ஞாயிறு, டிசம்பர் 06, 2015

சென்னை வெள்ள நிவாரணத்தில் இலவசமாக நிலவேம்பு குடிநீர் காய்ச்சி கொடுக்க வேண்டுமா ?

நில வேம்பு குடிநீரை இலவசமாக பெற வேண்டுமா ?


சென்னை வெள்ளத்தில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு டெங்கு,சிக்கன் குனியா ,மற்றும் விஷ காய்ச்சல் வராமல் தடுத்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நில வேம்பு குடிநீர் சூர்ணம் இலவசமாக தயாராக உள்ளேன் ..

எந்த இயக்கத்தில் இருந்து மக்களுக்கு இலவசமாக நில வேம்பு குடிநீரை தயாரித்து தர இருந்தாலும் இந்த தொலை பேசி மூலம் என்னை தொடர்பு கொள்ளலாம் ..


இலவசமாக பெற விரும்பும் இயக்கங்கள் செய்ய வேண்டியவை .

நிலவேம்பு குடிநீர் சூரணம் தர இயலும் -நீங்கள் குறைந்த பட்சம் ஆயிரம் நபர்களுக்காவது காய்ச்சி கொடுக்க முடியும் ,இலவசமாக  விநியோகிக்க முடியும் என்ற உத்தரவாதம் தர வேண்டும் .

தொடர்பு எண். 9688778640.

குறிப்பு - ஏற்கனவே சில  மாதங்களாக நில வேம்பு  குடிநீரை இலவசமாக வழங்கி வருகிறோம்..


தனி நபர்களோ ,சிறிய குடும்பத்திற்கு மட்டும் நில வேம்பு குடிநீர் வேண்டுபவர்களோ ,  என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் விரும்பி கேட்டு கொள்கிறேன் .

Post Comment

செவ்வாய், அக்டோபர் 20, 2015

இலவச வர்ம மருத்துவ சிகிச்சை பெற வேண்டுமா ?

வர்ம மருத்துவம் என்னும் எல்லா விதமான நோய்களுக்கும் மருந்தில்லா மருத்துவ வரம்
வர்மம் என்றால் என்ன ?

வர்மம் என்பது உயிர் ஆற்றல் . வர்மம் என்பது உயிர் நிலைகளின் ஓட்டம்”. வர்மம்என்பது உயிர்சக்தி தடம்புரியும் புள்ளிகள். உயிர்நிலைப் புள்ளிகளடங்கிய சக்தி ஓட்டங்களில் அடியோ, தாக்குதலோ ஏற்படும்போது உடலில் உலாவும் உயிர்வேகம் அதனை தொழிலை செய்யாமல் பிறழ்ந்து மரணத்தையோ, உடல் ஊனத்தையோ, தொடர்ந்த வலிகளையோ ஏற்படுத்தும். அவை தசைகளிலோ, தசை நார்களிலோ, நரம்புகளிலோ இரத்தக் குழாய்களிலோ, எலும்புகளிலோ, மூட்டுகளிலோ அமைந்திருக்கும் இந்த புள்ளிகளில் 3 தோஷங்களும், தச வாயுக்கள் ,தச நாடிகள் ,நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்னும் 5 பூதங்களும், ஓஜஸ் எனும் ஏழு தாதுக்களின் சாரங்களும், சத்வ, ரஜ, தம குணங்களும் அதனதன் விகிதாச்சார அடிப்படையில் புதைந்து கிடக்கின்றன. இவை உடலில் உள் உறுப்புகளையும், பிரபஞ்சத்தையும் 13 ஸ்ரோதஸ் எனும் Channels எனும் வழிகளும், பாஹ்ய அந்தர் எனும் உள் வெளி மார்கங்களையும் 6 சக்கரங்களையும் இணைத்து வைக்கும் மாயப் புள்ளிகள்.


வர்ம மருத்துவம் என்றால் என்ன ?
எல்லா நோய்க்கும் காரணம் தச நாடிகளின் பாதிப்பு ,சர ஓட்டத்தில் ஏற்படுகிற தடை , வர்ம புள்ளிகளின் ஆற்றல் குறைபாடு ,பிரபஞ்சத்தோடு ஏற்படுகிற பிணைப்பில் ஏற்படுகிற தடை ,தச வாயுக்களின் தடை ,முக்குற்ற வேறுபாடு , உடலின் பஞ்ச பூதங்களின் மாறுபாடு –இந்த அனைத்து காரணத்தையும் நமது உடலில் உள்ள வர்ம புள்ளிகளை ஒழுங்காக்குவதன் மூலம் ,வர்ம புள்ளிகளின் ஆற்றல் மாறுபாட்டை சரி செய்வதன் மூலம் நாம் குணப்படுத்த முடியும் என்பதே வர்ம மருத்துவத்தின் சாராம்சம் .சீனத்து அக்குபஞ்சர் சிகிச்சைக்கு  நமது வர்ம மருத்துவமே தாய் என்கிறது வரலாறு.வர்ம மருத்துவத்தில் குணமாகும் நோய்கள் எவை ?

வர்மம் மருத்துவம் என்றால் நமது அனைவருக்கு நினைவுக்கு வருவது இந்தியன் தாத்தா தான் . உயிரை கொள்ள , ஆளை அடிக்க ,செயல் இழக்க செய்யத்தான் இந்த வர்ம மருத்துவம் என்று நாம் தவறாக புரிந்து வைத்திருக்கிறோம். சித்த மருத்துவத்தின் ஒரு பிரிவாக இருக்கும் இந்த வர்ம மருத்துவம் பல நோய்க்களுக்கு மருந்து இல்லாமலும் சிகிச்சை அளிக்கிறது .
 1. முதுகு வலி ,கழுத்து வலிக்கு காரணமான டிஸ்க் பிரச்சனைகள்
 2. மூட்டு எலும்பு தேய்மானம் ,மூட்டு வலி , டென்னிஸ் எல்போ ,முடக்கு வாதம் ,தோள்பட்டை வலி ,குதிகால் வலி  மற்றுமுள்ள அனைத்து வலிகளுக்கும்
 3. நரம்பியல் நோய்கள் –நடுக்கு வாதம் பார்க்கின்சொனிசம், மைக்ரேன் ,பக்கவாதம் , முக வாதம் ,நரம்பு தளர்ச்சி
 4. வாழ்வியல் நோய்களான சர்க்கரை நோய் ,இரத்த அழுத்தம் தூக்கமின்மை ,மன அழுத்தம் ,பதட்டம் ,வயிற்று புண்
 5. .ஆஸ்த்மா அலர்ஜி ,உடல் எதிர்ப்பு ஆற்றல் குறை நோய்கள்
 6. காரணம் தெரியாத தலைசுற்று
 7. மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் , CP child ,Autism ,Hyperactive Child, குழந்தைளின் ஞாபக மறதி, பிடி வாதம்
 8. சுக பிரசவம் எளிதாக்கிட
 9. விந்து அணுக்கள் இல்லாத நிலை ,கரு முட்டை இல்லாத நிலை ,குழந்தை இன்மைக்கும்
 10. ஆபத்து காலத்தில் உயிரை காப்பாற்ற உதவும்

ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் வர்ம மருத்துவத்தில் சிறப்பு என்ன ?
இருபத்தைந்து ஆண்டுகள் வர்ம மருத்துவத்தில் அனுபவம் வாய்ந்த மருத்தவரின் ஆலோசனையோடு ,பல வர்ம ஆசான்களிடம் வர்மம் பயின்ற ,முறையாக மருத்துவம் படித்த ,MD ( Siddha)  சிறப்பு மருத்துவமாக பயின்ற சித்த மருத்துவர்களின் துணையோடு ,வர்ம மருத்துவத்துடன் ஆயுர்வேத மர்ம சிகிச்சையும் ,பஞ்ச கர்ம சிகிச்சை முறைகளையும் சேர்ந்து வர்ம சிகிச்சை மேற்கொள்வதே  ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தின் சிறப்பு.


ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் ஏழு தடவை சிகிச்சையில் முன்னேற்றத்தை உணரலாம்.
ஆபத்து காலத்தில் உடனடியாக தீர்வை வர்ம மருத்துவம் கொடுத்தலும் பல நாள்பட்ட நோய்களுக்கு வாரம் ஒரு முறை அல்லது இரு முறை வர்ம சிகிச்சை என்று தொடர்ந்து குறைந்தது ஏழு தடவை சிகிசையிலே பல நாள்பட்ட நோய்கள் குணமாகும் / முன்னேற்றத்தை உணர முடியும்.மேலே சொன்ன அனைத்து நோய்களுக்கும் ஆண் பெண் மருத்துவர்களை கொண்டு ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் சிகிச்சை அளிக்கபடுகிறது . ஏற்கனவே எடுத்து கொண்டிருக்கும் மருந்துளோடு சேர்ந்தும் சிகிச்சை அளிக்கபடுகிறது. பக்க விளைவுகள் எதுவும் இல்லை ,பத்தியம் இல்லை ,மருந்து எதுவும் சாப்பிட வேண்டியதே இல்லை என்பதும் கூடுதல் சிறப்பு .

உடலில் நரம்பு மண்டலம் , எலும்பு மண்டலம் , தசை மண்டலம் , என்ற மூன்று பகுதிகளிலும் நோய்கள் கண்ட நிலையில் இவற்றை முற்றிலும் குணப்படுதுவதே எங்களின் சிறப்பாகும் வர்ம தத்துவங்களையும் + தச நாடி ஓட்டம் அறிந்து நாடி பார்த்து வர்ம மருத்துவத்தில் முறையாக பயிற்சி பெற்ற சித்த மருதுவத்துவரால் மருந்தில்லாமல் சிகிச்சை  அளிக்கப்படும். ஆலோசனை மற்றும்  முன் பதிவுக்கு  ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையம் ,4, துரைசாமி நகர் முதல் தெரு ,கீழ்கட்டளை (Near KFC) தொலை பேசி எண் 90 4333 6444


வருகிற ஞாயிறு 25/10/2015 காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை வர்ம மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற நமது ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் நடைபெற உள்ளது. இதில் வர்ம மருத்துவத்தில் உலகத்திலே மிக சிறந்த வர்ம மருத்துவர் மற்றும் அவரது தலைமையில் ஐந்து மருத்துவர்கள் அடங்கிய குழு –இலவசமாக வர்ம மருத்துவ சிகிச்சை மேற் கொள்ள உள்ளார்கள் –உங்களுக்கு தெரிந்த நோயாளிகளுக்கு இதை ஷேர் செய்து அவர்கள் பயன் பெற உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் . முன் பதிவுக்கு  90 4333 6444

Post Comment

வெள்ளி, அக்டோபர் 16, 2015

இனி எப்போதும் நிலவேம்பு குடிநீரும் இலவசம்

 நிலவேம்பு கஷாயம் இனி எப்போதும் இலவசம் ..
டெங்கு காய்ச்சலுக்கு ஹோமியோ மருந்து இலவசம்


பருவ மாற்றத்தால் வருகிற பெயர் தெரியாத காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தாக நிலவேம்பு குடிநீர் இருக்கிறது என்பது உலகம் அறிந்த உண்மை ..

கடந்த வருடம்  இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு  நாம் நிலவேம்பு கஷாயத்தை இலவசமாக கொடுத்து   பயனுற செய்து -அவர்கள் நோய் தீர நம்மால் முடிந்த சேவைகளை ஏக இறைவன் துணை கொண்டு சில  இயக்கங்களுடன் செய்து முடித்தோம் ..

அதற்கான பழைய இடுகைகளின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

ஓராயிரம் பயனுற்ற நமது அடுத்த இலவச நில வேம்பு குடிநீர் முகாம்

சென்னையில் காய்ச்சலை விரட்டும் இலவச நில வேம்பு குடிநீர்

நான்காயிரம் மக்கள் இலவசமாக பருகிய நில வேம்பு குடிநீர் முகாம்

இலவச ஆயுர்வேத சித்த மருத்துவ முகாம் 

முப்பது ஆயிரம் இலவசமாக அருந்திய நில வேம்பு குடிநீர் முகாம் -கடையநல்லூரில்

புத்தாண்டு அன்று இலவச நிலவேம்பு குடிநீர் முகாம்

சங்கரன்கோயில் இலவச நிலவேம்பு குடிநீர் முகாம்

---------------------------------------

அதை போலவே இந்த வருடமும் பல இயக்கத்துடன் இணைந்து தமிழகம் முழுவதும் நிலவேம்பு குடிநீர் முகாம் நடத்த உள்ளோம் .

கிட்டதட்ட இந்த மாதத்திலே பல நிலவேம்பு முகாம்களை நாம் இலவசமாக நடத்த துவங்கி விட்டோம் .

திருநெல்வேலி பகுதி மற்றும் நமது மருத்துவ நிலையங்கள் உள்ள கடையநல்லூர் ,திருநெல்வேலி ,சென்னை (கீழ் கட்டளை ,மடிப்பாக்கம் ,வேளச்சேரி ,தாம்பரம் ),ராஜபாளையம் பகுதிகளில் எந்த இயக்கத்தில் இருந்து நிலவேம்பு குடிநீர் கேட்டாலும் நாம் இலவசமாக நிலவேம்பு குடிநீரை வழங்க தயாராக உள்ளோம் .

அதன் ஒரு பகுதியாக முகாம் மட்டுமல்லாது ..
இப்போது நமது எல்லா அல் -ஷிபா ஆயுஷ் மருத்துவ மனைகளிலும் தினமும் இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளோம் .


கடையநல்லூரில் தினமும் இலவச முகாம் ..
திருநெல்வேலியில் தினமும் இலவச முகாம் ..


சென்னையில்  தினமும் இலவச முகாம் ..


ராஜபாளையத்தில்  தினமும் இலவச முகாம் ..

உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு இந்த இலவச மருத்துவ சேவை விஷயத்தை எடுத்து சொல்லி -டெங்கு ,சிக்கன் குனியா மற்றும் உள்ள மர்ம காய்ச்சல்களிருந்து மக்களை காப்பாற்ற ஷேர் செய்யுமாறும் கேட்டு கொள்கிறோம் ..

மேலும் இலவச டெங்கு காய்ச்சலுக்கு ஹோமியோ மருந்தும்  தரப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் .

எங்களோடு இணைந்து மக்களுக்கு சேவை செய்ய விருப்பம் உள்ளவர்கள் , மருத்துவ முகாமுக்கு பண உதவி செய்ய விருப்பம் உள்ளவர்களும் நமது இலவச மருத்துவ ஆலோசனைக்கான தொலை பேசி எண் 9688778640  -தொடர்பு கொள்ளளலாம் .

Post Comment

புதன், ஆகஸ்ட் 26, 2015

மூலிகை போலி கதைகள் -உயிரையே பறித்து விடும் -எச்சரிக்கை பதிவு

எங்கு திரும்பினாலும் இலவச மருத்துவ குறிப்புகள் ..
Facebook,watsapp ,net,blog எங்கு திரும்பினாலும் இப்போது மருத்துவ குறிப்புகள் குவிந்து கிடக்கிறது ..எது உண்மை ..எது பொய் ..யார் எழுதியது ..இந்த குறிப்புகளின் உண்மை தன்மை என்ன ?

நிறைய போலி மருத்துவர்களும்
நிறைய போலி மருத்துவ குறிப்புகளும்
நிறைய  போலி மருத்துவ இலவச ஆலோசனைகளும் ..உயிரையே பதித்து விடும் ..

இந்த பதிவு யாருடைய மனத்தையும் புண் படுத்தும் நோக்கில் எழுதும் நோக்கில் எழுத பட்டதில்லை ..
இந்த பதிவை எழுதியவரும் தெரியாமல் எழுதி இருக்கலாம் ..ஆனால் எவ்வளவு பெரிய தவறு அது ..ஒரு வேளை இதை எந்த நோயாளியாவது அவர் சொன்னது போல் பயன்படுத்தி இருந்தால் என்ன ஆயிருக்கும் ..அவரது லிங்க்
https://www.facebook.com/photo.php?fbid=282382635298597&set=a.118190841717778.1073741825.100005805882875&type=1&fref=nf&pnref=storyஇந்த பதிவர் ..மிக அற்புதமான மருந்தை பற்றி எழுதியுள்ளார் ...

அகத்தியர் குழம்பு ..இது ஒரு சித்த மருத்துவத்தின் மிக மிக அற்புதமான மருந்து ..எல்லா நோய்க்கும் இது மருந்தாகும் ...ஆனால் இந்த மருந்தை நோயாளிக்கு கொடுக்க வேண்டிய அளவு ..ஒரு மிளகு எடை அல்லது அதிக பட்சம் நான்கு மிளகு எடை அளவு -அதாவது 200 mili gram ,500 mili gram(mg) வரை மட்டும் தான் ..அனுபானம் மாற மாற அதற்கு தக்க மிக சிறந்த பலனை தர வல்லது ..இந்த மருந்தை கொடுத்தால் நன்கு வயிறு சுத்தமாகும் அதாவது பேதியாகும் ..வயிற்றின் கழிவுகள் அனைத்தும் போகும் ..
எந்த மருத்துவரும் பத்து கிராம் அளவுக்கு கொடுப்பதில்லை ..கொடுத்ததுமில்லை ..கொடுக்க போவதும் இல்லை ..நீர் வற்றி உயிர் இழக்கும் அபாயம் உள்ளது ..இந்த மருத்துவம் அறியாத இந்த பதிவர் மூன்று வேளை அதிகபட்சம் இருபது கிராம் கொடுக்க சொல்கிறார் ..என்ன நடக்கும் என்று நினைக்கவே மனம் பதறுகிறது ..


அவரது பதிவை கிட்டதட்ட 115 share செய்துள்ளார்கள் என்பதும் பலர் like and comment போட்டுள்ளார்கள் என்பதும் கூடுதல் தகவல்


இதே போல் பல போலி பதிவுகளை மக்கள் எச்சரிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இதை எழுதுகிறேனே தவிர ..யாரையும் புண் படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லவே இல்லை என்று மீண்டும் ஒரு முறை பதிவு செய்கிறேன் ...


உதாரணம் இரண்டு .


இந்துப்பு மூன்று வேலை சமைத்து சாப்பிட்டால் பழுதான கிட்னி பழைய நிலைக்கு திரும்பும் –டயாலிசிஸ் தேவை இல்லை என்கிறது அந்த பதிவு .

உண்மையில் இந்துப்பு நல்ல உப்பு என்றாலும் கூட –கிட்னி பெயிலியர் நோயில் நோயின் தீவிர தன்மைக்கு ஏற்ப முற்றிலும் எந்த உப்பையும் (இந்துப்பையும் சேர்த்து ) தான் தவிர்க்க வேண்டும். முற்றிலும் பழுதான கிட்னி உள்ளவர்கள் இந்துப்பை நோய் சரியாகும் என்று சாப்பிட்டால் என்ன ஆகும் ? உண்மையில் மிக மிக மோசமான உடல் பாதிப்பை ஏற்படுத்தி உயிர்க்கு பாதிப்பை ஏற்படுத்தும் –எந்த ஒரு ஆதாரம் இல்லாத உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்த கருத்தையும் தயவு செய்து ஷேர் செய்யாதீர்கள் .எழுதாதீர்கள் . எதோ ஒருவர் சரியானார் என்று சப்பை கட்டும் –ஒரு நோயாளிக்கு சரியானாதால் எல்லோருக்கும் சரியாகும் என்று தவறாக எழுதாதீர்கள். ஆயிரக்கணக்கான கிட்னி பெயிலியர் நோயாளிக்கு சிகிச்சை செய்து வருபவன் என்ற முறையில் சொல்கிறேன் –எந்த உப்பும் கிட்னி பெயிலியருக்கு உதவாது ..

அனுபவ அறிவும் ,மனிதாபிமானம் உள்ள , மருத்துவ அறிவு உள்ள தக்க மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள் .
குறிப்பு ஒன்று -வீண் தர்க்கத்தை தவிர்க்க இந்த பதிவுக்கு நான் பின்னோட்டம் இட போவதில்லை
குறிப்பு இரண்டு – நீங்கள் தவறு இழைத்து விட்டீர்கள் என்று சுட்டி காட்ட இந்த பதிவு இல்லை –தவறு இருந்தால் இக்கணமே வருத்தம் தெரிவிக்கிறேன்

தரமான ஆயுர்வேத & ஆயுஷ்  மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888

சென்னை     9043336000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை கீழ்கட்டளை)Post Comment

ஞாயிறு, ஆகஸ்ட் 23, 2015

தற்கொலைக்கு தூண்டுமா மன அழுத்த மருந்துகள் ? -இலவச CD பெற வேண்டுமா ?

மனித உயிர்களை ஒட்டு மொத்தமாகவும் ,மிகவும் வேகமாகவும் ,யாருக்கும் தெரியாமல் மறை முகமாகவும் பாதிக்கிற தொற்றா நோய்கள் தான் இப்போது மிக பெரிய சவால் ..

வாழ்வியல் நோய்கள் ..வாழ்க்கை முறை மாறியதால் வந்த நோய்கள் அனைத்திற்கும் அடிப்படை தூக்கமின்மை . தூக்கம் தொலைத்த இரவுகள் இப்போது எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது என்பதில் யார்க்கும் சந்தேகம் இல்லை..

டாக்டர் ..எனக்கு சரியாக தூக்கம் வர மாட்டேன்கிறது ..என்றவுடன் நமக்கு ஆங்கில மருத்துவர் Alprozolam என்ற மன அழுத்தத்தை சரியாக்கும் தூக்கம் உண்டாக்கும் மருந்தை நமக்கு எழுதுவார்  ..இந்த மருந்து Trika 0.5, Alproz 0.5, Restyl 0.5 என்று பார்மஸியில் இந்தியாவில் எங்கும் எளிதாக கிடக்கிற மருந்தாக உள்ளது ..

கிட்டத்தட்ட ஆறில் ஒரு நபருக்கான மருத்துவ சீட்டில் இந்த மருந்து நிச்சயம் இடம் பெறுகிறது என்கிறது ஒரு ஆய்வு .மெடிகலில் வருட கணக்கில் இந்த மருந்தை அடிமை போல் சாப்பிடுவார்கள் எண்ணிக்கை பல கோடிகளை தாண்டும் என்கிறது இன்னொரு ஒரு ஆய்வு ..

இந்த மருந்தை தொடர்ந்து பயன்படுத்தினால் பல மோசமான பக்க விளைவுகள் நிச்சயம் ..தற்கொலை மனப்பான்மையை அதிகபடுத்தி  தற்கொலை செய்ய வைத்திருக்கிறது என்பது நிருப்பிக்கபட்ட உண்மையான ஆராய்ச்சி ..
IT மற்றும் bpo நிறுவனங்கள் வந்த பிறகு நம் வாழ்க்கைமுறை முன்போல் கிடையாது. அதிக வேலை செய்தால், இன்னும் அதிக பணம் என ஓடியதன் விளைவு, மன அழுத்தம் வாழ்வின் முக்கியப் பகுதியாக உருவாகியது. உலகளவில், ஆரோக்கியக் குறைபாடுகளின் தலையாயக் காரணமாக மன அழுத்தம் மாறியுள்ளது. ஆனால், இந்த மன அழுத்தத்துக்கான மருத்துவமுறைகள் இந்தியாவில் முறைப்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை. 10-ல் 8 மன அழுத்தத்துக்கான மருந்துகளும், 10-ல் 7 மன நோய்களுக்கான மருந்துகளும் முறையான அனுமதி பெறாதவை என்று சொன்னால் என்ன செய்வீர்கள்?

அனுமதி பெற்றிருந்தாலும் எவ்வளவு பக்க விளைவுகள்  இந்த மருந்துகள் .
மன நல மருத்துவமனைகளின் சிகிச்சைகள் எப்போதும் மன நோயாளியாகவே ஆயுள் முழுமைக்கும் வைத்திருக்கும் கொடுமைகள் எத்தனை பேருக்கும் தெரியும் .ECT என்னும் எலெக்ட்ரிக் ஷாக் ட்ரீட்மென்டுகள்  மனிதர்களை வதைக்கும் மிக பெரிய கொடுமை.


சைக்காட்ரிக் -மன நோய்க்கான மருந்துகள் அனைத்தும் மிக பெரிய பக்க விளைவுகளை கொண்டவை 


சைக்காட்ரிக் -மன நோய்க்கான மருந்துகள் அனைத்தும் நிறுத்த முடியாத ஆயுள் முழுவதும் மன நோயாளியாக வாழ வைக்கும் சக்தி கொண்டவை .

இந்த விஷயத்தை அறிவியல் பூர்வமாக -ஆராய்ச்சி பூர்வமாக அணுகும் அமெரிக்காவை சார்ந்த தொண்டு நிறுவனம் ..சைக்காட்ரிக் -மன நோய்க்கான மருந்துகளின் பக்க விளைவுகளை உலகெங்கும் எடுத்து சொல்கிறது ...


800 பில்லியன் வர்த்தகம் கொண்ட சைக்காட்ரிக் -மன நோய்க்கான மருந்துகள் அனைத்தும் மக்களை சாவுக்கு தான் அழைத்து செல்கிறது என்கிறது இந்த ஆராய்ச்சி நிறுவனம் .

இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் பெயர் 

மனதை பதற வைக்கும் பக்க விளைவுகள் பற்றி அறிந்து கொள்ள இலவச CD ஐ நாம் அமரிக்காவில் இருந்து பெறலாம் ..
அமெரிக்கா லாஸ் ஏஞ்சேலில் இருந்து இலவச CD பெறலாம் .


மன அழுத்த நோய்க்கு ..
பக்க விளைவுகள் இல்லாமல் நல்ல உறக்கத்திற்கு ..ஆயர்வேத மருந்துகள் பற்றி வரும் காலங்களில் பார்போம்

Post Comment

வெள்ளி, ஆகஸ்ட் 21, 2015

மருத்துவம் வளர்கிறது -நோய்கள் குறைந்தபாடில்லை -ஏன் ?

மருத்துவம் வளர்கிறது -நோய்கள் குறைந்தபாடில்லை -ஏன் ?திரும்பிய பக்கம் எல்லாம்   பார்மசி -கிளினிக் -மருத்துவமனைகள் -நோய்கள் குறைந்து விட்டதா ? இல்லையே ..வயிற்றில் உள்ள  குழந்தை முதல் மிகவும் வயதான  பெரியவர் வரை -நோய் தனது ரூபத்தை காட்டி கொண்டே இருக்கிறது ..மருத்துவம் வளர்ந்தால் நோய்கள் குறைந்து அல்லவா இருக்க வேண்டுமே ?..நோய் என்ன என்றே தெரியாமல் மருந்தை தேடும் நிரந்தர நோயாளிகள் ..
சிறிய நோய்க்கு பர்ஸை கரையவைக்கும் தேவையில்லா பரிசோதனைகள் ..
எல்லா அறிவையும் கூகிள் தந்துவிடும் என்று தேடி தெரிந்து கொள்ளும் அபாயகரமான மருத்துவ அறிவுகள் ..
கோடி கணக்கில் முதலீடு செய்த மருத்துவ வியாபாரிகள் ..


இப்போது
ஆயுர்வேதம் என்றால் மசாஜ்
ஆயுர்வேதம் என்றால் சோப் ,ஷாம்பூ ,தைலங்கள் ..

அனால் அது உண்மை இல்லையே ..


ஆயுர்வேதம் சொல்வது எளிமையானது ..
ஆயுர்வேதம் சொல்வது அறிவியல் பூர்மானது ..
ஆயுர்வேதம் சொல்வது வாழ்க்கை முறை கல்வி ..
ஆயுர்வேதம் சொல்வது எல்லோருக்கும் ஆரோக்கியம் ..

சரி ..ஆயுர்வேதம் அறிவோம் இனி ..

Post Comment

வியாழன், ஆகஸ்ட் 20, 2015

தொடர்ச்சியாக மீண்டும் எழுதப் போகிறேன்ஆயுர்வேதம் அகிலம் அறிய வேண்டும் 
இந்திய மருத்துவம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் -இதுவே எனது கனவு .....


போலி மருத்துவர்கள் ..
போலி மூலிகை கதைகள் ...
போலியான மருந்துகள் ...
பணத்திற்கு பின் ஒளிந்திருக்கும் போலி முகங்கள் ..

எதிலும் உண்மை இல்லை ..
எதிலும் தெளிவு  இல்லை 
எதிலும் நேர்மை இல்லை 
எதிலும் அறம் இல்லை ....


காபி அடிக்கும் வலை தளங்கள் ..
காபி அடிக்கும் போலி மருத்துவர்கள்..


உணர்வுகள் மழுங்கி போய் ...
எழுவே வேண்டாம் என்று வெறுத்து போய் ...


என் கடமை பிணி நீக்குவதே ..
சேவையே பிரதானம் ..
நெல்லுக்கு இழைத்த நீர் ....புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்பது  போல் ...
களைக்கு நீர் போவதை தடுக்க இயலாது என்று எனக்கு நானே தேற்றிகொண்டவனாக ..
நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி ..தொடர்ச்சியாக ஏக இறைவனின் நாட்டப்படி எழுதப்போகிறேன் ..
Post Comment

புதன், ஆகஸ்ட் 05, 2015

இராஜபாளையத்தில் கோட்டக்கல் ஆர்ய வைத்ய சாலை 03/08/2015 திறப்பு விழாராஜபாளையம் கோட்டக்கல் ஆர்ய வைத்ய சாலை கிளையை  03/08/2015 திங்கள் மாலை இராஜபாளையம் சிறப்பு ஹோமியோபதி மருத்துவர் .மு . தலமலை BHMS  அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது .

திறப்பு விழாவுக்கு பல துறை மருத்துவர்கள் ,மருந்து விற்பனை பிரதிநிதிகள் ,நண்பர்கள் ,மற்றும் பல நல்ல உள்ளங்கள் கலந்து கொண்டார்கள் .அனைவர்க்கும் எமது நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .

Post Comment

இராஜபாளையத்தில் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை கிளை 03/08/2015 திறப்பு விழாஆயுர்வேதம்  மற்றும் ஆயுஷ் மருத்துவம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற தணியாத கனவுடன்  சேவை ஒன்றையே குறிகோளாக  கொண்ட நமது மருத்துவமனையின் நான்காவது கிளை ராஜபாளையத்தில் 03/08/2015 திங்கள் மாலை முதல் செயல்பட துவங்கி உள்ளது ..

திறப்பு விழா சில புகைப்படங்கள்


ராஜபாளையம் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையை 03/08/2015 திங்கள் மாலை இராஜபாளையம் சிறப்பு ஹோமியோபதி மருத்துவர் .மு . தலைமலை BHMS  அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது .திறப்பு விழாவுக்கு பல துறை மருத்துவர்கள் ,மருந்து விற்பனை பிரதிநிதிகள் ,நண்பர்கள் ,மற்றும் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை உறுப்பினர்கள் மற்றும் பல நல்ல உள்ளங்கள் கலந்து கொண்டார்கள் .அனைவர்க்கும் எமது நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .

Post Comment

வெள்ளி, ஜூலை 10, 2015

மூலிகை கதைகளும் -உண்மை தெரியாமல் Forward செய்யும் செம்மறியாட்டு கூட்டங்களும் .

எதில் பித்தம் தெளியும் என்று அலைகிற நோயாளிகளுக்கு நடுவே ..
திரும்பிய பக்கமெல்லாம் இலவச மருத்துவ துணுக்குகள் ..
செய்து பார்த்தால் தான் என்ன ?  என்று எளிமையான தகவல்கள் ..
முயன்று பார்த்த பின் கிடைத்த தோல்விக்கு பாரம்பரிய மருத்துவத்தை குறை கூறும் நிலை தான் இப்போது ...


எது உண்மை ?
எது ஆதாரம் மிக்கது ?
எது சரகர் ,சுஸ்ருதர் ,வாக்பட்டார் ,அகத்தியர் ,சித்தர்கள் சொன்னது ?
எந்த நிலையில் எந்த மருத்துவம் செய்யவேண்டும் ?
திரும்பிய பக்கமெல்லாம் படிக்காத மருத்துவர்கள் ..
இந்த நிலை தொடர்ந்தால் எல்லோரும் சித்த ,ஆயுர்வேத மருத்துவர்கள் ஆகி விடுவார்கள் போலும் ?

முன்னுக்கு பின் முரணான மருத்துவ செய்திகள் ..
அறிவியல் என்று ஆராய்ந்த பின்னும் தோல்விகள் உள்ள மருத்துவ அறிவுகள்
திக்கெங்கும் பரவி மூலிகை கதைகள் ...
வீட்டுக்கே வந்து நிற்கும் மூலிகை மருந்துகள் (டெலி மார்கெடிங் )
திரும்ப திரும்ப சொல்லப்படும் பொய்யான போலியான மருத்துவ ,அழகு சார்ந்த விளம்பரங்கள் ...


என்ன செய்வது ?

உண்மையை எடுத்து சொல்வதா ?

Post Comment

சனி, மே 23, 2015

தீராத முதுகு வலியா ? முதுகு தண்டுவட டிஸ்க் பிரச்சனையா ?தீராத முதுகு வலியா ?
அறுவை சிகிச்சை ஒன்று தான் தீர்வு என்று சொல்கிறார்களா ?

அறுவை சிகிச்சை இல்லா ஆயுஷ் மருத்துவத்திற்கு 
சென்னையில் ஆலோசனை -

24/5/2015 ஞாயிறு காலை பத்து மணி முதல் மாலை ஏழு மணி வரை என்னை சென்னை -கீழ்கட்டளை ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் சந்தித்து ஆலோசனை பெறலாம் ..

சென்னையில் முன் பதிவுக்கு 90 4333 6444, 90 4333 6000Post Comment

வெள்ளி, மே 22, 2015

மூலிகை தந்தை வைத்ய உஸ்மான் அலி இயற்கை எய்தினார்

மூலிகைகளின் அரசர் ,மூலிகைகளின் தந்தை  என்று எங்களை போன்ற மருத்துவர்களால் போற்றப்படும் வைத்ய உஸ்மான் அலி அவர்கள்  21/5/2015 அன்று இயற்கை எய்தினார் ..

அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று .

 • அவர் ஒரு நடமாடும் மூலிகை அகராதி ..
 • தாவரவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று பல தாவரவியல் ஆராய்ச்சியாளர்களை உருவாக்கியவர் ..
 • மகாராஷ்டிரா ஆரோக்ய மண்டல் போன்ற பெரிய பெரிய தொண்டு நிறுவங்களை நிறுவ மூல காரணமானவர் ..
 • உலக புகழ் பெற்ற குஜராத் ஆயுர்வேத பல்கலை கழகத்தின் Asst.Director  that is formar OSD Gujarat Ayurvedic University -யாக பணியாற்றியவர்
 • சென்னை அடையார் இம்ப்காப்ஸ் என்ற சித்த ஆயுர்வேத யுனானி  மருந்தகளை தயாரிக்கும் மிக பெரிய நிறுவனத்தை துவங்கிய காலத்தில் இவருடைய பங்கு மிக அளப்பரியது .தலைமை தாவரவியல் வல்லுனராக மட்டுமல்லாது இம்பாகாப்ஸ் செம்மையாக நடைபெற சிறப்பு துவக்கம் தந்தவர் .
 •  டேம்ப்கால்  நிறுவனத்தின் முதல் தலைமை தாவரவியல் வல்லுனராகவும் இருந்தவர்  பல மூலிகைகளை மக்களுக்கு சென்றடைய உதவியர் .
 • CTMR பாரம்பரிய மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் தலைவர் .இந்த தொண்டு நிறுவனம் மூலம் பல்வேறு களப்பணிகள்  ஆராய்ச்சிகள் செய்தவர் .
 • அனைத்து சித்த மருத்துவர்களுக்கும் ஒரு மூலிகை தந்தை .பல சித்த மருத்துவர்களுக்கே மூலிகைகளை அடியாளம் காட்டி , அவர்களுக்கு தெரியாத எளிய பயன்களை சொல்லி கொடுத்த ஆசான் .
 • கிட்னி பெயிலியருக்கு பூனை மீசை மருந்து மிக சிறப்பாக வேலை செய்யும் என்று கண்டு பிடித்து சொன்ன மிக சிறந்த மேதை http://www.ayurvedamaruthuvam.blogspot.com/2014/01/blog-post_16.html
 • எங்களது  சென்னை ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தை துவக்கி வைத்தவர் .http://www.ayurvedamaruthuvam.blogspot.com/2014/11/blog-post.html 
 • என்னை அவரது மகன் என்று குற்றாலம்  பராசக்தி  கல்லூரியின்  ஒரு மிக பெரிய கருத்தரங்கில் சொல்லி மகிழ்ந்தவர் .My son என்று என்னை அழைப்பவர் .
 • ஒற்றை மூலிகை பயன் பற்றி  எங்களை போன்ற மருத்துவர்களுக்கு வழி காட்டியவர் .
 • எனது உடன் பிறவா சகோதரர் Dr.சித்தீக் அலி MD ( Siddha)  அவர்கள் எப்போதும் வைத்ய உஸ்மான் அலி  அவர்களிடம் இருந்து பல இருந்து பல விஷயங்களை கற்று மருத்துவர்களுக்கு வழி காட்டியவாறு .முதலாளி என்று எனது சகோதரர் சித்தீக் அலி அவர்களை அழைப்பர்கள் .
 • யாரிடமும் எந்த பிரதி பலனையும் எதிர்பார்க்காத மூலிகை மேதை அவர் .
 எம்மை போன்ற மருத்துவர்களுக்கு வழி காட்டியாக ,தந்தையாக ,ஆசானாக இருந்தவர் 21/5/2015 வியாழன் காலையில் இயற்கை  எய்தினார் .அவர்கள் இடத்தை யாரும் நிரப்ப இயலாது .மாறா துக்கத்துடன் கவலையுடனும் அவரது மறுமை வாழ்வின் வெற்றிக்காக அழுது பிரார்த்தித்தவனாக ...Post Comment