சனி, டிசம்பர் 18, 2010

ஆண்மை அதிகரிக்கவும் -ஜெனரல் டானிக் -அஸ்வகந்தா அரிஷ்டம்-Aswagandarishtam

அஸ்வகந்தா அரிஷ்டம்-Aswagandarishtam
(Ref-பைஷஜ்யர த்னாவளி - மூர்ச்சாதிகாரம்)



தேவையான மருந்துகளும் செய்முறையும்:-



2.            நிலப்பனைக்கிழங்கு – முசலீ                 1.000     “
3.            மஞ்சட்டி – மஞ்ஜிஷ்டா                      0.500     “
4.            கடுக்காய் (கொட்டை நீக்கியது)- ஹரீதகீ      0.500     “
5.            மஞ்சள் – ஹரித்ரா                          0.500     “
6.            மரமஞ்சள் – தாருஹரித்ரா                   0.500     “
7.            அதிமதுரம் – யஷ்டீமது                      0.500     “
8.            சித்தரத்தை – ராஸ்னா                       0.500     “
9.            முதுக்கன் கிழங்கு – விடாரி                 0.500     “
10.          மருதம்பட்டை – அர்ஜுனத்வக்               0.500     “
11.          கோரைக்கிழங்கு – முஸ்தா                  0.500     “
12.          கருஞ்சிவதை – த்ரிவ்ருத்                    0.500     “
13.          சிறு காஞ்சூரி – துராலப்பா                   0.400     “
14.          நன்னாரி (கருப்பு) – க்ருஷ்ண ஸாரிவா        0.400     “
15.          வெண்சந்தனம் – ஸ்வேத சந்த               0.400     “
16.          செஞ்சந்தனம் – ரக்த சந்தன                  0.400     “
17.          வசம்பு – வாச்சா                             0.400     “
18.          கொடிவேலிவேர்ப்பட்டை – சித்ரகத்வக்        0.400     “
19.          தண்ணீர் – ஜல                              102.400 லிட்டர்
20.          சர்க்கரை – ஷர்க்கர                           6.0000   கி.கிராம்
21.          தேன் – மது                                  10.0000 “ 


முதல் பதினெட்டு சரக்குகளையும் நீரில் கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி அதில் சர்க்கரை, தேன் இவைகளைச் சேர்த்து அத்துடன்


1.            சுக்கு – சுந்தீ                           100  கிராம்
2.            மிளகு – மரீச்ச                        100         “
3.            திப்பிலி – பிப்பலீ                      100         “
4.            சிறுநாகப்பூ – நாககேஸர               100         “
5.            இலவங்கப்பட்டை – லவங்கத்வக்       100         “
6.            இலவங்கப்பத்திரி – லவங்கபத்ர         200         “
7.            ஏலக்காய் – ஏலா                       200         “
8.            ஞாழல்பூ – ப்ரியாங்கு                  200         “
9.            காட்டாத்திப்பூ – தாதகீபுஷ்ப             800         “
ஆகியவைகளை எடுத்துக் கொண்டு அதில் முதல் எட்டு சரக்குகளை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ சேர்த்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.

அளவும் அனுபானமும்:   
  10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீருடன் இரு வேளைகள்.

தீரும் நோய்கள்:  

  1. உடல் மிகவும் மலிவடைந்த நிலையிலும், க்ஷுண ரோகங்களிலும் கூஷ்மாண்ட லேஹ்யத்துடன் தரப்படுகிறது. 
  2. மூலம் (அர்ஷ), க்ஷயரோகம், ஞாபகம் இன்மை (ஸ்மிருதிக்ஷய) போன்றவைகளில் பெரிதும் பயனளிக்கவல்லது. 
  3. மலட்டுத் தன்மைக்கு ஸதாவரீ ரஸாயனத்துடன் தரப்படுகிறது. 
  4. உள்ளங்கை, பாதங்களில் ஏற்படும் எரிச்சலில் (ஹஸ்த பாத தாக) சந்தனாஸவத்துடன் வழங்கப்படுகிறது.
  5. நீண்ட நாட்களுக்கு இதனைத் தொடர்ந்து உபயோகிக்க மூர்க்கை (மூர்ச்சா), கால் கைவலி எனும் காக்கைவலி (அபஸ்மார) உன்மாதம் (உன்மாத), மூளைக்கோளாறுகள், நரம்புத் தளர்ச்சி (நாடீதௌர்பல்ய) மற்றும் பலவித வாத நோய்கள் (வாதரோகங்கள்), இளைப்பு (கார்ஸ்ய) ஆகியன நீங்கும்.

ஆயுர்வேதத்தில் இந்த மருந்து கை  கால் வலி குறைக்கவும்,நரம்பு தெம்பு தரவும் ,உடல் நோய் எதிர்ப்பு சக்தி கூடவும் ,ஆண்மை பெருக்கவும் -பொதுவான ஹெல்த் டானிக் இந்த மருந்தை பயன்படுத்துவோம்

Post Comment

வியாழன், டிசம்பர் 16, 2010

குழந்தைகளின் அனைத்து நோய்களுக்கு -ஒரே சிறந்த மருந்து அரவிந்தாஸவம்-Aravindasavam


குழந்தைகளின் அனைத்து நோய்களுக்கு -ஒரே சிறந்த மருந்து
அரவிந்தாஸவம்-Aravindasavam
(Refn -பைஷஜ்யரத்னாவளி - பாலரோகாதிகார)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:-

1.            நன்கு கொதித்து ஆறிய தண்ணீர் – ஜல  25.600 லிட்டர்
2.            சர்க்கரை – ஸர்கரா                    5.000     கிலோ கிராம்
3.            தேன் – மது                      2.500     “
4.            திராக்ஷை – த்ராக்ஷா                   1.000     “


முதல் மூன்றையும் நன்கு கலந்து அத்துடன் திராக்ஷையை இடித்துச் சேர்த்துப் பின்னர் கீழே குறிப்பிடப்படும்.

1.            தாமரைப்பூ – கமல புஷ்ப (ரக்த கமல)             50 கிராம்
2.            விளாமிச்சை வேர் – உஸுர                  50           “
3.            குமிழ் வேர் – காஷ்மரீ                      50           “
4.            நீல ஆம்பல்பூ – நீலோத்பல                  50           “
5.            மஞ்சட்டி – மஞ்ஜிஷ்டா                50           “
6.            ஏலக்காய் – ஏலா                      50           “
7.            சிற்றாமுட்டி – பலா                         50           “
8.            ஜடாமாஞ்சில் – ஜடாமாம்ஸீ                 50           “
9.            கோரைக்கிழங்கு – முஸ்தா                  50           “
10.          நன்னாரி – ஸாரிவா                         50           “
11.          கடுக்காய்த்தோல் – ஹரீதகீ                  50           “
12.          தான்றிக்காய்த்தோல் – பிபீதகீ                50           “
13.          வசம்பு – வாச்சா                       50           “
14.          நெல்லிமுள்ளி – ஆமலகீ                    50           “
15.          கிச்சிலிக்கிழங்கு – ஸட்டீ                    50           “
16.          நன்னாரி(கருப்புவகை) – க்ருஷ்ணஸாரிவா          50           “
17.          அவுரிவேர் – நீலீ                       50           “
18.          பேய்ப்புடல் – பட்டோலா                     50           “
19.          பர்ப்பாடகம் – பர்பாடக                  50           “
20.          மருதம்பட்டை – அர்ஜுனத்வக்               50           “
21.          இலுப்பைப்பூ – மதூகபுஷ்ப                   50           “
22.          அதிமதுரம் – யஷ்டீமது                50           “
23.          மருவு – மருவக                       50           “
24.          காட்டாத்திப்பூ – தாதகீபுஷ்ப                  800         “


முதல் இருபத்து மூன்று சரக்குகளையும் ஒன்றிரண்டாகப் பொடித்து முன் கூறியதில் போட்டுக் காட்டாத்திப்பூ சேர்த்து சீலை செய்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.


அளவும் அனுபானமும் :

15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீருடன் இரு வேளைகள்.


தீரும் நோய்கள் :    

  வலுவின்மை (பலக்ஷய), இளைப்பு (கார்ஸ்ய), ஜீரணக் குறைவு (அக்னிமாந்த்ய), குளிர்ச்சி உண்டாக்கி.

குறிப்பு :  

(i) குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்களில் இது விசேஷமாக உபயோகப்படுகிறது.

(ii) சிலர் கருஞ்சிவதையை (த்ரிவ்ருத்) சேர்ப்பது வழக்கம்.

 (iii)
இப்போதெல்லாம் குழந்தைகளின் எல்லா நோய்களுக்கும் -ஆன்டி பயாடிக் என்று உடனே கொடுத்து விடுகிறார்கள் ..அது மிக பெரிய தவறு ..நோய் கட்டுக்குள் வரவில்லை ..நோயின் தீவிரம் கிருமிகளினால் ஏற்பட்டுள்ளது என்று தெரிந்து -நல்ல கைதேர்ந்த குழந்தை மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே ஆன்டி பயாடிக் கொடுக்கப்பட்ட வேண்டும் ..

உங்கள் குழந்தையின் எதிப்பு சக்தி அதிகமாக்க வேண்டுமா ?
உங்கள் குழந்தைக்கு பசி இல்லையா ?
உங்கள் குழந்தை அடிக்கடி சளி ,காய்ச்சல் வருகிறதா ?
உங்கள் குழந்தையின் நோய் உடனே சரியாகாமல்  -நாள் பட்டு கஷ்டபடுத்தி  குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கிறதா ?
உங்கள் குழந்தை மந்தாமாக இருக்கிறதா ?

உங்கள் வீட்டிலேயே  பக்க விளைவில்லாத ,அங்கில மருந்தோடு இணைந்து கொடுத்தாலும் பிரச்சினை இல்லாத -ஆயுர்வேத குழந்தை மருந்து வேண்டுமா ?

அது தான் -அரவிந்தாசவம் -

 

Post Comment

புதன், டிசம்பர் 15, 2010

இதய நோய்க்கு அருமருந்தாகும் -அர்ஜுனாரிஷ்டம்-Arjuna Aristham


இதய நோய்க்கு அருமருந்தாகும் -அர்ஜுனாரிஷ்டம்(“பார்த்தாத்யரிஷ்டம்)-Arjuna Arishtam-paarthaadyaarishtam

(ref -பைஷஜ்ய ரத்னாவளி – ஹ்ருத்ரோகாதிகாரம்)









தேவையான மருந்துகளும் செய்முறையும்:-
 
1.            மருதம்பட்டை – அர்ஜுனத்வக்     5.000     கி.கிராம்
2.            திராக்ஷை – த்ராக்ஷா             2.500     “
3.            இலுப்பைப்பூ – மதூகபுஷ்ப         1.000     “
4.            வெல்லம் – குட            5.000     “
5.            காட்டாத்திப்பூ – தாதகீபுஷ்ப       1.000     “
6.            தண்ணீர் – ஜல             51.200     லிட்டர்


முதல் மூன்று சரக்குகளையும் நன்கு கொதிக்க வைத்து 12.800 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி வெல்லம் மற்றும் காட்டாத்திப்பூ போட்டு ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.


அளவும் அனுபானமும்:-     10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீருடன் இரு வேளைகள்.


தீரும் நோய்கள்:- இதய நோய்கள் (ஹ்ருத்ரோக) மற்றும் நுரையீரல் நோய்கள் (புப்புஸரோக). பொதுவான பலவீனம் (பலக்ஷய.)
குறிப்பு:    இஃ து  “பார்த்தாத்யரிஷ்ட” என்ற பெயரிலும் வழங்கி வருகின்றது.


குறிப்பு -இதில் வெல்லம் சேர்ந்திருப்பதால் -சர்க்கரை இதய நோயாளிகள் இந்த அரிஷ்டத்தை உபயோகிக்கும் போது கவனம் தேவை ..

இந்த அர்ஜுனா அரிஷ்டம் -இதய அடைப்பை நீக்கவும் ,இதயத்தின் சுருங்கி விரியும் தன்மை (EJECTION FACTOR-)அதிகபடுத்தவும் பயன் படுத்த படுகிறது

Post Comment