சனி, ஏப்ரல் 08, 2017

போலி கரிசாலாங்கண்ணி ஆபத்து –அறிவது அவசியம்.

போலி கரிசாலாங்கண்ணி ஆபத்து –அறிவது அவசியம்.

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA

உணவில் கலப்படம்- மனிதனின் பேராசை.
மூலிகையில் கலப்படம் –மனிதனின் உயிருக்கே ஆபத்து.
மூலிகை பற்றி சரியான தெளிவு இருத்தல் மிக மிக அவசியம் . கரிசாலை என்னும் கரிசாலாங்கண்ணி மூலிகை –மஞ்சள் காமாலை மற்றும் முடி வளர மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அனால் அவர்கள் பயன்படுத்துகிற அந்த மூலிகை கரிசாலையா என்றால் அது மிகவும் சந்தேகத்திற்கு உரியதாகவே உள்ளது .

தாடி வைத்து காலையில் டிவியில் வைத்தியம் சொல்கிற அவர்க்கு அசோகம் எது –நெட்டிலிங்கம் எது என்கிற அறிவு இல்லை. நெட்டிலிங்க மர இலையை பயன்படுத்தி பெண்களின் மாதவிலக்கு நோய்க்கு சிகிச்சை செய்ய சொல்கிறார் அவர் .

கரிசாலையில் போலி மூலிகை உள்ளது ,நான் படத்தில் காட்டிய இந்த இரண்டு போலி கரிசாலை மூலிகைகளை -மதுரையில் உள்ள திலகர் திடலில் மூலிகை விற்பனை நிலையத்தில் இரண்டு வகை போலிகளை மஞ்சள் கரிசலாங்கண்ணி என்ற விளக்கம் வேறு. பச்சை மூலிகையில் எளிதாக ஏமாற்றி விட முடிகிறது என்றால் –காய்ந்த இந்த போலி கரிசாலை எப்படி கண்டு பிடிக்க முடியும்.

கரிசாலையில் இரண்டு வகையான போலி கரிசாலை உள்ளது .அதனுடைய தாரவியல் பெயருடன் படங்கள் விளக்கத்துடன் கொடுக்கபட்டுள்ளது





உண்மை கரிசாலை –எப்படி இருக்கும் ?
படம் இணைக்கப்பட்டுள்ளது

சம்பவம் ஒன்று -

வயிறு வீங்கி மூச்சு விட சிரமத்துடன் –கண்ணில் மஞ்சள் நிறத்துடன் ஒரு இருப்பத்தைந்து வயது மிக்க ஒரு இளைஞர் என்னிடம் மஞ்சள் காமாலை சிகிச்சைக்கு வந்தார்..சார் பக்கத்து வீட்டு அம்மா தினமும் எனக்கு மஞ்சள் கரிசாலையை கிட்டதட்ட ஒரு வாரம் கொடுத்தார்கள் ஆனாலும் மஞ்சள் காமாலை பிலுரூபின் அளவு அதிகமாகி கொண்டே சென்றதே தவிர கொஞ்சம் கூட மாற்றம் இல்லை  என்றார் .  கையில் ஒரு மஞ்சள் பூ உள்ள செடியை காட்டி அவர் ­–இது எங்களது வீட்டு அருகே அதிகமாக உள்ளது  இது மஞ்சள் கரிசாலை தானே என்று கேட்டார் .

கிட்டத்தட்ட சாவின் விளிம்பு வரை அவரை அழைத்து சென்றது அவரது அறியாமை என்று சொல்வதா ? பக்கத்துக்கு வீட்டு திடீர் வைத்திய பெண்மணியை சொல்வதா ? sphagneticola trilobata  என்கிற மஞ்சள் கரிசாலை போன்று மஞ்சள் பூ பூக்கிற அழகு குரோடன்ஸ் செடியை அவர் கரிசாலை என்று பச்சையாக சாறு எடுத்து குடித்து வந்திருக்கிறார் . அப்புறம் அவருக்கு தக்க சிகிச்சை அளித்து அவரது மஞ்சள் காமாலையை முற்றிலுமாக குணப்படுத்தினோம் என்பது மற்ற தகவல் .

சம்பவம் இரண்டு

மகளுக்கு முடி கூடுதலாக கொட்டுகிறது என்று சொன்ன அந்த அம்மா ..இந்த மஞ்சள் போலி கரிசலையை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தேய்த்து வந்திருக்கிறார். கரிசாலையில் எந்த பலனும் இல்லை என்று –மூலிகையை குறை கூறிய அவர்களுக்கு தக்க விளக்கம் போலி கரிசாலை பற்றி அளிக்கபட்டது .


எனவே –தெளிவான மூலிகை அறிவே நல்லது .சரியான மூலிகைகளை பயன்படுத்து சிகிச்சை செய்கிற –தகுந்த தகுதி வாய்ந்த மருத்துவர்களை கண்டு சிகிச்சை எடுத்தல் அவசியம் .சிறந்த ஆயுஷ் சிகிச்சைக்கு
#அல்_ஷிபா_ஆயுஷ்_மருத்துவமனை
#கடையநல்லூர் 90 4222 5333
#திருநெல்வேலி 90 4222 5999
#ராஜபாளையம் 90 4333 6888
#சென்னை 90 4333 6000

Post Comment

வியாழன், ஏப்ரல் 06, 2017

மாணவனே !!! நீ ஆரோக்யத்துடன் அறிவாளியாய் ஜொலித்திட 20 -20 ஆலோசனைகள்



மாணவனே!!!   நீ  ஆரோக்யத்துடன் ,அதி புத்திசாலியாகவும் வளர சில ஆயுஷ் மருத்துவ ஆலோசனைகள்

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA

1. தேவை உணவு அட்டவணை - உணவு அட்டவணை தயார் செய்து அதை சரியாக கடைபித்தால்  நோயில்லாமல் வாழலாம்


2. அடக்காதே ஆபத்தாகும் – தண்ணீர் குடித்தால் யூரின் வரும் என்று தண்ணீரை வேண்டுமென்றே குறைத்து குடிப்பதும் –இயற்கை அடக்குவதும் ஆபத்தே .


3. வெள்ளையர்கள் ஆபத்தானவர்கள் –வெள்ளை சர்க்கரை ,வெள்ளையான மைதா மாவு , வெள்ளை வெளேர் என்ற பாலிஷ் போடப்பட்ட அரிசி இவை மூவரும் நம்மை மருத்துவமனைக்கு சீக்கிரம் அழைத்து செல்வார்கள்


4. கண் பாதிக்கும் திரைகள் – கூர்ந்து கவனிக்கும் செல் திரை , வீடியோ கேம் திரை ,டிவி மற்றும் கம்ப்யூட்டர் திரை –நெடுநேரம் நோக்கினால் கண் பார்வை பாதிக்கும் –குறைத்து கொள் .


5. சுவையான உணவுகள் கலப்படமே –பசியும் பறிபோகுமே –அஜினோமோட்டோ சேர்ந்த பாஸ்ட் புட்,நிறம் சேர்க்கபட்ட உணவுகள் கலப்படதினால் பசி பறிபோகுமே.


6. டிவி விளம்பரங்கள் பொய்யே –வாங்க தூண்டும் ,கவர்ந்திழுக்கும் விளம்பரங்கள் ,அதில் மாற்றி மாற்றி பொய்யுரைக்கும் உணவுகள் அனைத்தும் மிகை படுத்தபட்ட பொய்யே .


7. சனி நீராடு –வாரம் ஒரு முறையாவது எண்ணை தேய்த்து குளித்தால் மட்டுமே உடலில் பொலிவு உண்டாகி ,அறிவு திறன் கூடும் .


8. காலையில் ராஜா போல உண் – காலையில் உணவு நாட்டை ஆளும் ராஜா போல் சத்தான ,வகை வகையாய் ,முழுமையாய் சாப்பிட்டால் நீங்களும் ஆரோக்யத்தில் ராஜாவாகலாம். காலை குறைந்த உணவு மந்த புத்தியுண்டாக்குமே .


9. மாலையில் விளையாடு –பள்ளி முடிந்தவுடன் வெளியில் சிறிது விளையாடினால் மூளை ரீ சார்ஜ் ஆகுமே ,

10. ஒப்பிடாதே – உன்னால் முடிந்ததை ஆர்வத்துடன் ,அர்ப்பணிப்புடன், தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வெறியுடன் படித்தால் நல்லது .ஒப்பிட்டு பார்த்தால் வேதனைதான் மிஞ்சும் .


11. இனிப்பு மருந்து –உங்களது எல்லா கஷ்டங்களுக்கும் இனிப்பான ஹோமியோ மருந்தில் தீர்வு உள்ளது .உயிர் சக்தியை அதிகரிக்கும் –நோய் தடுக்கும் ஆற்றல் இனிப்பான ஹோமியோபதிக்கு உண்டு 


12. குண்டாக்கும் குளிர்பானம் – காப்ரனேட்டட் கேஸ் உள்ள அனைத்து குளிர்பானமும் உங்களை குண்டாக்கி நோயுண்டாக்கும் .


13. தினமும் ஒரு காயகல்ப மூலிகைகள் உண்..
ஆயுர்வேத ,சித்த மருந்துகளே ஆரோக்யத்தின் ஆரம்பம் 

காய்ச்சலுக்கு நிலவேம்பு , சளிக்கு அடோதொடை ,ஞாபக சக்திக்கு வல்லாரை ,வயிறுக்கு வில்வம் ,எலும்புக்கு பிரண்டை.

வயிறு பூச்சிக்கு குப்பை மேனி வேர் குடிநீர்

முடிக்கு கரிசாலை .

கண்ணுக்கு திரிபலா (கடுக்காய் ,நெல்லிக்காய் ,தான்றிக்காய் )

14.      ஞாபக சக்திக்கு என்றுமே –திரும்ப திரும்ப –படி அதனிலும் புரிந்து படி –வாழ்க்கை உதவாத கல்வி –ஏட்டு சுரைக்காயே என்று தெளி 

15. சரியான ஓய்வே உன்னை புதுப்பிக்கும் சீக்கிரம் தூங்கி ,அதிகாலை எழுந்து படி 

16.  பற்றற்று இரு , என்றுமே கீழ் படிய கற்று கொள் ,ஆணவம் தவிர் , இறை அச்சம் கொள் ,இறைவன் உன்னை கண் காணிக்கிறான் என்று உணர் ,அவன் துணை என்றுமே உனக்கு உண்டு என்று அசையா நம்பிக்கை கொள். பெரியவர்களுக்கு மரியாதை கொடு ,விட்டு கொடு 


17. பலவானாக மாறிட –எள்ளு உருண்டை ,உளுந்தங்களி ,நவதானிய உணவுகள் .சிறு தானிய உணவுகளே –பெரிய ஆரோக்கியம் 

18. கனவை சீக்கிரம் அடைந்திட – தினமும் யோகா ,பிரணாயாம பயிற்சி ,தியானங்கள் –பசியுடனே சாப்பாடு

19. எதிர்பார்ப்பதை கொடு -பாராட்டு ,அங்கீகரி ,அன்பை மட்டுமே பரிமாறிக்கொள் –ஏமாற்றாதே ,சேவை அனுதினமும் செய்திடு .

20. பொழுதை போக்காதே –பயனற்ற பொழுது போக்கு அடிமையாக்கிடும் உனது காலத்தை எடுத்து கொண்டு உன்னை வளர விடாது தடுக்கும்

ஆரோக்யத்தின் அடி நாதமே ஆயுஷ் மருத்துவம் என்று உணர் .


இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்
இந்திய மருத்துவத்தால் நலம் பெற்று கொள் .

சிறந்த ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888

சென்னை 90 4333 6000

Post Comment

செவ்வாய், ஏப்ரல் 04, 2017

பல்லுக்கு எக்ஸ்ரே எடுக்க போகிறீர்களா ? தைராய்ட் கட்டி வரும்.

பல்லுக்கு எக்ஸ்ரே எடுக்க போகிறீர்களா ? தைராய்ட் கட்டி வரும்.
டாக்டர்.அ.முகமது சலீம்( cure sure).,BAMS.,M.Sc(Psy).,MBA



பரிசோதனைகள் நோயின் தீவிரத்தை அறிய பயன்படுகிறது . எக்ஸ்ரே எனப்படுகிற மிக முக்கிய பரிசோதனை எப்போதுமே கதிர் வீச்சு அதிகம் உள்ள –கவனத்துடன் கையாள வேண்டிய ஒன்று .


பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பற்களுக்கான எக்ஸ்ரே எடுக்கும் போது தைராய்ட் ஷீல்ட் என்னும் தைராய்ட் சுரப்பியை மறைக்கும் ஒரு பாதுகாப்பு மறைப்பை (ஷீல்ட் ) அணிந்து கொள்வது அவசியம்..அவ்வாறு மறைக்காமல் எடுக்க கூடிய அந்த எக்ஸ்ரே கதிர் வீச்சுக்கு தைராய் சுரப்பி மிக எளிதாக பாதிக்கபட்டு தைராய் புற்று நோய் கூட வர வாய்ப்புள்ளதாக சமீப கால ஆராய்சிகள் தெரிவிக்கிறது. தைராய்ட் புற்று நோய் வரவைக்கும் அளவுக்கு அந்த எக்ஸ்ரே கதிர்வீச்சை தைராய்ட் சுரப்பி பெற தாங்க இயலாது என்பது தான் உண்மை ..தைராய்ட் கட்டிகளை வர வைக்க இந்த பற்களுக்கு எடுக்கும் பாதுகாப்பில்லா எக்ஸ்ரே போதுமானது 
.

பெண்களுக்கு மார்பகத்தில் கட்டி உள்ளதா என்று கண்டறிய உதவுகிற மெமோகிராம் எடுக்கும் போது கூட தைராய்ட் ஷீல்ட் அணிந்து கொள்வது மிக மிக அவசியம்.

தைராய்ட் ஷீல்ட் எப்படி இருக்கும் .



தைராய்ட் ஷீல்ட் இல்லாமல் இனி எக்ஸ்ரே எடுக்காதீர்கள் 

.
பல் விளக்கும் பேஸ்ட்டில் தைராய்ட்டுக்கு கேடு.

பிரெட் சாப்பிட்டால் தைராய்ட் வரும்.

எப்போதுமே –உப்பில் கவனமின்றி இருந்தால் தைராய்டுக்கு பாதிப்பு

தலைக்கு சாயம் பூசினாலும் தைராய்டுக்கு பாதிப்பு

அலர்ஜிக்கு சாப்பிடும் ஆங்கில மருந்துகள் தைராய்ட் மாத்திரையை செயல் இழக்க வைக்கும்

தைராய்ட் கட்டியை வர வைத்தே தீருவேன் என்கிறது இன்றைய அவசர உலகம் .

தைராய்ட் நோய்க்கு ஆயுஷ் மருத்துவமே சிறந்தது.
தைராய்ட் கோளாறுகள் ,தைராய்ட் கட்டிகளுக்கு சிறந்த ஆலோசனை பெற அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888

சென்னை  90 4333 6000

Post Comment