திங்கள், ஜூன் 05, 2017

உலக சுற்று சூழல் –ஆயுஷ் தத்துவங்களே தீர்வு ..

உலக சுற்று சூழல் தினம் –ஆயுஷ் தத்துவங்ளே தீர்வு ..

டாக்டர்.அ.முகமது சலீம் ( cure sure ).,BAMS.,M.Sc.,MBA.


  • ·         அண்டத்தில் உள்ளதே பிண்டம் ,பிண்டத்தில் உள்ளதே அண்டம் –என்கிற உயரிய தத்துவத்தை கொண்டது சித்த மருத்துவம் –பஞ்ச மகா பூதங்களை காப்பாற்ற சொல்வதில் இங்கே சித்த மருத்துவத்திற்கு ,இயற்கை மருத்துவத்திற்கு ஈடு இணை இங்கே ஏதுமில்லை –


  • ·          ஒரு மூலிகையை எடுக்கும் போது அதனை எப்படி காக்க வேண்டும் , அதனை எப்படி காப்பு கட்டி எடுக்க வேண்டும் என்று மூலிகைக்கும் உயிர் இருப்பதை நம்பியே பல தத்துவங்களை சித்த மருத்துவம் சொல்கிறது – பசுமை காக்க பாரம்பரிய மருத்துவ தத்துவங்களே போதும் .



  • ·         ருது சர்யம் என்று பருவ மாற்றத்திற்கு ஏற்ற நாம் எப்படி வாழ பழக வேண்டும் என்று சொல்கிறது ஆயுர்வேதம் –ஆனால் நாம் மட்டும் ஏசி ,பிரிட்ஜ் என்று குளிர்சாதன பயன்படுத்தி களோரோ ப்ளோரோ கார்பனை வெளிவிட்டு இன்னும் பூமியை சூடாக்க சொல்லவில்லை –காற்றை மாசு படுத்த சொல்ல வில்லை ஆயுர்வேதம்


  • ·         பூமியை காக்க – மரம் நடுதல் என்று இங்கே லட்ச கணக்கில் நட்டு போட்டோ எடுத்து உலக்குக்கு விளம்பரம் பண்ணுகிறது இந்த உலகம் –அந்த லட்சம் செடிகளுக்கு ஒரு போதும் தண்ணீர் ஊற்றியதாக சரித்திரம் இல்லையே ..- செடிகளை வளர்க்க ஏதும் செய்திடாது வெறும் மரம் நடுவது இங்கே குழந்தை பெற்று பசியோடு வைப்பதற்கு சமமே –இனி செடி மரம் நட்டால் ஆயுர்வேத சொல்வது போல் காக்க வழி வகை செய்ய வேண்டும்



  • ·         உணவை வாழை இலையில் சாப்பிட சொல்கிறது ஆயுர்வேதம் – பிளாஸ்டிக் ஒழிப்போம் என்று பிளேக்ஸ் பிளாஸ்டிக்கில் விளம்பரம் செய்ய சொல்லவில்லை – பிளாஸ்டிக் பை உற்பத்தி செய்யும் இடத்தில் தடுக்காமல் விற்கும் இடத்தில் கைப்பற்றுவது தும்பை விட்டு வாலை பிடிக்கும் மோசமான அரசியலை வெறுக்கிறது இயற்கை மருத்துவம் –பூமியை காப்பாற்ற ஒரு இயற்கை மருத்துவமே போதும்


  • ·         பூமிக்கு அடியில் விளையும் உணவுகளில் கருணை கிழங்கை தவிர மற்றவை உண்ண கூடாது என்று மற்ற வேர் ,கிழங்குகளை மறை முகமாக காப்பாற்றி கருணை செய்கிறது இயற்கை மருத்துவம்



  • ·         சுத்தம் பேணுதலே நோய் இல்லாமல் வாழ வழி என்று –தன் சுத்தம் ,சுற்றுபுற சுத்தத்தை பேணுதலை ஆயுர்வேத மருத்துவம் சொல்லி உலக சுற்று சூழலை காக்க –தண்ணீர் மாசு ,காற்று மாசு ,பூமி மாசு ,ஒளி மாசு எல்லாவற்றையும் தடுக்க சொல்கிறது –வெறும் கையில் ஒரு துடைப்பத்தை வைத்து வெற்று போஸ் ,செல்பி எடுக்க –தூய்மை பாரதம் என்று பொய் சொல்ல வில்லை .


  • ·         இயற்கை வளத்தை சுரண்டி –நிலக்கரி எடுப்போம் ,மீதேன் எடுப்போம் ,கார்போன் எடுப்போம் ,காடு அழிப்போம் ,என்று இயற்கை –செயற்கை ஆனால் எல்லாம் இயற்கை எய்தும் .நாம் வரும் போது எடுத்து வர வில்லை –கொடுத்தது எல்லாம் இயற்கையே என்றால் அதனின் விலை இயற்கை நமக்கு உணர்த்தும் என்கிறது ஆயுர்வேதம்- இயற்கையை காப்பாற்றி ,இயற்கையாய் வாழுதலே –மரபு சார எரிபொருளை பயன்படுத்துவது இதற்கெல்லாமல் தீர்வு



  • ·         ஆறாம் அறிவில் அகந்தை கொண்டு இயற்கை மீறினால் இயற்கை எய்துவோம் –ஆயுஷ் மருத்துவ தத்துவமே நம்மையும் ,நமது சந்ததிகளையும் ,உலகத்தையும் காப்பாற்றும் என்று உணர்ந்து கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை


இயற்கையை பேணுவோம் –இயற்கை மருத்துவத்தால் நலம் பெறவோம் 

.உலக சூழலை காக்க ஆயுஷ் மருத்துவம் நாடுவோம் அதன் நோய் அணுகா விதிகளையும்  தத்துவங்களையும் பேணுவோம் –

ஆயுஷ் மருத்துவமே உலக சூழலுக்கான தீர்வு –ஆயுஷ் மருத்துவ ஆலோசனை மற்றும் நோய் அணுகா விதகளை அறிந்து கொள்ள
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர்  9042225333
திருநெல்வேலி  9042225999
ராஜபாளையம்  9043336888
சென்னை  9043336000( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )


.

Post Comment

0 comments:

கருத்துரையிடுக