ஞாயிறு, மே 08, 2011

உடல் அரிப்பை சரிசெய்யும் -நிம்பாதிக்வாத சூர்ணம்-Nimbadhi kashayam


உடல் அரிப்பை சரிசெய்யும் -நிம்பாதிக்வாத சூர்ணம்-Nimbadhi kashayam
(ref-ஸஹஸ்ரயோகம் - கஷாயப்ரகரணம்)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            வேப்பம்பட்டை – நிம்பத்வக்                    - 10 கிராம்
2.            சீந்தில்கொடி – குடூசீ                             - 10       “
3.            சுக்கு – சுந்தீ                                    - 10       “
4.            மஞ்சள் – ஹரீத்ரா                               - 10       “
5.            ஆடாதொடை – வாஸாமூல                     - 10       “
6.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்  - 10       “
7.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக்     - 10       “
8.            நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்                 - 10       “
9.            பேய்ப்புடல் – பட்தோல                            - 10       “
10.          கண்டங்கத்திரி – கண்டகாரீ                     - 10       “


மேற்கூறிய சரக்குகளை நன்கு சுத்தம் செய்து ஒன்றிரண்டாகப் பொடித்து காற்றுப் புகாத கொள் கலன்களில் பத்திரப்படுத்தவும்.

கஷாயம் தயாரிக்கும் விதம்:

                கஷாயப் பொடி – 60 கிராம்
                தண்ணீர்      - 960 மில்லி லிட்டர்
                இவற்றை நன்கு கொதிக்க வைத்து 120 மில்லி லிட்டராகக் குறுக்கி ஆறியபின் வடிக்கட்டவேண்டியது.

அளவு:          

 30 முதல் 60 மில்லி லிட்டர் வரை இரு வேளைகள் கொடுக்கவும்.


தீரும் நோய்கள்: 

 சொறி, சிரங்கு மற்றும் தோல் நோய்கள், மலேரியாக் காய்ச்சலுக்கு சீதாம்சுரஸ, மஹா சீதாம்சுரஸ (அ) மாலினி வசந்த ரஸத்துடன் தரப்படுகிறது. உருண்டைப் புழு மற்றும் பலவித குடற்புழுக்களின் தொல்லையில் க்ருமிமுட்கர ரஸத்துடன் கொடுக்கப்படுகிறது. அதிகரித்த உஷ்ணத்தாலும், ரத்தம் சீர்கேடடைந்த நிலையாலும் உண்டாகும் கட்டி, கொப்பளம் போன்ற நிலைகளில் தொடர்ந்து ஆறு நாட்களுக்குக் கொள்ள சிறந்த பலனளிக்கிறது. மற்ற மருந்துகளுக்கு அனுபானமாகவும் உபயோகிக்கப்படுகிறது.


தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. காரணம் தெரியாமல் ஏற்படக்கூடிய அரிப்புகளை நிச்சயம் சரிசெய்யும்
  2. சொரிந்த இடத்தில் தடிப்பாக்கி ,அரிப்பு நின்றவுடன் மறையக்கூடிய சீத பித்தம் என்னும் காரணம் தெரியா தடிபுண்டாக்கி அரிப்பை ஏற்படுத்தும் நோய்க்கு இந்த மருந்து சிறந்தது
  3. வேப்பம்பட்டை -ஆண்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் -ஆண்களின் விந்தணுக்கள் குறைய வாய்ப்புள்ளது எனவே  கவனம் தேவை ..வேப்ப மரம் சார்ந்த மருந்துகளை பயன்படுத்துவதில் மிக்க கவனம் தேவை ..
  4. கிருமிகளுக்குகாக சில சமயங்களில் தான் பயன்பத்துவோம்
  5. எனக்கு தெரிந்த வகையில் -இந்த மருந்து ஆரம்ப நிலையில் கெட்ட ரக்தம் உண்டாக கூடிய நோய்களில் பயன்படுத்தி பின்னர் வேறு மருந்துகளுக்கு மார்வது வழக்கம்

Post Comment

வெள்ளி, மே 06, 2011

இன்று -இலவச எலும்பு அடர்த்தி பரிசோதனை முகாம் ..

நமது ஆயுர்வேத கிளினிக்கில் -இன்று -இலவச எலும்பு அடர்த்தி கண்டறியும் பரிசோதனை முகாம் -நடைபெற்றது -நூற்று எழுபது நோயாளிகள் இலவசமாக தங்களின் எலும்பின் தரம் அறிந்தனர் ..
இந்த வேலையின் காரணமாக என்னால் இன்று எழுத முடியவில்லை ..நாளை எழுதுகிறேன் .

Post Comment

செவ்வாய், மே 03, 2011

எல்லாவிதமான மோசமான தோல் நோய்களுக்கும் -சிறந்த மருந்து மஞ்சிஷ்டாதி க்வாத சூர்ணம்- Maha Manjishtadhi kashayam


எல்லாவிதமான மோசமான தோல் நோய்களுக்கும் -சிறந்த மருந்து
மஞ்சிஷ்டாதி க்வாத சூர்ணம் -Maha Manjishtadhi kashayam
 (ref-சாரங்கதர ஸம்ஹிதா – மத்யம கண்டம்)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            மஞ்சட்டி – மஞ்ஜிஷ்டா                - 10 கிராம்
2.            கோரைக்கிழங்கு – முஸ்தா             - 10       “
3.            வெட்பாலைப்பட்டை – குடஜத்வக்      - 10       “
4.            சீந்தில்கொடி – குடூசீ                   - 10       “
5.            கோஷ்டம் – கோஷ்ட                  - 10       “
6.            சுக்கு – சுந்தீ                           - 10       “
7.            கண்டுபாரங்கி – பார்ங்கீ                - 10       “
8.            கண்டங்கத்திரி – கண்டகாரீ             - 10       “
9.            வசம்பு – வச்சா                        - 10       “
10.          வேப்பம்பட்டை – நிம்பத்வக்            - 10       “
11.          மஞ்சள் – ஹரீத்ரா                          - 10       “
12.          மரமஞ்சள் – தாருஹரீத்ரா                   - 10       “
13.          கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்  - 10       “
14.          தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக்     - 10       “
15.          நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்                 - 10       “
16.          பேய்ப்புடல் – பட்டோல                      - 10       “
17.          கடுகரோஹிணீ – கடூகி                      - 10       “
18.          பெருங்குரும்பை – மூர்வா                         - 10       “
19.          வாயுவிடங்கம் – விடங்க                         - 10       “
20.          வேங்கை – அஸன                               - 10       “
21.          கொடிவேலிவேர் – சித்ரக                          - 10       “
22.          தண்ணீர் விட்டான் கிழங்கு – ஸதாவரீ             - 10       “
23.          பிரம்மி (காய்ந்தது) – மண்டூகபர்ணீ            - 10       “
24.          திப்பிலி – பிப்பலீ                            - 10       “
25.          வெட்பாலை அரிசி – இந்த்ரயவ                    - 10       “
26.          ஆடாதொடைவேர் – வாஸாமூல                   - 10       “
27.          கரிசாலை (காய்ந்தது) – ப்ருங்கராஜ           - 10       “
28.          தேவதாரு – தேவதாரு                      - 10       “
29.          பாடக்கிழங்கு – பாட்டா                      - 10       “
30.          கருங்காலி – கதீரா                               - 10       “
31.          சந்தனம் – சந்தன                           - 10       “
32.          சிவதை – த்ருவ்ருத்                              - 10       “
33.          மாவிலிங்கைப்பட்டை – வருண த்வக்              - 10       “
34.          நிலவேம்பு – பூநிம்ப                         - 10       “
35.          கார்போகரிசி – பாகுசீ                        - 10       “
36.          சரக்கொன்னைப்பட்டை – ஆரக்வதத்வக்            - 10       “
37.          முருங்கைப்பட்டை – சிக்ருத்வக்                   - 10       “
38.          மலைவேப்பம்பட்டை – மஹா நிம்பத்வக்                - 10       “
39.          புங்கம்பட்டை – கரஞ்ஜா                          - 10       “
40.          அதிவிடயம் – அதிவிஷா                          - 10       “
41.          குருவேர் – ஹ்ரீவேர                        - 10       “
42.          தும்மட்டி – இந்த்ரவாருணி                   - 10       “
43.          நன்னாரி – ஸாரிவா                         - 10       “
44.          நன்னாரி (கருப்பு) – அனந்தமூல                   - 10       “
45.          பர்பாடகம் – பர்பாடக                        - 10       “

மேற்கூறிய சரக்குகளை நன்கு சுத்தம் செய்து ஒன்றிரண்டாகப் பொடித்து காற்றுப் புகாத கொள் கலன்களில் பத்திரப்படுத்தவும்.

கஷாயம் தயாரிக்கும் விதம்:

                கஷாயப் பொடி – 60 கிராம்
                தண்ணீர்      - 960 மில்லி லிட்டர்
                இவற்றை நன்கு கொதிக்க வைத்து 120 மில்லி லிட்டராகக் குறுக்கி ஆறியபின் வடிக்கட்டவேண்டியது.

அளவு:          

 30 முதல் 60 மில்லி லிட்டர் வரை இரு வேளைகள் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 


 தீவிரமான நாட்பட்ட தோல்நோய்கள் (புராண குஷ்ட (அ) சர்ம ரோக), யானைக்கால் (ஸ்லீபாத), குதிகால்வாதம் (வாதரக்த), உடலுறுப்புகள் (அவயவங்கள்) மரத்துப் போதல் போன்ற பலவித வாத ரோகங்கள், அதிக உடற்பருமன் (மேதோவ்ருத்தி), சீர்கேடடைந்த ரத்தத்தால் ஏற்படும் நோய்கள்.

                நாட்பட்ட தோல் நோய்கள், கசியும் படைகள் கொப்புளங்கள், கட்டிகள் போன்ற நிலைகளில் திக்தகக்ருதம் (அ) பஞ்சதிக்த குக்குலுச்ருதத்துடன்  இது தரப்படுகிறது. குதிகால் வாதத்தில் மஹாயோகராஜ குக்குலுவுடன் கலந்து தரப்படுகிறது. கிரந்தி எனப்படும் உபதம்ஸத்தில் அம்ருதபல்லாதக லேஹ்யத்துடனோ (அ) மதுஸ்னுஹீ ரஸாயனத்துடனோ தரப்படுகிறது.

                இதை மற்ற மருந்துகளுக்கு அனுபானமாகவும், உபயோகிக்கலாம்

தெரிந்து கொள்ளவேண்டியவை

  1. இந்த கஷாயம் -எல்லா விதமான தோல் நோய்க்கும் சிறந்த மருந்து
  2. உடல் கறுப்பாதல் ,முகம் கறுப்பாதல் சரிசெய்து -உடலுக்கு சிறந்த வர்ணத்தை -வெளுப்பை தரும்
  3. குடிநீராக்கி குடித்தால் -இது பல  சூட்டு உடல் வாகுள்ளவர்களுக்கு -ஓரிரு முறை அதிகமாக மலத்தை வெளியேற்றலாம் ,பேதியாகாது,சில சமயங்களில் அடி வயிற்றில் வலியை சிறிதளவு தோற்றுவிக்கலாம் ..பயம் வேண்டாம் -தொடர்ந்து சாப்பிட இந்த தன்மை மாறும் -கசப்பு தன்மை காரணமாகவே ஏற்படலாம் ..
  4. உண்மையான செவ்வள்ளி கொடி -கொஞ்சம் விலை அதிகம் (கிலோ ஐநூறுக்கும் மேல் )-கலப்படம் கண்டறிந்து சேர்க்க வேண்டும் -நல்ல செவ்வள்ளி கொடி சற்று முறித்தாலும்  உடையும் ,உள்ளேயும் சிவப்பு நிறத்திலும் இருக்கும்
  5. கட்டிகளை உடைக்க ,உடல் சூடு குறையவும் தேவை கருதி எடுத்துகொள்ளலாம்
  6. தோல் நோய் வராமல் இருக்க மூன்று மாதம் ஒரு முறை பதினைந்து நாட்களுக்கு ,உடல் அழகு பெறவும் -நோயில்லாமலும் -சாதரணமாக சாப்பிடலாம்
ஆயுர்வேதம் என்றால் -சோப்பு ,ஷாம்ப் ,முக களிம்பு என்று போட்டா போட்டி பூட்டு கொண்டு வாங்கி உபயோகிக்கும் நண்பர்களே ,மக்களே -எனக்கு தெரிந்த வரையில் ஆயுர்வேத ,சித்த புத்தகங்களில் ஒரு குறிப்பையும் சோப்பு ,ஷாம்ப் செய்ய பார்க்க முடியவில்லை ..

வெளி பிரயோகத்திற்கு ஆயுர்வேதத்தை முன்னுரிமை கொடுக்கும் மக்களே -உள்ளேயும் ஆயுர்வேத ,சித்த மருந்துகளை சாப்பிட்டு பாருங்கள் ,உங்கள் நோய் வேர் அறுந்து வெகுண்டு ஒடி விடும் ..
 

Post Comment