திங்கள், ஜூன் 11, 2012

போக சக்தியை அதிகரித்து வாழ்நாளையும் கூட்டும் -மகரத்வஜ ஸிந்தூரம் Makarathwaja sindooram



போக சக்தியை அதிகரித்து வாழ்நாளையும் கூட்டும் -மகரத்வஜ ஸிந்தூரம் Makarathwaja sindooram
  (ref-பைஷஜ்யரத்னாவளி - வாஜீகரணாதிகாரம்)

தேவையான மருந்துகள்:
1.லிங்கத்தினின்றும் எடுத்த வாலைரஸம் – ஹிங்குளாக்ருஷ்ட ரஸ    80 கிராம்
2. அபரஞ்சித் தங்க ரேக்கு – ஸ்வர்ண பத்ர                 10    “

                 
செய்முறை:      

இவற்றில் ரஸத்தைக் கல்வத்திலிட்டு அத்துடன் தங்க ரேக்குகளை ஒன்றின் பின் ஒன்றாகச் சேர்த்தரைத்து இரண்டறக் கலக்கச் செய்யவும். பின்னர் அத்துடன் பொடித்த சுத்தி செய்த கந்தகம் (ஷோதித கந்தக) 240 கிராம் சேர்த்துக் கறுத்த கஜ்ஜளியாகும் வரை அரைக்கவும். பிறகு அதைக் கற்றாழைச்சாறு (குமாரீஸ்வரஸ) கொண்டும், செம்பருத்திச்சாறு (ரக்தகார்பாஸ ஸ்வரஸ), கொண்டும் தனித்தனியே நன்கு அரைத்து உலர்த்தவும். நன்கு உலர்ந்த கஜ்ஜளியைப் பொடித்து முறைப்படி சீலை மண் பூசிய கண்ணாடி குடுவை போன்ற கலங்களில் நிரப்பி அதை வாலுகா யந்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி அமைத்து முதல் நாள் தீபாக்கினியாலும், இரண்டாம் நாள் கமலாக்கினியாலும், மூன்றாம் நாள் காடாக்கினியாலும் எரித்துப் பாகம் வந்த தருணத்தில் கலங்களின் வாயை மூடி ஸீல் செய்து அதன் மேல் பாத்தி அமைத்துக் குளிர்ந்த தண்ணீர் ஊற்றி வருவதுடன் தொடர்ந்து காடாக்கினியால் ஒரு மணி நேரம் எரிக்கவும். 

பின்னர் எரிப்பை நிறுத்திக் கலங்களைத் தானாகக் குளிரவிடவும். அவ்விதம் அவைகள் குளிர்ந்த பின் பதுங்கித்த ஸிந்தூரத்தைத் தனித்தெடுத்துப் பொடிக்கவும்.

                அடியில் தங்கி நிற்கும் தங்கத்தின் பகுதியைச் சிவக்க வறுத்தோ அல்லது கற்றாழைச்சாறு கொண்டரைத்து ஓரிரு முறை புடமிட்டுப் பின்னர் பொடித்தோ முன்கூறிய ஸிந்தூரத்துடன் கலந்தரைத்துப் பத்திரப்படுத்தவும்.

குறிப்பு:     

சிலர் அடியில் தங்கி நிற்கும் தங்கத்தைத் தவிர்த்துவிட்டு ஸிந்தூரத்தை மட்டிலும் உபயோகிப்பர்.

அளவும் அனுபானமும்:     

 100 முதல் 200 மில்லி கிராம் வரை தேன் அல்லது நெய்யுடன் இரு வேளைகள் கொடுக்கவும்.

                 
தீரும் நோய்கள்: 

விந்து நாசம் (நஷ்டசுக்ர), தானே விந்து வெளிப்படல் (சுக்ரமேஹ), ஆண்மையைப் பற்றிய கோளாறுகள் (த்வஜபங்க), பலவீனம் (பலக்ஷய (அ) தௌர்பல்ய), க்ஷயம் எனப்படும் உடல் நலம் குன்றி க்ஷீணமடைதல், இதய நோய்கள் (ஹ்ருத்ரோக), இதயபலவீனம் (ஹ்ருத்தௌர்பல்ய), நாட்பட்ட காய்ச்சல் (புராண ஜ்வர).

                 
  • முக்கியமாக ரஸாயனச் செய்கையும், வாஜீகரணச் செய்கையும் உள்ள அற்புதமான மருந்து. 
  • அசீரணம், பேதியில் இது வில்வப் பழக்கதுப்புடன் தரப்படுகிறது. 
  •  இஞ்சிச் சாறு, வெற்றிலைச் சாறு மற்றும் துளசிச் சாற்றுடன், இது காய்ச்சலுக்குத் தரப்படுகிறது. 
  • எந்த அனுபானமும் கிடைக்காத பட்சத்தில் தேனைக் கூட பயன்படுத்தலாம். 
  • பொதுவாக இதனை அனுபானங்களின் துணையின்றிக் கொடுப்பதில்லை.

  • இதனை வெற்றிலையுடன் சேர்த்து படுக்கும் போது உட்கொண்டு பசுவின் பாலையும் அருந்திவரப் புணர்ச்சிச் சக்தி அதிகரிப்பதுடன் உடல் வலிவும் பெருகுகிறது. தொடர்ந்து சாப்பிட நீண்ட வாழ்நாளைத் தரவல்லது. 

  • இது பெரும்பாலும் உடல் தளர்ந்த  நிலையிலும், தீவிரமான நோயிலிருந்து விடுபட்டு உடல் தேறும் நிலையிலும் உள்ளவர்களுக்குத் தரப்படுகிறது. 

  • ரத்த ஓட்டம் தடைப்பட்ட நிலையிலும், இதய பலவீனத்திலும் இது மிகச் சிறந்த அற்புதமான நிவாரணியாகக் கருதப்படுகிறது. 

  • திசுக்களின் மீது இதற்குள்ள தூண்டிச் செய்கையை சமீபத்திய கண்டு பிடிப்புகள் நிரூபித்திருக்கின்றன. 

  • இது குடல் நச்சால் ஏற்படும் அழுகலை அகற்றக் கூடியது. குடலிலிருந்து மலம் வெளியேறாமல் நொதித்தல் ஏற்பட்டு வயிற்றுப் பொருமல் உள்ள நிலையில் நல்ல நிவாரணமளிக்கிறது.
               

Post Comment

சனி, ஜூன் 09, 2012

உடலுறவு சக்தியை அதிகரிக்கும் -மகரத்வஜ பில்ஸ்- Makaradwaja pills


உடலுறவு சக்தியை அதிகரிக்கும் -மகரத்வஜ பில்ஸ்- Makaradwaja pills
 (பைஷஜ்யரத்னாவளி - வாஜீகரணாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            லவங்கம் – லவங்க         40 கிராம்
2.            வால்மிளகு – கங்கோல     40           “
3.            ஜாதிக்காய் – ஜாதீபல       40           “

ஆகியவற்றைப் பொடித்துச் சலித்துக் கல்வத்திலிட்டு வெற்றிலைச் சாற்றால் (நாகவல்லிபத்ரஸ்வரஸ) சிறிது அரைத்துப் பின்னர் 

மகரத்வஜஸிந்தூரம் (மகரத்வஜஸிந்தூரம்) 10 கிராம் சேர்த்து நன்கு அரைத்து மாத்திரை உருட்டத்தக்க பதத்தில்

தனியே பொடித்துச் சலித்த பச்சைக் கற்பூரம் (கற்பூர) 40 கிராம்

தனியே ரோமம் நீக்கிப் பொடித்த கஸ்தூரி (கஸ்தூரி) 5 கிராம் சேர்த்தரைத்து 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தவும். 
  
அளவும் அனுபானமும்:    

 ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை சூடான பால், தேன் அல்லது வெற்றிலைச் சாறு இவற்றுடன் 2 முதல் 3 வேளைகள் கொடுக்கவும்.


தீரும் நோய்கள்:  

ஆண்குறித் தளர்ச்சி (த்வஜபங்கம்), ஆண்மைக் குறைவு, தொண்டை கம்மல் (ஸ்வர பேத (அ) ஸ்வரபங்க), ஜீரணக் கோளாறு. தொடர்ந்து உபயோகிக்கக் கலவித்திறனை (புணர்ச்சி சக்தியை) அதிகரிக்கச் செய்கிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. இந்த மாத்திரையில் கஸ்தூரி சேர்த்தால் மட்டுமே ஆண்மை அதிகரிக்கும்
  2. மக்ரத்வஜம் என்பதை பூர்ண சந்திரோதயம் என்று சித்த மருத்துவத்தில் சொல்லலாம் ..
  3. தொடர்ந்து சாப்பிட்டு வர .உடல் வலு பெரும் ..ஆண்மை சக்தி அதிகரிக்கும் ..
  4. வாஜி காரண சிகிச்சையில் இந்த மருந்து முக்கிய பங்கு வகிக்கிறது
  5. விந்து அணுக்களை கூட்டும்
  6. சற்று விலை அதிகம்

Post Comment

நாளை முதல் கட்டுரைகள் தொடரும்

மிகுந்த வேலை பளு ..நேரத்தை ஒதுக்க முடியாத சூழ்நிலை ..என்னால் இதுநாள் வரை எழுத முடிய வில்லை..ஆனால் இன்று முதல் பழையபடி கட்டுரைகள் தொடரும்...

Post Comment