திங்கள், ஜூன் 10, 2013

மருத்துவ முதுமொழிகள்

மருத்துவ முதுமொழிகள்


v  பணமுள்ளவர்க்குக் கஸ்தூரி  ,ஏழைக்கு மஞ்சள்
v  ஆவாரை இருக்கச் சாவாரை என்சொல்வேன்
v  வல்லாரையினும் நல்லாருமில்லை; வல்லாருமில்லை
v  மூலிகை அறுத்தால் மூன்றுலகு ஆளலாம்
v  பொங்கின வயிற்றுக்குப் பொடுதலைச் சாறு
v  அருஞ்சுனை நீருண்ண அப்போதே நோய் தீரும்
v  கதிரவன் ஒளியில் பண்டம் பாழாகாது.
v  அஞ்ஞானம் தொலைந்தால் ஔடதம் பலிக்கும்.
v  சேய்க்கு நோயானால் தாய்க்கும் மருந்திடு.
v  வைந்தாரை வளர்க்கும் மணத்தக்காளி.
v  தேற்றாங் கொட்டையிட்டுத் தேற்று மைந்தரை
v  வாயிற்குச் சுவை உடம்பிற்குக் கேடு
v  நல்வாழ்வின் அருமையை நோயில் தான் அறியலாம்
v  கொன்றைப் பட்டையில் கோடி நோய்கள் போகும்
v  தண்ணீர் விட்டான்கிழங்கு தழுவப் பால் சுரக்கும்
v  அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும்
v  மறுசாதம் போட்டுக் கொள்ளாதவன் மாட்டுப் பிறப்பு
v  தாமரையில் உணவு கொள்ளத் தீராப்புண்ணும் தீரும்.
v  ஆலிலையில் உணவு கொள்ள முகம் வசீகரமாகும்.
v  எருக்கிலையில் உணவு கொள்ளக் கடிவிடம் தீரும்
v  உண்டி வெய்யோற்கு உறு பிணி எளிது
v  குடிநீர்த் தோடங்கட்கு உத்தாமணிக் குடிநீர் மாற்று
v  எள்ளின் துவையல் எதற்கும் நன்று.
v  உணவில் உப்பை ஒழித்தவன் யோகி
v  நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்
v  வெங்காயம் தின்பார்க்குத் தங்காயம் பழுதில்லை
v  வெந்தால் தெரியும் வெங்காய மாண்பு
v  உடல் துவாரம் ஒன்பதின் நோயும் சிறு கீரை உணவு சிறுக்கச் செய்யும்
v  கண்ணேறுக்குக் கால்மண் சுற்றியிடு
v  கருவேப்பிலையை அரைத்துக் கண்கட்டிவிடு
v  கண்களில் நோயானால் உள்ளங்காலில் மருந்திடு
v  எருச்சிக்கல் நீங்க உடற் சிக்கல் தீரும்
v  அரையிலே புண்ணும் அண்டையிலே கடனுமாகாது.
v  பப்பாளிப் பழத்தைத் தேமல் மேல் தேய்
v  சேற்றுப் புண்ணிற்குச் சிறுநீர் விட்டாற்று
v  மேனிப் புகைக்கு மூலம் உள்ளேகும்
v  புண்ணாக்கிற்கு தேங்காய்ப்பால் விட்டாற்று
v  கை கண்ட மாத்திரை வைகுண்ட யாத்திரை
v  எந்த வீக்கத்திற்கும் எருக்கின் பாலடி
v  மாந்திரிகன் வீட்டுப் பேயும் மருத்துவன் வீட்டு நோயும் போகாது.
v  குருவில்லா வித்தை பாழ்



Post Comment

ஞாயிறு, ஜூன் 09, 2013

ஆயுர்வேத மருத்துவ கட்டுரைகள் நாளை முதல் தொடரும் ..


Post Comment

ஞாயிறு, ஏப்ரல் 28, 2013

பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி ..பெருங்காயம் -பெருங்காயமே இல்லை

இப்போது கிடைக்கிற பெருங்காயம் -பெருங்காயமே இல்லை
  1. நூற்றுக்கு நூறு வேதி பொருளும் -பெருங்காய வாசனை திரவுமும் -மைதா மாவும் தான் 
  2. டப்பாக்களில் -பாக்கெட்டுகளில் விற்கப்படும் பெருங்காய வெளி தோற்றத்தில் அதை அவர்கள் தெளிவாக எழுதி உள்ளார்கள் நாம் தான் அதை படிப்பதில்லை ..
  3. அறுபத்தைந்து சதவீதம் பசை தான் உள்ளது ..







உண்மையான பெருங்காயம் எப்படி இருக்கும் ?அதற்க்கு என்ன பெயர் ?


பால்காயம் என்று எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும் 




இந்த பெருங்காயம் உபயோகித்தால் என்ன ஆகும் ?

எல்லா நோய்க்கும் காரணமாகும் ..வயிறு புண்ணாகும் ,வயிற்றில்  வாயு அதிகமாகும் ..
நரம்பு தளர்ச்சி உண்டாகும் ..மயக்கம் வரும் ...




எப்படி நாம் பெருங்காயம் கலப்படம் கண்டறிய முடியும்?

பெருங்காயம் ரெசின், வர்ண, சோப்பு கல், ஸ்டார்ச், மற்றும் சுண்ணாம்பு போன்ற பொருட்கள் கலப்படம் இருக்கிறது. மாதிரி சிறிய அளவு எடுத்து சிறிதளவு நீர் சேர்த்து மெதுவாக சுழற்றினால். தூய பெருங்காயம் நீரில் கரையக்கூடியது மற்றும் பால் வெள்ளை தோன்றும், அது கலப்படம் இருந்தால் தீர்வு வண்ண தோன்றுகிறது. மாதிரி நீருடன் soapstone, கலப்படம் இருந்தால், அதே வழியில், விஷயத்தை செட்டில். தூய்மை கண்டறியும் மற்றொரு எளிய முறை, முள் முனை மாதிரி சிறிய அளவு எடுத்து ஒரு ஆவி விளக்கு சுடர் மீது வைக்கவும். பெருங்காயம் விரைவில் பிரகாசமான சுடர் கொடுக்கிறது மற்றும் மாசுக்களால் உள்ளன எரிகிறது. ஸ்டார்ச் கண்டுபிடிக்கும் asfoetida தீர்வு அயோடின் டிஞ்சர் சேர்க்க. நீல நிற கெமிக்கல் ஸ்டார்ச் முன்னிலையில் காட்டுகிறது.


பெருங்காயம்: ரெசின் மற்றும் வண்ண (கலப்படம் செய்ய உதவும் பொருள்)
ரசாயன பரிசோதனை: சோதனை குழாயில் பெருங்காயம் ஒரு சிறிய அளவு எடுத்து கொள்ளுங்கள். வடிகட்டிய தண்ணீரை 3 மில்லி சேர்த்து மெதுவாக குழாய் குலுக்கல். தூய பெருங்காயம் விரைவில் நீரில் கரையக்கூடியது, மற்றும் ஒரு பால் வெள்ளை நிற உற்பத்தி செய்கிறது. ஆனால் ரசாயன வண்ண மூலம் கலப்படத்தின் வழக்கில், கலவையை வண்ண இருக்க கூடாது. பெருங்காயம் தூய்மை கூட ஃபோர்செப்ஸ் முனையின் மீது, அது ஒரு சிறிய அளவு எடுத்து ஒரு ஆவி விளக்கு சுடர் மீது அதே வைப்பதன் மூலம் சோதனை. பெருங்காயம் பின்னால் அசுத்தங்கள் விட்டு, விரைவில் பிரகாசமான நெருப்பு எரியும் உற்பத்தி செய்கிறது.


Post Comment