வாஜீ கரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாஜீ கரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மே 16, 2020

மனிதகுலம் நோயின்றி தழைக்க இது ஒன்று போதும்...


மனிதகுலம் நோயின்றி தழைக்க இது ஒன்று போதும்...


டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,

டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.

ஆயுர்வேத மருத்துவர்கள்


ரசாயன சிகிச்சை என்றால் என்ன  ?

ரசாயனம் என்ற சமஸ்க்ருத வார்த்தையின் பொருள் - நோய் தவிர்த்து, இளமையை நீடித்து, புலன்களை சீராகி, வீர்யத்தை ஊக்கப்படுத்தும் சிகிச்சை....என்பதாகும். இன்னும் சுருக்கமாக சொன்னால் அமிர்தம்.


*எதற்காக இச்சிகிச்சை?*

நாம் அனைவருமே வாழ்க்கை போராட்ட களத்தில் போராடிக்கொண்டிருப்பவர்களே... இதற்கிடையில் நாம் செய்யும் தவறுகள் ஆதாவது ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், ஓய்வின்மை, உணவு பொருட்களின் கலப்படத்தால் உடலில் சேரும் நச்சு, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட காய்கறியினால் உடலில் சேரும் விஷம், இரவு நேர வேலை (தூக்கமின்மை ), பகல்தூக்கம், உடற்பயிற்சியின்மை, கவலை, கோபம், பயம், மனஅழுத்தம் போன்றவற்றால் நரம்புகள் தளர்ந்து, எலும்புகள் தேய்ந்து, எழுப்பு மஜ்ஜை வற்றி, தசைகள் வலுவிழந்து, அதிக கொழுப்பு, இரத்தகுழாய் அடைப்பு, கருத்தரிப்பின்மை, விந்து குறைபாடு, சோர்வு, இயலாமை, மறதி, பொலிவின்மை முதலான பல நோய்களுக்கு ஆளாகின்றோம்... இதனாலேயே பலருக்கும் அகால மரணம் ஏற்படுகிறது... இத்தகைய காரணங்களால் ஏற்படும் வயது முதிர்வு, நோய்த்தாக்கம், அகால மரணத்தை தவிர்க்கவே கூறப்பட்டுள்ளது ரசாயன சிகிச்சை...


என்ன பயன்?*

ரசாயன மருத்துவதினால் நரம்புகள், எலும்புகள், தசைகள், எலும்புமஜ்ஜை அனைத்தும் வலுப்பெறுகிறது, அதிக கொழுப்பு, இரத்தக்குழாய் அடைப்பை சீர்செய்கிறது, பெண்மை, ஆண்மை குறைபாட்டை நீக்கி சிறந்த ஆரோக்கியமான சந்ததியினரை பெற வழிசெய்கிறது, புத்திகூர்மை, பகுத்தாய்வு திறன் மேம்பட்டு நிம்மதியை தருகிறது... இவை எல்லாவற்றால் வயது முதிர்வு தடுக்கப்பட்டு, வாழ்நாட்கள் நீடிக்கப்படுகிறது...


சிகிச்சையை_எவ்வாறு_பெறலாம் ?*

ஆயுர்வேதத்தின் எட்டு பிரிவுகளில் ஒன்றாக விவரிக்கப்பட்டுள்ளது ரசாயன மருத்துவம்.


குடிப்பிரவேசிக ரசாயனம், ஆச்சார ரசாயனம், அசார ரசாயனம், திரவ்ய ரசாயனம் என பலவாறாக பின்பற்றப்படும் ரசாயன மருத்துவம் வகைகளுள் பின்பற்ற எளிதாய் இருப்பவை திரவ்ய ரசாயன மருத்துவம்.


குறிப்பிட்ட சில ஆயுர்வேத மருந்துகளை (அமிர்தத்திற்கு நிகரான மேன்மை குணங்களை கொண்ட மூலிகைகளால் செய்யப்பட்ட ) நாள்தோறும் குறிப்பிட்ட அளவு உண்பதினால் ரசாயன மருத்துவத்தின் பலன்களை எளிதாக பெறலாம்..


அவ்வாறான ஆயுர்வேத ரசாயன மருந்துகள்...
ச்யவனப்ராஷம்
ஹரிதகி ரசாயனம்
ப்ரம்ம ரசாயனம்
விடங்காவலேகம்
பிப்பலி ரசாயனம்
சிலாஜது ரசாயனம் மகரத்துவஜ ரஸ்
வசந்தககூஸ்மாரா ரஸ்


குழந்தைகளுக்கு கொடுக்கலாமா ?*

பிரத்யேகமாக குழந்தைகளுக்கு பரிந்துரைக்கபடுபவை..
சரஸ்வதாரிஷ்டம்
வல்லாரை கீரை சாறு
அதிமதுர சூர்ணம்
சீந்தில்கொடி சாறு
சங்குபுஷ்பி சூர்ணம்


குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ரசாயன மருத்துவதினால் அவர்களின் ஞாபக திறன், திறமை, உடல் ஆற்றல், இளமை, பொலிவு, கவர்ச்சி, குரல் வளம், புலன் ஆரோக்கியம், மனோபலம், நேர்மை, தீய பழக்கங்களுக்கு செல்லாதிருத்தல், வாழ்நாள் போன்றவை அதிகரித்து நீள்கிறது...


எந்த வயதினருக்கும் பொருந்தும் இம்மருத்துவம் கொரோனா போன்ற நோய்த்தொற்று காலங்களில் பின்பற்றுவதால் சிறந்த நோயெதிர்ப்பு ஆற்றலை பெறுவதோடு ஆரோகியமான சமுதாயத்திற்கு துணைசெய்யலாம்... ஒவ்வொரு தனி மனித ஆரோக்கியமே நாட்டை வல்லரசு பாதைக்கு கூட்டிசெல்லும்.


எந்த மருத்துவமும் மருத்துவர் ஆலோசனைக்கு உட்பட்டு எடுப்பதே சிறந்தது...

மருத்துவ ஆலோசனைக்கு அணுகவும்...

*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000

Post Comment

ஞாயிறு, பிப்ரவரி 28, 2016

விந்து முந்துதல் -தகவல்கள் ..நிவாரணங்கள்



விந்து முந்துதல்.

விந்து முந்துதலை ஆங்கிலத்தில் Premature ejaculation என்பார்கள். இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சினையாகும்.

பத்து ஆண்களில் ஒருவர் என்ற விகிதத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தகவல்கள்  தெரிவிக்கின்றன. உறவின் போது பெண் உணர்வின் உச்ச கட்டத்தை எய்துவதற்கு முன்னரே ஆணுக்கு உணர்வின் உச்ச கட்டம் எட்டி விந்து வெளியேறிவிடுவதைத்தான் விந்து முந்துதல் என்கிறோம்.







வாஜீகர்ண சிகிச்சை மூலம் விந்து முந்துதலுக்கு ஆயுர்வேதத்தில் சிறப்பு சிகிச்சை அளிக்கலாம் ..

வாஜீகர்ண சிகிச்சை பற்றி படிக்க இங்கே கிளிக்  செய்யவும் ..

ஆயுர்வேத வாஜீகர்ண சிகிச்சை பெற -ஆலோசனை பெற முன் பதிவுக்கு  www.healz.in  தொடர்பு கொள்ளவும் 

Post Comment

வியாழன், மே 15, 2014

அமுக்ரா சூர்ணம் சாப்பிட்டால் பாலுணர்வு அதிகமாகுமா ?

அமுக்கராச் சூரணம்
சித்த வைத்திய திரட்டு


ஆதாரப் பாடல் :
                “ கொள்ளவே யசுவகந்தி சூர ணங்கேள்
                   குலமான லவங்கமொன்று நாகப்பூ விரண்டு
                   தள்ளவே யேலம்நால் மிளகோ ரெட்டு
                   தளமான திப்பிலியீ ரெட்டு சுக்கு
                  வில்லவே முப்பத்தி ரண்டுங் கூட்டி
                 விசையான வசுவகந்தி யறுபத்து நாலு
                நள்ளவே சுத்திசெய் துலர்த்திக் கொண்டு
                நலமாக விளவறுப்பாய்ச் சூரணந்தான் செய்யே
               செய்யப்பா சமனாகச் சர்க்கரையைக் கூட்டி “
                          -       அகஸ்தியர் வைத்திய இரத்தினச் சுருக்கம் – 360

சேரும் பொருட்களும் அளவும் :


இலவங்கம்                 0.39 %                   சிறுநாகப்பூ                  0.79 %                  
ஏலம்                                 1.57 %                   மிளகு                              3.15 %
திப்பிலி                           6.30 %                   சுக்கு                                   12.60 %
அமுக்கரா வேர்       25.20 %                 சர்க்கரை                        50.00 %


அளவும், துணை மருந்தும் :

1 கிராம் முதல் 2 கிராம் வரை பசுவின் பால் அல்லது நெய்யுடன் தினமும் இரண்டு வேளைகள் கொடுக்கவும்.

தீரும் நோய்கள் :
எண்வகைக் குன்மம், இடப்பாட்டு ஈரல் நோய், குத்துவாய்வு, வெட்டை, பிரமியம், விக்கல், பாண்டு, இரைப்பு, இளைப்புச் சயம், வறட்சி, கை கால் எரிவு தீரும்

குறிப்பு :
சுரத்திற்குப் பிறகு சிறந்த உடல் தேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை ..

சித்த அமுக்ரா சூரணம் என்று கடைகளில் கிடைக்கும் சித்த மருந்தும் -அஸ்வகந்த  சூர்ணம் என்று கிடைக்கும் ஆயுர்வேத மருந்தும் ஒன்றில்லை ..

உடல் பலஹீனத்தை மாற்றுவதோடு மட்டுமல்லாமல் வெட்டை சூட்டை தணிக்கும் .

உடலுக்கு ஆற்றலை தருவதோடு மட்டுமல்லாது குன்ம நோய் -உடல் எரிச்ச்சலை போக்கும் 

ஒருதடவைக்கு  கிட்டதட்ட பத்து கிராம் எடுத்து உபயோகிப்பது நல்லது ..

கை கால் வலிகளுக்கும் தொடர்ந்து சாப்பிட நல்ல பலன் தரும் 

குறைந்தது ஒரு மண்டலமாவது சாப்பிட்டால் மட்டுமே பலனை உணர முடியும் .

பல பற்ப சிந்தூரங்களுக்கு கலந்து கொடுக்கும் தாய் மருந்தாக -Base மருந்தாக இதனை பயன்படுத்தலாம் .

பாலியல் உணர்வை வளர்க்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை 

இதில் கலந்திருக்கும் சர்க்கரை என்பது நாட்டு சர்க்கரை மட்டுமே 




Post Comment

திங்கள், ஆகஸ்ட் 27, 2012

சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து -சந்திரப்ரபாவடீ -Chandra Praba Vati


சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து -சந்திரப்ரபாவடீ -Chandra Praba Vati
 (ref-பைஷஜ்ய ரத்னாவளி - ப்ரமேஹாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த குக்குலு – ஷோதித குக்குலு  80 கிராம்
2.            சுத்தி செய்த கோமூத்திர சிலாஜது –
ஷோதித கோமூத்திர சிலாஜது                  80           “
3.            சர்க்கரை – ஸர்க்கர                      40           “
4.            திரிபலா கஷாயம் – திரிபலாகஷாய     போதுமான அளவு

இவைகளை ஒன்று கலங்க கரைத்துக் கொதிக்க வைத்து அது குடிகா பாகத்தை அடைந்தவுடன் அத்துடன்

1.            அயபற்பம் – லோஹ பஸ்ம                     20 கிராம்
2.            பொன்னிமிளைபற்பம் – ஸ்வர்ணமாக்ஷிக பஸ்ம    10           “

இவைகளையும் நன்கு பொடித்துச் சலித்த

1.            கார்போக அரிசி – பாகுச்சி                         10 கிராம்
2.            வசம்பு – வச்சா                                  10           “
3.            கோரைக்கிழங்கு – முஸ்தா                        10           “
4.            நிலவேம்பு – பூநிம்ப                              10           “
5.            தேவதாரு – தேவதாரு                            10           “
6.            மஞ்சள் – ஹரீத்ரா                               10           “
7.            அதிவிடயம் – அதிவிஷா                          10           “
8.            மரமஞ்சள் – தாரு ஹரித்ரா                       10           “
9.            மோடி – பிப்பலீ மூல                             10           “
10.          கொடி வேலி வேர் – சித்ரக                        10           “
11.          சிவதை (கருப்பு) – த்ரிவ்ருத்                       10           “
12.          நேர்வாள வேர் – தந்தீமூலம்                      10           “
13.          இலவங்கபத்திரி – லவங்கபத்ர                     10           “
14.          இலவங்கப்பட்டை – லவங்கத்வக்                  10           “
15.          ஏலக்காய் – ஏலா                                10           “
16.          மூங்கிலுப்பு – வம்சலோசன                       10           “
17.          தனியா – தான்யக                                10           “
18.          கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்   10           “
19.          தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக்  10           “
20.          நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்                 10           “
21.          செவ்வியம் – சவ்ய                               10           “
22.          வாயுவிடங்கம் – விடங்க                         10           “
23.          யானைத்திப்பிலி – கஜதிப்பிலி                     10           “
24.          சுக்கு – சுந்தீ                                     10           “
25.          மிளகு – மரீச்ச                                   10           “
26.          திப்பிலி – பிப்பலீ                            10           “
27.          ஸர்ஜக்ஷாரம் – ஸர்ஜக்ஷார                       10           “
28.          யவக்ஷாரம் – யவக்ஷார                           10           “
29.          இந்துப்பு – ஸைந்தவலவண                       10           “
30.          கல்லுப்பு – ஸ்வர்ச்ச லவண                       10           “
31.          சோற்றுப்பு – ஸமுத்ரலவண                      10           “

இவைகளின் சூர்ணம் சேர்த்துக் கலந்த பின்னர் நன்கு அரைத்து 500 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

குறிப்பு:    

 1.            சுத்தி செய்த குக்குலுவைச் சிறிது தேன் விட்டு நன்கு இடித்தரைத்து விழுதாக்கி அத்துடன் பஸ்மங்கள், சிலாஜது, சர்க்கரை, பொடித்துச் சலித்த சூரணம் இவைகளை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து அரைத்து உருட்டியும் இதைத் தயாரிப்பதுண்டு.

2.            தேனுக்குப் பதிலாக திரிபலா கஷாயம், சீந்தில் கஷாயம் இவைகளை உபயோகித்துச் சரக்குகளைக் கல்வத்திலிட்டு நன்கு அரைத்துத் தயாரிக்கலாம்.

3.            இது எல்லா வியாதிகளிலும் பொதுவாக உபயோகிக்கத் தகுந்த சிறந்ததோர் மருந்து.

4.            இதில் குறிப்பிட்டுள்ள சரக்குகளை சற்று மாறுதலான விகித அளவில் எடுத்துக்கொண்டு கூடுதலாக கற்பூரத்தையும் (சந்திரப்ரபா) சேர்த்து தயாரிக்கும்படியான மற்றொரு முறை அரசினர் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரம் சாரங்கதர ஸம்ஹிதையில் உள்ளது.

அளவும் அனுபானமும்:     

 ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை இரண்டு முதல் மூன்று வேளைகள் நெல்லிக்காய்ச்சாறு, சீந்தில்சாறு, பால், எள்ளுச்சூரணம் அல்லது தண்ணீருடன் கொடுக்கவும் (உணவுக்கு ஒரு மணி நேரத்திற்குமுன்).

தீரும் நோய்கள்:  

மலச்சிக்கல் (விபந்த), வயிற்றுப்புசம் (ஆனாஹ), சூலை (சூல), கிரந்தி (கிரந்தி), இரத்த சோகை (பாண்டு), காமாலை (காமால), நீர்ச் சுருக்கு (மூத்ரக்ரிச்சர), பிரமேகம் (ப்ரமேஹ), கல்லடைப்பு (அஷ்மரீ), மூத்திரம் தடைபடல் (மூத்ராசங்கம்), மூலம் (அர்ஷ), தானே விந்து நழுவுதல் (சுக்ரமேஹ), வாத நோய்கள் (வாதரோக), தோல் நோய்கள் (சர்ம ரோக).

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. கோமூத்ற சிலாஜித் சேர்த்தால் மட்டுமே -சர்க்கரை நோய்க்கு சிறந்த  மருந்தாகும் ..
  2. கோமூத்ற சிலாஜித் சேர்ப்பதால் ஆண்மை பெருகும் ,உடல் வலு பெரும் ,தாது புஷ்டி உண்டாகும் ..
  3. சர்க்கரை நோயில் இந்த மருந்து -சிறந்த அளவில் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுபடுத்தும் ..
  4. நீர்கடுப்பு ,நீர் பிரியாமை போன்ற நோய்க்கும் -சிறுநீரக கல் அடைப்பிற்க்கும் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும் ..
  5. பலர் சிறுநீரக நோய்களுக்கு பிரதானமாக பயன் படுத்துகிறார்கள் ..
  6. விந்து முந்துதில் -பல துணை மருந்தோடு நன்றாக வேலை செய்யும் ..
  7. மார்கெட்டில் ஒரு ரூபாய்க்கும் குறைவாக இந்த மருந்து கிடைக்கிறது ..
  8. பல கம்பெனிகள் கோமூத்ற சிலாஜித் சேர்ப்பதில்லை  என்பது எனது தனிப்பட்ட கருத்து

Post Comment