திங்கள், ஜனவரி 16, 2023

நோயாளியிடம் உங்கள் நோய் பற்றி புலம்பாதீர்கள்


 நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..

நோயாளியிடம் உங்கள் நோய் பற்றி புலம்பாதீர்கள் அவர்கள் எடுத்து கொள்ளும் சிகிச்சைகள் பற்றி விமர்சனம் செய்யாதீர்கள் .. அவர்களுக்கு நல்ல வார்த்தைகள் சொல்லுங்கள் இதையே நபி வழியாக ஒருவர் நோயுற்றால் இயல்பிலேயே அவருடைய மனதில் கவலையும் சஞ்சலமும் குடிகொண்டுவிடுகின்றது. அதுவும் கொஞ்சம் பெரிய நோயாக இருந்தால் சொல்லத் தேவையில்லை. படபடப்பும் பயமும் அதிகரித்து விடும். வீட்டில் உள்ளவர்களின் நிலையோ அதைவிட மோசமாக இருக்கும், குறிப்பாக நோயுற்றவர் வீட்டுப் பொறுப்பாளியாக இருந்தால், அதுவும் நம் போன்று வெளிநாடுகளில் வாழ்பவர்களாக இருந்தால். இந்த நேரத்தில் யாராவது அவரிடம் சென்று ஆறுதல் வார்த்தைகளையும் அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்யும் போது நோயாளியின் உள்ளத்தில் உள்ள பெரும் சுமை நீங்கியது போல் இருக்கும். இதை அனுபவ ரீதியாக நாம் நமது வாழ்வில் பார்க்கின்றோம். இது போன்ற உயர் நோக்கங்களைக் கருதியே நோயாளியை உடல் நலம் விசாரிப்பதை இஸ்லாம் கடமையாக்கியிருக்கின்றது. நோயாளியை சந்திக்கச் சென்றவர் அவரின் சுக நிலைபற்றி விசாரித்து அவரின் நோய் நீங்க அல்லாஹ்விடத்தில் துஆ செய்ய வேண்டும். இன்னும் அல்லாஹ்வின் சோதனைகள் வரும்போது பொறுமை கொள்வதையும் அதன் சிறப்புகள் பற்றியும் அவரிடம் கூறவேண்டும். எந்த வார்த்தைகளைப் பேசினால் அவர் சந்தோஷமடைவாரோ அந்த வார்த்தைகளைத்தான் பேச வேண்டுமே தவிர அவரின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும் வார்த்தைகளை முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளிகளை நலம் விசாரியுங்கள்; கைதிகளை விடுவியுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி) #நலம்விசாரிக்கும் #நோயாளிநலம் #patientconsole #givingconfidenttopatients #goodwords #nalamvasirkka #noyaalivasarikka #drsaleem #saleemdr #saleemayurveda

Post Comment

0 comments:

கருத்துரையிடுக