திங்கள், மார்ச் 02, 2026

30 நிமிடம் நடந்தால்… 10 மணி நேரம் உட்கார்ந்தது “cancel” ஆகுமா?

30 நிமிடம் நடந்தால்… 10 மணி நேரம் உட்கார்ந்தது “cancel” ஆகுமா?


ஒரு 44 வயது corporate தலைவர் என்னிடம் சொன்னார்:

“டாக்டர், நான் தினமும் 30 நிமிடம் walk பண்ணுறேன்.
அப்படின்னா என் back safe தானே?”

அவருக்கு இருந்தது:

• நீண்டநாள் முதுகு உறைப்பு
• கழுத்து இறுக்கம்
• மதியம் சோர்வு
• லேசான உடல் எடை அதிகரிப்பு
• தினமும் 9–10 மணி நேர desk work

அவர் exercise பண்ணினார்.

ஆனா…

நாள் முழுக்க உட்கார்ந்தார்.

அதுவே மாற்றத்தை உருவாக்கியது.


Exercise Illusion – தவறான நம்பிக்கை

பலர் நினைப்பது:

“30 நிமிடம் walk = 10 மணி நேரம் sitting cancel”

இல்லை.

உங்கள் உடல் முக்கியமாக பதிலளிப்பது:

Movement frequency-க்கு.

Workout duration-க்கு மட்டும் அல்ல.

நீங்கள் “Prolonged sitting”-ஐ exercise மூலம் வெல்ல முடியாது.


தொடர்ந்து உட்கார்ந்தால் என்ன நடக்கும்?

• Hip flexors சுருங்கும்
• Glutes செயலிழக்கும்
• Lumbar disc கள் அழுத்தமடையும்
• இரத்த ஓட்டம் குறையும்
• Core stabilizers தளர்ந்து விடும்

காலை walk பண்ணினாலும்…

8–10 மணி நேர sitting மீண்டும் பிரச்சனையை தூண்டும்.

இது exercise பற்றிய விஷயம் அல்ல.

Balance பற்றியது.


45–5 Rule

ஒவ்வொரு 45 நிமிடம் உட்கார்ந்த பிறகு:

✔ 5 நிமிடம் இயக்கம்

நிற்கவும்
நீட்டவும்
நடக்கவும்
முதுகை நீட்டவும்
ஆழ்ந்த மூச்சு விடவும்

சிறிய இடைவெளிகள்,

கடினமான workout-ஐ விட முதுகை அதிகமாக பாதுகாக்கும்.


Modern Science என்ன சொல்கிறது?

• நீண்ட நேரம் உட்கார்வது inflammation அதிகரிக்கும்
• Exercise பண்ணுபவர்களுக்கும் metabolic decline வரும்
• அடிக்கடி சிறிய இயக்கங்கள் disc அழுத்தத்தை குறைக்கும்
• Posture variation முதுகை பாதுகாக்கும்

முதுகு static posture-ஐ விரும்பாது.

அது variability-ஐ விரும்பும்.


ஆயுர்வேத பார்வை

அதிக உட்கார்வு:

• கப தேக்கம்
• வாத சமநிலை குலைவு
• அமா தேக்கம்

தேக்கம் → கனத்த உணர்வு
கனத்த உணர்வு → உறைப்பு

ஓட்டம் → புத்துணர்ச்சி


📌 Practical Balance Formula

✔ காலை 20–30 நிமிடம் நடை
✔ வேலை நேரத்தில் ஒவ்வொரு 45–60 நிமிடமும் break
✔ மாலை 5–10 நிமிடம் mobility
✔ 2 மணி நேரத்துக்கு மேல் continuous sitting தவிர்க்கவும்

Consistency > intensity.


சிந்தியுங்கள்

நீங்கள் ஒருமுறை exercise பண்ணுகிறீர்களா…

மற்ற நேரம் முழுவதும் உட்கார்ந்திருக்கிறீர்களா?


இறுதி எண்ணம்

உங்கள் முதுகு உங்கள் முயற்சியை அளவிடாது.

அது உங்கள் “Exposure”-ஐ அளவிடும்.

அதிக உட்கார்வு—even exercise உடன் இருந்தாலும்—

Imbalance உருவாக்கும்.

தினமும் நடக்கவும்.

ஒவ்வொரு மணிநேரமும் இயங்கவும்.

Intelligent balance தான் spine health-க்கு ரகசியம்.

—📘 Spine Intelligence – Edition 19

Dr Mohamad Saleem
Spine Ayush – Rebuilds Lives


Post Comment

0 comments:

கருத்துரையிடுக