செவ்வாய், அக்டோபர் 28, 2014

ஒருங்கிணைந்த பாரம்பரிய மருத்துவ ஆலோசனை -சென்னையில் நவம்பர் 2 முதல் ஆரம்பம்.

இனிதே ஆரம்பம் ..

நவம்பர் இரண்டு முதல் (02/11/2014-ஞாயிற்றுக்கிழமை முதல் நமது முதல் கிளை சென்னையில் துவங்க உள்ளது ..

துவக்க விழா அழைப்பிதழ் இதோ உங்களுக்காக



நமது கிளையை மதிப்பிற்குரிய பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ .தன்சிங் அவர்கள் துவக்கி வைக்கிறார் ,எனது மானசீக குரு வைத்ய உஸ்மான் அலி அவர்கள் தலைமை ஏற்கிறார்கள் ,சித்த மருத்துவத்தை  வளர்ப்பதையே உயிர் நாடியாக கொண்டு அள்ளும் பகலும் அயராது உழைக்கும் பாரம்பரிய மருத்துவ ஆய்வு நிறுவன தலைவர் -டாக்டர் திருநாராயணன் அவர்கள் முன்னிலை வகிக்கிறார்கள் ,எமது வளர்ச்சியின் ஆணி வேர் டாக்டர் சித்தீக் அலி M.D ( Siddha) -வர்ம மருத்துவர் இந்த நிகழ்ச்சியில் முன்னிலை வகிக்கிறார் ,மேலும் பல சித்த ஆயுர்வேத ஹோமியோபதி, யுனானி ,மருத்துவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் ,நண்பர்கள் ,அலோபதி மருத்துவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் ..


வர்ம மற்றும் சித்த மருத்துவ ஆலோசனைக்கு -
டாக்டர் சித்தீக் அலி  M.D ( Siddha) -அவர்கள் முன் பதிவுகளோடு அவர்களை சந்திக்கலாம் .அவர் மிக சிறந்த வர்ம வித்தகர் ,அறிஞர் அண்ணா மருத்துவ  மனையில் வர்ம துறையில் அவரது சேவை சென்னை மாநகரமே அறிந்த ஒன்று .முதுகு தண்டுவட நோய்களுக்கு  வர்ம சித்த மருத்துவ சிகிச்சை அவரது தலைமையின் கீழ் நடைபெற உள்ளது ..

ஆயுர்வேத மருத்துவ அலோசனைக்கு முன் பதிவுகளோடு
மாதம் இரு முறை என்னை சந்திக்கலாம் ..ஆயுர்வேத பஞ்சகர்ம சிகிச்சை -முதுகு தண்டு வட நோய்களுக்கு எனது ஆலோசனையில் கீழ் நடைபெற உள்ளது ..

ஹோமியோபதி மருத்துவ ஆலோசனை டாக்டர் ஜவாஹிரா பானு BHMS முன் பதிவுகளோடு நடை பெற உள்ளது

சித்த மருத்துவர் டாக்டர் ஸ்வேதா  M.D ( Siddha) அவர்கள் தினமும் மருத்துவ ஆலோசனை அளிக்க உள்ளார்கள்

நமது மருத்துவ குழுவில் பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க உள்ளார்கள் ,டாக்டர் சாய்ரா பானு M.D ( Siddha),மேலும் யுனானி மருத்துவர்கள் யோகா நேச்சுரோபதி மருத்துவர்கள் ,அக்குபஞ்சர் மருத்துவர்கள் பெரிய குழுவே உள்ளது ..




நமது மருத்துவ நிலைய முகவரி -ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் ,4, முதல் தெரு ,துரை சாமி நகர் ,கீழ்கட்டளை ,சென்னை 117 ( Near KFC )


அனைவரும் வருக -நலம் பெருக

குறிப்பு -திறப்பு விழா அன்று (2/11/2014)  எனது மருத்துவ ஆலோசனை காலை பதினொன்று முதல் மாலை நான்கு வரை உள்ளது .( முன் பதிவுகளோடு மட்டும் ) ,முன் பதிவுக்கு இந்த முறை மட்டும் இந்த  9688778640  என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் ..


தெரிந்து கொள்ள வேண்டியவை


  1. நமது சிகிச்சை முற்றிலும் மாறுபட்ட ஒருங்கிணைந்த பாரம்பரிய சிகிச்சை முறை 
  2. Scientific Approach-Through Traditional  System of Medicine 

Post Comment

ஞாயிறு, செப்டம்பர் 21, 2014

சென்னையில் மருத்துவ ஆலோசனை ஆரம்பம் -முடிந்தது இனி முதுகு தண்டுவட பிரச்சனைகள்

ஆயுர்வேத மருத்துவம் என்ற இந்த தளத்தின் மூலம் பல மக்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்தை கொண்டு சேர்த்திருந்தாலும் சென்னையில் மருத்துவ ஆலோசனை இல்லையா என்று இலவச தொலை பேசி ஆலோசனையில் ஆதங்ககப்பட்டவர்களுக்கு ஒரு ஆரம்ப முயற்சியாக இனி சென்னையில் ஆயுர்வேத மருத்தவ ஆலோசனை மற்றும் சிகிச்சை நிலையம் வெகு விரைவில் ஆரம்பமாக போகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்


இந்த மருத்துவ மனையில் ஒருங்கிணைத்த மருத்துவம் அதாவது சித்த ஆயுர்வேத ஹோமியோபதி யோகா யுனானி அக்குபஞ்சர் வர்ம சிகிச்சைகள் நடைபெற உள்ளது ..

ஒவ்வொரு துறைக்கும் அதற்க்கான சிறப்பு பட்டம் மருத்துவ பட்டம் பெற்ற மருத்துவர்கள் ஆலோசனைக்கு வருவார்கள்

ஆயுர்வேத மருத்துவனாகிய நான் -தமிழ் நாட்டின் கடை தெற்கு பகுதியில் ,பொதிகை மலைக்கு ,குற்றாலத்திற்கு அருகில் மருத்துவ சேவை புரிவதால் மாதம் இரு முறை ஞாயிறு  கிழமை சென்னைக்கு மருத்துவ ஆலோசனைக்கு வர முடிவு செய்துள்ளோம் ..

இந்திய மருத்துவ முறைகளில் பல நோய்க்கு சிறப்பு சிகிச்சை நடை பெற்றாலும் நாங்கள் முதுகு தண்டுவட பிரச்சனைகளுக்கு பல் நோக்கு சிறப்பு அணுகு முறையில் சிகிச்சை அளிக்க உள்ளோம் ..

மேலும் -மூட்டு வலிகளுக்கும் ,சோரியாசிஸ் ,குடி புகை மறக்க சிறப்பு சிகிச்சை அளிக்க உள்ளோம் ..

வெகு விரைவில் ஆரம்பிக்க உள்ள நமது மருத்தவ ஆலோசனை நிலையத்தின்   சென்னை கீழ் கட்டளை பகுதியில் கூகுள் மேப்

நமது மருத்துவ மனையின்  உள்ள பகுதியின் சில படங்கள் 



கிட்னி பெயிலியருக்கு உதவும் பூனை மீசை மூலிகை செடியின் காய்ந்த சமூலம் இனி இங்கேயும் கிடைக்கும்

மூலிகை சாறு மூலம் -வயிற்று புண் ,சுவாச கோளாறுகள் ,சிறுநீரக கற்கள் நோய்க்கு மருந்துகள் தரப்படும்

சென்னையில் எனது ஆலோசனை முன் பதிவுக்கு எனது இ மையில் ஐ டி curesure4u@gmail.com தொடர்பு கொள்ளவும் ..

மனிதம் நிறைந்த
முறையான இந்திய மருத்துவ சிகிச்சைக்கு இனி  சென்னையில் அணுகலாம் ..

Post Comment

ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2014

வலியில்லா வாழ்க்கைக்கு பக்க விளைவில்லா வரம் -மஹாயோகராஜ குக்குலு-( Maha Yogara Guggulu )

வலியில்லா வாழ்க்கைக்கு பக்க விளைவில்லா வரம் -மஹாயோகராஜ குக்குலு-( Maha Yogara Guggulu )
                                                                            
(Ref-பைஷஜ்யரத்னாவளி - ஆமவாதாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:



1.            சுக்கு – சுந்தீ                                10 கிராம்
2.            மிளகு – மரீச்ச                             10           “
3.            திப்பிலி – பிப்பலி                   10           “
4.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்  10           “
5.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக்10            “
6.            நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்           10           “
7.            பாடக்கிழங்கு – பாத்தா                 10           “
8.            சதகுப்பை – ஸதபுஷ்ப                       10           “
9.            மஞ்சள் – ஹரித்ரா                          10           “
10.          மரமஞ்சள் – தாருஹரித்ரா                   10           “
11.          ஓமம் – அஜமோதா                         10           “
12.          வசம்பு – வச்சா                             10           “
13.          பெருங்காயம் (பொரித்துப் பொடித்தது) – ஹிங்கு     10           “
14.          கொட்டைக் கரந்தை (உலர்ந்தது) – ஹப்புஸ        10           “
15.          யானைத்திப்பிலி – கஜபிப்பலீ           10           “
16.          கருஞ்சீரகம் – க்ருஷ்ண ஜீரக                 10           “
17.          கிச்சிலிக் கிழங்கு – ஸட்டீ                   10           “
18.          கொத்தமல்லி விதை – தான்யக              10           “
19.          கருப்பு உப்பு – பிடலவண                    10           “
20.          கல்லுப்பு – ஸ்வர்ச்சலவண                  10           “
21.          இந்துப்பு – ஸைந்தவலவண                  10           “
22.          மோடி – பிப்பலீமூல                         10           “
23.          இலவங்கப்பட்டை – லவங்கத்வக்             10           “
24.          ஏலக்காய் – ஏலா                      10           “
25.          இலவங்கப்பத்திரி – லவங்கபத்ர              10           “
26.          சிறுநாகப்பூ – நாககேஸர                     10           “
27.          கடல் நுரை – ஸாமுத்ரபேன                 10           “
28.          அயபற்பம் – லோஹ பஸ்ம                  10           “
29.          வெள்ளைக் குங்கிலியம் – ஸர்ஜரஸ               10           “
30.          நெருஞ்சில் – கோக்ஷுர                 10           “
31.          சித்தரத்தை – ராஸ்னா                       10           “
32.          அதிவிடயம் – அதிவிஷா                    10           “
33.          சுக்கு – சுந்தீ                                10           “
34.          யவக்ஷாரம் – யவக்ஷார                     10           “
35.          சீமைக்கொடுக்காய்ப்புளி – ஆம்லவேதஸ      10           “
36.          கொடிவேலி வேர் – சித்ரமூல                10           “
37.          புஷ்கர மூலம் – கோஷ்ட                    10           “
38.          செவ்வியம் – சவ்ய                          10           “
39.          புளி – திந்திரிணி                      10           “
40.          மாதுளை ஓடு – தாடிமத்வக்                 10           “
41.          ஆமணக்குவேர் – எரண்டமூல                     10           “
42.          அமுக்கராக் கிழங்கு – அஸ்வகந்தா           10           “
43.          சிவதை (கருப்பு) – த்ரிவ்ருத்                  10           “
44.          நேர்வாள வேர் – தந்தீ மூலம்                     10           “
45.          இலந்தை – பாதரி                      10           “
46.          தேவதாரு – தேவதாரு                      10           “
47.          மஞ்சள் – ஹரித்ரா                          10           “
48.          கடுகரோஹிணீ – கடூகீ                 10           “
49.          பெருங்குரும்பை – மூர்வா                   10           “
50.          பிராம்மீ (காய்ந்தது) – ப்ராஹ்மீ               10           “
51.          சிறுகாஞ்சூரி – துராலபா                     10           “
52.          வாயுவிடங்கம் – விடங்க                    10           “
53.          வெள்வங்கபற்பம் – வங்க பஸ்ம             10           “
54.          ஓமம் – அஜமோதா                         10           “
55.          ஆடாதோடை வேர் – வாஸா மூல           10           “
56.          அப்பிரகபற்பம் – அப்ரக பஸ்ம                10           “
57.          சுத்தி செய்த குக்குலு – ஷோதித குக்குலு          10           “

அவற்றை உப்பு வகைகள், புளி வகைகள், பஸ்மங்கள், சுத்தி செய்த குக்குலு நீங்கலாக நன்கு பொடித்துச்ச் சலிக்கவும். அவ்விதம் சலித்த சூர்ணம் சிறிது சேர்த்து இடித்து சலித்தப் புளி வகைகளைச் சேர்க்கவும். உப்பு வகைகளை தனித்தனியே பொடித்துச் சேர்க்கவும்.

இவ்விதம் சூர்ணத்தைத் தயாரித்த பின்னர் சுத்தி செய்த குக்குலுவைப் போதுமான அளவு திரிபலா கஷாயத்தில் சேர்த்துச் சூடாக்கிக் கரைத்துக் கொதிக்க வைத்து குடபாகம் போல் மாத்திரையாக உருட்டத்தக்க பதத்தில் முன்கூறிய சூர்ணம், பஸ்மங்கள் ஆகியவற்றை அத்துடன் சேர்த்து கலந்து அரைத்து 500 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

குறிப்பு:    சுத்தி செய்த குக்குலுவை நெய் அல்லது தேன் சேர்த்து இடித்து சூர்ணம் முதலியவைகளைச் சேர்த்து இம்மருந்தைத் தயாரிப்பதும் உண்டு. உசிதமான கஷாயம் கொண்டு எல்லாவற்றையும் நன்கு அரைத்து மாத்திரைகளாக உருட்டி உலர்த்தியும் சிலர் தயாரிக்கின்றனர்.

அளவும் அனுபானமும்:  
   
ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை 1 முதல் 3 வேளைகள் வென்னீருடன்.

தீரும் நோய்கள்: 

கீல்வாயு (சந்திகாத வாத), ஆமவாதம் (ஆமவாத), குதிகால் வாதம் (வாதரக்த) போன்ற பலவித வாத நோய்கள், இரத்த தோஷம், தோல் நோய்கள் (குஷ்ட), பலவீனம் (பலக்ஷய / தௌர்பல்ய), இளைப்பு (கார்ஸ்ய).
கீல்வாயு, ஆமவாதம், குதிகால்வாதம் போன்ற நிலைகளில் இது சித்தரத்தைக் கஷாயத்துடன் தரப்படுகிறது. தோல் நோய்களில் வேப்பம்பட்டை, புங்கம்பட்டை, வாய்விளங்கம், கொட்டைக் கரந்தைப் பூ ஆகியவற்றின் கஷாயத்துடன் தரப்படுகிறது. இளைப்பு, பலவீனத்தில் அஸ்வகந்தாதி லேகியத்துடன் இது தரப்படுகிறது. பாத ரசத்தால் விஷமித்த நிலைகளில் மஞ்சிஷ்டா, வேலம்பட்டை, பாடக்கிழங்குவேர் ஆகியவற்றின் கஷாயத்துடன் இது கொடுக்கப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை ..
  1. வேகமான இந்த வாழ்க்கை வலி என்னும் தடைகளை அவ்வப்போது சிலருக்கும் ,எப்போதும் பலருக்கும் ஒரு அங்கமாகிபோகிறது 
  2. வலியில்லா வாழ்க்கை ,வேதனையற்ற வாழ்க்கை  என்ற ஏக்கத்திற்கு இந்த மருந்து நல்ல அற்புத மருந்து ..
  3. அதி விடயம் -ஒரு கிலோ நான்காயிரத்திற்கு மேலே -முக்கிய இந்த மூல பொருளை எந்த ஒரு மருந்து கம்பெனியும் சேர்ப்பதில்லை -அதி விடயம் மூலிகை சேர்க்காத மஹா யோக ராஜ குக்குலு வேலை செய்யாது 
  4. மூட்டு வலி ,முதுகு தண்டு வட வலி ,தோள்பட்டை வலி ,குதிகால் வலி ,வாத வலி ,ஆம வாதம் ,ரக்த வாதம் ,எல்லா வலிகளையும் பக்க விளைவுகள் ஒரு சிறிதும் இல்லாமல் நீக்கும் ,வலிகளை குணப்படுத்தும் .
  5. ஆயுர்வேத சித்த மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கிற இந்த யோகராஜா குக்குலு மாத்திரை பொதுவாக நல்ல தரத்தில் கிடப்பதில்லை என்பது தான் உண்மை 
  6. யோகாராஜா குக்குலு என்கிற மருந்தும் ,மகா யோகா ராஜ குக்குலுவும் வேறு வேறு பார்முலாக்கள் ,இரண்டும் ஒன்றல்ல ..
  7. தக்க கஷாயத்துடன் இந்த மருந்து வேகமாக வேலை செய்யும் 



Post Comment