வெள்ளி, அக்டோபர் 28, 2011

பெண்களின் நோய்களுக்கு நல்ல மருந்து -ஸுகுமார க்ருதம்


நீண்ட நாளாக எழுத இயலாமைக்கு வருந்துகிறேன் ...\

போன பதிவில் -நண்பர் சக்தி மற்றும் நண்பர்கள் கேட்ட மாதிரி -வர்மம் பயிலுவது எங்கே என்பதை பற்றியும் எனக்கு வர்மம் கற்றுகொடுத்த ஆசான்கள் பற்றியும் வேறொரு பதிவில் தெளிவாக எழுதுகிறேன் ..
 

நாளை முதல் தொடர் பதிவுகளை எழுதுகிறேன் ..
பெண்களின் நோய்களுக்கு நல்ல மருந்து -ஸுகுமார க்ருதம்

(ref-ஸஹஸ்ரயோகம் - க்ருதப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            மூக்கிரட்டைவேர் – புனர்னவ மூல      5.000 கிலோ கிராம்
2.            வில்வமூலம் – பில்வமூல             0.500           “
3.            முன்னைவேர் – அக்னிமாந்த           0.500           “
4.            பெருவாகைவேர் – ஸ்யோனாக         0.500           “
5.            குமிழ்வேர் – காஷ்மரீ                  0.500           “
6.            பாதிரிவேர் – பாட்டால                  0.500           “
7.            மூவிலை – சாலீபர்ணீ                  0.500           “
8.            ஓரிலை – ப்ரிஸ்னிபார்ணீ              0.500           “
9.            முள்ளுக்கத்திரி – ப்ருஹத்தீ            0.500           “
10.          கண்டங்கத்திரி – கண்டகாரீ             0.500           “
11.          நெருஞ்சில் – கோக்ஷூர                0.500           “
12.          கீரைப்பாலை – ஜீவந்தி                 0.500           “
13.          அமுக்கிராக்கிழங்கு – அஸ்வகந்தா      0.500           “
14.          ஆமணக்குவேர் – எரண்டமூல          0.500           “
15.          தண்ணீர் விட்டான் கிழங்கு – ஸதாவரீ  0.500           “
16.          தர்பைவேர் – தர்பா                     0.500           “
17.          ஆற்றுதர்பைவேர்                     0.500           “
18.          அமவேர் – காண இக்க்ஷூமூல         0.500          “
19.          குசவேர் – குசமூல                     0.500           “
20.          கரும்பின்வேர் – இக்க்ஷூமூல          0.500           “
21.          கொட்டைக்கரந்தை – ஹப்புஸ          0.500           “
22.          தண்ணீர் – ஜல                      51.200 லிட்டர்

                இவைகளை நன்கு கொதிக்கவைத்து 6.400 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டிய கஷாயத்தில்

1.            வெல்லம் – குட                            1.500 கிலோ கிராம்
2.            ஆமணக்கெண்ணெய் – எரண்டதைல          0.800                     “
3.            பசுவின் நெய் – க்ருத                     1.600                     “
4.            பசுவின் பால் – கோக்ஷீர                   1.600                     “

                இவைகளை கலந்து அக்கலவையில்
1.            திப்பிலி – பிப்பலீ                  100 கிராம்
2.            மோடி – பிப்பலீ மூல               100      “
3.            இந்துப்பு – ஸைந்தவலவண       100         “
4.            அதிமதுரம் – யஷ்டீ              100         “
5.            திராக்ஷை – த்ராக்ஷா             100         “
6.            ஓமம் – அஜமோதா               100         “
7.            சுக்கு – சுந்தீ                     100         “

                இவைகளை கல்கமாக அரைத்துக் கலக்கிக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டவும். 

அளவும் அனுபானமும்:    

5 முதல் 10 கிராம் வரை சூடான பாலுடன் இரு வேளைகள்.

தீரும் நோய்கள்: 



 நாட்பட்ட மலச்சிக்கல் (புராண விபந்த), மூலம் (அர்ஸஸ்), இளைப்பு (க்ஷய (அ) கார்ஸ்ய), பலவீனம் (தௌர்பல்ய), வாயு உபத்திரவம், குன்மம் (குல்ம),சூலை (சூல), குடலிறக்கம், வயிற்றுவலி (உதர சூல), மண்ணீரல் நோய்கள் (ப்லீஹரோக), வீக்கம் (விக்ரதி, ஸோப), கருப்பை/ பிறப்புறுப்புக் கோளாறுகள் (ஜனனேந்திரிய ரோக).
                பிரஸவ காலத்திற்கு சில மாதங்கள் முன்னதாகவே இந்த மருந்தைத் தொடர்ச்சியாக உபயோகிப்பது பிரஸவத்தை எளிதாக்குகிறது

தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. சுகுமார கிருதம் -பெண்களுக்கு ஏற்படும் பெரும்பானையான நோய்கள் -கர்ப்பப்பை சார்ந்த நோய்களுக்கு  சிறந்த மருந்து
  2. எங்கெல்லாம் -வாதத்தை கீழ் நோக்கி தள்ளி -நோய்களை குணப்படுத்த இந்த மருந்தை பயன்படுத்தலாம் ..
  3. அபான வாயுவை சரி செய்ய -இந்த மருந்து -வாத பித்த நோய்களுக்கும் சிறந்த மருந்து
  4. குழந்தை இல்லாத பெண்களுக்கு சிநேக பானம் என்னும் -எண்ணை( நெய் ) குடிக்கும் சிகிசையில் இந்த மருந்தை ஐம்பது மிலியில் ஆரம்பித்து -படிபடியாக இருநூறு மிலி வரை குடிக்க வைத்து -பின் வாந்தி சிகிச்சை என்னும் பஞ்ச கர்ம சிகிச்சை செய்ய இந்த மருந்து நல்ல மருந்து ..
  5. சுக பிரசவத்திற்கும் இந்த மருந்தை பயன்படுத்தலாம்
     

Post Comment

2 comments:

மதுரை சரவணன் சொன்னது…

nalla pakirvu... thotarnthu eluthungkal.. vaalththukkal

sakthi சொன்னது…

நண்பரே வணக்கம் நலமா ?
நீண்ட நாளுக்கு பிறகு உங்கள் எழுத்துக்கள் மகிழ்ச்சி .தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் எழுத்துக்கள் விலைமதிப்பற்ற பயன்தரும் மருந்துகள் .தொடருங்கள் தொடர்கிறோம் .வாழ்த்துக்கள் .வர்மம் பற்றி அவசியம் எழுதுங்கள் இவ்வுலகம் பயன்பெறும் .
அன்புடன் உங்கள் நண்பன் ,
கோவை சக்தி

கருத்துரையிடுக