக்க ஆயுர்வேத ,யுனானி மருந்துகளுடன் இந்த மருந்தை கொடுத்து வந்தால் மிக விரைவாக பலன் தெரியும் 
  4. இந்த மருந்து Qurs -e -Jiryan  என்ற பெயரிலும் கிடைக்கிறது .
  5. தரமான மருந்தை நல்ல மருந்து செய்பவர்களிடம் பெறுவது நல்லது .(www.healz.in)

Post Comment

வியாழன், ஜனவரி 21, 2016

நிலவேம்பு குடிநீர் 180 கிலோவிற்கு மேல் -இலவசமாய் வழங்கப்பட்டது



மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்  துவங்கிய இந்த இலவச நிலவேம்பு குடிநீர் கடந்த சில மாதங்களாக  மக்களுக்கு வழங்கப்பட்டு பயனுற வைத்த ஏக இறைவனுக்கே நன்றிகள் கோடி ..

எந்த அமைப்புகள் கேட்டாலும் இல்லை  என்று சொல்லாமல் அரைகிலோ முதல் ஐந்து கிலோ வரை இந்த இலவச நிலவேம்பு குடிநீர் கஷாய சூர்ணம் வழங்கப்பட்டது ..

சென்னை வெள்ள நிவாரணத்தில் பல அமைப்புகளுக்கும் ,தனி மனிதர்களுக்கும் ,இலவசமாய் கேட்ட அனைத்து மக்களுக்கும் நிலவேம்பு குடிநீர் சூர்ணம் -எண்பது கிலோவுக்கு மேல் இலவசமாக அனுப்பப்பட்டு மக்கள் பயன் பெற்றனர் ..

மேலும் நமது மருத்துவ மனைகளில் தினமும் இலவசமாக நிலவேம்பு குடிநீர் போட்டு கொடுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது ..

கணக்கு பார்போம் என்று பார்த்ததில் கடந்த சில மாதங்களாக நிலவேம்பு குடிநீர்  180  கிலோவிற்கு மேல் -இலவசமாய் வழங்கப்பட்டது என்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தோம். இந்த வாய்ப்பை வழங்கிய ஏக இறைவனுக்கே  எல்லாப் புகழும் புகழ்ச்சியும் .

குறிப்பு - யார் இனியும் காய்ச்சல் தங்கள் பகுதியில் பரவுகிறது என்று கேட்டாலும் -நூறு நபர்களுக்கு மேல் நிலவேம்பு குடிநீரை காய்ச்சி கொடுக்க முடியும் என்று நம்மை அணுகினால் இனியும் இயன்ற அளவு இலவசமாய் நிலவேம்பு குடிநீர் கஷாயத்தை அனுப்பி தர தயாராக உள்ளேன் என்பதையும் கூறி கொள்ள கடமை பட்டுள்ளேன் .



Post Comment