வெள்ளி, அக்டோபர் 28, 2016

தேசிய ஆயுர்வேத தினம் அக்டோபர் 28

பல்லாண்டு வாழ பழமையான மருத்துவ  அறிவியல் ...
வாழ்க்கையை இப்படி தான் வாழ வேண்டும் என்று வாழும் முறையை அவசர உலகில் மறந்த இந்த நாள் மனிதருக்கும் சொல்லி கொடுக்கும்  இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த மருத்துவம் இந்த ஆயுர்வேதம் ...

உள்ளே வெளியே ........உள்ளே சாப்பிட அறிவியல் நிரூபிக்கப்பட்ட வேதியியல் கெமிக்கல் மருந்துகள் ...வெளியே பூசிக்கொள்ள இயற்கை மூலிகைகள் ...இது  இன்றைய  மக்களின் மன நிலை ...உள்ளே தானே ஆயுர்வேதம் மருத்துவம் பயன்படணும் ...ஆனால் இங்கே அத்தனையும் தலை கீழ் ..

பிரிந்து பிரிந்து தனி தனியாக ஆனது இந்த ஆக்டோபஸ் -ஆயுர்வேதம் ...
அக்டோபஸ் என்னும் கடல் உயிரினத்தை இரண்டாக பிளந்தால் அது தனி தனி அக்டோபஸ் ஆக மாறி வாழும் என்பது உண்மை ..அதே போல் ஆயுர்வேதத்தின் கூறுகளான யோகா ,Pharmacognosy ,அறுவை மருத்துவம் ,இன்னும் பல பல ...ஆனால் தாய் இங்கே கவனிப்பாரின்றி கிடக்கிறது ...


நல்லதை சொல்ல விளம்பரம் வேண்டும் ..மோரை கூவி கூவி விற்க வேண்டிஉள்ளது ... கள்ளுக்கடைக்கு விளம்பரமே தேவை இல்லை ..அகிலாண்ட மன்னவருக்கு உதவிய ஆயுர்வேதத்தை கடைசி குடி மகனுக்கும் கொண்டு செல்ல தேவைபடுகிறது விழிப்புணர்வு என்னும் விளம்பரம் ..


அடுப்பறையில் தேட சொன்ன ஆயுர்வேதம் ..உண்ணும் உணவை வைத்து உடல் வளர்க்கும் ,உயிர் வளர்க்கும் முறை சொன்னது ஆயுர்வேதம் ..ஆனால் இங்கே மஞ்சளை  கூட இனி பாக்கெட்டில் மட்டுமே பார்க்க போகிறது இந்த முன்னேறிய உலகம் ...இப்போது உள்ள பாட்டிக்கு அஞ்சரை பெட்டியும் தெரியவில்லை ..பேர குழந்தையோ உலக்கை ,அம்மியை இனி அருங்காட்சியகத்திலே மட்டுமே பார்க்க போகிற வருங்கால சந்ததிக்கு அவசரமாய் தேவை ஆயர்வேதம் ...

கண்ணை விற்று காட்சி வாங்கும் புதிய தலைமுறைக்கு தேவை அவசரமாய் ஆயுர்வேதம் ..cut copy paste உலகத்திலே ,எல்லாம் இருக்கிறது மாயை உலகத்திலே ,விவசாயம் கூட Facebook Farmville செய்கிறது விளையாட்டாய் இக்கால குழந்தைகள் ...சாப்பிடுவது உரம் , விஷம் என்று தெரியாமல் விவசாயம் மறந்த உலகுக்கு ஆயுர்வேதம் வேண்டும் நாம் உயிர் வாழ மட்டுமல்ல நமது தலைமுறைக்கு  கூட ..


ஆயிரம் தினத்தில் ஒன்றல்ல இந்த தேசிய ஆயுர்வேத தினம் ..காதலுக்கு ஒரு தினம் ,குழந்தைக்கு ஒரு தினம் ,எயிட்ஸுக்கு ஒரு தினம் ..என்று அனுதினும் ஒரு தினம் கொண்டாடும் உலகத்திலே இந்த ஆண்டு முதல் தேசிய ஆயுர்வேத தினம் அக்டோபர் 28 ....மக்களுக்கு ஆயுர்வேதம் சென்றடைய ,ஆயுர்வேதத்தால் மக்கள் நோயின்றி வாழ ,மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக இந்த தினம் ...


பல ஆண்டுகளாக ஆயுர்வேதத்தை மக்களுக்கு கொண்டு செல்ல என்னால் இயன்ற முயற்சிகள் பல செய்தாலும் ...இந்தியாவே ஆயுர்வேதத்தை கொண்டாடும் ஒரு நிலை வந்த மகிழ்ச்சியில் மக்களுக்கு வேண்டி விரும்பி கேட்டு கொள்வது ....


 1. ஆயுர்வேதம் என்பது ஆயுர்வேதிக் அழகு நிலையம் இல்லை ..ஆயுர்வேதிக் சோப்பு என்று ஒன்று இல்லை ..ஆயுர்வேதம் என்றால் வெளிப்புற சிகிச்சைகள் மட்டுமல்ல .ஆயுர்வேதம் என்பது வாழ்க்கை அறிவியல் ...
 2. எந்த நோய் என்றாலும் நோய் வராமல் தடுக்க ,நோயை கட்டுபடுத்த ,நோயை  குணப்படுத்த ஆயுர்வேதம் என்றும் உதவும் ...
 3. நோய் வந்த உடன் நாட வேண்டியது ஆயுர்வேதம் மட்டுமே ...எல்லா மாற்று சிகிச்சைகளை பார்த்து விட்டு ..இனி முடியாது  என்ற உடன் கடைசியில் பார்க்க வேண்டிய முடிவல்ல ஆயுர்வேதம் ...ஆயுர்வேதத்தில் உங்கள் ஆரோக்கியம் ஆரம்பிக்கட்டும் ...
 4. முறையாக படித்த மருத்துவரிடம் மட்டுமே ஆயுர்வேத சிகிச்சை எடுக்க வேண்டும் ..போலிகளிடம் ஏமாந்து ஆயுர்வேதத்தை குறை சொல்லாதீர்கள் ...ஆயுர்வேதம் என்றும் ஏமாற்றம் அளிக்காது ..
தொடரும் ..


ஆயுர்வேத மருத்துவன் டாக்டர் அ முகமது சலீம் என்கிற Dr.Curesure.,,தொடர்புக்கு ஈமெயில் -curesure4u@gmail.com..cel 90 4222 5333
Post Comment

புதன், செப்டம்பர் 07, 2016

மண்ணீரல் நீக்க அறுவை சிகிச்சை தேவை இன்றி ஆயுர்வேத சிகிச்சையில் சரியாகும் இரத்த தட்டுக்கள் குறைவு நோய்

மண்ணீரல் நீக்க அறுவை சிகிச்சை தேவை இன்றி ஆயுர்வேத சிகிச்சையில் சரியான நோய் Thrombocytopenia .

நோயாளியின் பெயர் சரவண பாலாஜி .

வேலை அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர் .

ஏற்பட்ட தொந்தரவு - அடிக்கடி காய்ச்சல் ,மயக்கம் ,பலஹீனம் ,உடலில் சிவந்த புள்ளிகள் தோன்றி மறைகிற நிலை ..பரிசோதனைகளில் இரத்த தட்டுக்கள் 70000 க்கும் கீழ் உள்ள நிலை ..Bone marrow Test எல்லாம் எடுத்து பார்த்தாகி விட்டது ..நோய்க்கு பெயர் காரணம் தெரியாத Thrombocytopenia. ஆறு மாதங்களாக பணிக்கு செல்ல முடியாத நிலை ..பல இரத்த பிளாஸ்மா ஏற்றியும் இரத்த தட்டுக்கள் தன் நிலைக்கு வர இயல வில்லை .இந்த நோயாளிக்கு மண்ணீரல் நீக்கம் என்கிற splenectomy செய்தால் இந்த நிலை மாற வாய்ப்புள்ளது என்று அறுவை சிகிச்சைக்கு அறிவுறுத்தப்பட்டது ..இந்த நிலையில் இந்த நோயாளி என்னை சந்தித்தார் ..ஆயுர்வேத மருந்துகள் வழங்கப்பட்டது ..ஒரு மாதத்தில் நல்ல மாற்றம் ..இரத்த தட்டுக்கள் 125000 க்கு மேல் வந்தது ..எந்த தொந்தரவும் இல்லை ..45 நாளில் இரத்த தட்டுக்கள் சாரசரிக்கு வந்து விட்டது ..நோயாளிக்கு தொடர்ந்து மருந்து எடுக்க அறிவுறுத்த பட்டது .ஆனால் மிக மிக குறுகிய காலத்திலேயே இரத்த தட்டுக்கள் normal ஆனது ..அறுவை சிகிச்சைக்கும் அவசியமே இல்லாது சரியாகி உள்ளார் ,இந்த நோயாளி எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் தனது ஓட்டுனர் வேலையை எப்போதும் போல் செய்து வருகிறார்.....சேவை செய்ய வாய்ப்பளித்து நோயை குணமாக்கிய ஏக இறைவனுக்கு நன்றி கூறியவனாக டாக்டர் அ curesure முகமது .ஆயுர்வேத மருத்துவன் email curesure4u@gmail.com

https://www.youtube.com/watch?v=CJlNMFhmMx8

Post Comment

ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2016

தைராய்ட் கட்டிகளையும் எளிதாக குணமாக்கும் அட்டைவிடல் சிசிகிச்சை -பாகம் 1

அட்டை விடுதல்

அட்டை விடுதல் என்பது ஆயுர்வேதத்தின் சிறப்பு மருத்துவ முறையாகும்.
அட்டை விடுல் மருத்துவத்தின் பலன் அமிர்தம் உட்கொண்டதற்கான பலனாகும்.

ஆயுர்வேதத்தில் அட்டை விடுதல் :

ஆயுர்வேதத்தின் சிறப்பு அம்சமான பஞ்சகர்மாவில்  ரக்த மோக்ஷனம் என்னும் சிகிச்சையில் அட்டை விடும் சிகிச்சையும் ஒன்றாகும். இந்த சிகிச்சை முறையானது 5000 ஆண்டுகளுக்கு முன்னரே  இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அட்டை விடுதல் சிகிச்சை ( இரக்த மோக்ஷனம்) என்பது இரத்தத்தினை சுத்திகரிக்க்கும் முறையாகும்.இதன் மூலம் கெட்ட இரத்தம் வெளியேற்ற பட்டு பல நோய்களை குணமாக்க முடிகிறது .


அட்டை


தண்ணீரில் வாழும் உயிரினம் ஆகும். உலக அளவில் 6000 விதமான அட்டை பூச்சிகள் காணப்படுகின்றன. அவற்றுள் 100 - 150 வரையிலான அட்டை பூச்சிகள் மருத்துவ சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது.
அட்டைப் பூச்சிகள் வித்தன்மை உள்ளவை , விதன்மையற்றவை என இரு வகைகளாக பிரிக்கப்படுகின்றன.

ஹிருடுனே என்ற வகையை சார்ந்த அட்டை பூச்சிகள் மருத்துவ முறையில் பயன்படுத்தப்படுகின்றன.இவை சுமார் 1.2 cm முதல் 43 cm வரை காணப்படுகின்றன. கருப்பு , மஞ்சள் , பச்சை , அரக்கு போன்ற பல விதமான வண்ணங்களில் காணப்படுகிறது.அட்டை விடும் சிகிச்சை முறை ஆஸ்திரேலியா , பிரிட்டீஸ் போன்ற மேற்கத்திய நாடுகளில் கூட  மேற்கொள்ளப்படுகிறது.


அட்டை விடுதல்:


அட்டை விடுதல் சிகிச்சை முறை நமது மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு சிகிச்சை முறையாகும்.இச்சிகிச்சை முறையில் பலதரப்பட்ட மக்களும் பயன்பெற்று வருகின்றனர் .

இது பாதுகாப்பான , வலியற்ற சிகிச்சை முறையாகும். இச்சிகிச்சை முறைக்காக வாழ்க்கை முறைகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இச்சிகிச்சையில் நோயாளிக்கு பயன்படுத்தப்பட்ட அட்டை பூச்சி மறுமுறை பயன்படுத்தப்படுவதில்லை. சிகிச்சையின்போது சராசரியாக 10 முதல் 60 மிலி  அசுத்த இரத்தத்தை வெளியேற்றுகிறது.
அட்டை விடுதலின் பயன்கள்:
அட்டை விடுதலில் இரத்தம் வெளியேற்றப்படும் போது ஏற்படும் வேதியியல் மாற்றத்தால் , கீழ்காணும் அறிகுறிகள் குணப்படுத்தப்படுகிறது.
·           வீக்கம் குறைகின்றது.
·           நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது
·           இரத்தநாளங்கள் சீர்  செய்யப்படுகின்றது , இரத்த ஓட்டம் சீராகிறது.
·           மன அழுத்தம் குறைகிறது.
·           இரத்த நாளங்களில் இரத்தம் உறைதலை சரி செய்யும்
·           வலி நிவாரணியாக பயன்படுகிறது.
·           நோய் காரணிக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது.
·           பிற சுத்திகரிப்பு சிகிச்சை முறைகளுடன் ஒப்பிடும்போது அட்டை விடுதல் தேவையற்ற தழும்புகள் , ரிச்சல் , நிறமாற்றம் போன்றவை ஏற்படுவது இல்லை.            தோலில் ஏற்படும் வீக்கம் , வலி , ரிப்பு , ரிச்சல் , தழும்புகள்  போன்றவை இச்சிகிச்சை முறையில் சரி  செய்யப்படுகின்றன.


இரத்த மோக்ஷனம்


ஆயுர்வேதத்தில் அட்டை விடுதல் மட்டுமல்லாது அலாபு,,கடம் ,ஸ்ருங்கம் போன்ற உபகரணங்களை கொண்டும் இரக்த சுத்திகரிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இன்றைய காலக்கட்டத்தில் கப்பிங்முறையில் பாதிக்கப்பட்ட பகுதியில் இரத்தம் வெளியேயற்றப்படுகிறது.
இரத்த மோக்ஷனம் சிகிச்சைகளை மேற்கொள்வதன் மூலமாக குறுகிய காலக்கட்டத்தில் நோய்களுக்கான தீர்வுகள் கிடைக்கின்றன.


குணப்படுத்தும் நோய்கள்:

·           தோல் சிவத்தல் ஃ எக்ஸிமா
·           சோரியாஸிஸ்
·           ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டீஸ்
·           கௌடி ஆர்த்ரைட்டீஸ்
·           சயாடிகா ( வலி இடுப்பிலிருந்து கால் வரை பரவுதல்)
·           இடுப்பு வலி
·           மூட்டு வலி
·           சர்க்கரை நோயினால் ஏற்படும் புண்கள்
·           புரையோடிய புண்கள்
·           கொப்பளம்
·           இரத்த கொதிப்பு
·           சோரியாட்டிக் ஆர்த்ரைட்டீஸ்
·           கரப்பான்
·           இரத்த நாளங்களில் இரத்தம் உறைதல்
·           முன் வழுக்கை.
      தைராய்ட் கட்டிகள்
      வெரிகோஸ் வெயின் என்னும் காலில் ஏற்படும் நரம்பு சுருட்டு

சில தீர்வு கண்ட நோயாளிகளில் சிலர் ..

1.         பெயர் .சுபாஹானி  P
வயது : 20  பெ
அட்டை விடுதலின் மூலமாக கொப்பளம் கண்ணுக்கு அருகில் உள்ள அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற இந்த நோயாளி அறுவை சிகிச்சை இல்லாமலேயே   குணமடைந்தார்.2.         பெயர் .அப்துல் ரகுமான் . ஆ
வயது : 24  ஆ
அட்டை விடுதலின் மூலமாக சொரியாஸிஸில் இருந்து குணமடைந்தார் .


இரக்த மோக்ஷன சிகிச்சை :

திருநெல்வேலி , கடையநல்லூர் ,ராஜபாளையம்  உள்ள எமது அல் – ஷிபா மருத்துவ நிலையத்திலும் ,சென்னையில் கீழ் கட்டளையில் உள்ள ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்திலும் - மேற்கொண்ட சிகிச்சை முறைகள் தகுதி பெற்ற மருத்துவர்களின் ஆலோசனைப்படி மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
இச்சிகிச்சைகள் மேற்கொள்ள முன்பதிவு அவசியம். நோயாளிகளின் ஹீமோகுளோபின் அளவும் ,சர்க்கரை அளவும் பரிசோதித்து வருவது நல்லது .


கட்டுரை எழுத்தாக்கம் - டாக்டர் -கீர்த்திகா BAMS ,மருத்துவ அலுவலர் ஆயுர்வேதா ,திருநெல்வேலி அல்ஷிபா ஆயுஷ் மருத்துவமனை .
                                                                                
சிகிச்சைக்கு அணுக வேண்டிய முகவரி :


திருநெல்வேலி கிளை -அல் – ஷிபா  ஆயுஷ் மருத்துவமனை
ஒருங்கிணைந்த பாரம்பரிய மருத்துவ சிகிச்சை & ஆராய்ச்சி நிலையம்
2 , ராஜராஜேஸ்வரி நகர் ,புதிய பேருந்து நிலையம் ,திருநெல்வேலி:       9042225999  & 0462 2554664.

கடையநல்லூர் கிளை -அல் – ஷிபா  ஆயுஷ் மருத்துவமனை
34/23 பீர்  முகமது தைக்கா தெரு, அரசு மேல்நிலை பள்ளி அருகில், தங்கள் மெடிக்கல் பின்புறம். கடையநல்லூர்                     9042225333 & 04633 242522  

ராஜபாளையம் கிளை -அல் – ஷிபா  ஆயுஷ் மருத்துவமனை
195 , PACR சாலை, பத்மா மருத்துவமனை பஸ் ஸ்டாப் ,. ராஜபாளையம்:   9043336888.

சென்னை கிளை

ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையம் ,4, துரைசாமி நகர் முதல் தெரு ,கீழ்கட்டளை (Near KFC) தொலை பேசி எண் 90 4333 6444

Post Comment

வியாழன், ஆகஸ்ட் 18, 2016

கவிஞர் நா .முத்து குமார் மஞ்சள் காமாலையும் -விவரம் தெரியாமல் ஷேர் செய்யும் வேதனைகளும் ..

மரணம் பலரை விதைத்திருக்கிறது ..கவிஞர் நா .முத்துகுமார் பலரது மனதில் விதையாகத்தான் விழுந்திருக்கிறார் ..
ஆறாத சோகம் தான் ..அந்த வரிசையில் கவிஞர் நா .முத்துகுமார்  மஞ்சள் காமாலையில் இறந்தது மிகவும் வருத்தத்திற்கு உரிய செய்தி தான்..

அவரது உண்மை நோய் என்ன என்பது யாருக்கும் மிக சரியா தெரியாது ?
மஞ்சள் காமாலை எவ்வளவு நாள் இருந்தது .
அந்த மஞ்சள் காமாலை என்ன வகை ?
கல்லீரல் எந்த அளவு  பாதிக்கப்பட்டு இருந்தது ?
வயிற்றில் இரத்த குழாய் சுருட்டு இருந்ததா ?
போர்டல் ஹைபர் டென்சன் என்னும் வயிற்றில் இரத்த அழுத்தம் இருந்ததா ?
உண்மையிலே  கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவை என்று அவருக்கு பரிந்துரைக்கபட்டதா ?.

எதுவுமே தெரியாமல் என்ன என்ன கட்டு கதைகள்  அவரது நோய் பற்றி ..அதற்கு மருந்து பற்றி மூலிகை தெரிந்த மக்கள் எல்லாம் ஏகப்பட்ட பரிந்துரைகள் ..ஆயுர்வேதத்தில் ,சித்த மருத்துவத்தில் மஞ்சள் காமாலைக்கு மிக சிறந்த மருந்து உண்டு என்பது யாரும் மறுப்பதற்கே இல்லை ..ஆனால் இங்கே  கொஞ்சம் கூட மருத்துவ அடிப்படை அறிவே இல்லாமல் ஒரு குறிப்பிட்ட மருந்து கம்பெனி மருந்து ஐந்து நாட்களில் ஹெபடைடீஸ் B வைரசை சரியாக்கும் என்று  ஷேர் செய்கிறார்கள் மக்கள் ...

என்னுடைய எழுத்துலக நண்பர்களில் ஒரு மருத்துவர் பல நல்ல விஷயங்களை முக நூலில் பதிவிடுவார் ..அவர் தனக்கு வந்த ஒரு தகவலை ஷேர் செய்திருக்கிறார் ..அதன் விவரம் இது ..கிட்டதட்ட கட்டுரை அவரது முக நூல் பதிவில் இருந்து 
இன்று 18/8/2016 மாலை ஐந்து மணி வரை 23800  க்கு மேல் ஷேர் செய்யப்பட்டுள்ளது ..பல்லாயிரக்கணக்கான மக்கள் லைக் கொடுத்துள்ளார்கள் ..இந்த கட்டுரைக்கு சொந்த காரர்  திரு இரா செந்தில் குமார்  பக்கத்தில் அவர் ஒரு ஆயுர்வேத மருத்துவர் என்று கொடுத்தள்ளார்..அவரை முக நூல் மெசெஞ்சரில் தொடர்பு கொள்ள முயன்றேன் .ஆனால் அவரிடம் போனில் பேச இயல வில்லை ..

அந்த ஆயுர்வேத மருத்துவர் என்று குறிப்படும் இரா செந்தில் குமார் அவர்களின் முக நூல் பக்கம் இது தான் ..இங்கே கிளிக் செய்யவும் https://www.facebook.com/senthilvel.kannan?fref=nf&pnref=story.

அவர் எங்கே ஆயுர்வேத மருத்துவம் படித்தார் ..அவர் எங்கே மருத்துவ சிகிச்சை செய்து வருகிறார் என்ற எந்த தகவலும் இல்லை ...ஆனால் நிச்சயம் அவர் ஒரு முறையாக மருத்துவம் படிக்காதவர்  என்று மட்டும் என்னால் முழுமையாக விளங்கி கொள்ள முடிகிறது ..
அவரது முக நூல் பக்கத்தில் ஒரு கேள்வி பதில் அவரது மருத்துவ அறிவை  பறைசாற்றுகிறது ..உங்களது உதாரணம் இதோ 


அவரது மருத்துவ கேள்வி ஞானத்தை அறிய இது ஒன்றே போதுமானது என்று சொல்ல தேவை இல்லை என்று நினைக்கிறேன் ...அர்ஜுனா அரிஷ்டம் 5 மிலி எந்த ஆயுர்வேத மருத்துவரும் பரிந்துரைப்பது இல்லை ..20 ml to 25 ml தான் கொடுப்போம் ..அதை கொடுத்தாலும் ஹார்ட் அட்டாக் ? வராது என்பது சொல்வதற்கு இல்லை ...ஆனால் அவர் வரவே வராது என்று மிகைப்படுத்தி எழுதியிள்ளார் ..

இந்த நண்பர் எழுதிய அந்த கட்டுரை தான் ..மஞ்சள் காமாலை -ஹெபடைடீஸ் B  வைரஸை சரியாக்கும் என்பது ஒரு மிக மிக தவறான தகவல் ..

திரு இரா செந்தில் குமார் ஆயுர்வேத மருத்துவர் என்று குறிப்படும் உங்களுக்கு எனது கேள்விகள் ..

 1. ஹெபடைடீஸ் B மஞ்சள் காமாலை -எத்தனை நோயாளிகளை நீங்கள் குறிப்படும் இந்த மருந்தை வைத்து குணமாக்கி உள்ளீர்கள் .
 2. அந்த நோயாளிகளின் ரிப்போர் பதிவு செய்யவும் ..அவர்களுக்கு எந்த முறையில் ஹெபடைடீஸ்  வைரஸ் உள்ளதை உறுதி செய்தீர்கள் ..அது கார்ட் முறையா ,எலைசா ,முறையா .வைரல் லோட் எவ்வளவு /
 3. எத்தனை நோயாளிகள் only carrier என்ற வகையில் இருந்தனர் .
 4. ஆணித்தரமாக  வெறும் ஐந்தே நாளில் ஹெபடைடீஸ் மஞ்சள் காமாலை குணபடுத்திய நோயாளிகளின் செல் நம்பர் மற்றும் விவரம் தர முடியுமா ?
 5. நீங்கள் எந்த ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் படித்தீர்கள் 
 6. நீங்கள் இப்போது எங்கே பணி செய்து வருகிறீர்கள் .
இந்த விவரங்கள் எதுவமே தெரியாமல் முக நூல் மற்றும் அவரது பொய்யை ஷேர் செய்த மக்களை நினைக்க மிகவும் வருந்துகிறேன்..

தெரிந்து கொள்ள வேண்டியவை ...

 1. சித்த மருத்துவம் ,ஆயுர்வேத மருத்துவத்தில் ,யுனானி மருத்துவத்தில் மஞ்சள் காமாலைக்கு நல்ல மருந்து உண்டு என்பதில் எள் அளவுக்கும் சந்தேகம் இல்லை ..
 2.  எளிதாக தானாக சரியாக கூடிய ஹெபடைடீஸ் A க்கு மிக எளிதான கீழாநெல்லி ,கரிசாலை  போன்ற பல மூலிகைகளே போதும் .
 3. ஹெபடைடீஸ் B -carrier என்ற நிலையில் ,எந்த தொந்தரவும் இல்லாமல்  இரத்தத்தில் பாரின் போக டெஸ்ட் எடுக்கும் போது எதேச்சையாக கண்டு பிடிக்கப்படும் Hb S Ag positive என்ற நிலையில் எல்லாருக்கும் negative ஆவதில்லை ..இதனால் பொதுவாக எந்த பாதிப்பும் ஏற்படுவது இல்லை என்பது தான் உண்மை ..
 4. முறையாக மருத்துவ அறிவு .பல ஆண்டுகள் மருத்துவ சிகிச்சை அனுபவ அறிவு உள்ள பழங்காலத்து சித்த ஆயுர்வேத மருத்துவ நூலில் உள்ள மருந்துகளை பயன்படுத்திற அறிவு ..மற்றும் நவீன மருத்துவ அறிவியல் knowledge உள்ள மருத்துவர்களை பார்த்து மருத்துவ சிகிச்சை எடுப்பது நல்லது 


Post Comment

வியாழன், ஜூலை 21, 2016

நரம்பு வலிகளுக்கு ஹிஜாமா .

வலிகளுக்கு எத்தனை சிகிச்சை முறைகள் .வலிகளில் நரம்பியல் சார்ந்த வலிகளில் மிக மிக வேதனை அதிகம் .இந்த நோயாளிக்கு தாங்க முடியாத முக வலி இந்த நோயை Trigeminal Neuralgia என்னும் நரம்பு சார் முக வலி என்பர். எந்த வலி மாத்திரைக்கும் ,சிகிச்சைக்கும் கட்டுபடாத இந்த வலி ஹிஜாமா என்னும் இரத்தம் மோக்ஷனம் –சிகிச்சை மிக சிறந்த பலனை அளித்திருக்கிறது .கடந்த பல வருடங்களாக அவதிப்பட்டு வந்த இவருக்கு இது இரண்டாவது sitting இதிலேயே நல்ல குணமடைந்தார் .
  


தெரிந்து கொள்ள வேண்டியவை ..
 1. முறையாக மருத்துவ அறிவு கொண்டு ,உடற்கூறு என்னும் anatomical அறிவு உள்ள படித்த மருத்துவரிடம் மட்டுமே ஹிஜாமா செய்தல் நலம் .
 2. ஹிஜாமா சிகிச்சைக்கு முன் நோயாளியின் இரத்த பரிசோதனைகள் மட்டும் Fitness to the Procedure நிச்சயம் வேண்டும் ..எல்லாருக்கும் ஹிஜாமாவை தகுந்த முன்னேற்பாடு இன்றி செய்தல் நல்லது இல்லை ..
 3. மனம் போன போக்கில் ஹிஜமா புள்ளிகளை தேர்வு செய்தல் முடியாது ..எப்படி அக்குபஞ்சர் புள்ளிகளை தேர்ந்து எடுத்து செய்தல் முக்கியமோ அதை விட selecltion of hijama points மிக மிக முக்கியம் .
 4. ஹிஜாமா செய்ய தகுந்த காலம் முக்கியம் .
 5. சரியாக செய்யாத ஹிஜாமா வேண்டத்தகாத சில விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதும் கூடுதல் எச்சரிக்கை ..

ஹிஜாமா சிகிச்சையை பெற சென்னையில் தொடர்பு கொள்ள 90 4333 6000 ,கடையநல்லூர் 90 4222 5333, திருநெல்வேலி  90 4222 5999, ராஜபாளையம்  90 4333 6888..சந்தேகங்களுக்கு மெயில் முகவரி curesure4u@gmail.com

Post Comment